Friday, June 27, 2008

மஞ்சள், மங்களம், திருமணம்...

மமதி...பளீஸ்...உன்னோட முடிவை சொல்றதுல எதுக்கு இவ்ளோ தயக்கம் ? நீ ஜூனியரா சேர்ந்த வருஷத்திலருந்து கணக்கு வெச்சு பார்த்தா இன்னையோட நாலு வருஷம் ஆகுது என்னோட லவ்வை சொல்லி...

நான் வேலையில சேர்ந்து இந்த ஒரு வருஷத்துல எத்தனை வீக் எண்ட் காலேஜுக்கு வந்திருக்கேன்...

சரி நீ பைனல் இயர்ல இருக்கறதால உன்னை அதிகம் தொந்தரவு செய்ய மனசு வராமத்தான் கேட்டோட போயிக்கிட்டிருக்கேன்...

நான் எந்த விதத்துல உனக்கு பொருத்தம் இல்லன்னு நீ நெனைக்கிற ?

பர்சனல் ப்ராப்ளம் அப்படீன்னு எத்தனை நாளைக்கு ஒரே பொய்யை சொல்லிக்கிட்டிருக்க ?

இனிமேலும் என்னால பொறுமையா இருக்கமுடியாது மமதி...ப்ளீஸ்...என்னை விரும்பறியா இல்லையான்னு ஒரே ஒரு வார்த்தையில பதில் சொல்லிடலாமே...

நோ...குமார்...என்னோட பிரச்சினை உங்களுக்கு தெரியாது...வேண்டாம்னா விட்டுடுங்க...

மமதி, உங்க வீட்ல இருக்க எல்லோரும் உன் மேல பாசமாத்தானே இருக்காங்க...உன்னோட விருப்பப்படியே எல்லாம் செஞ்சு தராங்களே ? நீ என்னை விரும்பறேன்னு சொன்னா அவங்க வேண்டாம்னு சொல்ற டைப் இல்லையே ? உன் டாடிக்கிட்ட வந்து நான் பேசவா ?

வேண்டாம் குமார்...நீங்க வரவேண்டாம்...சட்டென இடைமறித்தாள்...

மமதி ப்ளீஸ்...உன்னோட ரீசன் கரெக்ட்டா இருந்தா நான் கண்டிப்பா அதை அக்ஸப்ட் பண்ணிக்கறேன்...இனிமே உன்னோட லைப்ல கண்டிப்பா வரமாட்டேன்...

மமதியிடம் இருந்து மெல்லிய மவுனம்...அவள் கண்களின் ஓரம் ஈரம்....அலைபுரளும் கேசத்தை மென்மையாக ஒதுக்கியபடி - சின்ன கண்களால் அவனை பார்க்கும் அவளது செய்கையில் அவனால் எதையும் அவளது சங்கடத்தை உணர்ந்துகொள்ளமுடியவில்லை...

ஓக்கே ப்பா...நான் நெக்ஸ்ட் மந்த் லாங் டெர்ம் ஆன்சைட் போறேன்...அதுக்குள்ள ஒரே ஒரு முறை தான் என்னால வரமுடியும்...நெக்ஸ்ட் வீக் சண்டே ஈவ்னிங் உங்க வீட்டுபக்கம் வரேன்...உன்னோட கடைசி முடிவை சொல்லிடு...அதுக்கு பிறகு உன்னை தொந்தரவு செய்யமாட்டேன்...

பதிலுக்கு காத்திராமல் விறுவிறுவென கேண்டீனிலிருந்து வெளியேறுகிறான்...

*******************************************************************

ஏங்க, பிரான்ஸ இருந்து எங்கண்ணன் போன் பண்ணார்...நம்ம சின்னப்பொண்ணுக்கு ஏற்கனவே பேசினபடி தை மாசம் கல்யாணத்தை வெச்சுக்கலாமான்னு கேக்குறார்...

மமதியை கேட்டியாம்மா ?

அவளை என்னங்க கேக்குறது ? அவ வயசுக்கு வந்தவுடனே பேசி முடிவு பண்ணது தானே ?

இல்லம்மா...அவளோட பதினாலு வயசுல நாம எடுத்த முடிவு...ப்ரான்ஸ்ல இருந்து வந்த உங்கண்ணன் நிச்சயம் பண்ணனும்னு உறுதியா இருந்ததால பாக்கு மட்டும் தானே மாத்தினோம் ? இப்ப மமதி காலேஜ் முடிக்கப்போறா...அவ மனசுலயும் என்ன இருக்குன்னு ஒரு முறை கேட்டுடலாமேடீ...

அவளை என்னங்க கேக்குறது ? எங்க வீட்டு ஆளுங்கன்னாவே உங்களுக்கு ஆகாதே ? ஏற்கனவே பேசி வெச்சது, வேற எதையும் நினைக்காதேன்னு அவளுக்கு ஆயிரம் தடவை சொல்லிட்டேன்...அவ மட்டும் எதையாவது இழுத்துக்கிட்டு வந்து நிக்கட்டும், அப்புறம் என்னை நீங்களோ உங்க பொண்ணோ உயிரோடவே பார்க்கமுடியாது...

ஏய்...மறுபடி உன்னோட உளறல ஆறம்பிச்சிட்டியா ? என்னோட பேங்க் மேனேஜர் பையன் ஐ.பி.எம்ல ஒர்க் பண்றான்னு சொல்லியிருக்கேன் இல்ல...அவர் பையனுக்கு கேட்டார்டி...ஏற்கனவே - பதினாலு வயசுலயே - பாக்கு மாத்தியாச்சுன்னு சொன்னா சிரிக்கிறார்...இந்த காலத்துல இப்படியான்னு....

அதெல்லாம் அப்படித்தான்...என்னோட அண்ணன் மகன் சுதாகர் தான் நம்ம வீட்டு மாப்பிளை...

ஏண்டி...ப்ரான்ஸ்ல இருக்கான்...அங்கேயே அவன் அப்படி இப்படி எதாவது இருக்கப்போவுது ?

அதெல்லாம் கிடையாது...அவனும் ஒத்துக்கிட்டு தான் அவங்கப்பாவை பேசச்சொல்லியிருக்கான்...அப்படி இருந்தா நானே வேண்டாம்னு சொல்லிருவேன்...அதுக்கப்புறம் உங்க பேங்க் மேனேஜர் பையனுக்கோ, பெட்டிக்கடைக்காரன் பையனுக்கோ கொடுத்துக்கோங்க...நான் வேண்டாம்னு சொல்லல...

கடைசி வாசகத்தை முடிக்கும்போது, மமதி கதைவைத் திறந்து உள்ளே வருகிறாள்...

***********************************************************

மமதி...

என்னப்பா ?

உங்க மாமா பையன் சுதாகருக்கும் உனக்கும் மேரேஜ் பிக்ஸ் பண்ணலாம்னு இருக்கோம்...என்னம்மா சொல்ற ?

நான் சொல்றதுக்கு என்னப்பா இருக்கு ?

உன்னோட விருப்பம் எதாவது இருந்தா சொல்லிரும்மா...வாழப்போறவ நீ...முட்டாள்தனமா நாங்க பரிசம் போட்டுட்டோம் அப்படீங்கறதுக்காக உன்னோட வாழ்க்கையை கெடுத்துக்காத...

உன்னோட அம்மா பிடிவாதக்காரி...நான் உன்னோட பிரண்டாத்தானே நடந்துக்கறேன்...சொல்லும்மா...

இல்லப்பா...அப்படி இருந்தா நான் சொல்லியிருப்பேனே...உங்களையும் கஷ்டப்படுத்தாம அம்மாவையும் கஷ்டப்படுத்தாம மேரேஜ் பண்ணிக்கறதுக்காக நான் சில தியாகங்களையும் செஞ்சுட்டேன்பா...

என்னம்மா ஆச்சு...சொல்லு...சொல்லு...

வேண்டாம்பா..அதெல்லாம் முடிஞ்ச கதை...இனிமே உங்கக்கிட்ட சொல்லியும் ஒன்னும் ஆகப்போறதில்லை...அம்மாவோட விருப்பத்தை நான் நிறைவேத்துறேன்ப்பா...

என்னை எதுவும் கேட்டு கம்ப்பல் பண்ணாதீங்க...

ஓக்கேம்மா...அப்புறம் உன்னோட இஷ்டம்...

மகளின் இதயத்தில் இருப்பதை அறிந்துகொள்ள முடியாமல் போனதில் கனத்துப்போன இதயத்தோடு இருக்கையில் இருந்து எழுந்து போகிறார்....

*****************************************************

டேய் சுதாகர்...ப்ளைட் டிக்கெட் ஸ்டேட்டஸ் வந்திருச்சா ?

வந்திருச்சுப்பா...பேக் பண்ணவேண்டியது தான்...

ம்ம்...அப்புறம்...உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இருக்கு இல்லையா ?

ஓக்கேப்பா...எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லை...இருந்தாலும்

என்னடா இழுக்கற ? எதாவது மனசுல வெச்சிருந்தா சொல்லிடு...

இல்லைப்பா...சின்ன வயசுல பரிசம் போட்டுக்கிட்டு வந்திட்டீங்க...அதை எல்லாம் ஏன் செஞ்சீங்கன்னு நான் கேக்கல...பட்...காலேஜ் எல்லாம் போயிருக்கா...அங்க ஏதும் லவ் அது இதுன்னு போயிருப்ப்பாளோன்னு ஒரே டவுட்டா இருக்குப்பா...

டேய், தமிழ் படங்களை பார்த்து நீ கெட்டுட்ட...காலேஜ் போற பொண்ணுங்க எல்லாம் லவ் பண்ணத்தான் போறாங்களா ?

இல்லப்பா...ஜஸ்ட் ஒரு உறுத்தல் இருந்துக்கிட்டே இருக்கு...

என்னோட தங்கச்சி பொண்ணை எப்படி வளத்திருப்பான்னு எனக்கு தெரியும்...இருந்தாலும் நீ இப்படி கேட்டுட்டதால நான் உன்னோட டவுட்டை க்ளியர் பண்ணாம ப்ளைட் ஏறப்போறதில்லைடா...

அப்பா...ஸாரி...நான் சாதாரணமாத்தான் கேட்டேன்...நீங்க இவ்ளோ சீரியஸா எடுத்துக்காதீங்கப்பா...

நோ...இப்பவே அவங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டு முருகனுக்கு போன் பண்றேன்...மமதி பத்தி ரகசியமா விசாரிக்கறேன்...நீயும் வா...ஸ்பீக்கர் போன் போடறேன்.....

*********************************************************

" உலக நாயகனே..." லேட்டஸ்ட் ரிங்டோன் போகிறது...

ஏதோ அவசரத்துக்கு கொடுக்கப்பட்ட பக்கத்து வீட்டு முருகனின் அலைபேசி எண், எங்கிருந்த்தோ எழுந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்ய உபயோகப்படுகிறது....

ஹலோ...

ஹலோ, முருகனா ? நாங்க ப்ரான்ஸ்ல இருந்து சுதாகர் அப்பா ரமலிங்கம் பேசுறேன்...

சார் சொல்லுங்க சார்...நல்லாயிருக்கீங்களா ?

முருகா...நான் உங்கிட்ட பேசனும்...

பேசுங்க...தாராளமா பேசுங்க...

ஒரு விஷயம் கேக்கனும்...நீ தப்பா எடுத்துக்க கூடாது ?

இல்லை சார் சொல்லுங்க...

இந்த மமதி இருக்கா இல்லையா...அவளோட கேரக்டர் எப்படி...

நீங்க தப்பா எடுத்துக்ககூடாது ?..........

என்னப்பா சொல்ற ?

கேரக்டர் மோசம் சார்...

அவளோட ட்ரெஸ்ஸும் அவளோட கூலிங் க்ளாஸும்...

சரியா புரியலையேப்பா ? கொஞ்சம் விளக்கமா சொல்லேன்...

அவ போற இடமே சரியில்லை சார்...ஏதோ கடல் பக்கம் போறா...எவனோ அவ பின்னாடியே போறான்...வீட்டு வாசல்ல இருக்க அயன் வண்டிக்காரனுக்கும் அவளுக்கும் ஏதோ கணெக்சன் இருக்கு சார்...

என்ன ? அயன் வண்டிக்காரனா ?

ஆமாம் சார்...அவன் ஒரு முறை அவளை கொல்லப்பார்த்தான் சார்...போலீஸ் இண்ஸ்பெக்டர் 'தில்லா' ன்னு ஒருத்தர் சார்..அவர் வந்து கேட்டதுக்கு ஏதோ ஒரு விசிட்டிங் கார்டை எடுத்துக்கொடுக்கிறான் அந்த அயன் வண்டிக்காரன்...

என்னப்பா சொல்ற ?

அட ஆமாம் சார்...ஆதியை அவ லவ் பண்றான்னு நினைக்கிறேன்...இதுக்கே அந்த ஆதி நல்லவன் இல்லை சார்...அவனோட தம்பி பொண்டாட்டி மேல அவனுக்கு ஒரு கண்ணு...

என்ன ? லவ் பண்றாளா ?

ஆமாம் சார்...ஆர்த்தி தெரியுமில்லையா சார் உங்களுக்கு ? அவளோட புருஷன் சார் இந்த ஆதி...கல்யாணம் ஆனவன் சார் அவன்..

என்ன ? கல்யாணம் ஆனவன் கூடவா ?

ஆமாம் சார்...தொல்காப்பியன் கூட அவ பின்னாடியே போறான் சார்...எத்தனை பேரை லவ் பண்றான்னே தெரியலை சார்...

பீப்ப்ப்ப்ப்ப்.................தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்படுகிறது......

******************************************************

ஏங்க....எங்க அண்ணன் வரலையாம் இந்த வாரம்...சுதாகருக்கு ஏதோ வேலை இருக்குன்னு சொல்றார்...மமதிக்கு இங்கேயே மாப்பிள்ளை பார்க்க சொல்றார்...ஆசிர்வாதம் பண்றதுக்கு வராராம்...உங்கக்கிட்ட மன்னிப்பு கேட்க சொல்றார்...எனக்கு தலை கிறுகிறுன்னு வருதுங்க...

ஆதரவாக தாங்கி பிடிக்கிறார்...

அப்போ நான் என்னோட மேனேஜர் பையனை பார்த்திடவா ? மமதி...நீ என்னம்மா சொல்ற ?

இல்லைப்பா...நான் என்னோட காலேஜ் சீனியர் ஒருத்தரை உங்களுக்கு அறிமுகப்படுத்தறேன்...அவரும் அதே ஐ.பி.எம்ல தான்ப்பா வேலை பாக்குறார்...எனக்கு இந்த உதவியை செய்வீங்களாப்பா ? என்னோட விருப்பத்தை நிறைவேத்துவீங்களாப்பா ?

இருவரின் பாதங்களையும் பற்றிக்கொள்கிறாள் மமதி...

எழுந்திரும்மா...இவ்ளோ நாள் இதை மனசுல வெச்சுக்கிட்டுத்தான் எதையும் சொல்லாம இருந்தியா ? உன்கிட்ட எப்பவாவது ஒரு அப்பா மாதிரி நடந்திருப்பேனா ? ஒரு ப்ரெண்ட் மாதிரித்தானே நடந்துக்கிட்டிருக்கேன்... உன்னோட விருப்பத்துக்கு மாறா நான் எதையாவது செய்திருக்கேனா ?

நீ என்னடீ சொல்றே ?

அப்பாவும் பொண்ணும் முடிவே பண்ணிட்டீங்க போலிருக்கே ? என்னோட அண்ணன் மகன் தான் இல்லைன்னு முடிவாகிருச்சு...இனிமே மமதி விருப்பப்படியே செய்யலாம்ங்க...


*************************************************

முருகன் வீட்டில்.............

ஏங்க...உங்க மொபைல் எங்கங்க ? எங்கம்மாவுக்கு ஒரு கால் பண்ணனும்...

அதை ஏன்மா கேக்குற ? என் பக்கத்துல பஸ்ல வந்தவன் ஒரு பைத்தியம்...பஸ்ல வரும்போதே பைத்தியக்காரத்தனமா சட்டை பாக்கெட்டை கிழிச்சுக்கறது, ரூபாய் நோட்டை கிழிக்கிறதுன்னு பண்ணிக்கிட்டிருந்தான்...

நான் அசந்த நேரமா பாத்து மொபைலை புடிங்கிட்டு பஸ்ல இருந்து குதிச்சு ஓடிட்டான்மா...எவ்ளோ துரத்தியும் புடிக்க முடியல...

இன்னும் ரிங் போகுது பாரு....போனை எடுத்து ஏதோதோ உளறுறான்...போலீஸ் கம்ப்ளெண்ட் கொடுத்திட்டு தான் வரேன்...

*************************************************

ஞாயிறு மாலை...ப்ளோரஸண்ட் க்ரோட்டன்ஸ் மத்தியில் வெள்ளை ரோஜாக்கள் பூத்திருக்கும் தோட்டம்...அதன் அருகில் பிள்ளையார் கோவில்....மஞ்சள் நிற சுரிதாரில் மமதி...

அரை மணி நேர காத்திருப்புக்கு பின்...

தொலதூரத்தில் குமாரின் பல்ஸர்...வெறுமையை எதிர்பார்த்து வந்த குமாரின் உள்ளமெல்லாம் பூரிப்பு...அது மமதியை கண்டா அல்லது அவள் கையில் இருக்கும் பூங்கொத்தை பார்த்தா...

முகம் கொள்ளாத சிரிப்புடன் மமதி...

மஞ்சள் துப்பட்டாவை, ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரின் பச்சைக்கொடி போட வீசிக்காட்டுகிறார் அந்த கொடியிடையாள்...

வண்டி வந்து நின்றவுடன், பிள்ளையார் கோவில் அர்ச்சகர் கொடுத்த திறுநீறை அவன் நெற்றியில் வைக்கிறார்...கில்லியாக பில்லியனில் தொற்றி...உரிமையாக தோளை பற்றினாள்...

குட்டிம்மா...என்னது இது...இதெல்லாம் என்ன கனவா நனவா தெரியலியே....

சாரி செல்லம்....போர் இயர்ஸா உன்னை டீல்ல விட்டதுக்கு...வாங்க... என்னோட டாடி உங்களை மீட் பண்ணனும்னு சொன்னார்.....நச் நச்சென்று நான்கு இச் முறையே இடது மற்றும் வலது கண்ணத்தில் பதிந்தது...

குங்குமப்பொட்டின் மங்களம்...நெஞ்சமிரண்டில் சங்கமம்...நெஞ்சமிரண்டில் சங்கமம்...

ஏதோ ஒரு பழைய பாடல் பக்கத்து கல்யாணமண்டபத்தில் இருந்து ஒலித்துக்கொண்டிருந்தது...

****************************************************

7 comments:

g said...

நன்றாக இருந்தது. மிக நீளமாக இருப்பதால் படிக்க சிலர் சிரமப்படுவார்கள் என்பது என் கருத்து. தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம் செந்தழல் ரவி.

சென்ஷி said...

லாங்க் டெர்ம் ஸ்டோரியா இருக்கும் போலருக்கே :))

எப்படியோ நம்மள மாதிரி இல்லாம சந்தோஷமா முடிஞ்சதுல சந்தோஷம்தான்.. :)

சென்ஷி said...

மங்களம் உண்டாகட்டும்... :))

FunScribbler said...

வாவ்!!!! கதை ரொம்ப நல்லா இருந்துச்சு! மிகவும் ரசித்து படித்தேன். ரொம்ப சூப்பரா யோசிச்சு எழுதியிருக்கீங்க!! அருமைய்யா!! :)))

//மஞ்சள் துப்பட்டாவை, ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரின் பச்சைக்கொடி போட வீசிக்காட்டுகிறார் அந்த கொடியிடையாள்...//

//நச் நச்சென்று நான்கு இச் முறையே இடது மற்றும் வலது கண்ணத்தில் பதிந்தது...///

ரசித்து படித்த வரிகள்! ஹாஹா.. அப்பரம் அந்த பைத்தியக்காரன் டயலாக் எல்லாம் ஹாஹாஹா... சிரிப்பு வந்துடுச்சு!!

வாழ்த்துகள்!! பொதுவா காதலின் கடைசி கட்டத்தில் பைத்தியக்காரனா ஆவதுபோல் வரும் படங்களில். ஆனா உங்க கதையில் காதலின் ஆரம்பித்திற்கே ஒரு பைத்தியக்காரன் உதவி செய்து இருக்கிறான் என்று நினைக்கும்போது, வித்தியாசமா இருக்கு!

மங்களூர் சிவா said...

/
மங்களம் உண்டாகட்டும்... :))
/

ரிப்பீட்டேய்

Anonymous said...

ulaha mokka thalaivaa
:(

Anonymous said...

Beautifull story...Ponnunga manasa correct ah solli irukeenga..I enjoyed

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....