உவமைக்கவிஞர் சுரதா காலமானார்

அவரது மறைவுக்க அஞ்சலி செலுத்துகிறென்...அவர்பற்றி பாஸ்டன் பாலா எழுத்தில் வந்த பதிவு கீழே...அதற்க்கு பின்னூட்டம் இட்டு இருந்த ஆசாத் மற்றும் வெற்றியின் பின்னூட்டங்களையும் இனைத்துள்ளேன்..


உவமைக் கவிஞர் சுரதா கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


சிறிது காலமாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவரின் உடல் நிலை மோசமானதையடுத்து ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுரதாவின் சிகிச்சைக்காக முதலமைச்சர் கருணாநிதி தனிப்பட்ட முறையில் ரூ.50,000 நிதியுதவி செய்திருந்தார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மீது பற்று கொண்டு அவருடைய இயற்பெயரோடு தாசன் என்கின்ற அடைமொழியையும் சேர்த்து (சுப்பு ரத்தினதாசன்) தனது பெயரை சுரதா என்று மாற்றிக்கொண்ட கவிஞர் சுரதா அவர்கள், தனி கவிதைப் பாரம்பரியத்தையே உருவாக்கியவர்.

பல்லாயிரக்கணக்கான கவிதைகளை யாத்த சுரதா உருவாக்கிய கவிஞர்களின் எண்ணிக்கையும் பல நூறைத் தாண்டும். "கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்" எனும் இனிய திரைப்படப் பாடலை எழுதிய சுரதா, பல திரைப்படங்களுக்கு பாடல் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசாத்

பாலா,சட்டென்று நினைவிற்கு வரும் திரைப்பாடல்களை எழுதுகிறேன்.
1.ஆடி அடங்கும் வாழ்க்கையடா (நீர்க்குமிழி)
2.அமுதும் தேனும் எதற்கு (போலீஸ்காரன் மகள் ? - சந்தேகந்தான்)3.விண்ணுக்கு மேலாடை (நாணல்)
4.தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
5.முகத்தில் முகம் பார்க்கலாம்
அன்புடன்
ஆசாத்

வெற்றி

பாலா,தகவலுக்கு நன்றி.

இச் செய்தியைப் படிக்கும் போதே மிகவும் வேதனையாக உள்ளது. கவிஞர் சுரதா நலம் பெற இறைவனப் பிரார்த்திகிறேன்.

கவிஞரின் மருத்துவச் செலவுக்கு நிதியுதவி செய்த கலைஞருக்கு என் நன்றிகளும் பாராட்டுக்களும்.

இவரின் " அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில் இருக்கையிலே" எனும் பாடலைப் பல தடவை கேட்டு இரசித்திருக்கிறேன்.

இப் பாடலை நீங்களும் கேட்டு மகிழ கீழ்க் காணும் இணையத்தளத்திற்குச் செல்லுங்கள்.

http://www.musicindiaonline.com/p/x/Q4X2G5wFDS.As1NMvHdW/

நன்றி
அன்புடன்
வெற்றி

எண்பத்தாறு அகவையில் இறையிடம் சேர்ந்த அவரின் ஆன்ம சாந்திக்காக இறைஞ்சுகிரேன் இறைவனிடம்.....

Comments

புகைப்படம் கிடைக்கவில்லை...
http://www.intamm.com/sigaram/images/suratha1.jpg
வருத்தமாக உள்ளது...
சுமா said…
அவர் பாடல்களினை வெளியிடு ரவி
அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும் என்று இறைவனை வேண்டுகிறோம்.
அவர் குடும்பத்தினருக்கு மனமார்ந்த அனுதாபங்கள்.
என் அஞ்சலிகளை இங்கு சமர்ப்பிக்கின்றேன்.
என்னுடைய வருத்தத்தினை தெரிவித்துக்கொள்கிரேன்
தருமி said…
வருத்ததினை தெரிவிக்கிரேன்
ரசிகை said…
அஞ்சலியை தெரிவிக்கிறென்
Kanags said…
ஆழ்ந்த அஞ்சலிகள். அந்த நெஞ்சகலாப் பாடல்களின் தொடுப்புக்கு நன்றி.
மிகவும் வருத்தமான செய்தி. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
என் அஞ்சலிகளை இங்கு சமர்ப்பிக்கின்றேன்
அன்னாருக்கு என் ஆழ்ந்த அஞ்சலிகள்.
johan -paris said…
"செங்கதிர்ச் சுடர் போலே என்கரம் நீண்டிருந்தால்; சிங்காரச் சிலை தனை இங்கிருந்தே!! தொடுவேன்!"
"நான் கொய்யும் ;கொய்யாக்கனியே! வா"
"தமிழ் மொழி போல சுவையூட்டும் பெண்" என்னும் பலவாக;எழுதி எம்மை மகிழ்வித்தவர்; ஆத்மா சாந்தியடையட்டும்.!!
யோகன் பாரிஸ்
உவமைக் கவிஞரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து கொள்கிறேன்
"வாழைப்பூ தத்துவம்"
"நீல வானத்தில் நிழல் படிவதுண்டோ"
"கயல் நீந்துமோ சுடு நீரிலே"
"பத்துக்கு மேலாடை பதினொன்றே ஆகும்"
"புய நானூறு[புறநானூறு]
மேன்மையான கவிஞருக்கு நம்
கண்ணீர் அஞ்சலி
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
ஜோ / Joe said…
மிக எளிமையான மனிதர் .7 ஆண்டுகளுக்கு முன் கண்ணதாசன் பிறந்த நாளன்று சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற MSV -TMS இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்த போது ஒரு சாதாரண ரசிகர் போல வெகு நேரம் முன்பே வந்து அரங்கப்படிக்கட்டுகளில் உட்கார்ந்திருந்து சகஜமாக பேசிக்கொண்டிருந்தார் .

ஆழ்ந்த இரங்கல்கள்!
SK said…
வருந்துகிறேன்!

அற்புதமான கவிஞர் ஒருவர் மறைந்தார்!

அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

அன்னாரின் குடும்பத்தாருக்கு என் இரங்கல்கள்.
நல்ல தமிழ்க் கவிஞரை இழந்தோம்.
சுத்தப் பாடல்கள் இனி எப்படிப் பெறுவோம்.?

Popular Posts