(தமிழ்மணத்தை) சுத்தி சுத்தி வந்தேங்க...............

(தமிழ்மணத்தை) சுத்தி சுத்தி வந்தேங்க...............

கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்மணத்தை சுற்றிச்சுற்றி வந்தபோது தெரிந்துகொண்ட சில விஷயங்கள்...சப்போஸ் நீங்க லீவ்ல போயிருந்தீங்கன்னா இந்த பதிவை படிச்சாலே போதும்...ஓக்கேய் ??

* தமிழ்மணி என்பவர் பார்ப்பண மணி. சம்பூகன் தான் தமிழ்மணி...செல்வன் தான் பார்ப்பண மணி..தமிழ்மணி செல்வன் அல்ல...அய்யோ மண்டை காயுதுடா சாமியோவ்..........

* க, கா, கி, கூ, யொ, யோ, பு, பா, பே என்ற வரிசையில் அறியாத ஏழெட்டு வார்த்தைகளின் முழு அர்த்தம் விளங்கியது...இன்னும் புதிய வார்த்தைகளை இலங்கை, இந்தியா, ப்ரான்ஸ், அமேரிக்கா போன்ற இடங்களில் இருந்து அறிமுகப்படுத்த வேண்டுமாய் வலைப்பதிவர்களை கேட்டுக்கொள்கிறேன்...


* சுஜாதாவுக்கு உடம்புக்கு முடியல (இப்ப நல்லாருக்கார்), ஜெயமோகனுக்கு பஞ்சு முட்டாய் கிடைக்கல, மப்புல ஜெயமோகன் வெப் தளத்த பார்த்த ஓசை செல்லாவுக்கு வாந்தி வாந்தியா வந்தது...கற்றது தமிழா இருந்தால் டி.கடை வைத்தால் ஆகாதா என்ற வார்த்தை படத்தை மூன்று வருடம் கழித்து கே.டி.வீயில் போடும்போதாவது மாறித்தொலையுமா ?


* டீச்சருக்கு பர்த் டே (கங்ராஜுலேஜன் டீச்சர், பல்லாண்டு வாழ்க), ராசி ஏழுமலை சென்னை விசிட், காண்டு கஜேந்திரனின் லொட்டையானதொரு மொக்கை போஸ்ட் லேட் ரிலீஸ் ( அதுல ஒக்கே ஒக்க பின்னூட்டம், நான் போட்டது)


* பிரான்ஸில் தலைமைக்கழக பொதுச்செயலாளர் பத்து கிலோ வெயிட் தூக்கும் படம் ரிலீஸ், அவரை எதிர்க்கும் வலைப்பதிவர்களுக்கு லேசாக நெற்றியில் வியர்வை (பேக் எண்ட் மேட்டர்)...தமிழச்சி பேமஸ் ஆவது கண்டு பலருக்கு வயித்தெரிச்சலா இருக்கு என்று பொட்டீக்கடையாரின் பின்னூட்ட தனிமடல்..


* கருத்து கந்தசாமியின் ஏழெட்டு பதிவுகள் வழமை போல் ரிலீஸ். சீன புத்தாண்டு, இனிய இயந்திரா, கலைஞருக்கு, ஜெயலலிதாவுக்கு மூன்று கேள்விகள்...என்று...!!..குட் ஐ லைக் இட்...!!! நமக்கும் பொழுது போவனும் இல்லையா ?

* குழந்தைகள் "பேட்" வேர்ட்ஸை தமிழ்மணத்தில் பார்ப்பதை தடுக்க வழக்கம்போல் ரவிஷங்கரின் அட்வைஸ் பதிவு ஆஜர்....திரட்டி நிர்வாகத்தார் உடனே செயல்படுத்துவார்கள் என்று எதிர்பார்த்து (நான்)ஏமாந்து போனது தான் மிச்சம்...என்னுடைய அட்வைஸ் - தமிழ்மணம் சூடான இடுகைகளால் பாதிக்கப்படுகிறது...தமிழ்மணம் சர்வர் இயங்கும் அமெரிக்க கம்புயூட்டர் மேல் இன்னும் ரெண்டு ஸ்ப்லிட் ஏசி வைக்கவும்...முடிந்தால் கம்புயூட்டரை குளிர்ந்த நீரில் வைக்கவும்...நிர்வாகத்தார் செயல்படுத்துவார்களா ?


* புரட்சித்தலைவி நமீதா பற்றியதான இரண்டு "ஜொள்" பதிவுகளை "நச்" படங்களோடு பிரமிட் சாய்மீரா வலைப்பதிவு வெளியிட்டது...தலைவி ஆங்கில படத்தில் நடிக்கப்போறாங்களாம்...அந்த ஸ்டில்ஸாம்..( இந்த படம் "டியூஷன் டீச்சர்" மாதிரி பிட்டு + மேட்டர் படம் இல்லையே ? - இல்ல, ஸ்டில் பார்த்தா அப்படி இருக்கு ஹி ஹி)...திருச்சியில அலெக்ஸாண்ட்ரா படம் அய்ம்பது நாள் ஓடினப்ப பார்த்தவங்க ஆராவது தமிழ்மணத்தில் இருக்கீங்களா ? அலெக்ஸாண்ட்ராவை பூச்சி கடிச்சபிறகு என்னா ஆகும் ? ( நான் காளிமார்க் கூல்ட்ரிங் வாங்க வெளிய போயிட்டேன்...)


* ????????????????????????????????????????????? ??????????????????????????????????????????????? இப்படி கொஸ்டின் மார்க்கோட பல சற்றுமுன் பதிவில்...முகப்பில் தோன்றி மறையும்போது கொஸ்டின் மார்க் தெரியுதே ? பாண்ட் பிரச்சினையோ ? இல்ல என்னுடைய கொம்பியூட்டர்ல தான் கோளாறா ? காமாலை கண்ணுக்கு காண்பதெல்லாம் கொஸ்டின் மார்க்கா தெரியுதா ?

* வரவணையானின் லவ்வர்ஸ் டே புலம்பல்ஸ் பதிவு, லவ் பண்ணித்தொலைங்க டே, நம்மளை ஆளை விடுங்க டே...(நேக்கு பெல்லி ஆய்ப்போயந்தி)

* ப்ரொபைல் ஒன்லி பாலா பதிவரை ஏதோ அடல்ஸ் ஒன்லி பதிவர் மாதிரி நடுநிலை, முழுநிலை, முக்காநிலைப்பதிவர்களே காறி முயிவது ஏனோ ? அல்க்காட்டெல்லுல கடேசி பைனான்ஸியல் இயர் ஆச்சே ? நிறைய வேலை இருக்குமே ? ஏன் அண்ணாத்தே பின்னூட்டம் போட்டு ( வாயால கொடுத்து) திட்டு வாங்கிக்கிட்டு (பின்னால வாங்கிக்கிட்டு) இருக்கார் ? நேரக்கொடுமை...

* டி.சி.எஸ், ஐ.பி.எம் மற்றும் மன்னார் அண்டு கம்பேனியில் லே.ஆப்பு (Lay Off) என்று அசுரன் வழியாக தெரிந்துகொண்டேன்...நடுத்த வர்க்க யுப்பிகளான இவர்கள் (வார்த்தை உபயம் - அசுரன்) வேலை இழந்துள்ளார்களே...இவர்களுக்காக ம.க.இ.க, கம்முனுஸ்டுகள் போராடுவார்களா ? என்று தெரியவில்லை...இவர்களும் மனிதர்கள் தானே...ஹும்....

கட்டங்கடைசியாக.........

* அப்பாடா. வீடியோக்களை கடைசியாக வலையிலேற்றி விட்டேன்..என்ற டோண்டு சாரின் பதிவில் அவரது நன்பர் ஒருவரை மிகவும் புகழ்ந்திருந்தார். அவர்தான் காசு வாங்காமல் அந்த சி.டியை வீடு தேடி கொடுத்தாராம். லக்கிலூக்னு பேராம்..யாருன்னு தெரியலை..சுஜாதா பாலகுமாரன் ஜெயமோகன் மாதிரி எழுத்தாளரா ? (ராசி ஏழுமலைக்கு கூட தெரியாது தெரியுமோ)...டோண்டு சாரும் மிஸ்டர் லக்கிலூக்கு ரெண்டு பேரும் ப்ரெண்ட்ஸா இருக்கும்...ஆனால் அது பற்றியதான டோண்டு சார் பதிவில் ரெண்டு பேரைத்தவிர மீதி கமெண்ட் எல்லாம் போட்டது அனானிமஸ் மற்றும் டோண்டு சார் ஒன்லி. பட் ரெம்ம்ம்ப காமேடியா இருந்தது அந்த பதிவு....


விளம்பரம்:

லிவ்விங் ஸ்மைல் புக் வாங்கிட்டீங்களா ? "நான் வித்யா"...சூப்பரா இருக்கு...காமதேனுல ஆன்லைன்ல கிடைக்குதா என்னன்னு தெரியல...யாராவது பின்னூட்டத்துல லிங்க் தந்தீங்கன்னா நல்லா இருக்கும்...ப்ளீஸ்...

Comments

//தமிழ்மணி என்பவர் பார்ப்பண மணி. சம்பூகன் தான் தமிழ்மணி...செல்வன் தான் பார்ப்பண மணி..தமிழ்மணி செல்வன் அல்ல...அய்யோ மண்டை காயுதுடா சாமியோவ்..........//


திரு.செந்தழல் ரவி தகுந்த ஆதாரங்களோடு தமிழ்மணியின் கருத்துக்களிலிருந்துதான் அவர் ஒரு பார்ப்பனீயவாதி என்பதையும், அவரது கும்பலில் ஆர்.எஸ்.எஸ் இந்துமதவெறியர்கள் இருக்கின்றனர் என்பதையும் எடுத்துக்காட்டியிருக்கிறேன், எனது பதிவுகளில் தனி மனித தாக்குதலோ, கிசு கிசு வாதங்களோ இல்லை, நான் கூறுவதெல்லாம் தவறாகவும் குழப்பமாகவும் இருக்கிறதெனில் எனது வாதங்களை மறுப்பதன் மூலமாக நீங்கள் அதை எடுத்துக் காட்டலாமே.,

பார்ப்பன எதிர்ப்பாளர்களுக்கு இடையே சிண்டு முடியும் ஒரு பார்ப்பனீய சதி இங்கு அம்பலப்படுத்தப்பட்டிருக்கும் பொழுது, அதனை கண்டிப்பதை விட்டுவிட்டு சாதாரணமாக கலாய்கிறேன் என்ற பெயரில் எனது பதிவுகளின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குவது நியாயம்தானா?


சம்பூகன்
நீங்க சொல்றதலாம் பார்த்தா 24x7 சுத்தி வந்து இருப்பிங்க போல இருக்கே :-))

அந்த காலத்துல ஊர சுத்தி சுத்தியே உருப்படமா போனாப்போல இப்போ தமிழ் மணத்தை சுத்தியா :-))அப்படினு யாராவது சொல்லப்போராங்கனு சொல்ல வந்தேன் !

இப்படி சுத்தி சுத்தி தமிழ் மணத்தை படித்தும் சட்டைய கிழிச்சுக்காம இருக்கிங்களே எப்படி அது(ஏற்கனவே கிழின்சு போச்சா? )

அலெக்சாண்ராவா அவங்க சாண்ரோ கார் வச்சு இருப்பாங்களா?(நான் எல்லாம் அரை டிராயர் போட்டிருந்த காலத்தில வந்தப்படம் ஆச்சே, அதை பார்க்க டிராயர்ப்போட்டு இருந்தால் விட மாட்டாங்கனு , எங்க அண்ணன் லுங்கிய திருடிக்கட்டிக்கிட்டு மறுவேடத்தில் போனேன், அப்போ எனக்கு இருந்த அடுத்த லட்சியம் , எப்படியாவது எனக்கும் சொந்தமாக லுங்கி வாங்கி தரசொல்லி கேட்கனும் என்பதே)

சுத்தி சுத்தி வந்தும் லக்கி பதிவுல புத்தகம் வாங்க போட்டு இருக்க லிங்க் எப்படி உமக்கு தெரியாம போச்சு, ஏதேனும் நிறக்குருடு பிரச்சினையா :-))
http://www.kamadenu.com/cgi-bin/store_view.cgi?catid=bio&itemid=589
செய்திகளின் சாராம்சம் மாதிரி இது நல்லாயிருக்கே..

தொடர்ந்து தரவும். வாராவாரம் ஆரவாரமாக வந்து படிப்போம்.
பார்த்து சுத்துங்க. விழுதுடப்போறீங்க. நல்லா இருக்கு உங்க விமர்சனம்.
தனித்திரு - ஆமா, அப்பத்தான் எல்லா படமும் பார்க்கலாம் இண்டெர்னெட்ல
விழித்த்ரு - அப்பத்தான் ஒழுங்கா ஏதாவது ஷெர் ட்ரேட் பணண முடியும்
பசித்திரு - சாயங்காலமா லைட்டாத்தான் டிபன் சாப்டனும். அப்பத்தான் வீட்லபோய் டின்னரை ஒரு வெட்டு வெட்ட முடியும்.
//லிவ்விங் ஸ்மைல் புக் வாங்கிட்டீங்களா ? "நான் வித்யா"...சூப்பரா இருக்கு...காமதேனுல ஆன்லைன்ல கிடைக்குதா என்னன்னு தெரியல...யாராவது பின்னூட்டத்துல லிங்க் தந்தீங்கன்னா நல்லா இருக்கும்...ப்ளீஸ்...//

பெங்களூரு கெளை,

அந்தப் புத்தகம் ஆன்லைனில் கிடைக்கிறது. என் பதிவுகளை திறந்தாலே சைடு டெம்ப்ளேட்டில் புத்தகம் வாங்க லிங்கு கொடுத்திருக்கேன்.

ராசி ஏழுமலையின் சென்னை விசிட் பற்றி எந்த பதிவுகளுமே காணோமே? என்னன்னு இரவுக்கழுகாரை உட்டு விசாரிக்கலையா?
Thamizachi said…
////* பிரான்ஸில் தலைமைக்கழக பொதுச்செயலாளர் பத்து கிலோ வெயிட் தூக்கும் படம் ரிலீஸ், அவரை எதிர்க்கும் வலைப்பதிவர்களுக்கு லேசாக நெற்றியில் வியர்வை ..///

என்னுடைய கண்டனங்களை பதிவு செய்துக் கொள்கிறேன். அல்லது தவறை திருத்தி விடவும். 10 கிலோ இல்லை 25 கிலோ
மிஸ்டர் சம்பூகன்...இப்படி எல்லாம் கோச்சுக்கறது நன்னா இல்லே...நல்லா மென்னு ஷாப்டுங்கோ..சே...

சம்பூகன்..லைட்டா எடுத்துக்கோங்க ப்ளீஸ்.....

///நான் கூறுவதெல்லாம் தவறாகவும் குழப்பமாகவும் இருக்கிறதெனில் எனது வாதங்களை மறுப்பதன் மூலமாக நீங்கள் அதை எடுத்துக் காட்டலாமே///

என்னுடைய டவுஸரை கிழிக்கும் உங்களது நுண்ணரசியல் புரிகிறது...இருந்தாலும் இரும்படிக்கும் இடங்களில் ஈ இருப்பதில் அர்த்தம் ஏதுமில்லை...அதனால் உங்கள் பதிவை நான் திறப்பது முறையல்லவே...

இருந்தாலும் உங்களது வட்டம் குறுகியதாக இருப்பதும் நான் அங்கே வராமைக்கு ஒரு காரணம்...பாவம் அந்த தமிழ்மணி...
///அந்த காலத்துல ஊர சுத்தி சுத்தியே உருப்படமா போனாப்போல இப்போ தமிழ் மணத்தை சுத்தியா :-))அப்படினு யாராவது சொல்லப்போராங்கனு சொல்ல வந்தேன் !///

ஆமாங்க வவ்வால்...ப்ராஜக்ட் கிக் ஆப் ஆகுறவரை வேற வழி...

///இப்படி சுத்தி சுத்தி தமிழ் மணத்தை படித்தும் சட்டைய கிழிச்சுக்காம இருக்கிங்களே எப்படி அது(ஏற்கனவே கிழின்சு போச்சா? )////

ஏற்கனவே கிழிந்த டவுஸர் என்னுடையது...

///அலெக்சாண்ராவா அவங்க சாண்ரோ கார் வச்சு இருப்பாங்களா?///

சாண்ட்ரோவுக்கும் அவங்களுக்கும் என்ன சம்பந்தம்...இது என்ன கனிமொழிக்கும் கவிதைக்கும் முடிச்சு போடுறீங்களே...

//(நான் எல்லாம் அரை டிராயர் போட்டிருந்த காலத்தில வந்தப்படம் ஆச்சே, அதை பார்க்க டிராயர்ப்போட்டு இருந்தால் விட மாட்டாங்கனு , எங்க அண்ணன் லுங்கிய திருடிக்கட்டிக்கிட்டு மறுவேடத்தில் போனேன், அப்போ எனக்கு இருந்த அடுத்த லட்சியம் , எப்படியாவது எனக்கும் சொந்தமாக லுங்கி வாங்கி தரசொல்லி கேட்கனும் என்பதே)///

பாஸ்...என்னுடைய கல்லூரி காலம் 1998 - 1999 ல் திருச்சியை கலக்கிய படம் அது...(எப்போ வந்தது என்று தெரியாது, ஆனால் நீங்க படத்தை(!!!) ஓக்கே ஓக்கே (அல்லது பிட்டை) எங்கே பார்த்தீங்க என்ற தகவல் கொடுக்க முடியுமா ?

அந்த படத்தில் முக்கியமான காரெக்டர் ஒரு குதிரையும் ஒரு பூச்சியும்...அதுக்கெல்லாம் விமர்சனம் இப்போ எழுதமுடியாதுங்கோ....
நன்றி கொழுவி....உங்கள் தலைவிதி அதுன்னா அதனை யார் மாற்ற முடியும் ? "பெரிய டைப்பிஸ்ட்" என்ற உங்கள் கமெண்டுக்கு கொப்பிரைட் வாங்கிவைத்துக்கொள்ளுங்கோ...வரவணையின் "சொந்த செலவில் சூணியம்" போல உப்பொழுது நிறையவிடங்களில் பயன்படுத்துகிறார்கள்...
வாங்க சாமாணியன் சிவா...பின்னூட்டங்களுக்கு நன்றி...அது என்ன சாமானியன் சிவா ?
///ராசி ஏழுமலையின் சென்னை விசிட் பற்றி எந்த பதிவுகளுமே காணோமே? என்னன்னு இரவுக்கழுகாரை உட்டு விசாரிக்கலையா? ///

போண்டா மாதவனும் கே.ஆர்.எஸ் அதியமான் அங்கிளும் போனதாக தகவல் உண்டு...மற்றபடி பெருவாரியான மக்கள் பீச்சில் இருந்தாலும் (சுண்டல்
விற்பவர்கள் உட்பட) அவர்களுக்கும் ராசி சாருக்கும் சம்பந்தம் இல்லை...(வருந்தி அழைத்தபோதும் சென்னையில் இருந்துகொண்டே பாய்க்காட் செய்த அதிஷ்டப்பார்வை, குழந்தைபாரதி மற்றும் தொலைபேசியில் மொய்வைத்தும் போகவே போகாத குறைவணையான் ரெட்தில், டாஸ்மாக்கில் தோழரை சந்திக்கப்போகிறேன் என்று அப்பீட் ஆகிவிட்ட வெளியே மிதக்கும் ஐய்யா ஆகியோரை கேப்பிஎன்னில் வீடு திரும்பும் வரை ராசி சார் திட்டிக்கொண்டே சென்றாராம்...
என்னது, 25 கிலோவா ? நான் "தூள்" படத்துல விவேக் தூக்குற அளவு வெயிட் என்று இல்லையா நினைத்தேன்...சரி இந்த பின்னூட்டத்தினை ரிலீஸ் செய்வதின் மூலம் இந்த தகவலை ஊரெங்கும் பரப்பிவிடுகிறேன்...
பி ஐ டி புகைப்பட போட்டி, துக்ளக் ஆண்டு விழா, சுண்ட கஞ்சி ஆண்டு விழா.
யோனி - ஒருவர் பார்வையில். லி யோனி அறிமுகம் :)
தம்பீபீபீபீபீபீபீபீபீபீ...

தமிழ்மணத்தை உண்மையாகவே வாழ வைத்துக் கொண்டிருப்பது இது போன்ற மொக்கை என்றழைக்கப்படும் நகைச்சுவைகள்தான்..

வாழ்க.. வாழ்க.. வாழ்க..

அலெக்ஸாண்ட்ரா படத்தைப் பற்றிப் படித்ததும் மதுரை தங்கரீகல் தியேட்டரில் பார்த்த ஞாபகம் எனக்கும் வந்தது.. ஆனால் குதிரைதான் முக்கியப் பாத்திரம் என்றதும் எனக்குக் கொஞ்சம் கன்பியூஷன்ஸ்.. குதிரை முக்கியப் பாத்திரமாக வந்தது SIROCO படத்தில்தானே.. இதுலுமா..

சரி.. எனக்கு கதை மறந்துவிட்டது என்று நினைக்கிறேன்.. எதற்கும் நேரமிருந்தால் தனிமடலில் ஒரு நாலு வரியில் கதையை அனுப்பி வை.. மூளைக்குள் ரிமைண்ட் செய்து கொள்கிறேன்.

வாழ்க வளமுடன்
ராசி ஏழுமலை (டூப்ளிகேட்டு) said…
//போண்டா மாதவனும் கே.ஆர்.எஸ் அதியமான் அங்கிளும் போனதாக தகவல் உண்டு...மற்றபடி பெருவாரியான மக்கள் பீச்சில் இருந்தாலும் (சுண்டல்
விற்பவர்கள் உட்பட) அவர்களுக்கும் ராசி சாருக்கும் சம்பந்தம் இல்லை...(வருந்தி அழைத்தபோதும் சென்னையில் இருந்துகொண்டே பாய்க்காட் செய்த அதிஷ்டப்பார்வை, குழந்தைபாரதி மற்றும் தொலைபேசியில் மொய்வைத்தும் போகவே போகாத குறைவணையான் ரெட்தில், டாஸ்மாக்கில் தோழரை சந்திக்கப்போகிறேன் என்று அப்பீட் ஆகிவிட்ட வெளியே மிதக்கும் ஐய்யா ஆகியோரை கேப்பிஎன்னில் வீடு திரும்பும் வரை ராசி சார் திட்டிக்கொண்டே சென்றாராம்...//

செம நக்கலுய்யா ஒனக்கு!
கொலைவெறி & ஏஜண்ட்,

பாவமா இருக்கு உங்களையும் உங்க கோஷ்டிகளையும் பாத்தா... வளருங்கடா டேய். போய் வேலையைப் பாருங்கடா.

-ராசி ஏழுமலை (ஒரிஜினல்)
//பெரிய டைப்பிஸ்ட்" என்ற உங்கள் கமெண்டுக்கு கொப்பிரைட் வாங்கிவைத்துக்கொள்ளுங்கோ...//

ஆமா ஆமா.. நானும் பார்த்தேன். ஆனா அங்கெல்லாம் என்னோட பெயரைக் குறிப்பிட்டுத்தான் சொல்றாங்க..

அப்படியெங்கையாகிலும் என் பெயரை சொல்லாமல் அதை யூஸ் பண்ணியிருந்தா சொல்லுங்க.. ஒரு நடை போயி என் கண்டனத்தை பதிவு செய்திட்டு திரும்பி வரலாம்.
Dear Kasi

I am very sorry if i hurted your feelings. its just for fun.

Ravi
//திருச்சியில அலெக்ஸாண்ட்ரா படம் அய்ம்பது நாள் ஓடினப்ப பார்த்தவங்க ஆராவது தமிழ்மணத்தில் இருக்கீங்களா ? அலெக்ஸாண்ட்ராவை பூச்சி கடிச்சபிறகு என்னா ஆகும் ? ( நான் காளிமார்க் கூல்ட்ரிங் வாங்க வெளிய போயிட்டேன்...)//

பிளாசா தியேட்டருல அலெக்சாண்ட்ரா படம் பாத்துகிட்டு இருக்கும்போது அந்த பூச்சி கடிக்கிற சீனப்ப என் கால மிதிச்சிட்டு போனது நீங்கதானா? உங்களைத்தான் ரெம்ப நாளா தேடிகிட்டு இருக்கேன்.
//
க, கா, கி, கூ, யொ, யோ, பு, பா, பே என்ற வரிசையில் அறியாத ஏழெட்டு வார்த்தைகளின் முழு அர்த்தம் விளங்கியது...இன்னும் புதிய வார்த்தைகளை இலங்கை, இந்தியா, ப்ரான்ஸ், அமேரிக்கா போன்ற இடங்களில் இருந்து அறிமுகப்படுத்த வேண்டுமாய் வலைப்பதிவர்களை கேட்டுக்கொள்கிறேன்...
//

ச்ச போன வாரம் ஊருக்கு போயிட்டு இத மிஸ் பண்ணீட்டேனே :(

இவ்ளோ நாள் தமிழ்மணம் படிச்சதெல்லாம் வேஸ்டா பூடுச்சே :(
//கொலைவெறி & ஏஜண்ட்,

பாவமா இருக்கு உங்களையும் உங்க கோஷ்டிகளையும் பாத்தா... வளருங்கடா டேய். போய் வேலையைப் பாருங்கடா.

-ராசி ஏழுமலை (ஒரிஜினல்)//

அண்ணாத்தே ராசி ஏழுமலை (ஒரிஜினல்)

சார்ரீஈஈஈ.....

உங்களுக்கு BP இருக்குன்னு எங்களுக்கு தெரியாது. காண்டு கஜேந்திரன் மாதிரி நீங்களும் ‘ஆரோக்கியமா' இருக்கீங்கன்னு நெனைச்சுட்டோம்....

Society looks like a mirror. It shows what we reacted as it is.

- திமுக பூத் ஏஜெண்ட்
2வது வார்டு, மடிப்பாக்கம் ஊராட்சி
காஞ்சிபுரம் மாவட்டம்.

Popular Posts