Tuesday, November 21, 2006

........./\.........என்னப்பா ஏதுப்பா......./\..........

************************************************************************************

இஞ்சாருங்கோ, இஞ்சாருங்கோ வாருங்கோ இங்கே....கொஞ்சம் வந்திட்டுப்போங்கோ...

அடாடா என்ன, கொஞ்ச நேரம் ரெலிபோனில் கதைக்கலாதோ ?

நம்மட மகன் எப்போதும் ரீவியை பாவிச்சிக்கிட்டு, ஊரு உலாத்திக்கிட்டிருக்கான்...என்னா ஏது எண்டு கேட்க கூடாதா ?

டேய் நிலவா, இங்கே வாடா...

என்னப்பா சொல்லுங்கோ?

என்னா ஏது...

என்னங்க, என்ன ஏதுன்னு கேட்க சொன்னா அதுக்காக இப்படியா ?

************************************************************************************

ஏண்ணா, சித்தே வாங்கோ இப்படி...

ஏண்டியம்மா காயத்ரி, சித்த நாழி டெலபோன் பேசிண்டிருக்கபடாதே நேக்கு...அபிஷ்டு...ஏண்டி...

நம்ம புள்ளையாண்டான் கிருபா எப்போ பார்த்தாலும் டீவியை ஈஷிண்டு தீட்டு புடிச்சவாளோட ஊரை ஷுத்திண்டு இருக்கு..சித்தே என்னா ஏதுன்னு கேக்கப்படாதோ...

நான் இப்பவே அந்த அபிஷ்டுவை கேட்குறேன்....எங்கே அங்க ப்ரகஸ்பதி ?

தோ இர்க்கேன் பா...தேடினேளா ?

ஆமா ஷகடை...உன்னே என் ஆத்துக்காரி என்னா ஏதுன்னு கேட்கச்சொன்னாள்...கேட்டுட்டன்..போருமாடீ....

ஏண்ணா...என்னா ஏதுன்னு கேட்கச்சொன்னா அதுக்கு இப்படியா...

***********************************************************************************

ஹாஜி, சுண்த்தேஹூன்....ஹாஜி...இதர் ஆய்யே னா...

மேன் போன்பே பாத் கர்ர்ரஹேஹூன்...கியூ புலாரஹே ஹூன்...

ஹமாரா பேட்டா ஹமேஷா டிவி தேக்தாஹேன்...ஒர் இதர் உதர் கூம்தா ரெஹெத்தேஹேன்...உஸ்ஸே பூச்தோ கியூன், கியா ?

அரே மூர்க்...இதர் ஆவோ...மே பூச்தேஹூன், ஜுவாப் தோ...கியூன்...கியா..பஸ்கயா னா மெரே பீவீ ?

ஹாஜி....மெனே துமே கியா போல்னேகூ கஹாதா, தூம் சிர்ப் கியூன், கியா பூச்னா..

***********************************************************************************

யோவ்...இங்க வாய்யா...

இருமே...கோட்டர் கோயிந்தனோட செல்லுல கலாஞ்சினுகீறேன், கஸ்மாலம் டருஜாயினு கீறான்..செத்த பேசசொல்லோ டிஸ்டெப் குட்க்காம கம்னு கட..

அடிங்...வாயா இங்க...

வண்ட்டேன்...சொல்மே..இன்னாமே...

யோவ், நீ பெத்துப்போட்ட தறுதலை பொழ்தேனிக்கும் குச்சிகினு, ஊர் மேஞ்சினு கடக்குது. அந்த கருமாந்தரத்த இன்னா ஏதுன்னு கேக்கக்கூடாதா நீனு ?

தா கேக்குறம்மே..டேய் கஸ்மாலம்..வாடா இங்க...

இன்னாபா ?

டேய்...இன்னா, ஏதுடா....

யோவ்...நான் இன்னா ஏதுன்னு கேக்கசொன்னா நீ இன்னா ஏதுன்னு கேக்கறியா..மவ்னே தட்னா தாறாந்துடுவ...

************************************************************************************

ஏன்றீ, ஏன்றீ, சொல்ப பர்த்தீரா...

நோடு, நானு போனல்லி மாத்தாடுத்தாயிதின்னி...ஹேளு....

நோடி, நிம் மகா பரீ டீவி நோடுது மத்தே சுத்தாடுத்தானே...அவனிகே யாக்கே ஏனு ஹேளி சொல்பா...

ஏய் புட்டப்பா, பா இல்லி...யாக்கே ? ஏனு ? ஹேளு.....

நானு ஹேளிது யாக்கே ஏனு கேளியந்தா நீவு யாக்கே ஏனு கேளுத்திதிரா ?

************************************************************************************

மலையாளமும் தெலுங்கும் எழுத நேரமில்லை. பின்னூட்டமா கொடுங்க சேர்க்கிறேன்...

14 comments:

மங்கை said...

அய்யோ பையனுக்கு என்ன ஆச்சு...
Office ல தனியா இருக்கீங்களோ...

ரவி said...

///அய்யோ பையனுக்கு என்ன ஆச்சு...
Office ல தனியா இருக்கீங்களோ... ///

இல்லையே !!!

நாடோடி said...

செந்தழல் நொந்தழல்லா ஆயிட்டார் போல...

Anonymous said...

Thambi ravi! ennappa? Kaththu karuppu paddichch?

Vanni Tamilan

ரவி said...

வருகைக்கு நன்றி நாடோடி மற்றும் வன்னி தமிழன்.

Anonymous said...

முதலாவது பத்தியில் சிறு திருத்தம் செய்யலாம்.

//இங்கே....கொஞ்சம் வந்திட்டுப்போங்கோ...//
இஞ்ச கொஞ்சம்......

//ரெலிபோனில் கதைக்கலாதோ ? //
ரெலிபோனில கதைக்கேலாதோ?

யாழ்ப்பாணத்தமிழ் என்றால் மேற்கண்ட திருத்தங்கள் பொருந்தும்.
மற்ற வரிகள் மட்டக்களப்புத் தமிழாக இருக்கின்றன.

Anonymous said...

ரவி!
இப்படியும் யாழ்பாணத் தமிழ் அமையும்.

"என்னங்க ;உங்களத்தான் ...இஞ்ச ஒருக்கா வந்து இவன என்னண்டு கேளுங்கோ!!!
"என்னனப்பா!!!கொஞ்ச நேரம் ரெலிபோன்;நிம்மதியாக் கதைக்க விடமாட்டியோ,,,???"
இல்ல....இவன்..எந்த நேரமும்;;;;உந்த ரிவிக்க பூந்து கிடக்கிறான்;இல்லையெண்டா ..;ஊரைச் சுத்துறான்;ஏனெண்டு கேக்கமாட்டியளா???"
டேய்....உன்னத் தான்....கொம்மா...எதோ சொல்லுறா!!!!
இந்தப் பாணியில் போய்க் கொண்டிருந்து....கடைசியில் கொப்பரில் ...தான் ;பொடியன் கருவுவான்....
அது சரி....உப்ப உமக்கு என்ன நடந்தது ஓய்!!!
யோகன் பாரிஸ்
my blog out of order after BETA

பெருசு said...

ஏனுங், கொஞ்சம் உள்ர வர்ரீங்ளா!

ஏனம்மணி, போன்ல பேசிக்கிட்டு இருக்குறனல்லோ..இரு வர்ரேன்.

நம்ப பையனப்பாத்தீங்களா!,பொழுதன்னிக்கும் ஊரச்சுத்திப்போட்டு , இந்தப்பொட்டி மின்னாடி
என்னதான் இருக்குமோ தெரியலியே, கொஞ்சம் கேக்கக்கூடாதுங்களா.

இப்பவே கேக்கறணம்மணி!, கூப்புடு அவன.,

என்னங்பா! கூப்புட்ட்டீங்களாப்பா??

ஏண்டா ஊர்சுத்தி? உங்கம்மா உன்னய என்ன ஏதுன்னு கேக்கச்சொன்னா , கேட்டுப்போட்டேன்,
போதுமா தாயி.

ஏனுங், என்ன ஏதுன்னு கேக்கச் சொன்னா, அதுக்குன்னு இப்படிங்கலாங்.

Anonymous said...

"கிருபா"வா? :O:O:O

எதேச்சயா தட்டச்சடிச்சதுதானே?

நீங்களாவது

பிரியமுடன்... said...

தம்பி
நல்லாதானப்பா இருந்தீங்க
என்ன ஆச்சு?
ஏன் இப்படி
நரசிம்மராவ் மாதிரி
ஏழெட்டு பாசையை
எடுத்து விடுறீங்க!
என் இனிய
தமிழ் இனி
மெல்ல சாகும்னு
சொன்னார்கள்
ஆன நீங்க
அவசரம் அவசரமாக
கொல்ல வந்தவர் போல
தெரியுதப்பா!
எங்க தமிழை காட்டுங்க
நன்றி உங்களுக்கு சொல்கிறோம்!
வாழ்த்துக்கள்! உங்கள்
பல மொழி திறமைக்கு!

Udhayakumar said...

சூப்பருங்ண்ணா!!!

Unknown said...

என்னப்பா ரவி! ஏதுப்பா ரவி! :)

பாரதி தம்பி said...

தான் ஒரு பன்மொழி புலவர் என்பதை ஒரு பதிவுபோட்டு உலகுக்கு அறிவித்த செந்தழலாரின் திறமையைப்பற்றி என்னத்த சொல்வேனுங்கோ..

Anonymous said...

super, i enjoyed man.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....