Thursday, July 24, 2008

இளமை விகடன் தளம் பல்லிளிக்குதே !!!!

நைனா !!!

தளம் என்னவோ பட்டாஸா தான் கீது...ஆனா கரீயர் கைடன்ஸ் பேஜ் க்ளிக் பண்ணா எரர் அடிக்குது...

http://youthful.vikatan.com/ ( சேமிச்சுக்கறேன் தளத்த)

அப்புறம் தபா தபா லாகின் பன்னச்சொல்ல சொல்ல கயுத்த அறுக்குதுபா !!!! கொஞ்சம் டெக்னிக்கல் டீம் டிக்கியில கொஞ்சம் முள்ள கட்டுங்கப்பா !!!

(அந்த தளத்துக்கு போய் வந்ததுல இருந்தே இப்படித்தான் பேச வருது அக்காங்க்க்க் !!!

Tuesday, July 22, 2008

சுகுணா திவாகர் - அ.மார்க்ஸ் - எக்ஸ்குளூசிவ் படம்




சுகுணா திவாகர் திருமணத்தின் போது, பேராசிரியர்.அ.மார்க்ஸ் முன்னிலையில் திருமண உறுதிமொழி எடுத்தபோடு எடுத்த படம்...

Monday, July 21, 2008

SSL பற்றி அறிந்தவர்கள் யாராவது இருக்கீங்களா ?

இப்போது புடுங்கிக்கொண்டிருக்கும் ஆன்சைட் ஆணி SSL பற்றியதாகும்..பல்வேறு வகை சர்ட்டிபிக்கேட்டுகள் உருவாக்குவது,

அவற்றை சுயமாக கையொப்பமிடுவது (Self Signing the Certificates) மற்றும் பல்வேறு வகை எரர் மெஜேஜுகளை சர்வர் தரப்பில் இருந்து நாமே உருவாக்கி அளிப்பது ( Bad Certificates, Illegal Certificates, Client Error) போன்றவற்றை...

Client Hello, Server Hello, Key Exchange, Chipers ஆகியவற்றுக்கு முன்னும் பின்னும் வரவைப்பது...

மற்றும் வகைவகையாக SSL தளங்கள் மாறும்போது, நமது Session ID மாறிக்கொண்டேயிருக்கிறதா என்பதை பார்க்கவேண்டும்...

மேலும் Forced Alerts ( Warning & Fatel) ஆகியவற்றை SSL3/TLS போன்றவற்றை பாவிக்கும்போது தரவேண்டும், அதை கணக்கீடு செய்தல் வேண்டும்...

நான் இப்போது பாவிப்பது OpenSSL மற்றும் Apache / IIS ஆகியவற்றை கொண்டும், கிளையண்ட் கொடுத்த ஒரு சிறிய சர்வெர் அப்ளிக்கேஷன் மூலமாகவும்...

ஒப்பன் எஸ்.எஸ்.எல் s_server & s_client ஏதோ அவுட் புட் வீசுகிறது, முழுமையாக புரிந்துகொள்ள இயலவில்லை...

ஈத்தரியல் உபயோகப்படுத்தி பார்த்தேன், அதில் Forced Alerts காண்பிப்பதில்லை...Client Hello மற்றும் server Hello, key exchange, cipher ஆகியவை (High Level layer ல்) காட்டுகிறது...

இன்றைக்கு கடும் தலைவலி ஊடாக செய்ய முயன்ற ஆராய்ச்சியின் விளைவு...ஒன்னுமில்லை...

வலைப்பதிவர்கள் யாராவது SSL பற்றி அறிந்திருந்தால் அதற்கான வழிவகைகளை சொல்லி உதவினால் நலம்...

உங்கள் மின் அஞ்சல் அனுப்பினால் நானே தொடர்புகொள்கிறேன்....

என்னுடைய பதிவு அன்மையில் மறுமொழியப்பட்ட இடுகையில் வராது. உங்களுக்கு தெரிந்த நன்பர்கள் இது பற்றி அறிந்தவர்கள் என்றால் அவர்களுக்கு நீங்கள் ஒரு பார்வேட் செய்யுங்கள் ப்ளீஸ்...

Monday, July 14, 2008

பெருமூச்சு + பீஜியோ 207 - வண்டின்னா இது வண்டி...

சமீபத்தில் ஒரு விமான நிலையத்தில் நான் மிகவும் விரும்பும் பீஜியோவின் புதிய மாடல் CC 207 நிறுத்தியிருந்தார்கள்...



அதை வாங்கி ஓட்டத்தான் முடியாது...ஒரு படமாவது எடுத்துக்குவமே என்று எடுத்தது....!!! ஹும்...(பெருமூச்சு)

கடிகாரம்...(அறிவியல் சிறுகதை போட்டிக்கு)

அதிகாலை நேரம்...

நான் என்னுடைய மெகா-சைஸ் படுக்கையில்....

உறங்கிக்கொண்டிருக்கிறேன்...

அலாரம்...

முதல்முறை அடித்தது...

கண்கள் சொக்கிக்கொண்டு வந்தது...

நேற்றிரவு நேரத்துக்கு படுக்கைக்கு வராததன் விணை...

மீண்டும் அடித்தது...

போர்வையை சற்று நன்றாக இழுத்து போர்த்திக்கொண்டேன்...

மீண்டும் அடித்தது...

ஆனால் இந்த முறை அலாரமாக இல்லை...

தன்னுடைய ரோபோ கால் ஒன்றை படுக்கைக்கு அருகே ஊன்றி, ஒரு காலை படுக்கையின் மேல் ஊன்றி, ஒரு கரத்தால் என் தலை முடியை பிடித்து தூக்கி...

கன்னத்தில் "பொடேர்" என அடித்தது...ஆம்...கடிகாரம் என் கன்னத்தில் தான் அடித்தது....

சன்னமான குரலில் சொன்னது...

மிஸ்டர் "2454ரவி10X"...செவ்வாய் கிரகத்துக்கான உங்கள் பயணம் இன்னும் எட்டு நிமிடத்தில் ஆரம்பிக்கப்படப்போகிறது...அழிந்துபோன பழைய கல்பாக்கம் நகர் அருகே உங்கள் கலம் காத்திருக்கும் செய்து வந்துள்ளது...வெளியில் சென்று ஏர் காரில் ஏறுங்கள்...!!

மணி பார்த்தேன்...திருவள்ளுவர் ஆண்டு 3039 காலை ஆறு...




பி.கு: திருவள்ளுவர் ஆண்டு என்பது, கிரகோரியன் காலெண்டர் (ஆங்கில காலண்டர்) உடன் 31 ஆண்டுகள் கூட்டினால் வருவது..(அரசு அலுவலகங்களில் திருவள்ளுவர் காலெண்டர் முறையினை பின்பற்றவேண்டும் தமிழக அரசு எழுபதுகளில்அரசாணை பிறப்பித்தது என்று நினைக்கிறேன்.)

கதை பற்றி: சிறில் அலெக்ஸ் அறிவியல் புனைக்கதை போட்டிக்கு எழுதியது...உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நன்பர்களுக்கும் சொல்லவும்..மேலும் ஒரூ ஓட்டை குத்தவும்...

Sunday, July 13, 2008

அன்புக்குரிய வாத்தியார், அண்ணன் உண்மைத்தமிழன், கூடுதுறை எல்லோருக்கும் ஒரே பதிவில்

சோதிடம், ஜாதகம், கடவுள் நம்பிக்கை, கோவில், அய்யர், வருணாசிரமம், மனுதர்மம், உண்டியல், தேங்காய்மூடி, பகுத்தறிவு, சொரணை, தமிழன், இராவணன், அலைபேசி, ஆட்டுக்குட்டி.

அவல், ஆர்யா, அட்டு, ஆறு, அறுவை, வகுப்பு, வெட்டி, கொட்டி, பட்டி, ஆடு, அய்யோ, முட்டாள், மங்குனி, மடையன், மஸ்காரா, தம்பி, தவுடு, வடகலை, வறுத்தமுந்திரி, பார்ப்பனர், குரங்கு, அமீபா, பால்வெளி மண்டலம், நட்சத்திரம், பீனிக்ஸ், விண்கலம், செவ்வாய், சனி.

உருப்படாதவன், அபிஷ்டு, சனியன், சகடை, சண்டாளன், சூத்திரன், செட்டியார், நாயுடு, கம்மாவார், ஆச்சி, போச்சு, மூச்சு.

முருகன், பழனி, ஆண்டி, சந்தனம், திண்ணை, திண்டுக்கல், சமுத்திரம், பாரதிராஜா, ஊ.வே.திரிப்புசாமி அய்யர், குடந்தை ஜெஸ்டின் கோபால்சாமி, கோத்தகிரி, பார்வை நீதிபதி, பார்ப்பார்.

வளர், திகழ், புகழ், ஏழரை, எட்டறை, ஒம்போதறை, ஓடிப்போனவன், பத்துமணி, நெத்தியடி, ஜல்லியடி.

ஜட்டி, குட்டி, புட்டி, முட்டி, ஒட்டி, வெட்டி, சட்டி, பட்டி, மட்டி, செட்டி, தீபாவளி ஜாட்டி.

திருமணம், கல்யாணம், மணம், அணு, அண்டம், கரும்புள்ளி, நாடகம், கண்ணதாசன், கருமை, புட்டி, புதுவை, வியர்வை.

கடைசியாக...

சோதிடம், ஜாதகம், பரிகாரம், கோவில், அய்யர், அய்யங்கார், மனுதர்மம், மூடநம்பிக்கை, சாதீயம், வெளிப்பாடு, பகுத்தறிவு, பெரியார், பார்ப்ஸ், அடி, உதை, கலகம், முட்டு, மூடு, பொத்து.

Saturday, July 12, 2008

தமிழ் வலைப்பதிவு for டம்மீஸ் !!!

முதலில் நீங்கள் பழைய வலைப்பதிவரா, அல்லது புதிய வலைப்பதிவரா என்பதை கண்டுபிடித்துவிட்டு எப்படி வலைப்பதிவு செய்வது என்பதை பார்க்கலாம்...

அ மற்றும் ஆ என்றால் என்ன என்பதை கடைசியில் பார்க்கலாம்...

செக்-பாய்ண்ட் - 1

தமிழ்மணத்தை துவக்கியது காசி என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் (அ) வலைப்பதிவர்..

தமிழ்மணத்தை துவக்கியது டோண்டு ராகவன் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் (ஆ) வலைப்பதிவர்...

செக்-பாய்ண்ட் - 2

தமிழ்மணம் அமெரிக்காவில் இருந்து நடத்தப்படுவது என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் (அ) வலைப்பதிவர்...

தமிழ்மணம் ஆப்ரிக்காவில் இருந்து நடத்தப்படுவது என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் (ஆ) வலைப்பதிவர்..

செக்-பாய்ண்ட் - 3

லக்கிலூக் முப்பத்து மூன்று வயதுக்காரர், ஓல்டு மங்கை ராவாக...அடிப்பவர்...மற்றும் கல்யாணமானவர் என்று நீங்கள் நினைத்தால் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் (அ) வலைப்பதிவர்..

லக்கிலூக் கல்யாணம் ஆகாத கன்னிப்பையன், செவன் அப் குடித்தாலே மப்பு ஏறக்கூடியவர் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் (ஆ) வலைப்பதிவர்..

செக்-பாய்ண்ட் - 4

பார்ப்பணீயம், மீபொருண்மை, பெண்-ஈயம், பின்நவீனத்துவம், பொதுவெளி, வர்க்கபோராட்டம், போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்திருந்தால் நீங்கள் (அ) வலைப்பதிவர்..

இதெல்லாம் இன்னாது என்று கேட்டால் நீங்கள் (ஆ) வலைப்பதிவர்..

செக்-பாய்ண்ட் - 5

ஆடுமாடு, பைத்தியம், கூடுதுறை போன்ற வஸ்துக்கள் என்னவென்று தெரிந்தால் நீங்கள் நீங்கள் (அ) வலைப்பதிவர்..

மாடு என்பது மேயும், பைத்தியம் கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் போன்ற பொதுவான பதில்களை நீங்கள் சொன்னால் நீங்கள் (ஆ) வலைப்பதிவர்..

செக்-பாய்ண்ட் - 6

சூடான இடுகையில் வர, "தசாவதாரம்" என்று தலலப்பு வைக்கவேண்டும் என்று தெரிந்தால் நீங்கள் (அ) வலைப்பதிவர்..

பக்கம் பக்கமாக ஆராய்ச்சி, பயணக்கட்டுரை, சோதிடம் என்று நல்ல பதிவுகள் போட்டால் உங்கள் பதிவை பலர் வாசிப்பார்கள் என்று நீங்கள் சொன்னால் நீங்கள் (ஆ) வலைப்பதிவர்..

செக்-பாய்ண்ட் - 7

உண்மைத்தமிழன் பதிவை ஓப்பன் செய்ய ஒன்னே முக்கா மணிநேரமும், படிக்க பதினாறு மணி நேரமும் ஆகும் என்ற ரகசியம் அறிந்திருந்தால் நீங்கள் (அ) வலைப்பதிவர்..

உண்மைத்தமிழன் பதிவு ஓப்பன் ஆகாததுக்கு உங்கள் கம்பியூட்டரில் தான் ஏதோ கோளாறு என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் (ஆ) வலைப்பதிவர்..

செக்-பாய்ண்ட் - 8

நரேந்திர மோடி, சோ, குருமூர்த்தி, இஸ்ரேல் போன்றவற்றை ஆதரிப்பவர் ஒரு க்ராஸ் பெல்ட் என்று ஜஸ்ட் லைக் தட் நீங்கள் கண்டுபிடித்தால் நீங்கள் (அ) வலைப்பதிவர்..

கராத்தேயில் ப்ளாக் பெல்ட் தானே தருகிறார்கள், அது என்ன க்ராஸ் பெல்ட் என்று நீங்கள் கேட்டால் நீங்கள் (ஆ) வலைப்பதிவர்..

செக்-பாய்ண்ட் - 9

உள்குத்து, கும்மி, சுண்டக்கஞ்சி, மொக்கை, டவுஸர் கிழிந்து தாவு தீருவது, ஏஞ்சலினா கோவிந்தசாமி, கேத்தரின் பழனியம்மாள், சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது போன்ற பதங்களையும் அவற்றின் பயன்களையும் நீங்கள் அறிந்திருந்தால் நீங்கள் (அ) வலைப்பதிவர்..

இவை எல்லாம் தமிழில் சாதாரணமாக பயன்படுத்தப்படும் வார்த்தைகள் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் (ஆ) வலைப்பதிவர்..

இப்போது பதில்கள்...

அ - பழைய
ஆ - புதிய]

நன்றாக இருந்தால் இந்த விண்ணர் கையை அமுங்குங்க !!!

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....