தமிழ் வலைப்பதிவர்களின் தனிப்பட்ட தகவல்கள் (தணிக்கை செய்யப்படாதது)

இப்போது தமிழ் வலைப்பதிவர்களின் தனிப்பட்ட தகவல்களை பார்க்கலாம்...இவை தணிக்கை செய்யப்படாதது ஒருபுறம் இருக்க, இதனை வெளியிடுவதற்காக யாருடைய அனுமதியையும் பெறவில்லை என்பதும் இன்னோரு விடயம்...(ங்ஏ...!!! அடப்பாவி மக்கா !!!)

(அப்படி அவர்கள் பின்னூட்டத்தில் ஆட்சேபம் தெரிவித்தால் உடனே நீக்கிவிடுகிறேன்..ஓக்கே )

* கில்லி ஐகாரஸ் பிரகாஷ் விரும்பி புகைப்பது கோல்ட் ப்ளேக் பில்டர் சிகரெட்டாம்...இரு நாளைக்கு ஒரு பாக்கெட்டாம்..

* பதிவர் (எப்போதாவது) கவிஜர் பாலபாரதி, புதிய பணி ஒன்றில் மும்முரமாம்...புகைப்பதை நிறுத்துவதாக எல்லோரையும் ஏமாற்றி ஒரு ஆண்டு ஆவதை புத்தக கண்காட்சியில் வில்ஸ் அடித்து கொண்டாடினாராம்...

* துளசி கோபால் டீச்சர் புதுவீட்டுக்கு குடியேறிவிட்டார்களாம்...மகளின் காதலுக்கு பச்சைக்கொடியாம்...கோபால் சாரும் டீச்சரும் அய்ரோப்பா டூர் ட்ரிப்புக்கு ப்ளான் செய்கிறார்களாம்...

* நச்.வலைப்பதிவர் ஓசை செல்லா க்வாட்டர் ஒயினுக்கே மப்பாகிவிடுகிறாராம்...மப்பு ஏறிவிட்டால் அட்லீஸ்ட் நான்கு பதிவுகள் போடாமல் ஓய்வதில்லையாம்...பின்னவீனத்துவம் பற்றி திடீர் சிந்தனை ஏதோ தோன்றி மண்டைக்குள் கபடியாடிக்கொண்டிருப்பதாக சொல்லிக்கொண்டிருக்கிறாராம்...இந்த வருட ஆண்லைன் வருமானத்தை ஆயிரம் டொலராக ஆக்க பெண் தோழியிடம் அய்டியா கேட்டிருக்கிறாராம்...(நல்லா வாறியாச்சு)

* சுனாமிப்பதிவர் லக்கிலூக் டோண்டு சாரிடம் நெருக்கமாக இருப்பது நானூத்து சொச்ச பேருக்கு பிடிக்கவில்லையாம்...டோண்டு சார் சுனாமியை கவிதையாக மொழிபெயர்த்தது கூட லக்கிலூக்கை பாராட்டித்தானாம்...லக்கிலூக் புகைப்பது வில்ஸ் பில்டர்.

* தோழர் மிதக்கும் வெளி சுகுணா திவாகர் புதிய புத்தகம் எழுதும் முயற்சியில் மும்முரமாக உள்ளாராம்...தமிழ் நூல் விமர்சனத்தில் உங்களை போல் சிறப்பாக எழுதுபவர்கள் குறைவு என்று பெரிய எழுத்தாளர் ஒருவரிடம் இருந்து வந்த பாராட்டால் மகிழ்ச்சி அடைந்துள்ளாராம்..

* வரவணையான் செந்தில் இப்போது சென்னையில் ட்ரிப் அடித்துக்கொண்டிருக்கிறாராம்...ஏன் என்று அவருக்கு மட்டும் தான் தெரியுமாம்...

* அவுஸ்திரேலியா திரும்பிய பொட்டீக்கடையார் தமிழ் வலைப்பதிவுகள் மற்றும் தமிழ் வலைத்திரட்டிகளை ப்ளாக் செய்யச்சொல்லி வாலெண்டியராக ஆபீஸ் சிஸ்டம் அட்மினுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளாராம்..

* மரபூர் ஜெய சந்திரசேகரன், தன்னுடைய பெங்களூர் விசிட்டின்போது, தொலைபேசியில் அழைத்தும் வராத செந்தழல் ரவி மீது கடுப்பில் உள்ளாராம்...

* மதுரை இராம் தனக்கு வந்துள்ள இரண்டு மூன்று காதல் மின்னஞ்சல்களில் எதை செலக்ட் செய்வது என்ற குழப்பத்தில் மண்டை காய்ந்துக்கொண்டுள்ளாராம்...

* தலைகீழ் விகிதங்கள் வவ்வால் ஜாலி ட்ரிப்பாக அடுத்தவாரம் கோவை செல்கிறாராம்...வாத்தியார் சுப்பையாவையாவது சந்திக்கலாம் என்ற ஆவலுடன் உள்ளாராம்...

* என்றென்றும் அன்புடன் பாலாவுக்கு அலுவலகத்தில் செம ஆணியாம்...அதனால் தமிழ் வலைப்பக்கம் மேய முடியாத கவலையில் உள்ளாராம்...வீட்டில் இணைய இணைப்பு படுத்துவிட்டதாம்..

* இட்லிவடை தமிழ்மணத்தில் தன்னுடைய பதிவுகளை மீண்டும் சேர்க்கும் ஐடியாவில் உள்ளாராம்...வீட்டில் இணைய இணைப்பு வேலை செய்தவுடன் செய்வாராம்...

* டோண்டு சார் ஏழெட்டு பதிவுகளை ட்ராப்டில் போட்டுவைத்துள்ளாராம்...அதில் பல காண்ட்ரவர்ஷியல் டாப்பிக்ஸாம்...அவற்றில் இரண்டு பதிவிலாவது 100 பின்னூட்டம் அடிக்காவிட்டால் தன்னுடைய வீட்டம்மா தன்னுடைய குமட்டில் குத்துவார் என்ற தகவல் அறிந்து, அதனை தடுக்க நாட்டாமையின் உதவியை நாட மகர நெடுங்குழைகாதனை வேண்டிவருகிறாராம்..

* அரவிந்தன் நீலகண்டன் தன்னுடைய பதிவுகளை தமிழ்மணத்தில் இணைக்க விருப்பமாக உள்ளாராம்...இப்போது உள்ள தமிழ்மண சூழல் ஆரோக்கியமான விவாத போக்கை முன்னெடுத்து செல்கிறது என்ற தமிழ்மணியின் அழைப்பும் ஒரு காரணம்...

* டி.பி.ஆர் ஜோசப் சாரின் "திரும்பி பார்க்கிறேன்" தொடர் பெருத்த வரவேற்று பெற்றது அனைவருக்கும் தெரியும்...அதே போல் மீண்டும் ஒரு தொடர் ஆரம்பிக்கவேண்டும் என்று ஜி.ரா தொடர்ச்சியாக வற்புறுத்தி வருவதால், மீண்டும் தொடர் ஆரம்பிக்கும் எண்ணத்தில் இருக்கிறாராம் டி.பி.ஆர் சார்.

* அபி அப்பா தொடர்ந்து மொக்கையாக எழுதிவருவாதாக போன வாரம் தொலைபேசியில் அழைத்த அய்யனாரும் கோபிநாத்தும் வாரினார்களாம்...அதனால் இம்சை அரசி மற்றும் தம்பியின் ஆலோசனைப்படி புதிய தொடர்கதை ஒன்றை மூன்று வாரங்களில் தொடங்கப்போகிறாராம் அபி அப்பா...

* கடலூர் வரை வந்த குழலி யாரையும் தொடர்புகொள்ளாமல் மீண்டும் சிங்கை போனதுக்கு காரணம், ஜலதோஷ தொந்தரவாம்...

* விவசாயி இளா மீண்டும் ஊர் பக்கம் வந்து விவசாயத்தில் இறங்க திட்டம் போட்டிருக்கிறாராம்...இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்வது திட்டமாம்..இன்னும் மூன்று நான்கு வருடங்களில் தகவல் தொழில்நுட்ப துறையில் ரிட்டையர் அறிவிப்பு வெளியிடப்போகிறாராம்..

* அசுரன் புனேயில் வசிக்கிறாராம்...பெரிய அரசியல் கட்சித்தலைவரின் மருமகனாம்...அந்த தலைவரைப்போலவே முற்போக்கு கருத்துக்கள் கொண்டவராம்...

* மங்களூர் சிவா வசிப்பது மங்களூரில்...அங்கே தகவல் தொழில்நுட்பத்துறை அல்லாத வேறு துறையில் பணிபுரிகிறாராம்...

* அலுவலக பணிகளுக்காக அமெரிக்கா சென்ற பொன்ஸ் திரும்பி வந்துவிட்டார்களாம்...மீண்டும் தமிழ் வலையுலகில் தீவிரமாக இயங்கும் திட்டம் இல்லையாம்........

* கண்ணபிரான் ரவிஷங்கர் அமெரிக்காவிலும், நா கண்ணன் கொரியா கோஜே தீவிலும் வசிக்கிறார்கள்...

* தமிழ் வலைப்பதிவுகள் எழுதுபவர்களிலேயே மிக அதிக நன்பர் கூட்டம் கொண்டவர் மா சிவக்குமாராம்...இவர் தொண்ணூறுகளிலேயே "தமிழ் கம்புயூட்டர்" இதழில் கட்டுரைகள் எழுதியவராம்..

* சிறுகதை சுனாமி வினையூக்கி பணிபுரிவது பாங்கிங் சொல்யூஷன்ஸ் தரும் சென்னை மென்பொருள் நிறுவனத்திலாம்...

* கோவை வலைப்பதிவர் ஆசிரியர் சுப்பைய்யா, ஆங்கில தளங்களை பிரித்து மேய்ந்துகொண்டிருக்கிறாராம்...அதனால் வாத்தியாரிடம் (அ) ஜோக்ஸ் கேட்டு மாணவர்கள் மொய்த்து எடுக்கிறார்களாம்..

* சர்வே போடுவதில் இப்பொதைக்கு இண்ட்ரஸ்ட் இல்லை, ஏதாவது எழுதுறேன் என்று சர்வேசன் களம் இறங்கிவிட்டாராம்...புதிய போட்டி ஒன்றை வைத்து வலையுலகை உலுக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறாராம்..

* பெங்களூரை சேர்ந்த வலைப்பதிவர் செந்தழல் ரவி ( டேய்ய்ய்ய்ய்ய்ய்) சிகரெட்டை நிறுத்தி ஆறுமாதம் ஆச்சாம்..அதனால் இந்த வார இறுதியில் அவரது மனைவி பெரிய பார்ட்டி கொடுக்கவிருக்கிறாராம்...(இது டூ மச் ரவி)

பின்குறிப்பு...

மேற்கண்ட தகவல்கள் உண்மையாகவும் இருக்கலாம், உண்மை இல்லாமலும் இருக்கலாம்..

அன்புடன்,
புரளிமனோஹர்...

Comments

//கோபால் சாரும் டீச்சரும் அய்ரோப்பா டூர் ட்ரிப்புக்கு ப்ளான் செய்கிறார்களாம்//

ரொம்ப பழைய சேதியா இருக்கே.

அய்ரோப்பா எல்லாம் போய்வந்தே 9 வருசம் ஆச்சு.
செந்தழலாரே,

என்னை எதுக்கு கோவைக்கு அனுப்ப திட்டம் போடுறீர்(அங்கே என்னை யார்கைலவாது மாட்டி விடும் திட்டம் இருக்கா)

ஜாலி டிரிப்பாக போறதுனா நான் புதுவைக்கு போவேனே ஒழிய கோவைக்கு போவேனா(கெரகம் இங்க இருக்க டாஸ்மாக் தானே அங்கேயும் இருக்கு)

புதுவைனா அது ஒரு ஜாலி தானே :-))

இங்கே போட்டு இருக்க அத்தினி தகவலுமே குன்சா அடிச்சு விட்டது போல இருக்கே இதுலாம் ரொம்ப ஓவர் சாமி! :-))
//
மேற்கண்ட தகவல்கள் உண்மையாகவும் இருக்கலாம், உண்மை இல்லாமலும் இருக்கலாம்..
//
நச்!!
theevu said…
சூடான இடுகை
Anonymous said…
//* என்றென்றும் அன்புடன் பாலாவுக்கு அலுவலகத்தில் செம ஆணியாம்...அதனால் தமிழ் வலைப்பக்கம் மேய முடியாத கவலையில் உள்ளாராம்...வீட்டில் இணைய இணைப்பு படுத்துவிட்டதாம்..

* இட்லிவடை தமிழ்மணத்தில் தன்னுடைய பதிவுகளை மீண்டும் சேர்க்கும் ஐடியாவில் உள்ளாராம்...வீட்டில் இணைய இணைப்பு வேலை செய்தவுடன் செய்வாராம்...//

Are these two related?
//ஜலதோஷ தொந்தரவாம்...//
ஜலதோஷம் இல்ல அப்பு, பேதியானது தான் காரணம்...
SP.VR. SUBBIAH said…
இதையும் சேர்த்துக்கொள்ளவும்:

வலைப் பதிவாளர் செந்தழலார் சென்னை நடேசன் பூங்காவில் வன்பொருள் கண்காட்சி ஒன்றை நடத்தவிருக்கிறார் - கொரிய நிருவனங்களின் உதவியுடன்.
அதற்கு மடிப்பாக்கத்துக்காரர் பரிந்துரை செய்ய தமிழக அரசின் அனுமதியையும் பெற்றுவிட்டாராம்.

ந' வில் தொடங்கித் தா' வில் முடியும் நடிகைதான் கண்காட்சியைத் துவங்கி வைக்க உள்ளாரம்.

வலைப்பதிவர்களுக்காக ஒரு விசேட ஸ்டாலும் உண்டாம். விருப்பமுள்ளவர்கள் இப்பவே விண்ணப்பிக்கலாம்
Anonymous said…
part time ma dinamalam thula serthudungo
OSAI Chella said…
//நச்.வலைப்பதிவர் ஓசை செல்லா க்வாட்டர் ஒயினுக்கே மப்பாகிவிடுகிறாராம்...மப்பு ஏறிவிட்டால் அட்லீஸ்ட் நான்கு பதிவுகள் போடாமல் ஓய்வதில்லையாம்...பின்னவீனத்துவம் பற்றி திடீர் சிந்தனை ஏதோ தோன்றி மண்டைக்குள் கபடியாடிக்கொண்டிருப்பதாக சொல்லிக்கொண்டிருக்கிறாராம்...இந்த வருட ஆண்லைன் வருமானத்தை ஆயிரம் டொலராக ஆக்க பெண் தோழியிடம் அய்டியா கேட்டிருக்கிறாராம்...(நல்லா வாறியாச்சு)
//

அடப்பாவி.. இனிமேல் Q வாங்கிக்குடுக்கவே தயஙுவானுகளே நம்ம மக்கள்!! இந்த மாசத்தோட விரதம் முடிஞ்ச கையோடு ஓல்ட் மான்க் மாதிரி பின்னிப்பெடலெடுக்கப்போரென் பாரு கண்ணு!
ILA(a)இளா said…
//பெங்களூரை சேர்ந்த வலைப்பதிவர் செந்தழல் ரவி ( டேய்ய்ய்ய்ய்ய்ய்) சிகரெட்டை நிறுத்தி ஆறுமாதம் ஆச்சாம்//
இது என்ன கொடுமை? இப்படியா நண்பர்களை ஏமாத்துறது.
Anonymous said…
அசுரன் புனேயில் வசிக்கிறாராம்...பெரிய அரசியல் கட்சித்தலைவரின் மருமகனாம்...அந்த தலைவரைப்போலவே முற்போக்கு கருத்துக்கள் கொண்டவராம்

இது கிண்டல்தானே?

Popular Posts