Friday, July 21, 2006

பச்சை - பாவாடை - எச்சில் - பளார்

தலைப்பு கொஞ்சம் ஒரு மாதிரி இருந்தாலும் - மேட்டர் அதுதான்...எங்க பெரியம்மா மகன் - கோபுன்னு பேரு..

ஒருதலையா காதலிச்சான் பய...

மேட்டர் அது இல்லைங்க...காதலி கொஞ்சம் கிராமத்து பொண்ணு...மூஞ்சியில் புளிச்சின்னு எச்சிலை துப்பியதோடு அனைவரும் பார்க்கும்படி பளார் என்று அறைந்ததாக கேள்விப்பட்டேன்...

சரி - என்ன மேட்டர் என்று விசாரிக்கலாமேன்னு கூப்பிட்டனுப்பினேன்...

ரெண்டு நாள் சோக தாடியோடு வந்தான்...

என்னடா ஆச்சு...கையை புடிச்சி இழுக்கலாமோ ஒரு பொண்ணை - அதுவும் பஸ்ஸில...அதான் அடிச்சிட்டா...என்றேன்...

அட என்னை லவ் பன்றதா சிக்னல் குடுத்தா...அதுக்கப்புறம்தான் நான் கையைப்புடிச்சி இழுத்தேன்...

அப்படியா...எப்படி சிக்னல் குடுத்தா - இது நான்...

லட்டர் கொடுத்தேன்...வாங்கிக்கிட்டா...

லட்டர்ல என்ன எழுதி இருக்கேன்னு பார்க்கறதுக்காக வாங்கி இருப்பா...அதுக்கு பதில் லெட்டர் குடுத்தாளா - மீண்டும் கேட்டேன் நான்...

இல்லை...லட்டர்ல சொல்லி இருந்த மாதிரி நடந்துக்கிட்டா...

என்ன சொல்லி இருந்தே ?

திங்கள் கிழமை - ஸ்கூலுக்கு - பச்சை பாவாடையில் வர சொல்லி இருந்தேன்...அவ வந்தா..அதான் நான் அவ என்னை லவ் பன்றதா நினைச்சிட்டேன்..

ஓ..பச்சை பாவாடையில் தானே வந்தா ? அதுக்கு அப்புறமும் அவ ஏன் உன்னை அடிச்சா ?

கோபு என்னிடம் பதில் சொல்லிட்டான்...அவன் அறியாமையை நினைச்சி கொஞ்ச நேரம் சிரித்துவிட்டு...

உனக்கு வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்...

அட என்ன பிரச்சினை என்று கேட்கிறீங்களா ?

பச்சை பாவாடை எங்க ஊர் கேர்ள்ஸ் ஹை ஸ்கூல் யூனிபார்ம்...

32 comments:

பிரதீப் said...

சரிதான் :)

Anonymous said...

ரவி!
ஆனாலும் ஒங்க லொள்ளு அதிகம்!; சிரிச்சேன் நல்லா!
யோகன் பாரிஸ்

ALIF AHAMED said...

இதேல்லாம் ஓவாரா தெரியல ஹி ஹி

ஜொள்ளுப்பாண்டி said...

என்ன செந்தழல் உங்க பிரண்டு ஸ்கூல் லெவெலுக்கு பாக்குறாரா?? சுவாரசியமான ஆள் போல இருக்கே ;) ஆமா இவ்ளோ அப்புராணியா இருக்குராரே ரவி. அவரைக் கொஞ்சம் பேட்டை பக்கம் அனுப்புங்க !சும்மா மிலிட்டரி ட்ரெய்னிங் கொடுத்துடறேன் ;))))))

ரவி said...

ஸ்கூல் முன்னால தான் நாங்கள்லாம் நிக்கிறது...

:))

கோவி.கண்ணன் [GK] said...

ஸ்கூல் படிக்கிற பொண்ணான்ட லெட்டுரு கிட்டுரு கொடுத்தா இப்படித்தான் .. என்ன ஓய் உம்ம பெரண்டுக்கு காலேஜ் பொண்ணுங்களே கெடக்கலியா ? :)))

கோவி.கண்ணன் [GK] said...

ஸ்கூல் படிக்கிற பொண்ணான்ட லெட்டுரு கிட்டுரு கொடுத்தா இப்படித்தான் .. என்ன ஓய் உம்ம பெரண்டுக்கு காலேஜ் பொண்ணுங்களே கெடக்கலியா ? :)))

கப்பி | Kappi said...

ஹையோ..ஹையோ...ஹி ஹி ஹி..

அது சரி..கோபுவோட இன்னொரு பேரு ர-ல ஆரம்பிச்சு வி-ல முடியும்..கரெக்டா???

ரவி said...

////அது சரி..கோபுவோட இன்னொரு பேரு ர-ல ஆரம்பிச்சு வி-ல முடியும்..கரெக்டா???////

ஹய்யோ...நானில்லைங்க...

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

:-))))

ரவி said...

ஜொள்ஜி....மிலிட்டரி டிரெயினிங் கொடுத்தாலும் தேறமாட்டான் அவன்...அவனும் காதலிக்க முயற்ச்சி செய்து செத்து சுன்னாம்பாயிட்டான்...

ரவி said...

///என்ன ஓய் உம்ம பெரண்டுக்கு காலேஜ் பொண்ணுங்களே கெடக்கலியா ? :)))///

காலேஜ் வர்ரதுக்குள்ள ஏதாவது ஒரு லெட்டரை ஓக்கே செய்துடறாங்க இப்போ...

Anonymous said...

உன்னோட ரவுசுக்கு ஒரு அளவே இல்லாமே போய்க்கிட்டு இருக்கு - சாக்கிரதை.

Anonymous said...

சூப்பரா கலக்கிட்டான் நம்ம கோபு.என்ன மூஞ்சியில் வழிந்த எச்சிலை சுடைத்துக்கிட்டு, பஸ்ஸில் தரும அடி வாங்கிய விடயம் சொல்லாமல் விட்டுட்டே

கானா பிரபா said...

ஒங்க பெரியம்மா மகன் கோவு என்னிடம் சொன்னர், இந்த மேட்டரைப் பண்ணதே ரவி தான் எங்கிறார்.

நாகை சிவா said...

//ஸ்கூல் முன்னால தான் நாங்கள்லாம் நிக்கிறது...//
ஆமாம்மா காலேஜ் வந்தா ஏதுவும் நம்மள திரும்பி கூட பாக்க மாட்டேன்ங்குது.

ஏன்னா ரவி, உங்க தம்பி இன்னும் லெட்டர் தானா, சொல்லி திருத்த கூடாதா?

ரவி said...

எங்க ஊர்ல - லவ் செய்ய இவ்வளவு வசதிதான் இருக்கு...

என்ன செய்ய...ஹி ஹி

இது ஒரு நாலு வருஷம் முன்னால நடந்ததுங்க...

ரவி said...

எங்க ஊர்ல - லவ் செய்ய இவ்வளவு வசதிதான் இருக்கு...

என்ன செய்ய...ஹி ஹி

இது ஒரு நாலு வருஷம் முன்னால நடந்ததுங்க...

ரவி said...

எங்க ஊர்ல - லவ் செய்ய இவ்வளவு வசதிதான் இருக்கு...

என்ன செய்ய...ஹி ஹி

இது ஒரு நாலு வருஷம் முன்னால நடந்ததுங்க...

Unknown said...

thank you. Very nice. had a haughty laughter.

Chandravathanaa said...

ஹி ஹி ஹி ஹி

வெற்றி said...

செந்தழல்,
நல்ல நகைச்சுவையான பதிவு. சுவாரசியமாகச் சொல்லியுள்ளீர்கள்.

Anonymous said...

happy birthday ravi!
May you be blessed with all the gifts of life!!
God bless

Silent!!!

Priya said...

That was very funny indeed!!

ரவி said...

நன்றி சைலன்ட்...எப்படியோ தேடி கண்டுபிடிச்சி வாழ்த்து சொல்லிட்டீங்க...

:))

நன்றி பிரியா / சந்திரவதனா / வெற்றி..

மங்கை said...

//கானா பிரபா said...
ஒங்க பெரியம்மா மகன் கோவு என்னிடம் சொன்னர், இந்த மேட்டரைப் பண்ணதே ரவி தான் எங்கிறார்//

இது தான் உண்மையா இருக்கனும்...
கொஞ்சம் குசும்பு அதிகம் தான்.... office லே வந்து உக்காந்த உடனே இது மாதிரி ஏதாவது எழுதிடனும் போல உங்களுக்கு... இல்லேனா withdrawel symptoms மாதிரி ஏதாவது ஆகுமோ....

anyway nice way to start the day

உங்க history லே இன்னும் என்ன எல்லாம் இருக்கு பாக்கி

மங்கை

ரவி said...

இன்னும் பல குசும்புகள் - பாக்கி இருக்கு...ஒன்று ஒன்றாக அவிழ்த்து விடப்படும்..:))

உங்கள் நண்பன்(சரா) said...
This comment has been removed by a blog administrator.
-L-L-D-a-s-u said...

-G-o-o-d-. -V-e-r-y- -n-i-c-e- ..

கருப்பு said...

புல் பார்மில் இருக்கீங்க போல.

கார்த்திக் பிரபு said...

kalakureenga ponga!!!

Anonymous said...

அருமை ரவி....

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....