Saturday, October 23, 2010

இரத்த படலம் பற்றிய யுவக்ருஷ்ணா பதிவு

சிங்கத்தின் தீபாவளி ஸ்டார்ட்ஸ்...

October 23, 2010

 
இந்த தீபாவளிக்கு என்ன ஸ்பெஷல்?

3டி மேக்ஸ் புடவை..

மல்டி மசகலி சல்வார்..

குந்தன் ஒர்க் சுரிதார் மெட்டீரியல்..

காட்டன் மஸ்லின் சட்டை..

பொந்தூர் வேட்டி..

பிளாக்பெர்ரி பெர்ல்3ஜி9100..

ஸ்டேண்டர்ட் மார்க் பட்டாசுகள்..

பாசிப்பருப்பு அல்வா, முள்ளு முறுக்கு..

உங்கள் சாய்ஸ் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஆனால் காமிக்ஸ் ரசிகர்களின் பல்லாண்டுகால வனவாசம் இந்த தீபாவளியோடு முடிவுக்கு வருகிறது.

என்னது காமிக்ஸா? குழந்தைகள்லாம் படிக்குமே.. அதுவா? என்று முகம் சுளிக்கிறீர்களா?

வெயிட் பண்ணுங்க ஜெண்டில்மேன். உங்களுக்காக ஒரு தகவல்..

இன்றைய தேதியில் தமிழில் காமிக்ஸ் படிப்பவர்கள் அனைவரும் இருபது வயதுக்கு மேற்பட்டவர்களாகவே 80 சதவிகிதம் பேர் இருக்கிறார்கள் என்று ஏதோ ஒரு அமைப்பின் ஏதோ ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது.

இது நிச்சயமாக குழந்தைகள் சமாச்சாரம் அல்ல.

ஏனெனில்..

1960களின் இறுதியில் 'மாலைமதி காமிக்ஸ்' வெளிவந்து கொண்டிருந்தது. ஒரு இதழின் விலை 75 காசு. உங்கள் தாத்தாவோ, அப்பாவோ அந்த காலத்தில் வாங்கி பரண் மேல் போட்டு வைத்திருந்தார்களேயானால் தூசு தட்டி எடுத்து வையுங்கள். ஒரு இதழ் இன்று பிரிமீயம் ரேட்டில் 4000 ரூபாய் வரை விலை போக வாய்ப்புண்டு.

1987ல் வெளிவந்த லயன் காமிக்ஸ் தீபாவளி மலரின் விலை ரூ.10. இன்று அதனுடைய மதிப்பு ஆயிரம் மடங்கு மார்க்கெட்டில் உயர்ந்திருக்கிறது. ஏனெனில் சமீபத்தில் அந்தப் புத்தகத்தை ஒரு நண்பர் ரூ.10,000 கொடுத்து வாங்கியிருக்கிறார்.

நான் கூட சில ஆயிரங்களை கொட்டி, மிஸ்ஸாகிவிட்ட பழைய சில காமிக்ஸ்களை வாங்கி சேகரித்து வைத்திருக்கிறேன். உடனே சேல்ஸுக்கு கிடைக்குமா? படிக்க கிடைக்குமா? என்று பின்னூட்டம் போட்டு டார்ச்சர் செய்து தொலைக்காதீர்கள். காமிக்ஸ் விஷயத்தில் நான் ஒரு தீவிர சைக்கோ.

காமிக்ஸ் என்பது Passion சார்.. Passion.. ஸ்டேம்ப் கலெக்சன், காயின் கலெக்சன் மாதிரி..

70களிலும், 80களிலும் குழந்தைகளாக இருந்து ஒண்ணரை ரூபாய் இல்லாமல் காமிக்ஸ் வாங்க முடியாதவர்கள் இன்று லட்சம் லட்சமாக சம்பாதிக்கிறார்கள். தாங்கள் இழந்துவிட்ட பால்யகால ஒண்ணரை ரூபாய் பரவசத்தை இன்று ஆயிரங்களில், லட்சங்களில் வாங்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த நேற்றைய குழந்தைகள்.

கஷ்டப்பட்டு ஏதோ ஸ்டேட்டிஸ்டிக்ஸ் எல்லாம் அள்ளிவிட்டிருக்கோம். இப்போதாவது இது சீரியஸ் மேட்டர் என்று நம்புங்க ப்ளீஸ். ஏதோ பார்த்து போட்டு கொடுங்க சாமி.

ஓக்கே, கமிங் டூ த பாயிண்ட்..

மேலே நாம் குறிப்பிட்ட காமிக்ஸ் வெறியர்கள் சாதாரணமாகவே இரும்புக்கை மாயாவி, ஸ்பைடர் என்று வெறியாட்டம் ஆடக்கூடியவர்கள். நான்கைந்து தீபாவளிகளாக பெரியதாக 'ஸ்பெஷல்' எதுவும் இல்லாமல் முடங்கிக் கிடந்தவர்கள். இந்த தீபாவளிக்கு 854 பக்கங்களில், 200 ரூபாய் விலையில் இந்திய காமிக்ஸ் வரலாற்றிலேயே முதன் முறையாக 'லயன் ஜம்போ ஸ்பெஷல்' வெளிவருகிறது. கிட்டத்தட்ட 'எந்திரன்' ரிலீஸுக்கு இருந்த எதிர்ப்பார்ப்பு இந்த புக்குக்கும் இருக்கிறது என்றால் நம்புங்கள். 'தலைவா வா. தலைமையேற்க வா'வென்று காமிக்ஸ் ரசிகர்கள், லயன் காமிக்ஸ் ஆசிரியர் விஜயனுக்கு போஸ்டர் ஒட்டாததும், ஜம்போ ஸ்பெஷலுக்கு கட்டவுட் வைக்காததும்தான் பாக்கி.

854 பக்கமும் ஒரே கதைதான் என்பது இந்த ஸ்பெஷலின் ஸ்பெஷல். விஷ்ணுபுரத்தை மிஞ்சும் இந்த ஸ்பெஷலை கண்டால் ஜெயமோகன் நொந்துப் போவார். தீவிர காமிக்ஸ் ரசிகரான எஸ்.ராமகிருஷ்ணன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவார். எஸ்.ரா மட்டுமல்ல.. இயக்குனர் மிஸ்கின், நடிகர் பொன்வண்ணன் மாதிரி நிறைய வி.ஐ.பி. காமிக்ஸ் ரசிகர்கள் உண்டு.

ஆங்கிலத்தில் 'எக்ஸ்19' சீரியஸ் காமிக்ஸ் மிகப்பிரபலம். கிட்டத்தட்ட 20 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக தனித்தனி புத்தகங்களாக வந்து பெரும் வரவேற்பை பெற்றது. இந்த கதையிலிருந்துதான் 'வெற்றி விழா' திரைப்படத்தை பிரதாப் போத்தன் சுட்டார் என்று கூட கிசுகிசு உண்டு. கதையைப் படித்துப் பார்த்தால் அந்த கிசுகிசு உண்மைதான் என்றுகூட தோன்றும்.

கடற்கரையில் மயங்கிய நிலையில் விழுந்து கிடக்கிறான் ஹீரோ. முழித்ததும் தன் பெயர்கூட அவனுக்கு நினைவில்லை. தன் அடையாளத்தை தேடிப் புறப்பட்டவனுக்கு அடுத்தடுத்து பல அதிர்ச்சிகள். அவன் நல்லவனா கெட்டவனா கொலைகாரனா தேசத்துரோகியா கல்யாணமானவனா பொண்டாட்டி இருக்கிறாளா என்று குழம்பித் திரிய வேண்டிய சூழல். சில பேர் அவனை வரவேற்கிறார்கள். பலர் அவனை கொல்லத் துடிக்கிறார்கள். நினைவிழப்பதற்கு முன்பான வாழ்க்கையை தேடிச் செல்லும் நாயகனின் கதையில் சோகம், மகிழ்ச்சி, ஆக்‌ஷன் என்று எல்லா மசாலா செண்டிமெண்டுகளும் உண்டு. கட்டத்துக்கு கட்டம் ஒருவகையான இலக்கிய சோகம் இந்த கதை முழுக்க ஊடே வந்துகொண்டிருக்கும். ஒரு கட்டத்தில் 'சேது' படம் பார்க்கும் மனநிலை கூட தோன்றக்கூடும்.

ஓவியங்கள் ஒவ்வொன்றும் கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டிய முத்துகள். இவ்வளவு சிறப்பான ஓவியங்களோடு உலகளவில் எந்த காமிக்ஸும் வந்ததில்லை என்று தாராளமாக பெட் கட்ட முடியும். ஒவ்வொரு கட்டத்திலும் ஓவியரின் துல்லியம், டீடெய்லிங் அபாரமாக அமைந்திருக்கும்.

ஆங்கிலத்தில் மொத்தம் 19 புத்தகங்களாக வெளிவந்தது.

தமிழில் 'இரத்தப் படலம்' என்று பெயரிட்டு மொழிமாற்றி லயன் காமிக்ஸ் வெளியிட்டு வந்தது. இப்போது ஒட்டுமொத்த 19 புத்தகங்களையும் ஒரே புத்தகமாக லயன் கொண்டு வருகிறது. இதுதான் லயன் ஜம்போ ஸ்பெஷல். 854 பக்கங்களில் காமிக்ஸ் என்று உலகளவில் இப்படியான ஒரு முயற்சி அனேகமாக இதுதான் முதல் தடவையாக இருக்கக்கூடும். ஆங்கிலத்திலேயே கூட ஒரே புத்தகமாக வந்ததில்லை. 19 புத்தகங்களையும் வாங்க ரூ.4000 வரை செலவு செய்ய வேண்டியிருக்கும்.

ஒரு சேல்ஸ்மேனின் லாவகத்தோடு இந்தப் பதிவினை எழுதி வருகிறேன். அனேகமாக இன்னேரம் இப்புத்தகத்தை வாங்கும் எண்ணம் உங்களுக்கு தோன்றியிருக்கலாம். சாரி ஜெண்டில்மேன். காமிக்ஸ் கலெக்டர்ஸ் ஸ்பெஷலான இந்தப் புத்தகம் கடைகளில் கிடைக்கவே கிடைக்காது.

வேறெப்படி வாங்குவது?

உடனடியாக ரூபாய் 230க்கு (புத்தகத்தின் விலை ரூ.200 + கூரியர் செலவு ரூ.30) மணி ஆர்டர் அல்லது "Prakash Publishers" என்ற பெயரில் காசோலை எடுத்து, Prakash Publishers, No 8/D-5, Chairman P.K.S.S.A Road, Amman Kovil Patti, Sivakasi, 626189 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.  04562 272649, 04562 320993 ஆகிய எண்களுக்கு (காலை 10.30 டூ மாலை 5.30) தொலைபேசியும் மேலதிக விவரங்களைப் பெறலாம்.

ஏற்கனவே 800 பிரதிகள் அட்வான்ஸ் புக்கிங் ஆகிவிட்டது. நிறைய பக்கங்கள் என்பதால் 'பைண்டிங்' செய்வது கொஞ்சம் சிரமம். எனவே 50, 50 புத்தகங்களாக தயார் செய்து முன்பதிவு செய்தவர்களுக்கு அனுப்பி வருகிறார்கள். முந்துவோருக்கு பிரதிகள் நிச்சயம் கிடைக்கும்.

ஜம்போ ஸ்பெஷலோடு லயன் காமிக்ஸாரின் தீபாவளி கொண்டாட்டம் முடிந்துவிடவில்லை. அடுத்தடுத்து அதிரடியாக சரக்குகளை இறக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அடுத்த மூன்று மாதங்களில் வெளிவர இருக்கும் புத்தகங்கள் : வெள்ளையாய் ஒரு வேதாளம் (சிக் பில்), சாத்தானின் தூதன் டாக்டர் செவன் (காரிகன்), காவல் கழுகு (டெக்ஸ் வில்லர்) ஆகியவை லயன் காமிக்ஸிலும், களிமண் மனிதர்கள் (இரும்புக் கை மாயாவி), கொலைகார கோமாளி (ஜானி நீரோ) ஆகியவை காமிக்ஸ் கிளாசிக்ஸ் பிராண்டிலும், விண்ணில் ஒரு குள்ளநரி (விங் கமாண்டர் ஜார்ஜ்), மரணத்தின் நிசப்தம் (ரிபோர்டர் ஜானி)  ஆகியவை முத்து காமிக்ஸ் பிராண்டிலும் வெளிவர இருக்கிறது. 75 ரூபாய் செலுத்தி மொத்தமாக இந்த 7 புத்தகங்களையும் கூட வாங்கிக் கொள்ளலாம்.

இந்த ஏழு புத்தகங்களுக்கு பிறகு தமிழ் காமிக்ஸுக்கு புத்துயிர் பாய்ச்சும் மிகப்பெரிய முயற்சி ஒன்று நடைபெறவிருக்கிறது. அது என்னவென்று ஜம்போ ஸ்பெஷலின் ஹாட்லைனில் ஆசிரியர் எஸ்.விஜயன் சொல்லியிருக்கிறார்.

ஹேப்பி தீபாவளி ஃபோக்ஸ்!

 காமிக்ஸ் குறித்த விரிவான, தொடர்ச்சியான தகவல்களுக்கு நண்பர் கிங்விஸ்வாவின் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பூவை வாசிக்கலாம்!

 

4 comments:

மதுரை சரவணன் said...

//854 பக்கமும் ஒரே கதைதான் என்பது இந்த ஸ்பெஷலின் ஸ்பெஷல். விஷ்ணுபுரத்தை மிஞ்சும் இந்த ஸ்பெஷலை கண்டால் ஜெயமோகன் நொந்துப் போவார். தீவிர காமிக்ஸ் ரசிகரான எஸ்.ராமகிருஷ்ணன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவார். எஸ்.ரா மட்டுமல்ல.. இயக்குனர் மிஸ்கின், நடிகர் பொன்வண்ணன் மாதிரி நிறைய வி.ஐ.பி. காமிக்ஸ் ரசிகர்கள் உண்டு.//


o appadiyaa... nalla oru aarvaththai thundum katturai... vaalththukkal.

ராம்ஜி_யாஹூ said...

இந்திய காமிக்ஸ் வரலாற்றிலேயே முதன் முறையாக 'லயன் ஜம்போ ஸ்பெஷல்' வெளிவருகிறது. கிட்டத்தட்ட 'எந்திரன்' ரிலீஸுக்கு இருந்த எதிர்ப்பார்ப்பு இந்த புக்குக்கும் இருக்கிறது என்றால் நம்புங்கள். 'தலைவா வா. தலைமை



இன்று சென்னை பாரிமுனையில் இருந்து பல்லாவரம் வரை சென்று அப்புறம் டி நகர் சென்று வேளாசெரி திரும்பினேன். நீங்கள் சொன்ன எந்த எதிர் பார்ப்பும், செய்தியும் சென்னை மாநகரில் தெரிய வில்லை. ஒரு வேளை புத்தகம் அமெரிக்கா அல்லது டெல்லியில் வெளியிடப் படுகிறதா.

guna said...

//இன்று சென்னை பாரிமுனையில் இருந்து பல்லாவரம் வரை சென்று அப்புறம் டி நகர் சென்று வேளாசெரி திரும்பினேன். நீங்கள் சொன்ன எந்த எதிர் பார்ப்பும், செய்தியும் சென்னை மாநகரில் தெரிய வில்லை. ஒரு வேளை புத்தகம் அமெரிக்கா அல்லது டெல்லியில் வெளியிடப் படுகிறதா.//


சாரி ஜெண்டில்மேன். காமிக்ஸ் கலெக்டர்ஸ் ஸ்பெஷலான இந்தப் புத்தகம் கடைகளில் கிடைக்கவே கிடைக்காது.

by comics veriar

எல் கே said...

/டெக்ஸ் வில்லர்///

பரம ரசிகன் நான்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....