கடிகாரம்...(அறிவியல் சிறுகதை போட்டிக்கு)

அதிகாலை நேரம்...

நான் என்னுடைய மெகா-சைஸ் படுக்கையில்....

உறங்கிக்கொண்டிருக்கிறேன்...

அலாரம்...

முதல்முறை அடித்தது...

கண்கள் சொக்கிக்கொண்டு வந்தது...

நேற்றிரவு நேரத்துக்கு படுக்கைக்கு வராததன் விணை...

மீண்டும் அடித்தது...

போர்வையை சற்று நன்றாக இழுத்து போர்த்திக்கொண்டேன்...

மீண்டும் அடித்தது...

ஆனால் இந்த முறை அலாரமாக இல்லை...

தன்னுடைய ரோபோ கால் ஒன்றை படுக்கைக்கு அருகே ஊன்றி, ஒரு காலை படுக்கையின் மேல் ஊன்றி, ஒரு கரத்தால் என் தலை முடியை பிடித்து தூக்கி...

கன்னத்தில் "பொடேர்" என அடித்தது...ஆம்...கடிகாரம் என் கன்னத்தில் தான் அடித்தது....

சன்னமான குரலில் சொன்னது...

மிஸ்டர் "2454ரவி10X"...செவ்வாய் கிரகத்துக்கான உங்கள் பயணம் இன்னும் எட்டு நிமிடத்தில் ஆரம்பிக்கப்படப்போகிறது...அழிந்துபோன பழைய கல்பாக்கம் நகர் அருகே உங்கள் கலம் காத்திருக்கும் செய்து வந்துள்ளது...வெளியில் சென்று ஏர் காரில் ஏறுங்கள்...!!

மணி பார்த்தேன்...திருவள்ளுவர் ஆண்டு 3039 காலை ஆறு...
பி.கு: திருவள்ளுவர் ஆண்டு என்பது, கிரகோரியன் காலெண்டர் (ஆங்கில காலண்டர்) உடன் 31 ஆண்டுகள் கூட்டினால் வருவது..(அரசு அலுவலகங்களில் திருவள்ளுவர் காலெண்டர் முறையினை பின்பற்றவேண்டும் தமிழக அரசு எழுபதுகளில்அரசாணை பிறப்பித்தது என்று நினைக்கிறேன்.)

கதை பற்றி: சிறில் அலெக்ஸ் அறிவியல் புனைக்கதை போட்டிக்கு எழுதியது...உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நன்பர்களுக்கும் சொல்லவும்..மேலும் ஒரூ ஓட்டை குத்தவும்...

Comments

பின்குறிப்பிற்குப் பின் கதை தொடரும் என்று நினைத்தேன்,
கடிகாரக்கற்பனை நல்லாத்தான் இருக்கு
நன்றி மாதங்கி...!! நீங்க ஒருத்தராவது இந்த கதை(!!) நல்லாருக்குன்னு சொன்னீங்களே :))

Popular Posts