.
.
.முதலில் இது பற்றி அண்ணன் உண்மைத்தமிழனின் பதிவை வாசித்துவிடுங்கள்.
வணக்கம் உண்மைத்தமிழன் அவர்களே,
தங்கள் வாசகனான எனக்கு தங்களிடம் ஒரு முக்கியமான விஷயத்தை பகிர்ந்து கொள்ளும் அவசியம் இன்று வந்துள்ளது. குறிப்பாகச் சொன்னால் தங்கள் உதவி எனக்கு தேவைப்படுகிறது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பாக ஒரு உதவியை உங்களிடம் நாடுகிறேன்.
தமிழக அரசு இந்தக் கல்வியாண்டில் குடும்பத்தில் முதல் பட்டதாரிகளுக்கு பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று அறிவித்து இருந்தது. இந்த ஆண்டில் அட்மிஷன் போடப்பட்ட மாணவ மாணவிகளில் பெரும்பான்மையானோர் இந்த சலுகையை நம்பி சேர்ந்தவர்கள்தான். பலரும் வறுமையில் வாடும் குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
கோவில்பட்டியை சேர்ந்த பிரபல "நேஷனல் இன்ஜினியரிங் கல்லூரி" ஆரம்பத்தில் முதல் பட்டதாரி மாணவ மாணவியரிடம் அட்மிசனின்போதே அரசாங்கத்தின் அறிவிப்புக்கு மாறாக பதினைந்தாயிரம் பணத்தை வாங்கிக் கொண்டார்கள்.
எங்கள் பிள்ளைகள் எப்படியாவது இன்ஜினியரிங் படித்தால் போதும் என்ற வேகத்தில் நாங்களும் எப்படியோ பணத்தை கட்டிவிட்டோம். இப்போது மிகவும் சூட்சுமமாக கல்வியாண்டிண் நடுப்பகுதியில் மேலும் Rs.12700 கட்ட சொல்லி முதல் பட்டதாரி மாணவ மாணவிகளை வற்புறுத்துகின்றனர். கணக்கு பார்த்தால் வருடத்திற்கு முப்பதாயிரம் ரூபாய்க்கு மேல் வருகிறது. எந்த வகையில் இது நியாயம்..? பெற்றோர்கள் எல்லாம் செத்து சுண்ணாம்பாக ஆகிக் கொண்டு வருகின்றனர்.
அரசாங்கம் "கல்விக் கட்டணம் இலவசம்" என்ற பசப்பு வார்த்தையை நம்பி எங்கள் பிள்ளையை சேர்த்த நாங்கள் இப்போது நடுக்காட்டில் தவிக்கும் நிலைக்கு வந்து விட்டோம்.
தயவு செய்து இந்த கடிதத்தோடு நான் இணைத்துள்ள ஆதாரத்தை பார்த்து, அதை தங்கள் தளத்தில் பிரசுரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த அநியாயத்தை எதிர்த்து நீங்கள் பதிவு எழுத வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு ,
அனானிமஸ்
கோவில்பட்டி

Read more: http://truetamilans.blogspot.com/2011/01/blog-post_08.html#ixzz1AW1v0EQN
இந்த கடிதம் போலியாகவோ உண்மையில்லாமலோ இருக்க வாய்ப்பில்லை !டைரக்டர் கையொப்பத்துடன் தெளிவாகவே உள்ளது. அதிலும் அண்ணனுக்கு முருகனே லெட்டர் எழுதியிருக்கிறார். சம்பந்தப்பட்ட மாணவ மாணவியரை கண்டறிந்து பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். அதனால் அவரது பெயரை நீக்கிவிடுமாறு உண்மையாரை கேட்டுக்கொண்டுள்ளேன்.
இதுகுறித்து செல்வி ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை.
கோவில்பட்டியில் இருக்கும் நேஷனல் பொறியியல் கல்லூரியில் நிர்ணயித்த தொகையை விட அதிக தொகையை வசூலிப்பதாக தெரிகிறது. இது மைனாரிட்டி திமுக அரசு வகுத்த விதிமுறைகளுக்கு மாறாக உள்ளதோடு, மைனாரிட்டி திமுக அரசின் அமைச்சர்கள், திட்டங்களை அறிவிப்பதோடு அதனை பற்றி அக்கறை கொள்வதில்லை என்று தெளிவாக அறிவிக்கும் செயலாகும்.
தனியார் பள்ளி கட்டண குறைப்பும் சரி, இதுபோன்ற அறிவிப்புகளும் சரி, வெறும் கண்துடைப்புதான் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.
எனது தலைமையில் கழக ஆட்சி வரும்வேளையில், இது போன்ற கல்லூரிகளின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இது குறித்து வருகின்ற ஜனவரி 17 ஆம் தேதி, சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரிக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். கழக முன்னனியினர், கூட்டணி கட்சி தோழர்கள், பொதுமக்கள் ஆகியோர் பெரும் திரளாக கலந்துகொள்ளவேண்டும். மேலும் மாணவர் அணி, வழக்கறிஞர் அணி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, எம்ஜியார் மன்றம், ஜெ பேரவையினர் பெருந்திரளாக கலந்துகொண்டு ஆதரவு நல்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
-- அம்மா அறிக்கை விடுவதற்கு கண்டண்ட் நானே டைப் செய்து கொடுத்துவிட்டேன். !!
1 comment:
இது ஒரு மாணாக்கர் சொல்லித் தெரிந்த கல்லூரி.மீதமெல்லாம் பயந்து போய் சொல்லாமல் விட்ட நல்ல கல்லூரிகள்.இதுதான் இங்கே பிரச்சினை ரவி.கடசீலவர்றவனக்கன்னிபோட்டுபிடிச்சுக்கலாம்.அத்தோடு சட்டம் நிம்மதியடைந்துபோகும்.
Post a Comment