காதலர்களுக்கு(?) இடையில் உரையாடல்...

ஒருவர் காதலில் விழுகிறார்.....முதல் முதலாக அவரது இதயத்தினை காதலியிடம் வெளிப்படுத்துகிறார்...அப்போது

நடக்கும் உரையாடலை தருகிறேன்....

காதலன்: அன்பே...என் முழு இதயத்தோடும் முழு ஆன்மாவோடும் உன்னை விருப்புகிறேன்...
காதலி: என்ன எதாவது சினிமா டயலாக்கா ?

காதலன்: இல்ல..உண்மையாவே உண்னை விரும்புகிறேன்...
காதலி: என்ன எதாவது சினிமா பட தலைப்பா..

காதலன்: ம்ஹும்...உன்னை லவ் பன்ரேன்னு சொல்ல வந்தேன்...
காதலி: சீரியசாவா ?

காதலன்: சத்தியமா சொல்லுறேன்...
காதலி: நான் யாரையும் காதலிக்கறதா இல்ல...

காதலன்: என்னை காதலிக்கலாமே..
காதலி: வேனாம் விட்டுடுங்க...

காதலன்: ஏன் ?
காதலி: பிடிக்கல...

காதலன்: என்னையா ?
காதலி: இல்ல...காதலிப்பதை...

காதலன்: காதலிப்பதையேவா...
காதலி: இல்லை..உங்களை காதலிப்பதை....நாம வழக்கமா நண்பர்களாகவே இருப்போமே....

காதலன்: இல்லை..நான் உன்னை காதலிப்பதில் உறுதியாக இருக்கேன்...
காதலி: என்னை பத்தி தெரியும் இல்லையா...அப்படி இருந்துமா என்னை காதலிக்கரேன் என்று சொல்லுறீங்க ?

காதலன்: நல்லா தெரியும்...
காதலி: என்ன தெரியும்...

காதலன்: எல்லாமே தெரியும்...
காதலி: சரி...இப்ப நான் சொல்லுறேன்...அதுக்கு நீங்க பதில் சொல்லுங்க... நான் ஒரு சோம்பேறி...சுடுநீர் தவிர எதையும் சமைக்க தெரியாது...

காதலன்: ( மனதுக்குள் : அது ஒரு சமையலா.. கொடுமைடா சாமீ ) பரவாயில்லை..நானே எல்லா சமையலையும் பன்னுறேன்..

காதலி: நான் இங்கிலீஷ் புக் தான் படிப்பேன்...டாவின்சி கோடு, சிட்னி ஷெல்டன் நாவல்ஸ், இந்த மாதிரி...

காதலன்: ( மனதுக்குள் : என்ன ஏதாவது கெட்ட வார்த்தையில திட்டுறாளா ) சரி..நானும் இனிமே இங்கிலீஷ் நாவல்தான் படிப்பேன்...(மனதுக்குள் : ஒழிஞ்சோம்...குமுதம் நடு பக்கம் இனிமே பாக்க முடியாது...ஹும்...)

காதலி: நான் காலையில பதினோரு மணிவரை தூங்குவேன்...
காதலன்: பரவாயில்லையே....நான் வேண்டுமானா கால அமுக்கி விடட்டுமா...

காதலி: ரொம்ப வழியாதீங்க..நான் 5 குல்பி ஐஸ் டெய்லி சாப்பிடுவேன்...
காதலன்: வாங்கிதந்துட்டா போச்சு....

காதலி: நான் டிவியில இந்தி சானல் தான் பார்ப்பேன்...தமிழ் சேனல் கனவுல கூட பார்க்க மாட்டேன்...

காதலன்: சத்தியமா எனக்கு கூட சாரூக்கான் தான் பிடிக்கும்...அவர் ஜம்ப் பன்னி டைவ் அடிச்சி டச்சா டச்சா னு சண்டை போடுறது ரொம்ப பிடிக்கும்..( மனதுக்குள் : இனிமே பெப்சி உமாவையும், காசுமேல புரோகிரம்ல வர சூப்பர் பிகரையும், சன்.மியூசிக் அட்டுக்களையும் பாக்குற பாக்கியம் கிடைக்காது...ம்ம்ம்...)

காதலி: ஜாக்கிசானுக்கும் சாரூக்கானுக்கும் வித்தியாசம் தெரியாத மொக்கையா இருக்கீங்களே...
காதலன்:ஹி ஹி

காதலி: வழிசல் தான் போங்க...என்னை கல்யாணாம் பண்ணிக்கிட்டீங்கன்னா, நான் உங்களை விட ஹாரி பாட்டருக்குதான் முக்கியத்துவம் கொடுப்பேன்..

காதலன்: அது யாரு, உன்னோட ஆன்சைட் கோஆர்டினேட்டரா (வெளிநாட்டு மேனேஜர்) ? பரவாயில்ல..நீ ஆபீஸ்ல இருந்து லேட்டா வர்ரது ஒரு பிரச்சினை இல்ல...

காதலி: ஹாரி பாட்டர் ஒரு நாவல்னுகூட தெரியாத வெண்ணையா இருக்கீங்களே...அந்த நாவலோட 5ஆவது பதிப்புக்காக வெய்ட்பண்ணிக்கிட்டு இருக்கேன்...அதுல ஒரு முக்கியமான் சஸ்பென்ஸ் இருக்கு...

காதலன்: ஓ இங்கிலீஷ் நாவலா ? சரி சரி...என்ன சஸ்பென்ஸ் ? யார் கொலை செய்ததுன்னா ?
காதலி: இல்லை...சாப்பாட்டு மேஜையில இருந்த முட்டைய யார் உடைச்சதுன்னு...

காதலன்: (மனதுக்குள் : கொடுமைடா சாமீ..) சரி வேற என்ன பண்ணனும் உன்னோட லவ்வர் ஆகனும்னா?

காதலி: காலையிலயும் சாயங்காலமும் என்னோட வாக்கிங் வரனும்...

காதலன்: அப்படியா...எனக்கு கூட வாக்கிங் ரொம்ம்ப பிடிக்கும்...உன்கூட வேற யாரெல்லாம் வாக்கிங் வருவாங்க...

காதலி: இப்போதைக்கு எங்க வீட்டு டாமி வந்துக்கிட்டு இருக்கு...நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் டாமி வராது...நீங்க தான் வரனும்..

காதலன்: (மனதுக்குள் : கொடுமைடா சாமீ...நம்ம பொழப்பு நாய்பொழப்பு தான் இனிமே)..கண்டிப்பா...வந்துட்டா போச்சு...அப்புறம் வேறென்ன பன்னனும் ?

காதலி: ஞாயித்து கிழமை தலைக்கு எண்னை தேச்சி குளிப்பாட்டனும்..நல்லா தலைய மசாஜ் செய்து விடனும்...

காதலன்: (மனதுக்குள் ஜொள்ஸ்) ஹி ஹி...அது கண்டிப்பா செய்திடலாம்..
காதலி: ரொம்ப அலையாதீங்க...எனக்கு இல்ல...என் தம்பிக்கு....

காதலன்: (புஸ்ஸாகிறார்...ஆனால் முகத்தில் சலனமில்லாமல்) நான் கூட அதை தான் நினைத்தேன்...சரி வேறென்ன செய்யனும் நீ என்னை லவ் பன்றதுக்கு...

காதலி: கல்யாணம் பன்னிக்க சொல்லி கேட்கக்கூடாது...

காதலன்:(மனதுக்குள்: இதென்ன கொடுமை) அய்யய்யோ...அப்புறம்....
காதலி: எனக்கு தோனும் போது சொல்லுவேன்.....அப்புறம் தான் கல்யாணம்...

காதலன்: (மனதுக்குள்: இவளுக்கு எப்ப தோனுறது...அதுக்குள்ள நமக்கு முடியெல்லாம் கொட்டிரும்...தினத்தந்தி டாக்டர்கிட்ட போகவேண்டியதுதான்...நம்ம போட்டோவ விளம்பரத்துல உபயோகப்படுத்துவானுங்க...சிகிச்சைக்கு முன்..சிகிச்சைக்கு பொறவு அப்படீன்னு...) ஹி ஹி...உன்னோட இஷ்டம்டா செல்லம்...வேறென்ன செய்தா என்ன லவ் பன்னுவ...

மேட்டர் சீரியசாகிறது...கவனியுங்கள்...

காதலி: நீங்க என் வீட்டோட மாப்பிள்ளையா மாறுவதுக்கு சம்மதம் சொல்லனும்...
காதலன்: இது தான...ஒரு ப்ரச்சினையே இல்ல...நிம்மதியா ஓக்கே சொல்லிடுரேன்...

காதலி: நீங்க என்னோட மதத்துக்கு மாறனும்...
காதலன்:(சிறிது நேர மவுனம்)..சரி...மாறிடுறேன்...

காதலி: ஒரே ஒருவிஷயம் பாக்கி...அது சரின்னா இப்பவே "சரி" ன்னு சொல்லிடுறேன்...
காதலன்: சொல்லு கண்ணா சொல்லு....என்ன சொன்னாலும் ஓக்கே தான் சொல்லப்பேறேன்...

காதலி: உங்க சாதியை மாத்திக்குங்க...நீங்க என் சாதிக்கு மாறிடுங்க.....
காதலன்: இது முடியாது....என்னால முடியாது....தயது செய்து வேண்டாம்...ப்ளீஸ்...என்னை மன்னிச்சிடு...இந்த விஷயம் வேண்டாமே...இது நடக்கவே நடக்காதும்மா...விட்டுடு....சாதி பிறப்பால் வருகிறது...நானே நினைத்தாலும் மாற்ற முடியாத விஷயம்...மீண்டும் பிறந்தால் மட்டுமே சாத்தியம்....

காதலி கோபமாகிறார்......அதெல்லாம் கிடையாது...நான் ரொம்ப பிடிவாதக்காரின்னு தெரியும் இல்லையா...என் சாதிக்கு மாறுங்க....அப்பதான் லவ் பன்னுவேன்...

காதலன் நொந்து நூலாகி நூடுல்ஸ் ஆகிறார்........

சாதியை வெறுப்போம்...அதுதான் இந்த பதிவின் மெஸேஜ்....

Comments

சதயம் said…
ம்ம்ம்...இப்பதான் ஆரம்பிக்கறீங்க போல...நான் நேத்துத்தான்...கடைசிக் கடிதம்னு ஒரு பதிவு போட்டேன்..

படிச்சிட்டு சொல்லுங்க

http://sadhayam.blogspot.com
நல்ல நகைச்சுவையான உரையாடல் மிக சுவாரசியமாக சென்று கொண்டிருந்தது இதில் கொண்டுவந்து சாதியை சேர்த்து கடைசியில் சீரியஸ் ஆக்கிவிட்டீர்கள். நன்றாக எழுதியுள்ளீர்கள்.
காமெடியாப் போய்க் கடைசியில மெசேஜ் சொல்லிட்டீங்க...

மதம் மாறுவது நடைமுறையில் உள்ளது..சாதி மா(ற்)ற முடியுமா என்ன?

அன்புடன்,
அருள்.
Amala Singh said…
ரொம்ப நல்லா இருக்கு. உங்களபத்தி அறிய ஆவல்
Muse(#25576995) said…
அருமையான பதிவு.
நன்றி பிரபா....
நன்றி சத்யம், அனு, அருள்...
நன்றி அமலன் மற்றும் மியூஸ்...
Nalliah said…
"ஆதலினால் காதல் செய்வீர்"
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் காதல் எங்கள் மத்தியில் இருந்தது. பின்னர் குழந்தைத் திருமணம் நடைமுறைக்கு வர, எங்கள் மத்தியில் காதல் அருகிவிட்டது. இன்று நாங்கள் காதல் அற்றவர்களாக மாறிவிட்டோம்.
ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன், அரசாட்சிகளின் அடித்தளமான உறுதியான சமூக அடுக்கதிகாரம், சாதி சார்ந்ததாக மாறிவிட்டது. இந்தியாவில் சாதி அதிகாரமும், சாதிப் பிரிவினையும், படு மோசமாக இருந்தன. சாதி அடையாளங்களை மீறுவது பலமாகத் தடுக்கப்பட்டு, அதற்காகவே குழந்தை வயதில் கல்யாணம் என்பது நடைமுறையாகி, இரண்டாயிரம் வருடங்களாக நாங்கள் காதல் என்றால் என்னவென்று தெரியாது வாழ்கின்றோம். இதனால் எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் இதயங்கள் இணையாது வெறும் உடல்கள் மட்டும் இணைந்த உடலுறவு மட்டுமே. "ஆதலினால் காதல் செய்வீர்” என அறை கூவியவன் பாரதி.

ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தமக்குப் பிடித்த துணையை, தாமே தேடிக் கொள்வதுதான் உண்மையான காதல். வாழ்நாள் பூராக நீடிக்கும் காதல் உறவைத் தேடிக்கொள்ள கடந்த இரண்டாயிரம் வருடங்களாக எங்களுக்கு தடை போடப்பட்டுள்ளது.
கல்யாணப் பொருத்தத்தில் சாதி, பணம், சொத்து, அழகு, கல்வியறிவு, பதவி என பலவற்றை பார்த்த நாங்கள், கல்யாணம் செய்ய விரும்புபவர்கள் உண்மையாக ஒருவரை ஒருவர் விரும்புகிறார்களா? என்று பார்த்தது கிடையாது. ஒருவரை ஒருவர் விரும்புவதற்கு, ஒருவரோடு ஒருவர் பழகாமல் விருப்பம் வரவும் முடியாது. எங்கள் பாரம்பரிய கல்யாணங்களில் கழுத்தில் தாலி ஏறிய பின்னர்தான் கணவன் மனைவியை ஒருவரோடு ஒருவர் பழக அனுமதிக்கின்றோம். ஒரு ஆணும் பெண்ணும் தமக்கிடையே அன்பைப் பகிருந்தோறும், இருவரும் நெருங்கிப் பழகுந்தோறும், உள்ளத்தையும் அன்பையும் பகிர்ந்து கொள்வதால் வளரும் ஓர் உறவுதான் உண்மையான காதல்.
எங்கள் எண்ணங்களோடு இணைவு இல்லாத ஓருவரோடு, சில நிமிடங்களுக்குப் பின் எதையுமே பேசவே முடிவதில்லை. அப்படி இணைவு இல்லாத ஒருவருடன் கல்யாணம் எப்படி வருடக் கணக்கில் தொடர முடியும்?
பகிர்ந்துகொள்ள ஒரு பொதுத் தளம் இல்லாத நிலையில், நம் மத்தியில் கணவன் மனைவிக்கிடையில் வெறுமையான உரையாடல்களுடன் எங்கள் கல்யாணங்கள் எல்லாம் வெறும் ஒப்புக்கு போலியாக வெறும் சம்பிரதாயங்களுக்கும் கடமைக்கும் கணவன் மனைவி எனக் குறுகி, இறுதி வரை தொடர்கின்றன.
கல்யாணமாகி கொஞ்சக் காலம் சென்ற பின் எங்கள் கணவன் மனைவிக்கிடையில் "சாப்பாடு தயாரா?", "பிள்ளைகள் என்ன சாப்பிட்டார்கள்?" என சில சொற்களுக்கு மேல் அவர்களுக்கிடையில் உரையாடும் குடும்பங்கள் மிக மிக அரிது.
கணவன் மனைவிக்கிடையில் மனம் விட்டுப் பேசி காதல் வளராதலால், வாழ்க்கை பூராக காதலுக்கான நீங்காத ஏக்கத்துடன், தொலைக்காட்சியிலும், கணணித் திரையிலும், கதை புத்தகங்களிலும் வெறும் கற்பனையில் காதலை பார்த்துவிட்டு, நாங்கள் மரணித்துப் போய்விடுகின்றோம்.
கல்யாண வாழ்வில் காதல் இல்லாத காரணத்தால் பல ஆண்கள் விபச்சாரிகளை தேடிப்போனார்கள். நாங்கள் பெரும்பாலும் எங்கள் நண்பர்களோடுதான் மனம்விட்டு பேசுவோம்.
தம்பதிகள் கோபப்படும்போது , அவர்களின் இதயங்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்து விடுவதால் அந்த இடைவெளியினில் பேசுவது கேட்க வேண்டும் என்பதற்காக, இருவரும் சத்தமாக உரத்த குரலில் பேசுவர். எவ்வளுக்கெவ்வளவு கோபம் கூடுகின்றதோ, அவ்வளவு சத்தம் தேவைப் படுகிறது., அன்பு வயப்பட்ட காதலர்கள் பேசும் போது உரக்க சத்தம் போட்டு பேச வேண்டிய தேவை இல்லை, ஏனெனில் அவர்களின் இதயங்களுக்கு இடையேயான இடைவெளி மிகவும் குறைந்து விடுகிறது. மனமொத்த இணைபிரியா காதலர்கள் தமக்குள் பேசவேண்டிய அவசியம் கூட இருப்பதில்லை, ஏனெனில் அங்கு இதயங்களுக்கு இடையே இடைவெளியே இருக்காது. இதயங்கள் இடமாறிவிட்ட காதலர்களுக்கு வார்த்தைப் பரிமாற்றமே தேவைப்படுவதில்லை,
இறுகிப்போன எங்கள் கலாச்சாரத்தில், இன்னமும் காதல் செய்வது தடை செய்யப்பட்ட ஒன்றாக இருப்பதனாலேயே, அது இரகசியமானதாகவும், மற்றவர்களால் வேவு பார்க்கப்படும் ஒரு நிகழ்வாகவும் இருக்கின்றது. இன்னமும் உண்மையான காதல் என்றால் என்னவென்று எங்களுக்கெல்லாம் தெரியாததால் ஒரு ஆணும் பெண்ணும் தற்செயலாக சற்று அருகில் பழக நேர்ந்தாலே அதனை காதல் என எண்ணி, கல்யாணம் செய்து கொள்கின்றார்கள். இதனால் காதலை நிதானமாக அணுக முடியாத நிலையில், கண்டவுடன் ஏற்பட்ட வெறும் கவர்ச்சியே, கல்யாணமாக நிறைவேறி பின்னர் தீராத பிரச்சனைகளாக இறுதி வரை தொடர்கின்றன.
காதலை சரிவர அணுகவும், நிதானமாக முதிர்ச்சியுடன் எதிர்கொள்ளவும், தேவையான அனுபவத்திற்கு காதலை சாதாரணமாக அணுகும் பாசத்தையும், நேசத்தையும் பெருக்கிக்கொள்ளும் கலாச்சாரம் தேவை. காதலை சாதாரணமாக அணுகும் கலாச்சாரம் ஆரோக்கியமான சமூகங்கள் மத்தியில் இருக்கின்றது. பொருத்தமான கணவன் மனைவி உறவுகளே நிறைவான ஆரோக்கியமான ஒழுக்கமான சமூகங்கள் உருவாக வழிசமைக்கும்.
– நல்லையா தயாபரன்

Popular Posts