பின்னூட்ட வெளாட்டு ! வாரீகளா ?

ஒரு மொக்கை பதிவை போடுவதற்கு பதில் நாலு நல்ல பதிவுக்கு பின்னூட்டம் போடலாம் - இப்படிக்கு அனானிமஸாக கடந்த ஆண்டு பின்னூட்டம் போட்ட கணேஷ் என்பவரின் புதிய தத்துவ திரட்டு பக்கம் 232.உண்மையில் நீங்க படித்துக்கொண்டிருக்கும் பதிவு ஒரு புதிய பின்னூட்ட புரட்சி. இது உங்களை பிரட்டி எடுக்கப்போவுது.

இந்த வெளாட்டின் ரூல்ஸ் கீழே.

1. பத்து நல்ல பதிவுக்கு (இடுகைகளுக்கு) பின்னூட்டம் போடனும். (கொஞ்சம் குஷ்டந்தான், இருந்தாலும் தேடுங்க)
2. ஐஞ்சு பேர இந்த ஆட்டத்துக்கு அழைக்கனும்.
3. எந்த எந்த நல்ல பதிவுக்கு பின்னூட்டம் போட்டீங்க, ஏன் போட்டீங்க அப்படீங்கறத எழுதி, 'என்னோட பின்னூட்ட வெளாட்டு' ' நானும் ஆடிட்டேன்' 'பிச்சுப்புட்டேன் பிச்சு' அந்த மாதிரி எதாவது தலைப்பு வெச்சு ஒரு பதிவா போடனும்.

வெளாட்ட நான் ஆரம்பிக்கறதால நான் அஞ்சு பயபுள்ளைகள கூட்டுட்டு, கெளம்பறேன். என்னோட பின்னூட்ட வெளாட்டு ரிசல்ட் அடுத்த பதிவா வரும்.

1. பட்டாப்பட்டி
2. சித்ரா
3. எம் அப்துல் காதர்
4. படைப்பாளி
5. சசிகுமார்

ஹேப்பி வெளாண்டிங். ஹேப்பி பின்னூட்டம் போட்டிங்.

Comments

Samudra said…
/ஒரு மொக்கை பதிவை போடுவதற்கு பதில் நாலு நல்ல பதிவுக்கு பின்னூட்டம் போடலாம்/-நல்ல கருத்து :)
ஆகா.. அடுத்த தொடரா?..

உம்.. முரசு கொட்டட்டும்..

டண்டனுக்க.. டணக்குனக்கா...
ரைட்டு .........நீங்களும் ஆரம்பிச்சிட்டிங்களா ??? நடத்துங்க , நடத்துங்க
Chitra said…
பத்து நல்ல பதிவுக்கு (இடுகைகளுக்கு) பின்னூட்டம் போடனும். (கொஞ்சம் குஷ்டந்தான், இருந்தாலும் தேடுங்க)


.......Please define: "நல்ல பதிவு"....

நான் எனக்கு கமென்ட்ஸ் போடுபவர்களுக்கு பதிலை, எப்பொழுதாவது தான் என் பதிவில் போடுவேன். அதற்கு பதிலாக, அவர்களது ப்லாக் போய், அவர்களது பதிவை வாசித்து கமென்ட் போடுவேன். நான் பின் தொடரும் ப்லாக்களையும் முடிந்த வரை வாசித்து - நேரம் இருக்கும் போது - கமென்ட்ஸ் போடுவேன். இதில் குறிப்பிட்டு, சிலர் பதிவுகளை மட்டும் பிரித்து எடுத்து எழுதுவது challenge தான்... அதனால் என்ன செய்வது என்று யோசிக்கிறேன்.
Jawahar said…
நல்ல ஐடியா.... கைகட்டி வேடிக்கை பார்க்கறேன்

http://kgjawarlal.wordpress.com
உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்
1.புடிச்சிருக்கு.உங்க தெறம புடிச்சிருக்கு.ஆனா இப்படியெல்லாம் யோசனயெல்லாம் விடியகாலையில உதயமாகுதா? இல்ல நடு ராத்திரில உதயமாகுதான்னு சொன்னா நாங்களும் கொஞ்சம் சிந்திப்போம்.
பின்னூட்டத்துல கலந்து கட்டி அடிக்கிற ஆளுங்களைஎல்லாம் விட்டுட்டு ஆட்டைய ஆரம்பிச்சிருக்கீங்களே தல.! வெளாட்டு தொடரும்போது நாமறியாத இன்னும் பல பின்னூட்ட ஜாம்பவான்கள் அறியப்பட வாய்ப்புள்ளது.

எனக்குத் தெரிந்து பின்னூட்டத்தில் பொளந்து கட்டுபவர்கள்: கல்வெட்டு, தெகா, சதுக்கபூதம், ராஜசுந்தர்ராஜன்.

.
ஆட்டத்துல நானுமா..நல்லா கெலப்புறாங்கையா பீதிய..
முன்னாடி போங்க...இதோ பின்னாடியே வரேன்.
.
ஆட்டத்துல நானுமா..நல்லா கெலப்புறாங்கையா பீதிய..
முன்னாடி போங்க...இதோ பின்னாடியே வரேன்..

www.padaipali.wordpress.com

நண்பா open id செட்டிங்க்ஸ் ல மாத்தி வைங்க..wordpress ல இருந்து கமெண்ட்ஸ் எழுத முடியல..
கும்மி உங்க பட்டியலில் அவஸ்யம் சேர்க்க வேண்டிய இரு நபர்கள்.

ராஜ நடராஜன்.

எந்த துறையாக இருந்தாலும் எழுதியவன் நொந்து போய்விட வேண்டும். பிரித்து மேய்ந்து விடுவார். இவர் பின்னூட்டத்தை வைத்துக் கொண்டே நாம் அடுத்ததலைப்பை தேர்ந்தெடுத்து விடலாம்.

தமிழ் உதயம்.

எனக்குத் தெரிந்து திருவள்ளுவர் போல் சுருக்க வரிகளில் கொடுக்கும் இவரின் பல விமர்சனத்தைப் பார்த்து அசந்து போய் இருக்கின்றேன்.
ஜோதிஜி,

நான் கொடுத்திருக்கும் பட்டியல் சிறிதுதான். நான் அறியாத பலரும் இருக்கக்கூடும். அவர்களையும் அறிந்துகொள்ள ஆவலாக இருக்கின்றேன்.

ராஜ நடராஜன் அண்ணனின் பதிவுகளை தொடர்ந்து வாசித்திருக்கின்றேன். வேறு தளங்களில் அவரது பின்னூட்டங்களை நான் பெரியளவில் காணாததால் குறிப்பிடவில்லை.

தமிழ் உதயம் பற்றி நான் முன்னர் அறிந்திருக்கவில்லை.

இனி இவர்கள் இருவரின் பின்னூட்டங்களையும் தேடிப்பிடித்து படித்துவிட வேண்டியதுதான்.

:-)

.
என்ன தல போற போக்குல நம்மளையும் இழுத்து விட்டுட்டீங்க!! நன்றி எழுதுறேன் பாஸ்.
கெளம்பிட்டாங்கய்யா கெளம்பிட்டாங்க..... உங்க ஆட்டைல இது புதுரகமாவுல இருக்கு...?
நம்ம பகுதியில நல்லத சொல்ல வந்தா பின்னூட்டம் கிடைப்பது கஸ்டம் தான், ஏதாவது இசக்கு பெசக்காச் சொன்னா ஓகோந்து வரும் பின்னூட்டல்கள்

Popular Posts