மன்னார் மெரினாவில் சுண்ட கஞ்சி காய்ச்சி விற்கும் குடிசைத்தொழிலை செய்யும் எளிய விவசாயி(?) அல்லது பிஸினஸ் மேக்னட். அவரிடம் சுண்டக்கஞ்சி ஆர்டர் செய்த போண்டா மாதவனுக்கு சரக்கு ரெடியாகிவிட்ட தகவலை தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பவேண்டும். இதனை சரியாக அனுப்புவது எப்படி ?
ஒரு வாடிக்கையாளர் அல்லது க்ளையண்ட் அல்லது மேலாளர் எரிச்சலடையாமல் மின்னஞ்சலை அனுப்பித்தொலைவது எப்படி என்ற தகவலை இந்த பதிவின் மூலம் தெரியப்படுத்துவது நோக்கம். இமெயில் எத்திக்ஸ் பார் டம்மீஸ் அப்படீன்னு வெச்சுங்க. வேற மேட்டர் (?) எதிர்பார்த்து பதிவில் குந்தியிருந்தா கெடக்காது ஆமாம் சொல்லிப்பிட்டேன். அப்பாலிக்கா என்ன வைய கூடாது.
இந்த படத்தின் மேல் க்ளிக் செய்து பார்த்தால் பெரிதாக தெரியும். பட்டென உங்கள் கண்ணில் படுவது சப்ஜெக்ட் இல்லை. அலைன்மெண்ட் சரியில்லை. அவ்வளவு தானே ?
இப்போது அடுத்த படம்.
இந்த ரெண்டாவது படத்தை க்ளிக் பண்ணி பெரிசா பார்தீங்களா ? சப்ஜெக்ட் லைன் இருக்கு. டியர் மிஸ்டர் என்று ஆரம்பிக்கிறது. சல்யூட்டேஷன் என்பது ஒரு நல்ல முறை. மிஸ்டர், மிஸ், மிஸஸ் என்று ஆரம்பிப்பது. டியர் என்று ஆரம்பித்தால் பெண்ணாக இருந்தால் கோச்சுக்குவாங்களோ என்று நினைப்பது முட்டாள்தனம்.
தேவையான இடங்களில் முற்றுப்புள்ளி, தேவையான இடத்தில் கமா (அரைப்புள்ளி) சேர்ப்பது தேவையானது.
க்ரீடிங்ஸ், குட் டே என்று மின்னஞ்சலை ஆரம்பித்தால் அழகாக இருக்கும் இல்லையா ? அதுக்கு மேல நன்றி என்று முடிப்பதும் நன்றே.
Thanks and Regards
Best Regards,
என்று முடிக்கலாம்.
மின்னஞ்சலின் முடிவில் உங்கள் மின்னஞ்சல், உரல் (இணைய முகவரி), அலைபேசி மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை குறிப்பிடுவது சரியான
முறையாகும்.
பெயரை எழுதும்போது mannaar என்று சின்ன எழுத்தில் போடாமல் Mannar என்று முதல் எழுத்து பெரிய எழுத்தாக போடுவது நன்று.
அதே சமயம் மின்னஞ்சல் பெட்டி திறந்தவுடன் ஸ்பேஸ் பாரை டொக்கு டொக்கு என்று அழுத்தி மின்னஞ்சலின் நடுவில் இருந்து ஆரம்பிப்பது சிலருடைய பழக்கம். அது தேவையில்லை. பார்மெட்டிங் பிரச்சினை கொடுப்பதோடு (சிலர் அவுட் லுக், இண்க்ரிடிமெயில், லோடஸ் நோட்ஸ் போன்ற மின்னஞ்சல் க்ளையண்ட் அப்ளிகேஷன் (தமிழ்ல இன்னாபா இது) உபயோகப்படுத்துவார்கள். அதில் தொல்லை தரும் இந்த ஸ்பேஸ்.
அதே சமயம் மின்னஞ்சலில் எண்ணிக்கை, விலை, ஆகியவற்றை சரியாக குறிப்பிடுவதும் சரியான முறையாகும்.
மின்னஞ்சல் நீளமாக போனால், ஒரு அட்டாச்மெண்ட் பைல் ஆக உங்கள் மின்னஞ்சலை அனுப்பலாம்.
PFA என்றால் Please Find Attached. சல்லூட்டேஷன் எல்லாம் போட்டுவிட்டு, PFA, Details attached என்று சொல்லிவிடலாம்.
ஆங்காங்கே Kindly, Please என்ற வார்த்தைகளை பயன்படுத்துவது உங்கள் மின்னஞ்சலுக்கு அழகு சேர்க்கும்.
எனக்கு தெரிந்தவரை / முடிந்தவரை சொல்லியிருக்கிறேன். நீங்களும் உங்களுக்கு தெரிஞ்சவரைக்கும் உதவுங்கள். நச் பாய்ண்ட் ஆக இருந்தால் மெயின் பதிவில் சேர்த்து பதிவை அழகூட்டலாம்.
எல்லாரும் போதையேற்றியிருப்பதேயன்றி வேறொன்றுமறியேன் போண்டா மாதவனே - மன்னார், புதிய தத்துவம் 133434 1-1-11 அன்று.
.
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்ப...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...
8 comments:
நல்லா விளக்கியிருக்கீங்க...
விவரமான பதிவு...
முதல் படத்தில் போண்டா மாதவன் (Bonda Madhavan) என்றிருப்பதற்கு பதிலாக போண்டா மடத்தவன் (bonda madathavan) என்றிருக்கின்றது. எழுத்துப் பிழைகளைத் தவிர்க்க வேண்டும்.
சுண்டக் கஞ்சி ஆர்டர் செய்தவர் போண்டா மாதவன். சுண்டக் கஞ்சி காய்ச்சும் விவசாயி மன்னார். மன்னார் தனது வாடிக்கையாளருக்கு கடிதம் எழுதினாரென்றால், Dear Mr. Bonda Madhavan என்றுதான் தொடங்க வேண்டும். முடிக்கும்போது
Regards,
Mannaru என்றுதான் முடிக்க வேண்டும். இங்குள்ள கடிதத்தில் இரண்டும் இடம் மாறி உள்ளது, இது போன்ற தவறுகளைத் தவிர்க்க வேண்டும்.
Formatting உள்ளிட்ட இன்னும் சில விஷயங்களைப் பற்றியும் பேச வேண்டும். அவை இத்தொடரின் அடுத்தப் பகுதியில் வெளிவரும். இங்கிருக்கும் இரண்டு படங்களுமே எப்படியெல்லாம் கடிதம் எழுதக் கூடாது என்பதற்கான மாதிரிகள்.
போண்டா மடத்த்தவன் தானே ஹி ஹி
டெக்னிக்கலாக கண்டுபிடிச்சீங்க கும்மி. அடுத்த பதிவை போடவும்.
Good
100% Genuine & Guarantee Money Making System. (WithOut Investment Online Jobs).
Visit Here For More Details : http://bestaffiliatejobs.blogspot.com
ஹா..ஹா.. அருமை :)
ஹி..ஹி..
சுண்ட கஞ்சி ரூ100-க்குள் இருக்குமா?...
டவுட்.. அதான் கேட்டேன்
:-)
Post a Comment