என் செல்போன் தொலைந்த கதை -1

செல்போன் தொலைந்து போகாமல் இருப்பதற்க்கு என்ன செய்யவேண்டும் என்று கார்த்திகேயன் தனது தமிழ்ப்பூவில் ஐடியாக்களை கொட்டி இருக்கிறார்....அங்கு பின்னூட்டமிடப்போய் அது நம்ம வாழ்க்கை வரலாற்று சாறாகிடுத்து...அதனால போட்டேன் ஒரு தனிப்பதிவு...

நான் தொலைத்தது மொத்தம் மூனு செல்போன்...இது முதல் பதிவு..மத்தது ( மலேசியா ஏர்போர்ட் / பெங்களூர் ) பின்னாலியே வருது...

இத்தை மின்னாடியே சொல்லுறதுக்கென்ன அப்பு...47D பஸ்ஸுல என் செல்லை தொலைச்சி இருக்கமாட்டேன் இல்லையா...
என் சொந்தக்கதை சொல்லுறேன் கேளுங்க...

கி.பி 2000 ஆண்டு அப்படின்னு நினைக்கிறேன்..சென்னையில் அதிக செல்போன் புழங்காத நேரம்...ஆண்டனோவுடன் கூடிய - இன்கம்மிங் சார்ஜ் ஆகக்கூடிய - பேனாசோனிக் போன் வைத்திருந்தேன்..(எங்க அப்பாவிடம் சுட்டது)...

ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு போய்க்கிட்டு இருக்கேன்..பஸ்ஸுல அவ்வளாவா கூட்டம் இல்லை..எஸ்.ஆர்.சி காலேஜ் பக்கம் நல்லதா நாலு பிகர் பஸ்ஸுல ஏறுச்சி...நமக்கு தான் சீன் போடலனா உடம்பு தாங்காதே...

விளையாடியது விதி...செல்லை எடுத்து (கால் எதுவும் சத்தியமா வரவில்லை) அப்படியே பந்தாவா ஒரு லுக்கு விட்டுட்டு - மேல் பாக்கெட்டுல போட்டேன்...

அப்பத்தான் கடைசியா பாத்தது...அந்த நடவடிக்கையால் பிகர்களின் கவனத்தை ஓரளவு திசை திருப்ப முடிந்தது...ஸ்டாப் வந்தவுடன் இறங்கி பாக்கெட்டை தடவி பார்த்தால் - போயே போச்சு...செல்லு கானாமே போச்சு...
ஆட்டோக்காரன் ஒருவனிடம் வண்டியை துரத்தச்சொல்லி 50 ரூ ஆட்டோ சார்ஜ் போனது தான் மிச்சம்..ஆட்டோவாலா சொல்லியபடி டிப்போவுக்கே போய் பார்த்தேன்..

கண்டக்டர் சொன்னாரு...அது ஆறிப்போயிட்டிருக்கும் தம்பி...இப்ப வந்து தேடுற..(ரிலையன்ஸ் போன் பேசினா சூடாகும் என்று கணித்த தீர்க்கதரிசி)

அப்புறம் என்ன - செல்போனை மேல்பாக்கெட்டுல வைக்கிறது இல்லை என்று முடிவுசெய்தேன்...அப்படியே வெச்சாலும் சீன் போடுறதுக்காக எடுக்கறது இல்லைன்னும் முடிவெடுத்தேன்....

Comments

Anonymous said…
//அப்பத்தான் கடைசியா பாத்தது...//

இந்த வரியில் கொல்லென்று சிரித்துவிட்டேன்.
செல் தொலைச்ச அனுபவம் எல்லாருக்கும் இருக்கு போல....

ஒரு டீக்கடையிலே தம் அடிக்க செல்லை டேபிள் மேலே வெச்சிட்டு லைட்டர் கிட்டே போனேன்... திரும்பிப் பார்த்தா செல் ஜூட்.... உடனே ரிங் அடிச்சிப் பார்த்தேன்....

நம்ம ஆளுங்க தான் டெக்னாலஜில இம்ப்ரூவ் ஆனவங்க ஆச்சே... உடனே ஸ்விட்ச்-ஆப் பண்ணிட்டு இருக்கானுங்க....
இப்ப தானே ஒங்க கம்பனி போன் கொடுக்கிறாங்களே? தொலைந்தது பீடை என்று புது போன் வாங்கவேண்டியது தானே:-)
லக்கி...என்னை மாதிரி மூனு செல்போன் தொலைச்சவங்க கம்மியாத்தான் இருப்பாங்க..இரண்டு மாசத்துக்கு முன்ன ஒரே வாரத்துல இரண்டு போன்..
பிரபா..முதல் போன் தொலைத்தது 2000. ரீசன்டா ரெண்டு...ரீசன்டா தொலைச்சது இரண்டும் கம்பெனி போன் தான்..அதுவும் என் பொறுப்பில் இருக்கவேண்டியது...இன்னும் கணக்கு காட்டவில்லை....ஆனாலும் போன் தொலைஞ்சா ஒரு டென்ஷன் ஆகும் பாருங்க...காரணம் பல நண்பர்களின் எண்கள், ஏடிஎம் பின் நம்பர்கள், பாஸ்வேர்டுகள்...
//அப்பத்தான் கடைசியா பாத்தது...//

:))

இந்த சோக நகைச்சுவையை இரசித்தேன்...

ரொம்ப பெரிய ஐடியாவெல்லாம் தரலீங்க. (அனுபவம் பேசுது அவ்ளோதான்)

ATM பின் நம்பர்கள், பாஸ்வேர்டு ஆகியவற்றை செல்போனில் பதிவு செய்துகொள்வது பரவலாக உள்ளது என்றாலும் அது நல்லது அல்ல.

அன்புடன்,
கார்த்திகேயன்.
செல்போன தொலைக்கிறதால நன்மையும் உண்டு ... பழைய பிகருங்களிடமிருந்து தப்பித்து விடலாம் .. ரவி அந்த அனுபவத்தையும் கொஞ்சம் சொல்லுங்க ... ப்ளீஸ்
நம்ம கதை ரொம்பக் கேவலம் ரவி..

விடிகாலை 7 மணிக்கு கதவைத் திறந்து போட்டு தூங்கிட்டு இருக்கும்போது தலைமாட்டுல இருந்த செல்-ல ரூம் புகுந்து அடிச்சுட்டானுங்க...

4 பேரு வரிசையா படுத்து தூங்கிட்டு இருக்கும்போதே தைரியமா உள்ள வந்த அவனை பாராட்டனும் இல்லையா??
கப்பி...நீங்க இருப்பது பேங்களூரா ?? எங்க அறையில் நடந்த சம்பவத்தை அப்படியே எழுதியது போல இருக்கு...

ஆனால் எங்கள் அறையில் இன்னும் கேவலம்...

முதல் நாள் இரண்டு மொபைல் காணாமல் போனது...

போலீஸ் கம்பிளைண்டு எல்லாம் கொடுத்தோம்...

அடுத்த நாள் காலையிலும் ஒரு மொபைல் கானாமல் போனதுதான் சோகத்தின் உச்சம்..

ஆனால் பேங்களூரில் இருக்கும் (கிட்டத்தட்ட) 6000 மொபைல் / வீடுபுகுந்து திருட்டு / வழிப்பறி / திருடர்களில் முக்காவாசிபேர்...

தமிழர்கள்....

Popular Posts