Posts

Showing posts from July, 2006

புத்தம் புதிய புத்தகமே...(தலைப்பு:காப்பி ஓனர்:கோவி.கண்ணன்)

பிடித்த புத்தகப்பட்டியலை வெளியிடச்சொல்லி பின்னூட்ட நாயகர் சொல்லிட்டாரு...அதுக்கப்புறமும் சும்மா இருந்தா நல்லா இருக்குமா?

எனக்கு பிடிச்சதெல்லாம் காமிக்ஸ் புத்தகங்கள் தானுங்க...எஸ்.விஜயன் நடத்தும் சிவகாசி பிரகாஷ் பப்ளிஷர்ஸ்க்கு மனியார்டர் அனுப்பி அள்ளிருவேன்...

பிறகு நேரம் கிடைக்கும்போது படிக்கிறது.....

சென்ற மாதம் சென்னைக்கு போனபோது சில புத்தகங்கள் வாங்கினேன்..

1. மது மங்கை மேதை - குஷவந்த் சிங்

சூப்பரான புத்தகம்...மெய்யாலுமே நல்ல எழுத்தாளர்தான்...சாம்பிள்..நாடாளுமன்ற நியமன உறுப்பினராக இருந்த காலத்தில் நடந்ததை எழுதி இருக்கார்...காற்று பிரிவதை பற்றி...உறுப்பினர்கள் அவர்கள் திருப்தியை இரு விதங்களில் வெளிப்படுத்துவார்கள் - ஒன்று ஏப்பம் - மற்றது - காற்று பிரிவது என்று சொல்கிறார்...:))

ஒருமுறை சத்தமாக காற்று பிரிந்ததை - இது சபை அவமதிப்பா இல்லையா என்று ஒரு உறுப்பினர் கேட்டாராம்...:))

2. புத்தர் ஜாதகக் கதைகள்

அருமையான கதைகளை கொண்டது...யார் வெளியீடு என்பதை நான் நாளை வெளியிடு(!!!)கிறேன்..

3.மைக்ரோவேவ் குக்கிங்

இதைபடித்து செய்த சிக்கன் தீய்ந்துவிட்டது என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்...மற்றபடி தரமா…

அய்யய்யோ அய்யோ அய்யய்யய்யோ

போனவருடம் நடந்த நிகழ்ச்சிங்க...

போஸ்ட் பெய்டில் இருந்த என்னோட மொபைலை பிரி பெய்டாக மாற்றினேன்...ஏர் டெல் (Airtel) கம்பேனி கார்டு போட்டேன்...காரணம் நம்ம ஈட்டி வாய் கொஞ்சம் ஓவரா பேசிக்கிட்டே இருக்கறதால - பாதி சம்பளம் போனுக்கே போறது பொறுக்காம இந்த முடிவு எடுத்தேன்...

அதுலயும் ஒரே வாரத்துல பேலன்ஸ் தீந்து போச்சு...

சரின்னு ஒரு 250 RS ரீசார்ஜ் கூப்பன் வாங்கினேன்..

ரீசார்ஜ் செய்து முடிஞ்ச பிறகு பேலன்ஸ் செக் செய்தேன்...

உங்கள் கையிருப்பு 178 ரூபாய் ஐம்பது காசு அப்படீன்னு சொன்னது...

டென்சனான டென்ஷன்...

உடனே கஸ்டமர் கேருக்கு கால் போட்டேன்...

வாய்ஸ் மெனுவுல போயிக்கிட்டு இருந்தபோது கால் கட்டாகிருச்சி...

சர்ர்ர்ருனு இரண்டு ரூபாய் காணாமே போனதா மெசேஜ் வந்தது....

கோபம் இன்னும் அதிகமாச்சு...

என்னடா இது பகல் கொள்ளையா இருக்கு...250 ரூவா ரீசார்ஜ் கூப்பனுக்கு 178.50 தான் பேலன்ஸ், அதுலயும் இல்லாம கஸ்டமர் கேருக்கு போன் செய்தா 2 ரூவாய வழிச்சிக்கறானுங்க...இன்னைக்கு உண்டு இல்லைன்னு பண்ணிரனும் என்று மீண்டும் கஸ்டமர் கேருக்கு ரீ டயல் செய்தேன்..

ஆங்..ரிங் போகுது ரிங் போகுது...

ஒரு வழியா ஒரு பெண் போனை எடுக்கறாங்க...

கய்யா முய்ய…

கூட்டி கழிச்சி பாருங்க...

கணக்கு சூப்பரா இருக்கு - கீழே பாருங்க...1 x 8 + 1 = 9

12 x 8 + 2 = 98

123 x 8 + 3 = 987

1234 x 8 + 4 = 9876

12345 x 8 + 5 = 98765

123456 x 8 + 6 = 987654

1234567 x 8 + 7 = 9876543

12345678 x 8 + 8 = 98765432

123456789 x 8 + 9 = 987654321

இதையும் பாருங்க


1 x 9 + 2 = 11

12 x 9 + 3 = 111

123 x 9 + 4 = 1111

1234 x 9 + 5 = 11111

12345 x 9 + 6 = 111111

123456 x 9 + 7 = 1111111

1234567 x 9 + 8 = 11111111

12345678 x 9 + 9 = 111111111

123456789 x 9 +10= 1111111111

அட இதையும் தானுங்க


9 x 9 + 7 = 88

98 x 9 + 6 = 888

987 x 9 + 5 = 8888

9876 x 9 + 4 = 88888

98765 x 9 + 3 = 888888

987654 x 9 + 2 = 8888888

9876543 x 9 + 1 = 88888888

98765432 x 9 + 0 = 888888888அருமை..இல்லையா...கடைசியா இதையும் பார்த்திடுங்க...1 x 1 = 1

11 x 11 = 121

111 x 111 = 12321

1111 x 1111 = 1234321

11111 x 11111 = 123454321

111111 x 111111 = 12345654321

1111111 x 1111111 = 1234567654321

11111111 x 11111111 = 123456787654321

111111111 x 111111111=12345678987654321


நம்ம பசங்க போடுற கணக்கு எல்லாம் மூனு எழுத்துல அடங்கிருது...1X3...X=என்ன கண்டுபிடிங்க..

விடாது கருப்பு பார்வைக்கு.....(சில கேள்விகள்)

சதீஷ்...நீண்ட நாளாக எனக்கு ஒரு சந்தேகம்....உங்க கொள்கை என்ன ?

சூஸ் த பெஸ்ட் ஆன்ஸர்..உங்கள் சொந்த வார்த்தைகளில் ஒவ்வொன்றாக விளக்கவும் அனுமதி உண்டு..

1. பார்ப்பணீயத்தை எதிர்ப்பது..
2. எல்லா பார்ப்பனரையும் எதிர்ப்பது..
3. சாதி உயர்வு சொல்லும் பார்ப்பனரை எதிர்ப்பது..
4. பார்ப்பணர் சாதியில் நன்பர்களை கொண்டுள்ளவர் எல்லாரையும் எதிர்ப்பது...
5. எல்லாம் சரி...

பதிலளிக்க உங்கள் சொந்த அவகாசம் எடுத்துக்கொண்டு பதிலளிக்கவும்...

இன்றைக்கு பதிவு போட வேற மேட்டர் கிடைக்காததால் - இதையே ஒரு பதிவாக்கிடலாமுன்னு பாக்குறேன்...

மேலும் எனக்கு இன்னைக்கு நிறைய வேலை ( சத்தியமா உண்மை :) ) - அதனால் பதிலளித்தவுடன் மடலில் தெரியப்படுத்துங்க....

ஏன் இந்த கேள்வி என்று நீங்கள் பதில் அளித்தவுடன் தெரிவிக்கிறேன்..

அன்புடன்,
செந்தழல் ரவி

ஆயாவை கொல்வது எப்படி ?

மறுபடியும் பெரியம்மா பைய்யன் விஷயத்தையே சொல்லப்போறேன் என்றாலும் - சொல்லவில்லை என்றால் மேட்டர் வெளிவராதே !!!!

மேட்டர் பெருசா ஒன்னுமில்லைங்க...எங்க பெரியம்மா மகன் கோபு அவங்க பெருசை - அதாவது அவங்க கிழவியை போட்டுத்தள்ள முடிவுசெய்தான்...

அதிர்ச்சி அடையாதீங்க...கள்ளிப்பாலுக்கு தப்பிவந்த அந்த கிழவி செய்த அழிச்சாட்டியம் கொஞ்ச நஞ்சமா ? சொல்லிமாளாது...( நான் சொல்லலீங்க - கோபு சொல்லுறான்)

எல்லா வீட்டிலயும் நடக்கறது தான்...ஆனாலும் இந்த கிழவி செய்தது ரொம்ப ஓவர், அதனால கோபுவும், அவனோட தம்பியும் சேர்ந்து கிழவிக்கு ஆப்பு வைக்கிறது அப்படீன்னு முடிவு செய்தாங்க..

கிழவி வழக்கமா போடுற பொடிடப்பாவில மேலாக்க பொடித்தூளு கொஞ்சம் தெரிகிறமாதிரி கொட்டி - கீழால மொளகாத்தூளை போட்டுட்டானாம்...

அன்னைக்குன்னு பார்த்து - ரொம்ப ஜலதோஷமாயிருக்கு - கொஞ்சம் கொடும்மா உன்னோட பொடியை என்று எங்க பெரியம்மா வாங்கி கொஞ்சம் உள்ளே இழுக்க - அய்யய்யோ எரியுதே - என்று அவங்க அலற - கிழவி உஷாராகிட்டது...அத்தோட பயலுகளை போட்டுக்குடுத்து - ஏற்க்கனவே எரிச்சலில் இருந்த பெரியம்மா - அடி பிச்சிட்டாங்க...

அதனால அடுத்த முயற்ச்சியை எடுக்க கொஞ்ச நாள் ஆனாலும் …

பச்சை - பாவாடை - எச்சில் - பளார்

தலைப்பு கொஞ்சம் ஒரு மாதிரி இருந்தாலும் - மேட்டர் அதுதான்...எங்க பெரியம்மா மகன் - கோபுன்னு பேரு..

ஒருதலையா காதலிச்சான் பய...

மேட்டர் அது இல்லைங்க...காதலி கொஞ்சம் கிராமத்து பொண்ணு...மூஞ்சியில் புளிச்சின்னு எச்சிலை துப்பியதோடு அனைவரும் பார்க்கும்படி பளார் என்று அறைந்ததாக கேள்விப்பட்டேன்...

சரி - என்ன மேட்டர் என்று விசாரிக்கலாமேன்னு கூப்பிட்டனுப்பினேன்...

ரெண்டு நாள் சோக தாடியோடு வந்தான்...

என்னடா ஆச்சு...கையை புடிச்சி இழுக்கலாமோ ஒரு பொண்ணை - அதுவும் பஸ்ஸில...அதான் அடிச்சிட்டா...என்றேன்...

அட என்னை லவ் பன்றதா சிக்னல் குடுத்தா...அதுக்கப்புறம்தான் நான் கையைப்புடிச்சி இழுத்தேன்...

அப்படியா...எப்படி சிக்னல் குடுத்தா - இது நான்...

லட்டர் கொடுத்தேன்...வாங்கிக்கிட்டா...

லட்டர்ல என்ன எழுதி இருக்கேன்னு பார்க்கறதுக்காக வாங்கி இருப்பா...அதுக்கு பதில் லெட்டர் குடுத்தாளா - மீண்டும் கேட்டேன் நான்...

இல்லை...லட்டர்ல சொல்லி இருந்த மாதிரி நடந்துக்கிட்டா...

என்ன சொல்லி இருந்தே ?

திங்கள் கிழமை - ஸ்கூலுக்கு - பச்சை பாவாடையில் வர சொல்லி இருந்தேன்...அவ வந்தா..அதான் நான் அவ என்னை லவ் பன்றதா நினைச்சிட்டேன்..

ஓ..பச்சை பாவாடைய…

வந்துருச்சிய்யா....வந்திருச்சுய்யாயா...

சில நாட்களாக தெரியாமல் இருந்த வலைப்பதிவுகள் - இன்றுமுதல் தெரிய ஆரம்பித்துவிட்டன..இந்த கொஞ்ச காலத்துக்கு - தலை சுற்றல் - வாந்தி - மயக்கத்துக்கு உள்ளானவர்கள் - இனிமையான வலைப்பதிவு அனுபவத்துக்கு தயாராகுங்கள்...

அன்னியன் ரமணிக்கு நன்றி - இந்த இடைவெளியை அவர் மென்பொருளை கொண்டு நிரப்பிவிட்டார்...புதிய பி.கே லிங்க் என் அலுவலகத்தில் வேலை செய்யவில்லை...என்ன கொடுமை என்று எண்ணிக்கொண்டே பதிவின்மீது எலிக்குட்டியை வைத்து கடித்தால்....

அட்ரா சக்கை...வேலை செய்யுதே அப்பு...

நன்றிகள் பல...(யாருக்கு ?? )

அன்புடன்,
செந்தழல் ரவி

புஷ் தமிழில் பேட்டி ( என்னிடம் தாங்க)

செந்தழல் ரவி: வணக்கம் பேரிக்கா அதிபர் புஷ் அதிபர் அவர்களே...

சார்ஜ் W புஷ்: வணக்கம் ரவி..ஒரு திருத்தம்..நான் பேரிக்கா அதிபர் அல்ல...அமேரிக்க அதிபர்.

செந்தழல் ரவி: சாரி புஷ்..நல்லாருக்கீங்களா ? வேலை எல்லாம் எப்படி போகுது ? உங்க வீட்டுல எல்லாரும் சவுக்கியமா ? பூனைகுட்டி எல்லாம் நல்லா தீனி சாப்பிடுதா ?

சார்ஜ் W புஷ்: ரொம்ப சவுக்கியம்..போன வாரம் தான் பண்ணை வீட்டுல போய் நல்லா ஓய்வெடுத்துட்டு வந்தேன்..வேலை...அப்படி எதுவும் எனக்கு கிடையாது தம்பி..என் பொண்ணுங்க தன்னியடிச்சிட்டு எங்கியோ கவுந்து கிடக்கிறதா ஒரு நூஸ்...எப்.பி.ஐ ஆளுங்களை அனுப்பி இருக்கேன்..அது தவிர வீட்டில எல்லாரும் சவுக்கியம்...பூனைக்கு இந்தியான்னு ஆசையா பேரு வச்சேன்..அது பெரிய பிரச்சினைன்னு ரொம்ப டென்ஷனாக்கிட்டானுங்க...அதனால இப்போ இஸ்ரேல் அப்படின்னூ மாத்தினதை மட்டும் உனக்கு ரகசியமா சொல்லுறேன்..யாருக்கும் சொல்லிடாதே..

செந்தழல் ரவி: புஷ்...நான் ஒரு சில முக்கியமான விஷயம் பற்றி உங்ககிட்ட பேசலாம் என்று வந்திருக்கேன்...

சார்ஜ் W புஷ்: சொல்லுங்க ரவி...(எங்கடா போனானுங்க இந்த அஸிஸ்டெண்டுங்க...)

செந்தழல் ரவி: சார்..இந்த இஸ்ரேல் - யாரோ தீவிரவாதி…

பன்மோகன் - புஸ் டெலிபோன் பேச்சு

நம்ம பிந்திய பிரதமர் பன்மோகன் - பேரிக்கா அதிபர் புஸ்சுகிட்ட போன் போட்டு பேசுனதுல ஒரு வெளிவராத மேட்டர் சொல்லவா ?

மேடம் சோனியா சொல்லி இருக்காங்க - புஸ்ஸு கிட்ட இத பத்தி போன் போட்டு சொல்லு பன்மோகன், அவர் தாக்கி அறிக்கை குடுப்பாரு என்று..

நம்ம பன்மோகன் ஒரு நாலு மிஸ்ஸுடு காலு குடுத்திருக்கார்...

அப்புறம் சோனியாகிட்ட போயி, நான் கால் பண்ணி பார்த்தேன், ஆனால் புஸ்ஸு எடுக்கமாட்டீங்கறாரு என்று சொன்னாரு பன்மோகன்..

அவங்க கேட்டாங்க...நீ, கஞ்சப்பயலாச்சே..நீ போனா செய்திருப்ப..மிஸ்ஸுடு காலு தானே கொடுத்திருப்ப என்று...

பன்மோகன் ஹி ஹி என்று வழிஞ்சிக்கிட்டே, ஆமாம் மேடம் மிஸ்ஸுடு காலு தான் கொடுத்தேன்..ஆனாலும் திரும்ப கூப்பிட மாட்டேங்கிறாரு என்றார்..

அதானே பார்த்தேன்...எங்க எந்த நம்பருக்கு கொடுத்தே என்று போனை வாங்கி பார்க்கிறார்...

அது புஸ் அலுவலக லேண்ட் லைன்...

பனியன் போட்ட சனியனே என்று - தலையில் அடித்துக்கொண்டே சோனியா அவரது மொபைலில் இருந்து கூப்பிட்டு பன்மோகனிடம் கொடுக்கிறார்..

செய்தி : பிரதமர் மன்மோகன் சிங்குடன் அமெரிக்க அதிபர் புஷ் தொலைபேசியில் பேச்சு..தீவிரவாத தாக்குதலுக்கு கன்டணம்..

( காமெடிக்காக மட்டும் எழுத…

மரணம் - சிறுகதை

மரணம்......

எல்லோருக்கும் ஒரு நாள் வருவதுதான்...எல்லாரும் வாழ்க்கையில் சந்திப்பது தான்...மறதி என்ற ஒன்று இல்லை என்றால் மரணம் எப்போதும் முள்ளாக உறுத்திக்கொண்டிருக்குமன்றோ...நானும் சந்தித்தேன்...அப்பாவின் ஒன்றுவிட்ட சித்தப்பாவின் மரணம் இதயத்தை மாபெரும் துயரில் வீழ்த்தி
யது..

கல்லூரியில் படித்த காலத்தில் விடுமுறைக்கு வரும்போது - காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றிய சித்தப்பாவுடன் - அவரது அலுவலக
த்துக்கு செல்வது வழக்கம்..கேஸ் கட்டு எழுதும் பணியில் என்னையும் ஈடுபடுத்துவார்...

அடிக்கடி கேஸ் கட்டு எழுதி எழுதி எனக்கே சட்டத்தில் உள்ள செக்ஷன்கள் எல்லாம் அத்துபடியானது...அடிக்கடி பாக்கெட் மணி வேறு கொடுப்பார்..

அப்பாவிடம் வாங்கிய பாக்கெட் மணியை விட அவரிடம் வாங்கியது அதிகம்...

அவரிடம் பொது இடங்களுக்கு போகும்போது அங்கு உள்ள பிகர்களை சின்ன பைய்யன் மாதிரி என்னோட சேந்துக்கிட்டு கலாய்ச்சது எல்லாம் இன்றும் மனதில் நிற்க்கிறது...

சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும்போது - தொலைபேசியில் அழைப்பு...காவல் நிலையத்தில் இரவு பாணியில் இருந்தபோது மாரடைப்பால் அகால மரணம் அடைந்தார் என்றது செய்தி...

அலறி அடித்து ஓடிவ…

கைக்கடிகாரத்துக்கு என் அஞ்சலி....

கைக்கடிகாரத்துக்கும் எனக்கு ஏழாம் பொருத்தம்.....கிட்டத்தட்ட ஏழு வாட்சுகளை தொலைத்த அனுபவம்...அதை அப்படியே ஒரு பதிவாக்கினால் இன்னும் சில வாட்சு கதைகளை கேட்கலாமே...

வாட்சுகளை தொலைத்த கதை மட்டுமல்ல...முதல் வாட்சு வாங்கவே மிக கஷ்டப்பட்டதாக நண்பர் ஒருவர் சொன்னார்...வாட்சுடன் அவருக்கிருந்த உறவை ஏதோ பெரிய செண்டிமெண்ட் காட்சி மாதிரி விவரித்தார்...

என் தாத்தா வைத்திருந்த - கையை ஆட்டினால் சார்ஜு ஆகக்கூடிய வாட்ச் கூட என்னை பிரமிப்பூட்டியது ஒரு சமயம்.....இப்போது என் வாட்ச் கதை கேளுங்க..

என் முதல் வாட்சை 1992 வாக்கில் நெய்வேலியில் ஏழாம் வகுப்பு படித்தபோது வாங்கி கொடுத்த எங்க அப்பா அதை சுவாரசியமாக விளக்கினார்..டேய் இதுல எப்.எம் (FM) - ஏ.எம் (AM), எல்லாம் வரும் என்று..அப்போது திரு திரு என்று விழித்து அவரிடம் ஒரு கொட்டு வாங்கி - அது ரேடியோ அலைவரிசை என்று அறிந்து கொண்டேன்..என் சிறிய கைக்கு கொஞ்சம் பெரியதாக இருந்தாலும் அதில் வரும் இனிமையான கொரகொர இசை மனதை மயக்கும்...மனதை மயக்கும் பணியை அது சிலசமயம் சரியாக செய்யவில்லை என்றாலும் ஸ்கூலில் இருந்த பலபேரை மயக்கியது...

முழு ஆண்டு விடுமுறைக்கு திருக்கோவிலூர் அத்தை …

ஒரு விளக்கம்..

தமிழ்மணம் நிர்வாகிக்கு...

என் மறுமொழி நிலவர சேவை நீக்கி உள்ளீர்கள் - என்னை கலந்து ஆலோசிக்காமல். ஆகவே எனது விளக்க கடிதம் இதனுடன் அனுப்புகிறேன்.
அன்னை தெரசா பற்றி ஒரு தூஷன பின்னூட்டம் வந்தது எனது இந்த பதிவில்.

போலி பின்னூட்டத்தை நான் அனுமதித்ததால் என் மறுமொழி சேவை நீக்கியதாக தெரிவித்தது இந்த பதிவு

ஆரம்பத்தில் இருந்து வஜ்ரா மீது ஒரு சந்தேகம் எனக்கு...காரணம் அவர் பின்னூட்டம் இட்டு சில வினாடிகளில் சர்ச்சைக்குரிய பின்னூட்டம் வந்தது...
பிறகு அவர் தனிமடலில் கூறினார்..குமரன் மடல் செய்தார்..அது அவராக இருக்க முடியாது, அப்படிப்பட்ட ஆள் அல்ல என்று...ஆகவே சந்தேகம் தீர்ந்தது..

இது நடந்தது வெள்ளி அன்று..

அடுத்த இரு நாட்களும் விடுமுறை எனக்கு...

நான் அந்த பின்னூட்டத்தை அப்படியே வைத்திருக்க வேறொரு காரணமும் உண்டு..வெளியிடத்தேவை இல்லை என்று நினைத்தேன்..இப்போது வெளியிடுகிறேன்...

ஒரு போலியாரின் போர்வையில் ஒளிந்துகொண்டு பல போலிகள் இங்கே...அனைத்து பதிவுகளிலும் கைவரிசையை காட்டிக்கொண்டு இருக்கின்றனர்...காலையிலும் போலி பின்னூட்டம், இரவிலும் போலி பின்னூட்டம், அதிகாலையிலும் போலி பின்னூட்டம்...

போலியாருக்கு வேறு வேலையே கிடைய…

எதுல போய் முடியுமோ தெரியவில்லை

திருமணத்தில் இன்றைய இளைஞர்கள் / இளைஞிகள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள் என்பது உண்மை..

அதுவும் அதிவிரைவான இயந்திர வாழ்க்கையில் கூடுதல் சுமையாகவே தெரிகிறது சிலருக்கு...கல்யாணமா...எனக்கா..ஹா ஹா ஹா என்று சிரிக்கும் அளவுக்கு வந்திட்டனர்.


சமுதாயத்துக்காகத்தான் திருமணம் செய்ய ஒத்துக்கொள்கின்றனர்...
பரஸ்பர அன்பு இல்லாமல் திருமணம் முடிந்துவிடுகிறது...


சிறிய விஷயத்துக்கு கூட விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு அருகி வருகிறது....நான் ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும்..என்ற கேள்வியை தாங்களாகவே எழுப்பி அதில் தங்களுக்கு சாதகமான ஒரு முடிவையும் எடுத்துகொள்கின்றனர் பெரும்பாலானவர்கள்...

சலிப்பு மனப்பாங்கு, ஆழமான பிடிப்பு இல்லாத வாழ்க்கை முறை, எனக்கென்ன என்ற போக்கு பெருகி வருகிறது...

இந்த நிலை தொடரும் என்று தான் நினைக்கிறேன்...பரிணாம வளர்ச்சியின் அங்கமாகவே பார்க்கிறேன்...

I need my Space...என்ற எண்ணம் பரவி வருகிறது...

பிறருக்காக நான் ஏன் என்னை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று எண்ணுகின்றனர்..

பொருளாதார சுகந்திரம் இதற்க்கு கிரியா ஊக்கியாக செயல்படுகிறது...

என்னமோ போங்க...எதுல போய் முடியுமோ தெரியவில்லை

இது எப்பிடி இருக்கு....

தமிழ்மண தளத்தில் வெற்றி ஆள்மாறாட்ட பின்னூட்டம் குறித்து எழுதினார்..அதற்க்கு என் பின்னூட்டம் இது...வெற்றி புரிந்துணர்வோடு ஒரு பின்னூட்டம் கூட வைத்து இருக்கிறார்..

ஆள்மாறாட்டப்பின்னூட்டம் சரி தலைவரே...சிலர் சொந்த பெயரிலேயே ரொம்ம்ப கேவலமாக பின்னூட்டமிடுகிறார்களே என்ன செய்யப்போறீங்க அதற்க்கு...

http://vaithikasri.blogspot.com/2006/06/blog-post.html

இதில் அன்பர் மியூஸ் அன்னை தெரசாவின் மீது தான் சேற்றை வாரி இறைக்கிறார் என்று பச்சை குழந்தைக்கு கூட தெரியும்...அதை நீக்கும்படி கேட்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்...

மேலும் சில கேள்விகள்..

நீங்கள் இந்த முடிவு எடுக்கும்முன் என்னை ஏன் கலந்து ஆலோசிக்கவில்லை...ஒரு மடல் அனுப்பி இருக்கலாமே...

அந்த போலி பின்னூட்டத்தை வஜ்ரா போடவில்லை என்று நீங்கள் நம்புவதற்க்கு அழுத்தமான காரணம் உள்ளதா ? தயவுசெய்து தெரியப்படுத்தவும்..

அதேபோல் அதை அவர்தான் போட்டார் என்று நான் ஏன் நம்பக்கூடாது...
நீதிபதி என்பவர் இரு தரப்பு வாதங்களையும் கேட்கவேண்டும்..அப்போதுதான் உண்மை விளங்கும்...

******************************************************************************
அலுவலகத்துக்கு வந்திட…