Friday, January 04, 2008

செந்தழல் சென்னை விஜயம் !!!!!!!!!!!!

சென்னை விஜயம் !!!!!!!!

அன்பு இணைய நட்புகளுக்கு !!!!!!!!

நாளைக்கு சென்னையில் புத்தக கண்காட்சிக்கு வரவேண்டும் என்ற கொலைவெறியில் - அதிகாலை பெங்களூரில் இருந்து கிளம்பி மதியத்துக்குள் சென்னையை அடைய திட்டம் போட்டுள்ளேன்....

வழக்கம் போல் தங்கும் ஹோட்டலில் ஜாகை...

போண்டா இல்லாத பதிவர் சந்திப்புகள் கூட நடத்தலாம் என்று அவா !!!

இதுவரை சந்திக்காத சில மொக்கை பதிவர்கள் இப்போது தங்களது ஜாகையை சென்னைக்கு மாற்றிக்கொண்டிருப்பதால், அவர்களை சந்திக்கலாம் என்று நினைக்கிறேன்......

மற்றபடி, பீச்சுக்கும், புத்தக கண்காட்சிக்கும் போவதை தவிர எனக்கும் வேறு வேலை ஒன்றும் சென்னையில் இருப்பதாக தெரியவில்லை...

இதுக்கெல்லாம் ஒரு போஸ்ட்டா, நீ என்ன அப்துல் கலாமா என்று கடுப்பாகும் தோழர்கள் என்னுடைய புதிய தொலைபேசி எண்ணுக்கு அழைத்து திட்டலாம்...

எண் : 99160 84054

வர்ட்ட்டா நன்பர்களே !!!!!!!!!!!!!

பி.கே.கே: (பின்னால் கேட்கப்படும் கேள்விகள்)

1.பொட்டீக்கடை இன்று இரவு அவுஸ்திரேலியா ரீச். ஏன் எனக்கு போன் அடிக்கல ? பேலன்ஸ் இல்லையா ?

2.ஓசை செல்லா நாளைக்கு சென்னையில் இருப்பாரா ? கேள்வி...

3.வரவனை திண்டுக்கல்லில் இருக்கிறார்...கொடைக்கானல் வா என்று கட்டளை இட்டபோதும் நிறைவேற்ற முடியல...என் மேல அவருக்கு கடுப்பா வெடிப்பா ?

4.மிதக்கும்வெளி ஒருநாள் ஏதோ ஈழத்தவர் வீட்ல காரமா ஏதோ சாப்பிட்டாராமே ? அங்கே என்னை கூட்டிக்கினு போவாரா ?

5.பாலபாரதி புத்தக கண்காட்சியில் வாலண்டியராக கிழக்கு ஸ்டாலில் மழைக்கு குடை பிடிப்பாரா ?

6.பிரின்ஸ் சமா நான் சொன்னது போல் சினிமாவில் நடிக்க வாய்ப்புண்டா ?

7.ஆழியூரான் கொரியன் மொபைல் கேட்டாரே ? என்னுடன் பர்மாபஜார் வரை வர அவர் தயாரா?

8.தலைகீழ்விகிதங்கள் எழுதும் வவ்வால் சென்னையில் தான் கீறாரா ?

9.என்றென்னும் அன்புடன் பாலா வீட்டுக்கு சென்றால் இட்லிவடை கிடைக்குமா?

10.நகஓக அப்படீன்னா என்னா ? மக இக மாதிரியா ? ஏன் எல்லா போஸ்ட்லயும் அது இருக்கு ?

11.மகளிர் சுய உதவிக்குழு செய்யும் பொருட்கள் எல்லாம் சென்னையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதா ? வாங்க முடியுமா ?

12.மழை நின்றதா ? குடை எடுத்துவர வேண்டுமா ?

13.புத்தக கண்காட்சி நடக்கும் ஸ்டால் உள்ள வாங்கினால் எத்தனை பேருக்கு டிக்கெட் கொடுக்கப்படும் ? எமர்ஜன்ஸிக்கு தீயணைப்பு வண்டிக்கு சொல்லியாச்சா ?

14.கிழக்கு ஸ்டால்ல வாலண்டியரா புத்தகம் விற்க துணைபுரியலாமா?

15.முடியல என்னும் தமிழ் வார்த்தைக்கு வேற வார்த்தை ஏதாவது இருக்கா?

11 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

நீங்கள் டயல் செய்த எண்ணை சரிபார்க்கவும்- இதுதான் டயல் செய்த எனக்குக் கிடைத்த பதில்.......

மொக்கைப்பதிவுக்கு வேற விஷயம் கிடைக்கலியா?

அரவிந்தன் said...

அலைப்பேசி வேலை செய்யுதா..

வெகு நேரமா முயற்சி செய்யறேன்

அரவிந்தன்
பெங்களூர்

ச.பிரேம்குமார் said...

கொலவெறி ரவி சென்னை வருகையா? வாங்க வாங்க.... நாங்களும் அங்க தான் சுத்திக்கினு இருப்போம் ;-)

சென்ஷி said...

//முடியல என்னும் தமிழ் வார்த்தைக்கு வேற வார்த்தை ஏதாவது இருக்கா?//

இதுக்கு மட்டும் என்கிட்ட பதில் இருக்குது... அது,

"ங்கொய்யால"

:))

சென்ஷி said...

சென்னை வரும் செந்தழலுக்கு சென்ஷியின் வாழ்த்துக்கள் :))

சென்ஷி said...

//எண் : 99160 84054//

நோட் பண்ணிக்கிட்டேன் :))

லக்கிலுக் said...

சென்னை தங்களை வருக வருகவென இருகரம் நீட்டி வரவேற்கிறது!!

Osai Chella said...

நான் கொரியாவுக்குப் பக்கத்தில் இருக்கும் கோவையில் (ஹி ஹி நீங்க இப்போ இருப்பது நியூயார்க் தானே) இருப்பதால் தங்களை சந்திக்க இயலாமைக்கு வருந்துகிறேன்! வாழ்த்துகிறேன்!

அன்புடன்
ஓசை செல்லா

வவ்வால் said...

செந்தழலார் அவர்களே!

நான் சென்னை ஜித்தன் என்பது தெரியாதா என்ன?

சென்னை விஜயம் ஆச்சா? உங்க சார்பில் எனக்கு இலவச உதை தரும் திட்டம் எதுவும் இருக்கா? :-))

இப்போ தான் இப்பதிவைப்பார்த்தேன், இன்று தான் புத்தக கண்காட்சியும் பார்த்தேன். கிழக்கு பதிப்பகத்தில் nhm தமிழ் தட்டச்சு மென்பொருளை 25 ரூபாய்க்கு விற்கிறார்கள், அதான் இலவசமாக இணையத்தில் தராங்களே அப்புறம் நீங்க வேற எதுக்கு வித்துக்கிட்டு என்று கலாய்த்து விட்டு வந்தேன்(என்னை யார்க்கு தெரியப்போகுது)

பல ஸ்டால்களிலும் "type in english" see in tamil" என்று தமிங்கில தட்டச்சினை விளம்பரப்படுத்திக்கொண்டு இருந்தார்கள்,(சிலர் 190 ரூபாய் என ரொம்ப?! மலிவாகவும் விலைப்போட்டிருந்தார்கள்) நல்ல வேளை அதை மா.சி எல்லாம்ப்பார்க்க வில்லை அவர் தமிழ் 99 க்கு எல்லாரையும் மாற்ற சொல்லி இருப்பார் :-))

லிவிங்க் ஸ்மைல் புத்தகத்தை ஒளித்து வைத்திருந்தார்கள் அதை தேடும் போது அவர்களே அங்கே வந்தாங்க(பிரவுன் கலர் டீ சர்ட்டுடன், யாரிடமோ இப்போ தான் வந்திங்களா என்று விசாரித்துக்கொண்டு இருந்தார்கள்)
, என்ன பேசுவது என்று தெரியாமல் ஓரம் கட்டி வந்து விட்டேன்.

புத்தக்கண்காட்சி வழக்கம் போலவே இருக்கு, ஆனால் துண்ணுற ஐடெம் அதிகம் விற்க காணோம், உள்ளே யாரோ கொல்லிமலை பழச்சாறு என்று மல்டி கலர் திரவத்தை வைத்திருந்தார்கள்!(அதைக்குடிப்பதற்கு டாஸ்மாக் திரவமே தேவலைனு கிளம்பிட்டேன்)

வெளியில் வந்தபோது , சில சின்ன பெண்கள் பட்டுப்பாவாடை சட்டையில(10 ஆம் கிளாஸ் c section , DAV பள்ளி என்றெல்லாம் சொல்லிக்கொண்டார்கள்) ,மேடையில் நாட்டுப்புற பாடல் என்று சொல்லி காக்கா இல்லா தேசத்திலே காட்டெறுமை மேய்க்க போனேன் என்று ஒப்பித்துக்கொண்டு இருந்தார்கள்!

நீங்கள் இன்னும் போகவில்லை என்றால் இப்படிப்பட்ட அனுபவங்கள் தாரளமாக கிடைக்கும்!

//12.மழை நின்றதா ? குடை எடுத்துவர வேண்டுமா ?//

குடைக்குள் மழைப்பெய்தால் பார்த்திபன் வருவாரா என்று ஏன் கேட்கவில்லை?

புத்தகக்கண்காட்சி முழுவதும் ஒரு கூறைக்குள் வச்சுட்டாங்க மழை வந்த பிரச்சினை இல்லை!

மகளீர் சுய உதவிக்குழு செய்த பொருட்களை ரோட்டுக்கடை இட்லிக்கடையில் பார்க்கலாம், அதுவும் மகளீர் குழுக்கள் தானே செய்றாங்க!:-))

கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே மகளீர் சுய உதவிக்குழுக்கள் கடை இருக்கு!சணல் பை, விசிறி, தலையணை உறை போல வாங்கலாம் , ஏன் அதன் மீது இந்த திடிர் ஆர்வம்?

மங்களூர் சிவா said...

காலைல ஒரு ப்ளாஷ் பைல்னு நீங்க சொன்ன பதிவு இருந்திச்சு வீட்டுல ஓப்பனாகலை. ஆபீஸ்ல ஓபன் பண்ணி பாக்கலாம்னா அந்த போஸ்ட்டே காணமே!!!!

சென்னை விஜயம் முடிஞ்சதா??

நாகு (Nagu) said...

//15.முடியல என்னும் தமிழ் வார்த்தைக்கு வேற வார்த்தை ஏதாவது இருக்கா? //

ஏன்யா பெங்களூர்ல இருந்துகிட்டு இது கூடவா தெரியல?

ஆவறதில்ல... :-)

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....