தேடுங்க !

Friday, June 30, 2006

பின்னூட்ட நாயகர் கோவி.கண்ணன்

எப்போ பார்த்தாலும் ஒரு நக்கல்...நையாண்டி...எத்தல்...எகத்தாளம்...நாகப்பட்டினத்துல இருந்து புல் பூஸ்டுல வந்தமாதிரி இங்கும் இருக்கார்..அங்கும் இருக்கார்...எங்கேயும் இருக்கார்...ஆனால் நக்கலுக்கு மட்டும் பஞ்சமில்லை...

அவர்தான் கோவி.கண்ணன்...ஏற்க்கனவே பின்னூட்ட நாயகி பட்டத்தை துளசியக்கா கொத்திக்கிட்டு போயிட்டாங்க...அதனால கோவி.கண்ணனை பின்னூட்ட நாயகராக அறிவிக்கிறேன்...

அதாவது நான் முன் மொழிகிறேன்...வழிமொழியறவங்க பின்னாலே பன்னலாம்..

கவிதையும் எழுதுவார்..ஒரு பின்னூட்டத்துல கோடு கவிதை (புள்ளியை கோடாக்கினார்)

எஸ்.கேவை கலாய்த்த யதார்த்த நக்கல் ...

யதார்த்ததின் யதார்த்தம் என்னவென்றால்யதார்த்தம் யதார்த்த வாழ்க்கைக்குயதார்த்தமாக இருப்பதில்லை :)

பதிவுல தலை போற பிரச்சினை ஓடிக்கிட்டு இருக்கும்...இவர் நடுவுல பூந்து யாரையாவது கலாய்ப்பார்..

திம்மித்துவத்திற்க்கு கொடுத்த நக்கல் விளக்கம்...

அப்பு யோரோ பம்முறப்ப தும்மிட்டாங்க ... தும்மல மறைக்க மறுபடியும் பம்ம வேண்டியாத போச்சு அன்னிக்கு வந்துதான் பம்மத்துவம் ... சாரி திம்மித்துவம்
என்னுடைய இந்த பதிவுக்கு அதிக பின்னூட்டம் வந்ததுக்கு அவர் செய்த கலாட்டா...

ரவி,இது கொஞ்சம் ஓவரா இல்லை ?நாளு வரி எழுதிவிட்டு 40+ பின்னூட்டம். ஓ இதுக்குத்தான் 'தீ' பிடிக்கும் பதிவா எழுதனுமா ?

வெறுமே கலாய்ப்பதோடு தின்னையிலும் எழுதி இருக்காரு போல..கூகுள் கூட்டிப்போகுது...

என்ன பட்டம் கொடுத்திடலாமா இல்லை ஏதும் மாற்று கருத்து இருக்க ??

அன்புடன்,
செந்தழல் ரவி

17 comments:

Anonymous said...

கொடுத்திடலாம்,வழிமொழிகிரேன்.
சுந்தர்.

இளமாறன் said...

அவர் பதிவுகளை தின்னையில் படித்திருக்கேன்.ஆனால் என் பதிவு தமிழ்மணத்தில் இல்லாததால் பின்னூட்டம் எனக்கு போடலை போல.கொடுத்திருங்க.

செந்தழல் ரவி said...

இளமாறன், தமிழ்மணத்தில சேர்த்தா போடுவார்.:))

சுமா said...

எனக்கும் பின்னூட்டியதில்லை.ஆனால் அவரது காலம் பதிவு மற்றும் பின்னூட்டங்களை தொடர்ந்து படித்துவருகிறேன்.

செந்தில் குமரன் said...

வழிமொழிகிறேன்...
:-)))

நாகை சிவா said...

நம்ம ஊரு சேர்ந்த அண்ணன் கோவி. கண்ணனுக்கு இப்படி ஒரு பட்டம் கொடுத்து என்னை நெகிழக வச்சுட ரவி. அடுத்த தபா நீ வேளாங்கன்னி வரும் போது உன்னை பாச மழையில் குளிப்பாட்டுவதுனு முடிவு பண்ணியாச்சு. தட்டமா வந்து குளிச்சுட்டு போயிடு........

செந்தழல் ரவி said...

கண்டிப்பா சிவா...கலக்கிரலாம் போங்க...

நாகை சிவா said...

என்னது கலக்கலாமா...... உங்களுக்கும் நாகைக்கும் பக்கத்தில் பாண்டி பார்டர் இருப்பது தெரியுமா?????
அது எல்லாம் தப்பு இல்ல........

கோவி.கண்ணன் said...

என்னப்பு கோவி.கண்ணன இப்படி கேவி கேவி அழவெச்சிட்டீரு ... ஆனந்த கண்ணீர் தான்

குமரன் (Kumaran) said...

பின்னூட்ட நாயகர் கோவி.கண்ணன் வாழ்க வாழ்க.

Anonymous said...

hello Ravi,
i havent read this topic so my comment is not about this topic.. apologies..
A kind request!
Please do visit nila forum and update your short story ... everyone is waiting for you...

thanks Ravi

துளசி கோபால் said...

இங்கே என்னப்பா நடக்குது? :-))))

நானும் 'வலி மொலி'கிறேன்.

Ram.K said...

//என்ன பட்டம் கொடுத்திடலாமா இல்லை ஏதும் மாற்று கருத்து இருக்க ?? //என்னது குடுக்கலாமான்னு கேட்டுகிட்டு.
குடுத்தாச்சுன்னு சொல்லுங்க.

:)

அவசரமாக
பச்சோந்தி

Anonymous said...

பன்னலாம் : பண்ணலாம்
எழுதனுமா : எழுதணுமா
தின்னையிலும் : திண்ணயிலும்
இருக்க : இருக்கா

செந்தழல் ரவி said...

நன்றி, உடனே திருத்துகிறேன்.

கோவி.கண்ணன் said...

//சுமா said...
எனக்கும் பின்னூட்டியதில்லை.ஆனால் அவரது காலம் பதிவு மற்றும் பின்னூட்டங்களை தொடர்ந்து படித்துவருகிறேன்.
//
சுமா, இளமாறன் இரண்டு பேருக்கும் அவுங்க அவுங்க வலையில் பின்னூட்டம் போட்டாச்சி ...
சுமா, இளமாறன் இரண்டு பேருக்கும் அவுங்க அவுங்க வலையில் பின்னூட்டம் போட்டாச்சி ...
என் கடன் பின்னூட்டமிட்டு புண்ணாகி கிடப்பதே!

செந்தழல் ரவி said...

தகவல் வந்தது...யாரையும் கலாய்க்காம உடமாட்டீங்க போலிருக்கே ?