தமிழ் வலைப்பதிவு for டம்மீஸ் !!!

முதலில் நீங்கள் பழைய வலைப்பதிவரா, அல்லது புதிய வலைப்பதிவரா என்பதை கண்டுபிடித்துவிட்டு எப்படி வலைப்பதிவு செய்வது என்பதை பார்க்கலாம்...

அ மற்றும் ஆ என்றால் என்ன என்பதை கடைசியில் பார்க்கலாம்...

செக்-பாய்ண்ட் - 1

தமிழ்மணத்தை துவக்கியது காசி என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் (அ) வலைப்பதிவர்..

தமிழ்மணத்தை துவக்கியது டோண்டு ராகவன் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் (ஆ) வலைப்பதிவர்...

செக்-பாய்ண்ட் - 2

தமிழ்மணம் அமெரிக்காவில் இருந்து நடத்தப்படுவது என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் (அ) வலைப்பதிவர்...

தமிழ்மணம் ஆப்ரிக்காவில் இருந்து நடத்தப்படுவது என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் (ஆ) வலைப்பதிவர்..

செக்-பாய்ண்ட் - 3

லக்கிலூக் முப்பத்து மூன்று வயதுக்காரர், ஓல்டு மங்கை ராவாக...அடிப்பவர்...மற்றும் கல்யாணமானவர் என்று நீங்கள் நினைத்தால் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் (அ) வலைப்பதிவர்..

லக்கிலூக் கல்யாணம் ஆகாத கன்னிப்பையன், செவன் அப் குடித்தாலே மப்பு ஏறக்கூடியவர் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் (ஆ) வலைப்பதிவர்..

செக்-பாய்ண்ட் - 4

பார்ப்பணீயம், மீபொருண்மை, பெண்-ஈயம், பின்நவீனத்துவம், பொதுவெளி, வர்க்கபோராட்டம், போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்திருந்தால் நீங்கள் (அ) வலைப்பதிவர்..

இதெல்லாம் இன்னாது என்று கேட்டால் நீங்கள் (ஆ) வலைப்பதிவர்..

செக்-பாய்ண்ட் - 5

ஆடுமாடு, பைத்தியம், கூடுதுறை போன்ற வஸ்துக்கள் என்னவென்று தெரிந்தால் நீங்கள் நீங்கள் (அ) வலைப்பதிவர்..

மாடு என்பது மேயும், பைத்தியம் கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் போன்ற பொதுவான பதில்களை நீங்கள் சொன்னால் நீங்கள் (ஆ) வலைப்பதிவர்..

செக்-பாய்ண்ட் - 6

சூடான இடுகையில் வர, "தசாவதாரம்" என்று தலலப்பு வைக்கவேண்டும் என்று தெரிந்தால் நீங்கள் (அ) வலைப்பதிவர்..

பக்கம் பக்கமாக ஆராய்ச்சி, பயணக்கட்டுரை, சோதிடம் என்று நல்ல பதிவுகள் போட்டால் உங்கள் பதிவை பலர் வாசிப்பார்கள் என்று நீங்கள் சொன்னால் நீங்கள் (ஆ) வலைப்பதிவர்..

செக்-பாய்ண்ட் - 7

உண்மைத்தமிழன் பதிவை ஓப்பன் செய்ய ஒன்னே முக்கா மணிநேரமும், படிக்க பதினாறு மணி நேரமும் ஆகும் என்ற ரகசியம் அறிந்திருந்தால் நீங்கள் (அ) வலைப்பதிவர்..

உண்மைத்தமிழன் பதிவு ஓப்பன் ஆகாததுக்கு உங்கள் கம்பியூட்டரில் தான் ஏதோ கோளாறு என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் (ஆ) வலைப்பதிவர்..

செக்-பாய்ண்ட் - 8

நரேந்திர மோடி, சோ, குருமூர்த்தி, இஸ்ரேல் போன்றவற்றை ஆதரிப்பவர் ஒரு க்ராஸ் பெல்ட் என்று ஜஸ்ட் லைக் தட் நீங்கள் கண்டுபிடித்தால் நீங்கள் (அ) வலைப்பதிவர்..

கராத்தேயில் ப்ளாக் பெல்ட் தானே தருகிறார்கள், அது என்ன க்ராஸ் பெல்ட் என்று நீங்கள் கேட்டால் நீங்கள் (ஆ) வலைப்பதிவர்..

செக்-பாய்ண்ட் - 9

உள்குத்து, கும்மி, சுண்டக்கஞ்சி, மொக்கை, டவுஸர் கிழிந்து தாவு தீருவது, ஏஞ்சலினா கோவிந்தசாமி, கேத்தரின் பழனியம்மாள், சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது போன்ற பதங்களையும் அவற்றின் பயன்களையும் நீங்கள் அறிந்திருந்தால் நீங்கள் (அ) வலைப்பதிவர்..

இவை எல்லாம் தமிழில் சாதாரணமாக பயன்படுத்தப்படும் வார்த்தைகள் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் (ஆ) வலைப்பதிவர்..

இப்போது பதில்கள்...

அ - பழைய
ஆ - புதிய]

நன்றாக இருந்தால் இந்த விண்ணர் கையை அமுங்குங்க !!!

Comments

நான் பழைய பதிவர் என்று 9 செக் பாயிண்களுமே சொல்கின்றன!
//தமிழ்மணத்தை துவக்கியது டோண்டு ராகவன் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் (ஆ) வலைப்பதிவர்...//

:))

//உண்மைத்தமிழன் பதிவு ஓப்பன் ஆகாததுக்கு உங்கள் கம்பியூட்டரில் தான் ஏதோ கோளாறு என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் (ஆ) வலைப்பதிவர்..//

இதுலதான் நான் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சேன்!
//செக்-பாய்ண்ட் - 7

உண்மைத்தமிழன் பதிவை ஓப்பன் செய்ய ஒன்னே முக்கா மணிநேரமும், படிக்க பதினாறு மணி நேரமும் ஆகும் என்ற ரகசியம் அறிந்திருந்தால் நீங்கள் (அ) வலைப்பதிவர்..

உண்மைத்தமிழன் பதிவு ஓப்பன் ஆகாததுக்கு உங்கள் கம்பியூட்டரில் தான் ஏதோ கோளாறு என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் (ஆ) வலைப்பதிவர்..
//

சத்தியமா முடியலைண்ணே :))

பிரிச்சு மேயறதுன்னு கேள்விப்பட்டிருக்கேன். இதானா அது :))
நான் பாதி 'அ'..மீதி 'ஆ'...(உங்கள் கேள்வி பதிலின் படி)
யோவ் ... உன்னோட பல பதிவுகள நா ரொம்ப ரசிச்சு படிச்சிருக்கேன் ... சிரிச்சிருக்கேன் ... இப்ப இந்தப் பதிவு உன்ன ஒரு இண்டல்க்சுவல்னு சோல்ல வெச்சிடுச்சின்னா நீ என்ன சோல்லுவே ... மாப்பு ... மிடில் க்ளாஸ் மாதவன் ஃபர்ஸ்ட் அப்படீங்கரீதலிருந்து மாறிட்டு செகண்ட் ஆயிடுவியா இல்ல மிடில் க்ளாஸ் மாதவன் இல்ல ... வொக்கமக்கா நா மப்பு மன்னார்சாமின்னு சொல்லுவியா ... உன் நெஞ்சத் தொட்டு சொல்லத் தேவையில்ல ... குஞ்சத் தொட்டுச் சொல்லு .... ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ற்ற்ற்ற்ற் .... வேறெ எதாவது சொல்ல ஆசையா?
venkatramanan said…
ரவி! கலக்கிட்டீங்க! இதுக்கு மறுமொழியிடறதை வெச்சு categorization ஏதாவது இருக்கா!

அன்புடன்
வெங்கட்ரமணன்!
rapp said…
நான் ப்ளாக் ஆரம்பிச்சே மூணு மாசம்தான் ஆச்சு, ஆனா நான் பழைய ப்ளாகர்னு இல்ல கடசீல விடை வருது :):):)
Muhammad Ismail .H, PHD, said…
Me firstuuuuuuuu,

Really i am laughing lot while reading the post. My neighbour's are looking me like a "Lemuria Continent Creature" at the moment. Thats is real fun. Thanks for you.

FYI : i thought i am அ - பழைய
blogger even not posting a single post.

with care and love,
Muhammad Ismail .H, PHD,
அதிஷா said…
ஹிஹி

பதிவ விட லேபிள் சூப்பர்
என்ன சிபி ? காமெரா எல்லாம் ?

புதுசா ?

என்ன மேக் ?
வருகைக்கும் ஸ்மைலிக்கும் நன்றி பாபா.
வா சென்ஷி...எப்பிடி போகுது !!!
வாங்க தமிழ்பறவை...

ஓ அவரா நீங்க :)) (என்னுடைய கேள்வி பதில் படி....)

உங்க பதிவை படிச்சு உங்களை பற்றி தெரிஞ்சுக்கறேன்...

அடிக்கடி வரவும்..
வாங்க ச்சின்ன பையன்...

உங்கள் போஸ்ட் கூட சூப்பர் காமெடி !!!
வளர்மதி...

உங்க பின்னூட்டம் லைட்டா புரியுது...

:)))

ஏதாவது அப்ஜெக்ஷன் வேர்ட் இருக்குனு தமிழ்மணம் பதிவை தூக்க்கிட்டப்போறாங்க...
வாங்க இஸ்மாயில்..

நலமா ?

நன்றி...!!!
அதிஷா நன்றி !!!
அதிஷா நன்றி !!!
வாங்க சுந்தர்...

ஸ்மைலிக்கு நன்றி...!!!
அஞ்சு வருசமா இணையத்தில குப்பை கொட்டிக்கொண்டிருக்கும் வாசகன் said…
அசத்திட்டேள் போங்கோ!!
சபாஸ் நான் அ வலைப்பதிவர்
Jonson said…
நான் பழைய வாசகன், ஆனா இப்போதைக்கு புதிய பதிவன். 6/9 மார்க் வாங்கிட்டேன். அடுத்த முறை இந்த மாதிரி தேர்வு வெச்சா கட்டாயமா 100/100 வாங்குவேன் - அதாவது இனிமே வலையுலகில் பெர்மனென்ட் மெம்பரா/ஏதாவது உருப்படியா எழுதற மெம்பரா இருக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டேன்!!!
//லக்கிலூக் முப்பத்து மூன்று வயதுக்காரர், ஓல்டு மங்கை ராவாக...அடிப்பவர்...மற்றும் கல்யாணமானவர் என்று நீங்கள் நினைத்தால் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் (அ) வலைப்பதிவர்..//

யோவ்! இதென்ன போகிற போக்கிலே அப்படியே ஜமுக்காளத்திலே வடிகட்டின ஒரு அப்பட்டமான பொய் வதந்தி? :-(

இதனால் என் திருமண வாழ்க்கை எதிர்காலத்தில் பாதிக்கப்படாதா?

Popular Posts