திருமணத்தில் இன்றைய இளைஞர்கள் / இளைஞிகள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள் என்பது உண்மை..
அதுவும் அதிவிரைவான இயந்திர வாழ்க்கையில் கூடுதல் சுமையாகவே தெரிகிறது சிலருக்கு...கல்யாணமா...எனக்கா..ஹா ஹா ஹா என்று சிரிக்கும் அளவுக்கு வந்திட்டனர்.
சமுதாயத்துக்காகத்தான் திருமணம் செய்ய ஒத்துக்கொள்கின்றனர்...
பரஸ்பர அன்பு இல்லாமல் திருமணம் முடிந்துவிடுகிறது...
சிறிய விஷயத்துக்கு கூட விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு அருகி வருகிறது....நான் ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும்..என்ற கேள்வியை தாங்களாகவே எழுப்பி அதில் தங்களுக்கு சாதகமான ஒரு முடிவையும் எடுத்துகொள்கின்றனர் பெரும்பாலானவர்கள்...
சலிப்பு மனப்பாங்கு, ஆழமான பிடிப்பு இல்லாத வாழ்க்கை முறை, எனக்கென்ன என்ற போக்கு பெருகி வருகிறது...
இந்த நிலை தொடரும் என்று தான் நினைக்கிறேன்...பரிணாம வளர்ச்சியின் அங்கமாகவே பார்க்கிறேன்...
I need my Space...என்ற எண்ணம் பரவி வருகிறது...
பிறருக்காக நான் ஏன் என்னை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று எண்ணுகின்றனர்..
பொருளாதார சுகந்திரம் இதற்க்கு கிரியா ஊக்கியாக செயல்படுகிறது...
என்னமோ போங்க...எதுல போய் முடியுமோ தெரியவில்லை
Tuesday, July 04, 2006
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்ப...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...
9 comments:
ஆமா நீங்க என்னங்க பேச்சாளரா? பேச்சில்லாரா?
பேச்சுலர் - பேச்சு இல்லாராக ஒருவரை ஆக்க நிறைய நேரம் உள்ளது...
:) :)
மன்னிக்கவும் இது பின்னூட்மல்ல...
நான் புதிதாக ஒரு இடுகையை இட்டேன் ஆனால் அது என் முதல் பக்கமாகிய http://blogmayu.blogspot.com வில் வரவில்லை.
நான் டெம்பிளேட்டில் செய்த திருத்தங்கள் காரணமாக இருக்குமா?
plese send me an e-mail to mayu3g@gmail.com
I recently wrote an article in Human brain. It comes when I click from the thamiz manam.
//I need my Space...என்ற எண்ணம் பரவி வருகிறது...//
I need my Space... and also want your space only for Rental என்ற எண்ணம் பரவி வருகிறது
இந்த விஷயத்துலே பேச்சுலர் மட்டும் தான் பேச்சாளரா இருக்க முடியும்.....
என்ன செய்வது,
உள்ளே இருப்பவன் வெளியே வரத் துடிக்கிறான்,வெளியே உள்ளவன் உள்ளே செல்லத் துடிக்கிறான்.துடிக்கிறார்களே தவிர சிந்திப்பதில்லை.
இப்போதுதான் தங்களை காண்கின்றேன்,மீண்டும் வருவேன்.
பரஸ்பர அன்பு இல்லாமல் திருமணம் முடிந்துவிடுகிறது...//
என்ன ரவி இப்படி சொல்லிட்டீங்க..
எல்லா திருமணங்களுமே அப்படியில்லீங்க.. ஏதோ பத்திலருந்து இருபது பர்செண்ட் இருக்கலாம்..
நம்ம இந்திய குடும்பங்கள்ல வளர்ற இக்கால தலைமுறைக்கு ஒரு எண்ணம் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
அதாவது தன்னுடைய தாயும் தந்தையும் அடிக்கடி வாய்ச்சண்டை போடுவதாலேயே அவர்களுக்குள்ளே அன்பில்லை என்று நினைப்பது..
அபிப்பிராய பேதங்கள் இல்லாத ஒரு திருமண வாழ்க்கை இருக்கவே முடியாதுங்க. அப்படி யாராவது நாங்க திருமணம் செஞ்சி இருபது வருசமா சண்டையே போட்டுக்கலைன்னு சொன்னா அவங்க உண்மையான தாம்பத்தியமே நடத்தலைன்னுதான் அர்த்தம்..
அதே மாதிரிதான் இந்த ஸ்பேஸ்ங்கற விஷயமும்..
என்னுடைய கருத்துக்கு சுதந்திரம் வேணும்.. என்னை என் போக்கிலேயே விட்டுரு/ங்க அப்படீன்னு ஒரு கணவனோ மனைவியோ நினைக்க ஆரம்பிக்கறது எப்பன்னு நினைக்கறீங்க? அவங்களுக்குள்ள அபிப்பிராய பேதங்கள் ஏற்படுறப்ப இல்லை.. அதை அவங்க மத்தவங்களோட விவாதிச்சி ஒரு தீர்வை அடைய விரும்பலைன்னு வரப்போத்தான்..
இதுக்குன்னு ஒரு தனி பதிவு எழுதணும்னு நினைக்கிறேன்..
என்னுடைய அனுபவங்கள்ல அதாவது என்னோட சர்ச்சுல மாரேஜ் கவுன்சிலரா நாலு வருசம் வேலை செஞ்சிருக்கேன்.. அந்த அனுபவத்துல சொல்றேன்..
குடும்பங்கள்ல இன்னைக்கி நடக்கற நிறையை பிரச்சினைகள், மனக்கசப்புகளுக்கு முக்கியமான காரணம் படிப்புதான்..
டைம் கிடைக்கும்போது எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள ஒரு தொடராவே எழுதறேன்..
இறுதியா சொல்றேன்..
திருமண வாழ்க்கை என்பது ஒரு சொர்க்கமா நரகமா என்பது நம் கையில்தான் இருக்கிறது..
மேலை நாடுகளில் நடைபெறும் நாளுக்கொரு மணமுறிவு நம் நாட்டிலும் நடக்க வாய்ப்பேயில்லை..
இதுதான் நிதர்சனம்..
ரவி உங்க ஸ்டைலை மாற்றி ரொம்ப சீரியஸா எழுதியிருக்கீங்க. திருமணமே வேண்டாம் என்று சொல்லவில்லை. சமூகத்திற்காக திருமணம் என்பது கூடாது என்பது என் கருத்து. ஒருவர் திருமணம் புரிந்தால் அது சரியான காரணங்களுக்காக இருக்க வேண்டும் என்பது என் கருத்து.
செந்தழல் ரவி
நான் குழம்பிய தருணங்களில் இதுவும் ஒன்று.
அவ்வப்போது திரு கமலஹாசன் மாதிரி நினைப்பும் வந்தது.
Post a Comment