Saturday, June 21, 2008

அவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்..........

நேரடியா விஷயத்துக்கு வந்திடுறேன்...நாம இப்ப இருக்குற இடம் ஒரு ஹாஸ்பிட்டல்...ஓக்கே....ஹாஸ்பிட்டல்ன்ன உடனே ஊசி, வெள்ளைக்கலர் மாத்திரை, லைட்டான பினாயில் கலந்த பெர்பியூம் வாடை, பச்சைக்கலர் பெட்ஷீட் எல்லாம் உங்க நியாபகத்துக்கு வந்திருக்குமே...

நாம இங்க பாக்கப்போறது அது இல்ல...இந்தா எதிர்த்த பெட்டுல தாத்தா இருக்காரே அவரைப்பத்தி சொல்றேன்...பக்கத்து பெட்ல கைல கட்டுப்போட்டுக்குட்டு ஒல்லியா இருக்கானே அவனைப்பத்தி சொல்றேன்...கதவுக்கு பக்கத்துல லெப்ட்ல தெரியுதே..அந்த பெட்ல இருக்க குண்டனை பத்தி சொல்றேன்...எல்லார் கதையும் இண்ட்ரஸ்டிங்கா இருக்கும்...

தாத்தாவுக்கு கால் ப்ராக்சராயிருக்கு...காம்பவுண்ட் ப்ராக்சர்...அப்படீன்னா எலும்பு சுக்கல் சுக்கலா உடைஞ்சிருச்சின்னு அர்த்தம்...காலுக்குள்ள கம்பியெல்லாம் போட்டு கட்டியிருக்கு...வெள்ளையா கம்பி வெளியில நீட்டிக்கிட்டு பாக்கவே பயங்கரமா இல்லை ?

கவர்மெண்ட் ஆபீஸ்ல க்ளார்க் அவரு...வேலைய முடிச்சுட்டு வெளிய வந்திருக்கார்..அவருக்கு பழக்கமான ட்ரைவர்தான்...ஜீப்பை ஓட்டிக்கிட்டு வந்திருக்கார்.. ஷெட்ல நிறுத்த...ஜீப்ல ப்ரேக் பிடிக்கல...இவருக்கு நேரா ஜீப் வேகமா வரும்போதே தெரிஞ்சுருச்சு இவருக்கு...இவர்மேல மோதப்போகுதுன்னு...ஏய் ஏய்னு கையை ஆட்டிக்கிட்டு விலகத்தான் பார்த்திருக்கார்..அப்படியும் இவர்மேல மோதி கால்ல ஏறி, அதுக்கப்புறம் ஆபிஸ் வெளித்தூண்ல முட்டி வண்டி நின்றுக்கு...

அவர பாக்க வர்ரவங்கக்கிட்ட எல்லாம் புலம்பி தள்ளிக்கிட்டிருக்கார்...ரெண்டு வருஷத்துல ரிட்டைடாகப்போறவர்...அவர் மேல முட்டின ட்ரைவர் செல்வராஜைத்தான் திட்டி தீர்த்துக்கிட்டிருக்கார்...

அவருக்கு ரெண்டு பசங்க...ஒரு குண்டன்...வயசு முப்பத்தஞ்சு இருக்கும்...ரெண்டு நாளைக்கு ஒரு முறை வந்து பெரியவர பார்க்க வர்ரவங்க வாங்கிட்டு வந்த பழம் பட்டு எல்லாத்தையும் தின்னு தீர்த்துட்டு போவான்...அவர் திங்கமாட்டார்..

சின்னவனும் குண்டந்தான்...ஆனா கொஞ்சம் ஒயரமா இருப்பான்...எதுவும் பேசமாட்டான்..ஸ்கூல் கடைசி வருஷம் படிக்கிறான்...அவர் யூரின் பாட்டில் எடுத்துப்போய் ஊத்தறது, பெட் பேன் வைக்கறதுன்னு எல்லா வேலையும் செய்வான்..அமைதியா நிப்பான்...அவர் போகச்சொல்லும்போது தான் போவான்...

அப்புறம் கிழவி....தலையே சீவாது...பரட்டத்தலையாவே எப்பவும் இருக்கும்..ஏதாவது லொடலொடன்னு பேசிக்கிட்டே இருக்கும்...வீட்ல இருந்து சமையல் பண்ணி டப்பாக்கள்ல போட்டுக்கிட்டு வரும்...கிழவர் ஆசையா திம்பார்...ஹாஸ்பிட்டல் சாப்பாட்டை விட கிழவி சாப்பாட்டைத்தான் ருசிச்சி சாப்பிடுவார்...சாப்பிடும்போது அவர் முகம் போற போக்கை பாக்கனுமே...

அப்புறம் நம்ம கையை உடைச்சுக்கிட்டிருக்கிற ஒல்லிப்பிச்சான்...அவன் பேரு சரவணன்...எங்க விழுந்து உடைச்சிக்கிட்டான்னு இதுவரைக்கும் தெரியாது....சிரிச்ச முகமாவே இருப்பான்...கிழவர் பசங்க யாரும் வரலைன்னா அவருக்கு எல்லா வேலையும் செய்யுறது அவந்தான்...

அவனோட அம்மாக்கிழவி ஒன்னு இருக்கு...இவன் இன்னும் சின்னக்குழந்தைன்னு நினைப்பு அதுக்கு...சாப்பாடு எடுத்துக்கிட்டு வந்து தின்னச்சொல்லி சாவடிக்கும்...போதும்மா போதும்மான்னாலும் அவனை விடாது...எடுத்து எடுத்து தட்ல வெச்சிக்கிட்டே இருக்கும்...

கைல சின்னக்கட்டுதானே..இவனை எதுக்கு பெட்ல சேர்த்திருக்காங்கன்னு எனக்கு இதுவரைக்கும் புரியல...

அப்புறம் கதவுக்கு பக்கத்துல இருக்க குண்டனை பத்தி சொல்லிடறேனே...அவனுக்கு கால் பாதத்துல முறிவு...ஆனா கட்டு ரொம்ப பெரிசா இருக்கும்...அவனுக்கு ஒய்ப், ரெண்டு புள்ளைங்க இருக்கு...ஒன்னுக்கு நாலு வயசு இருக்கும்...அது பொண்ணு...இன்னோரு பையன் ஆறுலருந்து ஏழுவயசுக்காரன்...

இவங்க வீட்ல வாரத்துக்கு ரெண்டுமுறைதான் வருவாங்க...நிறைய பழம், கூல்ட்ரிங்ஸ் எல்லாம் கொண்டுவருவாங்க...நேத்து அவன் மச்சினிச்சியும் வந்திருந்திச்சு...தாத்தா விசாரிக்கும்போது நானும் தெரிஞ்சிக்கிட்டேன்...

ஆங்..என்னைப்பத்தி சொல்லவேயில்லையே...

இவங்க எல்லாருக்கும் மையமான பெட்டு என்னுது...எனக்கு என்ன நடந்தது, நான் ஏன் இங்க இருக்கேன்னு எனக்கு சுத்தமா நியாபகம் இல்ல..ஒரு பெண்ணின் கூர்மையான ரெண்டு கண்கள் மட்டும் அப்பப்போ கனவுல வரும்...ஆனா போனவாரம் ஊசிப்போடும்போது நர்சு தாத்தாக்கிட்ட சொல்லிக்கிட்டிருந்தது...

எனக்கு கோமாவாம்...கழுத்துக்கு மேல உணச்சியில்லையாம்...எதுவும் பேசமுடியாதாம்...நீங்களே சொல்லுங்க......நான் பேசிக்கிட்டு தானே இருக்கேன்...

15 comments:

ers said...

கதையின் கடைசியில் வந்த திருப்பம் அருமை. ஒரு கோமா நோயாளிக்கும் உணர்வுகள் சகமனிதர்களை சுற்றிவரும் என்பதை எடுத்துக்காட்டியது இக்கதை. செந்தழல்ரவி கிரேட்.

வெண்பூ said...

சிறுகதையை தூக்கவே முடியல.. ரொம்ப கனமான முடிவுன்னு சொல்றேன்

மங்களூர் சிவா said...

super

ரவி said...

மின்னல் வேக பின்னூட்டத்துக்கு நன்றி தமிழ்சினிமா மற்றும் வெண்பூ...

என்னுடைய பதிவுக்கு முதல் வருகையா ?

நன்றி...!!!!

ரவி said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மங்களூர் சிவா !!!!

நல்லா கீறியா ஓய் ?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரொம்ப அருமையான கதை..

ரவி said...

Thanks கயல்விழி முத்துலெட்சுமி !!

லக்கிலுக் said...

சூப்பர் இன்னும் கொஞ்சம் செதுக்கி விகடனுக்கு அனுப்பலாம் :-)

ers said...

செந்தழல் ரவிக்கு தங்களின் பதிவுகளை நான் சில மாதங்களுக்கு முன்பே படித்திருக்கிறேன். ஆனால் யுனிகோடு தமிழில் அச்சிடுவதில் எனக்கு அதிக சிரமங்கள் இருந்தது. குறிப்பாக நெல்லைதமிழ் இணையத்துக்காக செய்திகள் உள்ளிட்ட தகவல்களை அச்சிடவே தகிடுதித்தம்... இதைவிட பிளாக்கில் எப்படி பதிவிடுவது... பிளாக்கில் பின்னோட்டமிடுவது எப்படி... என்பததெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் தெரிந்து கொண்டது தான். இப்பதான் பின்னோட்டங்களை பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மற்றபடி நான் இந்த களத்துக்கு புதுசு தான்.

Anonymous said...

கதை நல்லாவே இருக்கு. ஆஸ்பத்திரி பக்கம் அடிக்கடி போறீங்களோ!!

துளசி கோபால் said...

கோ.........மா........

நம்பறேன்.

முதல் மூணுமாசம் அப்படித்தான் இருக்கும்.


கதை?

சூப்பர்!

ரவி said...

தாங்ஸ் லக்கி...நீங்களே அதை பண்ணிடுங்க :)))

ரவி said...

நன்றி டீச்சர் !!!!!!!!!!

வசீகரா said...

கலக்கிடீங்க செந்தழல் அண்ணா!! கதை ரொம்ப பிரமாதம்!! உங்களிடமிருந்து இன்னும் இதுபோன்ற படைப்புக்களை எதிர்பார்க்கிறோம். வாழ்த்துக்கள்! - கண்டன் மணி கண்டன்.

Anonymous said...

Romba touching ah irunthuchu....

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....