அய்யய்யோ அல்லேலூயா !!!!!

ஒரு பாபா பதிவுக்கு விளம்பரம் கொடுத்ததுக்கு பாவம் எல்லாரும் நெஞ்செரிச்சலாகிறாங்க...என்ன நீ கிறித்தவ / முஸ்லீம் மதத்தை பற்றி எழுதமாட்டியா என்று ? சில அரை லூசுகள் நல்ல பல பின்னூட்டமும் கொடுத்தாங்க...சந்தோஷம், மகிழ்ச்சி...பதிவு எழுதுற அளவுக்கு நேரம் கிடைக்கலைன்னாலும் நன்பர் ஹரிஹரன் வேலை மெனக்கெட்டு பதிவு போட்டிருக்கார்...அதை அப்படியே அடிக்கவேண்டியது தான் காப்பி....யாராவது இனிமே மிட்நைட்ல வர்ற சாமியார்கள் / அதிஷ்டக்கல் / நியூமராலஜி / நேமாலஜி (உலகிலேயே முதல்முறையாக கண்டறிந்த டாக்டர்.ராஜராஜன், ABC(ஜெர்மனி), EFG (லண்டன்) போன்றவைகளள பற்றியும் எழுதினால் அதையும் பதிவில் போடுவேன்) இனி ஓவர் டூ ஹரிஹரன்..

**********************************************************


செந்தழலார் ரெண்டு ரூபாய்க்கு பாபா மேஜிக் காட்டினார். இந்த மேஜிக்ல கிடைக்கிறது ஒரு பவுன் மோதிரம், வீபூதி, ரோசாப் பூ என மேக்ஸிமம் வேல்யூ மொத்தமே 10,000 ரூபாய்தான். அதுவும் உங்களுக்குக் கிடைப்பது வீபூதி, ரோசாப்பூ மட்டும்தான். துரைமுருகன், தயாநிதி ரேஞ்சில் இருந்தால் ஒருபவுன் மோதிரம். நாமெல்லாம் ஏழைபாழைங்க நமக்கு மோதிரம் மாதிரி மதிப்பான பொருள் கிடைக்க சான்ஸ் கம்மிதானே!

நான் சொல்லும் இன்னொரு சூப்பர் மேஜிக் ஷோக்கு டிக்கெட் ரெண்டுரூபாய்க்குக்கூட எடுக்க வேண்டியதில்லை. சும்மா ரெண்டுவாட்டி அல்லேலூயா அல்லேலூயான்னு கத்துங்க போதும்.


*குருடர்கள், சரியா கண்ணுத் தெரியாதவருக்கு பார்வை வர கண்தானம் பெற்றுச் சிகிச்சைன்னு விஞ்ஞான ரூட்டில் போனா பஸ், டிரெய்ன், தங்குமிடம்னு அது மட்டுமே 10,000/- செலவாகும்

லேசர் டிரீட்மெண்ட் ரூட்ல போனா 25,000/- விஜயா அகர்வால்ன்னு அலைஞ்சு அல்லோலப்படணும்.

*செவிடர்கள் செவிட்டு மிஷின், செவி அறுவை சிகிச்சைன்னு 10,000/- க்கு மேலெ செலவு செய்யணும். ஈ.என்.டி ஆஸ்பத்திரியா ஏறி இறங்கி ஈனப்பொழப்பாத் திரியவேண்டிவரும்.

*முடவர்கள் ஜெய்ப்பூர் செயற்கைக்கால், தாங்குகட்டை, வீல் சேர்ன்னு ஏகப்பட்ட செலவு குறைந்தது 10,000/- செலவழிக்கணும்

ஜெய்ப்பூர் செயற்கைக் கால்கள் எடைமிகுந்ததாய் இருப்பதால் ஊனமுற்றவர்கள் படும் அவதியை விஞ்ஞானிஅப்துல்கலாம் எடைகுறைந்த செயற்கைக் கால்களைக் கண்டுபிடித்துத் தீர்த்தார்.

அப்துல்கலாம் மாதிரியான விஞ்ஞானிகள் உலகமறியாத முட்டாள்.

நம்மூர் சென்னை மெரீனாகடற்கரை சீரணி அரங்கில் நடக்கும் "அற்புத சுகமளிக்கும் சுவிசேஷக் கூட்டத்தில்" பங்கேற்கும் முடவர்கள் நடக்கின்றார்கள், செவிடர்கள் கேட்கிறார்கள்,
குருடர்கள் பார்க்கின்றார்கள்.. பெங்களூருவில் அமெரிக்காவில் இருந்து வந்து பாதிரிமார்கள் சென்ற ஆண்டு இப்படி பெரிய அளவில் அற்புத சுகமளிக்கும் கூட்டம் நடத்தினார்கள். நீங்களும் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.


இந்த அற்புத சுகமளிப்புக்கூட்டத்தில் டிவிகேமெராவில் பார்க்கவேண்டிய சிரமமும் இருக்காது நேரிலேயே முட,செவிட்டு,குருட்டுக் குறைபாடுள்ளவர்கள் அல்லேலூயா...அல்லேலூயான்னு கண்ணைமூடிக் கத்தியபடியே சரியாகி மேடையிலேயே பார்த்து, கேட்டு, நடந்து குறைபாடு சரியாகி பரவசப்பட்டு ஆனந்தமாவார்கள்.

மக்களே உங்கள் ஊரில் இருக்கும், உங்களுக்குத் தெரிந்த இந்த உடல் குறைபாடுள்ளவர்களை டி.ஜி.எஸ் தினகரன், காருண்யா நிறுவனத்தையோ ஜோஷுவா நிறுவனத்தையோ அணுகும்படி செய்வீர். பாபாவின் தங்க மோதிர மதிப்பை விட பன்மடங்கு மதிப்புள்ள மருத்துவ சிகிச்சை கிடைக்கும் அவர்களுக்கு இங்கே.

இல்லையேல் இந்துமத வெறிகொண்ட ஜெயலலிதாவால் இடிக்கப்பட்டு, பகுத்தறிவுக் கருணாநிதியால் புனரமைக்கப்பட்ட மெரீனா கடற்கரை சீரணி அரங்கில் நடைபெறும் ஆண்டுத் திருவிழாவான " அற்புத சுகமளிக்கும் சுவிசேஷக் கூட்டங்களுக்கு" வந்து நேரடியாகப் பலன் பெற்று வாழும் நேர்மையான சீரிய வழி இருப்பதைத் தெரிவிக்கவும்.

குறிப்பு-1:
தியேட்டர் ஆர்டிஸ்டாக கூத்துப்பட்டறை / பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் இடம் கிடைக்காதவர்கள் நேரடியாகத் திறமையான நடிப்புப் பயிற்சி பெற சீரணி அரங்க அற்புத சுவிசேஷக் கூட்டங்களில் பங்கேற்கவும். இழந்ததைப் பெறுவீர்கள்.

குறிப்பு-2:
இந்தப் பதிவு எண் 111 என்று அமைந்தது தற்செயலான விஷயம் :-)))

இப்படிக்கு,

ஹரிஹரன்

Comments

Anonymous said…
இங்கே ஆட்டைய போட அனுமதி உண்டா?

பக்கா ரீஜண்டா ஆட்டைய போட காத்திருக்கிறோம்

அமுக
ஓஸ்திரலேசியா மகா கழகம்
அ உ பதிவு எண் 666
Anonymous said…
என் கேள்விக்கு இன்னா பதில்
Anonymous said…
என் கமெண்டை ஏன் ரிலீஸ் பன்னவில்லை

கம்பேனில விஷவாயு போட்டுடுவேன்
அது சரீ....
இப்ப நான் சொல்ல வர்ரது இன்னானா... நீ, மேலும் ஒங்க ஆதிக்க சாதிக்கார கும்பலு எல்லாரும் பல காலமா சனங்கள நசுக்கி, ஒதுக்கி, வஞ்சித்து, ஏமாத்தி, சொரண்டி, புழிஞ்சி கடைசில வெறுஞ்சக்கையா அவங்கள ரோட்டோரத்தல தூக்கி போடுட்ட. இப்ப எதுக்கும் பிரயோசன படாத அந்த சக்கைய வெச்சே வேற சில சக்திக வெஷமம் செய்ய நோட்டம் உடுதுங்க. ஆரம்பதிலேயே நீ ஒழுங்கா இருந்து இருந்தா பிரச்சின இந்த அளவுக்கு வந்திருக்குமா.
மக்களை ஏமாற்றும் எந்த மாயாஜால கூட்டமாக இருந்தாலும் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியதே!
தெ பார்ரா, வந்துட்டாரு! கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்ய வந்துருக்காரு நம்ம கபோதி. அதுவும் அவரே அவரு வெரல்களால இம்மாங்காலம் குத்திகினு கெடந்தாரு. இப்ப லபோ திபோன்னு கத்தினா இன்னா செய்ய முடியும்? மொதல்ல இருந்தே புத்தி இருந்து இருக்கனும். இப்பவும் காலம் தாழ்ந்தடல. நல்லது செய்தறதுக்கு காலம் எப்பவுமே செறந்ததுதான். மருவாதையா கற்பன மண்கோட்டைய உடுட்டு எறங்கி வந்து சுமுகமா வாழற வழிய பாத்து நடந்துக்க. சேர்ந்தே ஏதாவது சமுதாயத்துக்கு நல்லதா ஏதாவது செய்யலாம். இல்லீன்னா, அன்னிய சக்திகள் மேலும் மேலும் நம்மை எல்லரையும் சேர்த்தே அழிச்சுடும். இன்னா? சொல்றது பிரிஞ்சுதா? எல்லாம் ஒன் நல்லதுக்குத்தான் சொல்றேன்! கேட்டுக்கபா! நான் குடுக்கற இந்த ரோசனை எல்லாம் எலவசம்தான். ஒழுங்கா புடிச்சிக்க. வர்ட்டுமா!
Anonymous said…
ஹைய்யா!
அல்லேலுயா பத்தி ஒரு ரவியால பதிவு போட முடிகிறது.

சாயி பத்தி ஒரு ஹரிஹரனாலே பதிவு போட முடியுமா? அட்லீஸ்ட் காப்பி பேஸ்த்தாவது பண்ண முடியுமா? திராணி இருக்கிறதா?
ஹரிஹரன் தவ்று செய்கிறார். எப்படி சாய்பாபாவும் அல்லேலூயா கூட்டங்களும் ஒன்று எனச் சொல்லலாம்.

இதன்மூலம் சாய்பாபாவை வன்மையாக இழிவுசெய்திருக்கிறார்.

ஒருவர் தம்மை குறை சொல்லும்போது திரும்ப அவரை குறை சொன்னால் நாம ரெண்டுபேருமே யோகியனில்லைன்னு ஆகிடும். திரும்ப நம்ம பக்கத்து நியாயத்தச் சொல்வதுதான் சிறந்தவாதம் ஆகும் என நினைக்கிறேன்.
Johan-Paris said…
இந்தக் கூத்துக்களையும் பார்த்துச் சிரித்ததுண்டு.
யோகன் பாரிஸ்
Johan-Paris said…
இந்தக் கூத்துக்களையும் பார்த்துச் சிரித்ததுண்டு.
யோகன் பாரிஸ்
செந்தழலார் தற்கொலைப்படை said…
தலீவா,

நீ கலக்கோ கலக்குன்னு கேட்டிருந்த கேள்விக்கு அந்த ம்யூஸ்கிட்டயிருந்து இப்பத்தான் பதில் வந்திருக்கு. அதுவும் ஒரே ஒரு கேள்விக்குத்தான். அதுக்கு அந்த பெண் கற்பு புகழ் டோண்டுவோட ஜால்ரா காதை கிளிக்குது. பார்தீயளா?

http://dondu.blogspot.com/2006/12/3_30.html
//இங்கே ஆட்டைய போட அனுமதி உண்டா?

பக்கா ரீஜண்டா ஆட்டைய போட காத்திருக்கிறோம் //


"ஓஸ்திரேலியா ஆட்டை" என்றால் டபுள் சென்சார் செய்யப்படும் வெசயம் அமுக கிளைக்கழகத்திற்கு தெரியுமா

:)))))))))))))))))))))))))))))

Popular Posts