செந்தழல் ரவி: வணக்கம் பேரிக்கா அதிபர் புஷ் அதிபர் அவர்களே...
சார்ஜ் W புஷ்: வணக்கம் ரவி..ஒரு திருத்தம்..நான் பேரிக்கா அதிபர் அல்ல...அமேரிக்க அதிபர்.
செந்தழல் ரவி: சாரி புஷ்..நல்லாருக்கீங்களா ? வேலை எல்லாம் எப்படி போகுது ? உங்க வீட்டுல எல்லாரும் சவுக்கியமா ? பூனைகுட்டி எல்லாம் நல்லா தீனி சாப்பிடுதா ?
சார்ஜ் W புஷ்: ரொம்ப சவுக்கியம்..போன வாரம் தான் பண்ணை வீட்டுல போய் நல்லா ஓய்வெடுத்துட்டு வந்தேன்..வேலை...அப்படி எதுவும் எனக்கு கிடையாது தம்பி..என் பொண்ணுங்க தன்னியடிச்சிட்டு எங்கியோ கவுந்து கிடக்கிறதா ஒரு நூஸ்...எப்.பி.ஐ ஆளுங்களை அனுப்பி இருக்கேன்..அது தவிர வீட்டில எல்லாரும் சவுக்கியம்...பூனைக்கு இந்தியான்னு ஆசையா பேரு வச்சேன்..அது பெரிய பிரச்சினைன்னு ரொம்ப டென்ஷனாக்கிட்டானுங்க...அதனால இப்போ இஸ்ரேல் அப்படின்னூ மாத்தினதை மட்டும் உனக்கு ரகசியமா சொல்லுறேன்..யாருக்கும் சொல்லிடாதே..
செந்தழல் ரவி: புஷ்...நான் ஒரு சில முக்கியமான விஷயம் பற்றி உங்ககிட்ட பேசலாம் என்று வந்திருக்கேன்...
சார்ஜ் W புஷ்: சொல்லுங்க ரவி...(எங்கடா போனானுங்க இந்த அஸிஸ்டெண்டுங்க...)
செந்தழல் ரவி: சார்..இந்த இஸ்ரேல் - யாரோ தீவிரவாதிங்க - ராணுவ வீரர்களை கடத்தினாங்கன்னு - இப்படி லெபனான் - காசான்னு கண்டமேனிக்கு - சிவிலியன்ஸ் மேல - குண்டு போடறானுங்களே...கொஞ்சம் கண்டிக்க கூடாதா...
சார்ஜ் W புஷ்: இப்போல்லாம் காது சரியா கேக்குறதில்லை ரவி..கொஞ்சம் சத்தமா சொல்லுங்க..
செந்தழல் ரவி(சத்தமாக): சார்..இந்த இஸ்ரேல் - யாரோ தீவிரவாதிங்க - ராணுவ வீரர்களை கடத்தினாங்கன்னு - இப்படி லெபனான் - காசான்னு கண்டமேனிக்கு - சிவிலியன்ஸ் மேல - குண்டு போடறானுங்களே...கொஞ்சம் கண்டிக்க கூடாதா...
சார்ஜ் W புஷ்: இல்லையேப்பா - ஒன்னும் கேட்க வில்லையேப்பா..
செந்தழல் ரவி(மெதுவாக): சரி - விடுங்க..வட கொரியா ஏவுகனை சோதனை நடத்துதே ? அதுபற்றி
சார்ஜ் W புஷ்: (செந்தழல் ரவி பேசி முடிப்பதற்க்குள்) : தெற்க்காசிய நாடுகளின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் - சர்வதேச சமுதாயத்தால் - தடுத்து நிறுத்தப்படும்..
செந்தழல் ரவி ( ஹுக்கும்) : சரி, ஈராக்ல இருந்து எப்போ படைகளை வாபஸ் வாங்கப்போறீங்க ? ஏற்க்கனவே ஜப்பான் கிளம்பி போய்ட்டாங்க...நீங்களும் கிளம்பிறலாமே ?
சார்ஜ் W புஷ் : எண்ணையா போகச்சொல்லறீங்க ஈராக்கில் இருந்து ? நாங்கள் எண்ணிக்கொண்டு தான் இருக்கிறோம்..ஆனால் அந்த மக்களின் எண்ணப்படி அங்கு நாங்கள் இருந்துதான் ஆகவேண்டும். தீவிரவாத சக்திகளின் எண்ணம் ஈடேறாது....அவர்கள் எண்ண எண்ணினாலும் நாங்கள் அந்த - முழுவதும் ஜனநாயக வகையில் செயல்படும் - அரசுக்கு பாதுகாப்பு கொடுத்துதான் ஆகவேண்டும்...எண்ணம்மோ போங்க...இதுவரை நாங்கள் செலவு தான் செய்து இருக்கிறோம்..போதுமான வரவு வந்தவுடன் பரிசீலிப்போம்..
செந்தழல் ரவி: இந்தியாவின் ஏவுகணை - செயற்க்கைக்கோள் பரிசோதனைகள் தோல்வி அடைந்தது குறித்து..
சார்ஜ் W புஷ்: ஹாங்...அவனுங்களுக்கு நல்லா வேணும்..எங்க நாட்டு ஐ.டி ஜாப்ஸ் எல்லாம் கொத்திக்கிட்டு போனாங்க இல்லையா...
செந்தழல் ரவி: ஹெல்லோ புஷ்..நான் இந்தியாவை சேர்ந்தவன்...
சார்ஜ் W புஷ்: ஓ..அப்படியா...இந்தியா உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது...அவர்கள் ராக்கெட் புஸ் போனது - எங்கள் இதயத்தை இஸ்ரேல் - லெபனானை தாக்குவதுபோல் - தாக்குகிறது..இந்திய ஐ.டி எஞ்சினீயர்கள் அமெரிக்காவின் தூண்கள் என்று ஒரு நாலாவது கிளாஸ் படிக்கும் பொண்ணோட புக்ல - தலைகீழா பார்த்தபோது தெரிந்தது...இந்தியா வாழ்க...
செந்தழல் ரவி: சரி தலைவரே..கடைசியா ஒரு கேள்வி..பில் கேட்ஸ் / பின்லாடன் பற்றி என்ன சொல்லறீங்க
சார்ஜ் W புஷ்: என்னாது - நான் வளர்க்கும் கேட்டுக்கு (CAT) பில்லு (BILL) போட்டுட்டானா பின்லேடன் - அவன் ஒரு சர்வதேச தீவிரவாதி - உலக போலிஸ்காரன் என்று நினைப்பு - அவன் விடும் வாய்சவடால் - கேசட்டுகளை அல்-ஜசீரா டி.வியில் பார்த்தேன்...ஆனால் அப்போது புட்பால் மேட்ச் இருந்ததால் - மாற்றிவிட்டேன்..அதனால் பிறகு கருத்து சொல்கிறேன்..
செந்தழல் ரவி தலையில் அடித்தபடி எஸ்கேப்...
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்ப...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...
17 comments:
புஷ் பேட்டின்னு சொல்லி, புஸ்வானத்தை கொளுத்துபுட்டியே நல்லாவா இருக்கு :)
எண்ணை இருக்கும் வரை, என்னைய்யா நீர் போகச்சொன்னால் போவதற்கு அவர் வெண்ணையா ? :))
:))
அடிச்சி தூள் கிளப்பிட்ட மச்சி.
ரவி, நேஷனல் லெவலில் கிண்டல் செய்தால் ஆட்டோ வரும் வாய்ப்பு உண்டு, நீ இண்டர்நேஷனல், ஆகவே உணக்கு F-16 வர வாய்ப்பு உண்டு. பாத்துக்கோடா.
பிரபாகரன் சொல்லுவது - சரி, உங்களுக்கு ஆப்பு போர் விமானம் தான் வைக்கப்போகுது :) LOL
போட்டுக்கறேன் ஒரு நன்றி பின்னூட்டம் - போலீஸ்காரரே கண்டுக்காதீங்க..
கோவியார், இளமாறன், பிரபா, சுமா - நன்றி..
இந்தமாதிரி மொத்தமா - பின்னூட்ட நேர்மையா இருக்கறதுக்கு - வாழ்த்தி உங்க தளத்தில் போடமாட்டீங்களா ?
என்னுடைய சீரியஸ் கமாண்டுக்கு இரண்டு பற்களை மட்டும் காட்டியதை வன்மையாக கண்டிக்கிறேன் :)))
////எண்ணை இருக்கும் வரை, என்னைய்யா நீர் போகச்சொன்னால் போவதற்கு அவர் வெண்ணையா ? :))//
பதிவு மட்டும் தான் எழுதனுமாம்...பின்னூட்டம் நாமளே போடக்கூடாதாம்...இல்லைன்னா கைது நடவடிக்கையாம்...ஹி ஹி...
இல்லை பின்னூட்ட நாயகரே...ஒரு மீட்டிங் செல்லவேண்டி இருந்ததால் - ஓடிட்டேன்...
பிறகு மீட்டிங் போஸ்ட் போண் ஆகிட்டதாலே வந்திட்டேன்...
:) :)
உங்க ஸ்டைல்ல புஷ்ஷை போட்டு தாக்கீருக்கீங்க நல்லா இருக்குங்க...
இப்போல்லாம் காது சரியா கேக்குறதில்லை ரவி..கொஞ்சம் சத்தமா சொல்லுங்க..
ரவி!
நடப்பைப் பார்த்தால் உங்கள் கற்பனை உண்மை போல் தான் உள்ளது.
நன்றாக உள்ளது;
யோகன் பாரிஸ்
////
அவனுங்களுக்கு நல்லா வேணும்..எங்க நாட்டு ஐ.டி ஜாப்ஸ் எல்லாம் கொத்திக்கிட்டு போனாங்க இல்லையா...
////
ரசித்தேன் இதை!
//செந்தழல் ரவி தலையில் அடித்தபடி எஸ்கேப்... //
நானும் தான்.....
;))))
ரவி,
காமெடி கலாய்ச்சல்
நல்லாதாம்ப இருக்கு
அன்புடன்
தம்பி
நன்றி தம்பி / குமரன்...
:))
கொஞ்ச நாளா ஒரு மார்க்கமாத்தான் ஒங்க பதிவு போய்ட்டிருக்கு....
இருக்கட்டும்..:-)
இதையும் பயன்படுத்தலாம்
http://www.pkblogs.com/
soothanai
Post a Comment