இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி....

உங்கள்ல எத்தனைபேர் வீட்ல இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி இருக்குன்னு எனக்கு தெரியாது...ஆனா என்னோட வீட்ல இருக்கு...சமீபமா ஊருக்கு போனப்போ, கிராமத்து வீட்ல இருந்த பழைய டயனோரா டீ.விய காணல...ஆனா அதுக்கு பதிலா ஜம்முனு உக்காந்திருந்தது ஒரு குட்டி டிவி...

என்னடா இலவச வண்ணத்தொலைக்காட்சி பெட்டி வந்திட்டது போலிருக்கே நம்ம வீட்டுக்கு...அப்படீன்னு ஒரே குஜால்...பாரம்பரியமா எங்க ஊர்ல காங்கிரஸ் தான்...இருந்தாலும் ரேஷன் கார்டு இருக்கவங்க எல்லாருக்கும் வண்ண தொலைக்காட்சி பெட்டி வந்து சேர்ந்திட்டது...

ஐநூறு ரூவாய்க்கு ரெண்டுன்னு கொடுத்த ரிலையன்ஸ் போன் மாதிரித்தான் இருக்கப்போவுதுன்னு கொஞ்சம் அசமஞ்சமாத்தான் ஆன் பண்ணேன்...டப்புனு "தமிழக அரசு இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டீன்னு" ப்ளூ ஸ்க்ரீனுக்கு பதிலா வந்தது...

அப்புறம் டப்புனு படம் தெரிஞ்சுது....மொதல்ல வந்த சானல் ஜெயா டி.வி...எங்க மம்மி கடிச்சா கோல்டாமே...அத பார்த்துக்கிட்டிருந்தது போட கடைசியா...படம் ப்ளாஸ்மா டி.வி அளவுக்கு பக்காவா இருந்தது...

அப்படியே சன் டிவி...அப்புறம் ஸ்டார் மூவீஸ்...அப்புறம் பேஷன் டி.வின்னு எல்லா சேனலையும் பார்க்குறேன்...படம் சும்மா பக்காவா கீது....அடப்பாவி மக்கா...டி.வி கம்பெனிக்காரன் பொழப்புல மண்ணை போட்டுட்டீங்களேன்னு நினைச்சுக்கிட்டேன்...

முன்னெல்லாம் நம்ம கிராமத்து ஏரியாவுல மக்களுக்கு ஒரு பணக்கஷ்டம்....கொழைந்தைக்கு உடம்பு முடியாம ஆஸ்பத்திரிக்கு தூக்கினு போவனும்...இல்லன்னா...புள்ளைக்கு ஸ்கூல் பீஸ் கட்டனும்.....நோட்டு புக்கு வாங்கனும்...தீவாளி பொங்கல்னா நல்ல துணியெடுத்து கொடுக்கனும்...அப்படீன்னா...மக்கள் கூடுமானவரைக்கும் செய்ய முயற்சி பண்ணுவாங்க...

அப்படி முடியலன்னா...காதுல மூக்குல போட்டிருக்கறத அடகுவச்சுட்டு...காசு வாங்கிடுவாங்க...அப்படி எதுவுமே இல்லைன்னு வெச்சுக்கோங்க...இருக்கவே இருக்கு ரேஷன் கார்டு....அத்த கொண்டுபோய் டப்புன்னு காசு இருக்கவனுங்க கிட்ட அடகு வெச்சுட்டு....அய்நூறு ஆயிரம்னு வாங்கிட்டு வந்துருவாங்க...இது தாங்க ஏழை மக்களின் நிலை...

ரேஷன் கார்டை அடகு வெச்சுட்டா அத மூக்குற வரைக்கும் ( மீட்கும் வரை) கொஞ்சம் கஷ்டகாலம் தான்னு வெச்சுக்கோங்களேன்...ஏன்ன எண்ணை கிடைக்காது ( மண்ணென்னை)...அரிசி கிடைக்காது...கடையில காசு கொடுத்து வாங்கனும்...இல்லை ரேஷன்ல வாங்குறவங்க கிட்ட கடன் வாங்கனும்...

ஆனா இந்த வண்ணத்தொலைக்காட்சி பெட்டியில ஒரு வசதி...ரொம்ப முடியல...கஷ்டம்னா, ஒரு ஆயிரம் ஆயிரத்தைந்நூறுக்கு வித்துத்தள்ளிட்டு காசு வாங்கிட்டு வந்திடலாம்....

இப்போல்லாம் ஊர் நாட்ல பஞ்சம் இல்லை...மூனு வேளை நல்லா சாப்புடறாங்க என்பது உண்மைதான்...(வேலைக்கு உணவு திட்டத்துல நூறு ரூபாய்க்கு ஊர் தலைவர் கமிஷன் போக எண்பது ரூபாய் கிடைக்குதுங்க மக்களுக்கு....இது பற்றி அப்பாலிக்கா எழுதறேன்...)..ஆனா இந்த வண்ணத்தொலைக்காட்சி திட்டமும் ஒரு நல்ல திட்டம் தானுங்க...அதை மறுக்கவே முடியாது.....

அப்புறம் ஊர் நாடெங்கும் குளம் வெட்டும் திட்டமும் அருமையான திட்டமுங்க...அது பற்றி போட்டோவோட ஒரு பதிவு போடும் எண்ணம் இருக்கு...

எனிவே...திரு...நாகநாதன்...நன்றி...கலைஞர் அவர்களே...நன்றி....

Comments

ஏம்பா குடுக்குறதுதான் குடுக்குராய்ங்க ஒரு சோனி 42 இன்ச் பிரேவியா LCD டீவி குடுக்கலாமுல. CRT டீவியில ஏதே ரேடியேசனோ கீடியேசனோ வந்து கண்ணக்கெடுக்குதாம்ல. அதுனால தமிழக மக்களின் கண்களை கருத்தில் கொண்டு இனிமேல் LCD டீவி குடுக்கச்சொல்லுங்கப்பா!

அட எல்லாத்தையும் இப்பவே எலவசமா குடுத்துட்டா அடுத்த எலக்சனுல குடுக்குறதுக்கு ஒன்னும் இருக்காதுனு நெனக்கிரேன், மன்னிச்சுக்கங்கப்பா மேல உள்ள பாராவை தெரியாம டைப்பண்ணிட்டேன்.

இன்னும் ரேசன் கார்டு வச்சிருகவங்களுக்கெல்லாம் இலவச TVS Super XL குடுத்தா கொஞ்சம் வசதியாத்தான் இருக்கும்.

கடத்தேங்காயை எடுத்து வழிப்புள்ளையாருக்கு உடைக்கிறதுல, புள்ளையாருக்கும் கஷ்டமில்லை, உடைக்கிறவனுக்கும் நஷ்டமில்ல கஷ்டமெல்லாம் கடைக்காரனுக்குத்தான் :-(
Anonymous said…
//கடத்தேங்காயை எடுத்து வழிப்புள்ளையாருக்கு உடைக்கிறதுல, புள்ளையாருக்கும் கஷ்டமில்லை, உடைக்கிறவனுக்கும் நஷ்டமில்ல கஷ்டமெல்லாம் கடைக்காரனுக்குத்தான் :-(//

புள்ளையார் தான்தான் கடைக்காரன்ற உண்மையை உணர்வதெப்போ?
ஜோ / Joe said…
//கடத்தேங்காயை எடுத்து வழிப்புள்ளையாருக்கு உடைக்கிறதுல, புள்ளையாருக்கும் கஷ்டமில்லை, உடைக்கிறவனுக்கும் நஷ்டமில்ல கஷ்டமெல்லாம் கடைக்காரனுக்குத்தான் :-(//

யாரப்பா அந்த கடைக்காரன் ? மக்கள் பணத்தை எடுத்து மக்களுக்கு தானே கொடுத்திருக்கு ..இதுல என்ன கடைக்காரன் ,வழிப்புள்ளையார் வேண்டிக்கிடக்கு.
Anonymous said…
//வேலைக்கு உணவு திட்டத்துல நூறு ரூபாய்க்கு ஊர் தலைவர் கமிஷன் போக எண்பது ரூபாய் கிடைக்குதுங்க மக்களுக்கு....இது பற்றி அப்பாலிக்கா எழுதறேன்...///

indha matter, inga ezhudungalen - fixmyindia.blogspot.com

-surveysan
///கடத்தேங்காயை எடுத்து வழிப்புள்ளையாருக்கு உடைக்கிறதுல, புள்ளையாருக்கும் கஷ்டமில்லை, உடைக்கிறவனுக்கும் நஷ்டமில்ல கஷ்டமெல்லாம் கடைக்காரனுக்குத்தான் :-(///

அட பார்ப்பணீய பெருச்சாளியே ? இங்கே யாரை வழிப்புள்ளையார் என்றும் யாரை உடைக்கிறவன் என்றும் சொல்கிறாய் ?

மக்களுக்கு கொடுக்கவேண்டும் என்று நினைத்தவனையும், மக்களையும் தானே ?

கடைக்காரனுக்கு நட்டமானா ஆவட்டும்...அதனால் கடைக்காரன் என்ன பிச்சையா எடுக்கப்போகிறான் ?


////ஏம்பா குடுக்குறதுதான் குடுக்குராய்ங்க ஒரு சோனி 42 இன்ச் பிரேவியா LCD டீவி குடுக்கலாமுல. CRT டீவியில ஏதே ரேடியேசனோ கீடியேசனோ வந்து கண்ணக்கெடுக்குதாம்ல. அதுனால தமிழக மக்களின் கண்களை கருத்தில் கொண்டு இனிமேல் LCD டீவி குடுக்கச்சொல்லுங்கப்பா!////

ஏழை மக்களுக்கு கொடுப்பதை கண்டு கிண்டல் செய்து வயிறு எரியும் நீ கண்டிப்பாக பஞ்சாயத்து போர்டு ஸ்கூலிலோ அரசு கல்லூரியிலோ படித்திருக்க முடியாது...

பாடங்களை மணனம் செய்து கடம் அடித்து அய்.அய்.டியிலோ அல்லது வேறு எங்கோ படித்து ரெபரன்ஸ் மூலம் வேலைக்கு வந்த பார்ப்பணீய சொறி நாயாகத்தானிருக்கவேண்டும் நீ...

ராஸ்கல் உன்னுடைய வேலையை வேறு எங்காவது வைத்துக்கொள்...

ஏழை மக்களை கிண்டல் செய்யும் நோக்கத்தோடு இந்த பதிவில் ஆட்டம் போட்டால் பிய்ந்த செருப்பு தான் பதில் சொல்லும்...

///இன்னும் ரேசன் கார்டு வச்சிருகவங்களுக்கெல்லாம் இலவச TVS Super XL குடுத்தா கொஞ்சம் வசதியாத்தான் இருக்கும்.
///

பாடு...அதை சோ'மாறி'யையோ அல்லது மோடி மஸ்தானையோ கொடுக்கச்சொல்...
//
அட பார்ப்பணீய பெருச்சாளியே ?
//
குத்தியாச்சா முத்திரையை.... நல்லா இருங்கப்பா...

//
இங்கே யாரை வழிப்புள்ளையார் என்றும் யாரை உடைக்கிறவன் என்றும் சொல்கிறாய் ?
//
ஒரு வேளை சாப்பாட்டுக்காக காலையிலிருந்து கஷ்டப்படும் என் அப்பா-அம்மா போன்ற விவசாயிகளையும், இரவு பகலாக கல் உடைக்கும் எங்கள் ஊரில் உள்ளதைப்போல வேறு ஊர்களில் உள்ள, பாலிதீன் டென்ட்களில் (ரேஷன் கார்டு கூட இல்லாமல்) குடியிருக்கும் அடித்தட்டு மக்களையும், கிட்டத்தட்ட உயிரையே கொடுத்து படித்து வேலை வாங்கி வரும் சம்பளத்தில் பாதியை வரியாக கட்டும் என் போன்ற இளைஞர்களையும் கடைக்காரன் என்றேன்.

ஏற்கனவே உள்ள டயனோரா டீவியை மாற்றிவிட்டு, புதிதாக ஒரு டீவியை ஒசியில் வாங்கி சந்தோஷமாக பொழுதைப்போக்கும் உங்களைப் போன்றோரை வழிப்பிள்ளையார் என்றேன்.

//
ஏழை மக்களுக்கு கொடுப்பதை கண்டு கிண்டல் செய்து வயிறு எரியும் நீ கண்டிப்பாக பஞ்சாயத்து போர்டு ஸ்கூலிலோ அரசு கல்லூரியிலோ படித்திருக்க முடியாது...
//
உங்களை நினைச்சா சிப்பு சிப்பா தான் வருது... நடுவூரில் பிறந்து, தென்னை மரத்தடியில் கரும்பலகை ஊன்றிய பள்ளியில் படித்து, MBC மற்றும் Rural Area கோட்டாவில் கல்லூரில் சேர்க்கப்பட்வன் நான்.

//
ஏழை மக்களை கிண்டல் செய்யும் நோக்கத்தோடு இந்த பதிவில் ஆட்டம் போட்டால்
//

ஏழை மக்களா??? யாரப்பா அது?? ஏழை என்பதன் அர்தமாவது தெரியுமா உங்களுக்கு?? விஷப்பாம்புகள் சூழ்ந்த வயல்காடுகளில் மாட்டுக்கொட்டகையில் வாழ்ந்ததுண்டா?? நான் பிறந்த நாள் முதல் 16 வயது வரை மாட்டுக்கொட்டத்தில், உதவிக்கு ஆள் தேடக்கூட அரை மைல் தூரம் ஓடி வாழ்ந்தவன். ஏழை என்பதன் அர்த்தம் உங்களை விட, உங்கள் டீவியை வழங்கிய வள்ளளை விட பல ஆயிரம் மடங்கு எனக்குத் தெரியும்.

//
பிய்ந்த செருப்பு தான் பதில் சொல்லும்...
//
அட நான் பதில் சொல்லுவது ரவி என்றல்லவா நினைத்தேன்

//
பாடு...அதை சோ'மாறி'யையோ அல்லது மோடி மஸ்தானையோ கொடுக்கச்சொல்...
//
மக்கள் அவர்களை தேர்ந்தெடுக்கும் போது கண்டிப்பாக கேட்கலாம்.

//
கடைக்காரனுக்கு நட்டமானா ஆவட்டும்...அதனால் கடைக்காரன் என்ன பிச்சையா எடுக்கப்போகிறான் ?
//
என்ன ரவி பெங்களூரில் ஆட்டோ ஓட்டுறீங்களா என்ன?? அவங்கதான் "உனக்கு சம்பளம் அதிகம் குடுப்பான்ல அதுனால எனக்கு ஒரு 20ரூ மேல போட்டுக்குடுத்தா கொறஞ்சா போயிருவ" அப்படீனு கேப்பாங்க.


சரி இப்போது மேட்டருக்கு வருவோம்... எப்போதாவது வானம் பார்த்த பூமியை நம்பியிருப்போரை பார்த்தது உண்டா??? எங்கள ஊரில் வயலுக்கு சென்ற ஒரு விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழந்து ஒரு வாரமானது, அவரது குடும்பம் இப்போது படும் பாடு சொல்லி மாளாது. இவர்களுக்கெல்லாம் அரசாங்கம் ஏதாவது வழி செய்வதை விட்டுவிட்டு இலவச கலர் டீவி கொடுப்பதில் எந்த ஏழைக்கும் பெரிய வாழ்வாதார உதவி கிடைப்பதாக எனக்கு தெரியவில்லை.

உன்மையில் கலர் டீவியால் எந்த ஏழைக்கும் வாழ்வியல் முன்னேற்றம் ஏற்படவில்லை. அவ்வாறு கலர் டீவியால் சந்தோஷமாக வாழ்கிறேன் என்பவர் நிச்சயம் ஏழையாக இருக்க முடியாது.
//
பாடங்களை மணனம் செய்து கடம் அடித்து அய்.அய்.டியிலோ அல்லது வேறு எங்கோ படித்து ரெபரன்ஸ் மூலம் வேலைக்கு வந்த பார்ப்பணீய சொறி நாயாகத்தானிருக்கவேண்டும் நீ...
//
இது போன்ற ஏக வசனங்கள் இயலாமையின் சிறந்த உதாரணங்கள். "ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு" என்ற தமிழ் மூதாட்டியின் சொற்களை தங்களுக்கு நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன்.
jai said…
யாரு எத ஓசியில கொடுத்தாலும் வாங்கக்கூடாது. நம்ப ஆளுங்க நிவாரண நிதி கொடுத்தாலும் அடிசிபுடிச்சிகினு ஓடிப்போய் சாகராணுங்க... எந்த அரசாங்கமும் மக்களுக்கு டி.வி. கொடுக்கிறது, கடன் தள்ளுபடி பண்றது எல்லாமே வேஸ்ட். முதல்ல விலைவாசிய குறைக்கச் சொல்லுங்க. அப்புறம் மற்றதெல்லாம்.

Popular Posts