Wednesday, January 17, 2007

வலைப்பதிவர் கதை விவாதம் !!!!

ஆ ஆ ஆ வாங்க வாங்க வாங்கப்பா...வாங்கம்மா....கதை விவாதம் நடக்குது வாங்க வாங்க என்று விஜய் டிவி லியோனி - இலவச பட்டிமன்றம் கல்யாண மண்டபத்தில் நடக்கிற மாதிரி வாசல்ல நின்னு ஒருத்தர் எல்லாரையும் உள்ளார கூப்பிட்டுக்கிட்டு இருக்கார்...அது யாருமில்லைங்ணா...செந்தழல் தான்...

முதலில் உள்ளே வருகிறார் பொன்ஸ்...எக்ஸ்கியூஸ் மீ, இங்கே யானைக்கெல்லாம் அனுமதி உண்டா, நான் கையோட ரெண்டு யானைக்குட்டியை கூட்டிவந்திருக்கேன்...சேர்த்துக்கோங்க ப்ளீஸ்...

அய்யோ தாயே...இது சின்ன கல்யாண மண்டபம்மா...இங்கே யானைக்குட்டிக்கெல்லாம் சேர் கிடையாது...நீங்க வேனா உள்ளே எண்ட்ரி கொடுத்துக்கோங்க...அதுக்கு முன்னால. கதை விவாதம் செய்ய வலைப்பதிவர் வந்துக்கிட்டிருக்காங்க...அவங்களை வாசல்ல நின்னு கொஞ்சம் ஸ்மைலோட வரவேற்பு கொடுங்க...

பொங்கல் தமிழர் திருநாள் அல்ல...வாலண்டைண்ஸ் டே தமிழர் திருநாள்....கர்நாடகத்தில் காந்தி ஜெயந்தியை கன்னடர் திருநாளாக கொண்டாடுகிறார்கள்..அமெரிக்கர் எல்லாம் இந்துக்களாக மாறவேண்டும்...இந்து மதம் முன்னூறு கோடி வருடங்களாக உள்ளது...ஆர்.எஸ்.எஸ் ஒரு சிறந்த புட்பால் டீம்...என்று ஒருவர் ஷாக் கொடுத்தபடி உள்ளே நுழைகிறார்...அட நம்ம ஜடாயு....வாங்க சார் வாங்க....என்று அவருக்கு உரிய இருக்கையில் அமரவைத்துவிட்டு திரும்ப எத்தனிக்கையில் தோளைத்தொடும் கரம்...

ரவி, இஸ்ரேலில் எல்லாரும் சுகம்..இங்கே எல்லாரும் சுகமா ? மேலதிக தகவலுக்கு http://seen.edu.co.islerl.boom.innovation.com என்ற லிங்கை பார்த்துக்கோங்க என்கிறார் வஜ்ரா...அட...வாங்க...இவ்ளோதூரம் வந்ததுக்கு தேங்ஸ்...என்று பேசியபடியே நின்றபோது, வாசலில் ஒரே ஆரவாரம்...

ஓட்டமாக ஓடினால், கையில் க்ரிக்கெட் பேட்...ஜீன்ஸ், டீஷர்டில் டோண்டு.....ஆனால் கையில் பந்துக்கு பதில் போண்டா.....ஏதாவது பேசினால் வம்பாகிருமோ என்று வலையுலக சச்சினை கப்பென பிடித்து இடத்தில் அமரவைக்குமாறு ஹாரி பாட்டர் முகமது யூனுஸ் அவர்களை கேட்டுக்கொண்டுவிட்டு.....திரும்பி பார்த்தால்....

கவிஞர் பாலபாரதியும் வலப்பூ சுனாமி லக்கியும் தோளில் கைபோட்டபடி உள்ளே வந்துகொண்டிருக்கிறார்கள்...கூடவே அருள் மற்றும் வீ.த.பீப்பிள் ஜெயசங்கர்...என்னப்பா கூட்டணி பலமாயிருக்கு....கதைவிவாதம் நடக்கப்போறது தெரிஞ்சுதான் வந்தீங்களா என்றேன்...மையமாக பாலபாரதி வழிசல் சிரிப்பு சிரித்துவைத்தார்.....அப்போ இது சன்.டி.வி அரட்டை அரங்கம் இல்லையா ? என்றார் லக்கி......அட சும்மா சொன்னேன்...ஏதாவது கதை கதையா காரணமா கிடைக்கும், வ.வா சங்கத்துல அட்லாஸ் வாலிபர் மேட்டர் எழுத எதுனாச்சும் சிக்குதான்னு பார்க்க வந்தேன்..என்றார்...

அதுக்கு பேசாம நீங்க தமிழ்மண கனவு கண்டா போதுமே என்றேன்...அப்புறம் சொல்லுங்க செந்தமிழ் மணி என்று பினாத்தலார் உள்ளே நுழைந்தார்...சார், நான் செந்தழல் ரவியாக்கும்...நீங்க முதலில் உங்க இடத்தில் போய் இருங்க...என்றேன்...

செக்குமாடு ஜனநாயகமும் பாலகுமாரனும்னு அப்படீன்னு ஒரு டாப்பிக் யோசிச்சிருக்கேன்...அதுக்கு ஏதாவது மேட்டர் தேறுமா என்று கேட்டபடி எண்ட்ரி கொடுக்கிறார் சிந்தாநதி.....

கதை விவாதத்தில் கதை கிடைக்குமா
கதை விவாதத்தில் உதை கிடைக்குமா
இல்லை ரெண்டும் கிடைக்குமா
என்று ஒரு சர்வே வெச்சா என்ன என்று கேட்டபடி சர்வேசன் உள்ளே நுழைகிறார்..

இங்கே கதை மட்டும்தானா, கச்சேரி இல்லையா, என்று கேட்டபடி தேவ் மற்றும் இளா உள்ளே நுழையுறாங்க......

அன்பான கூலிக்கார கதைமாந்தர்களே, நீங்கள் அவலச்சுவையில் கூறினாலும், அடுப்படி சுவையில் கூறினாலும், நான் கோக் குடிப்பது முடியாத காரியம் என்று புரியாத விஷயங்களை பேசியபடி அசுரன் ஆஜர்...

தமிழக புத்தகங்களில் கதை தேவைதானா ? வெறும் காமெடி மற்றும் கவிர்ச்சி படம் போட்டா பத்தாது என்று ஏற்கனவே உள்ளே வந்து வசதியாக சாய்ந்து உட்கார்ந்திருக்கும் ராம் கேட்கிறார்...

தம்பி,இன்னும் கதை விவாதம் ஆரம்பிக்கலை...எல்லாரும் வந்துரட்டுமே ப்ளீஸ்...என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, கதை விவாதம் என்றால் ஆஜராவான் கண்ணன், கோவி.கண்ணன், என்று ஜேம்ஸ்பாண்டு ஸ்டைலில் சொல்லிக்கொண்டு சின்னப்பிள்ளை மாதிரி ஸ்கேட்டிங் விட்டுக்கொண்டு வருகிறார் பின்னூட்ட நாயகர் கோவியார்...

என்ன குட்டிகலாட்டா செய்யப்போறானோ என்ரு வெட்டிப்பயலும்,கப்பிப்பயலும் உள்ளுக்குள் பயந்து நடுங்கியபடியே வராங்க...ஆட்டத்தை கடுமையா ஆரம்பிப்பாங்க போலிருக்கே இவங்க என்று நினைத்தபடி சந்தோஷ் சந்தோஷமா உள்ளே வரார்...

என்னைய வெச்சு எதுவும் காமெடி கீமடி பண்ணல்லியே என்று கையில் காமிராவோடு கைப்புள்ள ஆஜர்...லேட்டா வரும் வலைப்பதிவாளர்களை அறிமுகம் செய்யுமாறு கைப்புள்ளையை கேட்டுக்கொண்டு...

எல்லாரும் கொஞ்சம் கூட்டமா உட்காருங்கப்பா....என்று கொஞ்சம் தொண்டயை கணைத்தபடி பேச ஆரம்பிக்கலாம் என்று நினைத்தால்....

*********** தொடரும் ***************

46 comments:

Anonymous said...

did u found that KPN thing ?

ரவி said...

உங்களோட மின்னஞ்சலை கொடுத்தா திரும்ப மடல் அனுப்ப வசதியா இருக்கும் இல்லையா ? அந்த மாதிரி எல்லாம் ஒன்னும் இல்லைங்கறாங்க எலக்ட்ரானிக் சிட்டியில் வேலை செய்யுறவங்க...ஏன்னா ஏதாவது மேஜர் இன்ஸிடெண்டா இருந்தா எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்...மேபி சிறிய கொலைடல் ஆக இருக்கலாம்...மத்தபடி பெருசா எதுவும் இருக்காது...!!!

லக்கிலுக் said...

ஆஹா... ஆரம்பமே அசத்தலா இருக்கே :-))))

அதிருக்கட்டும்... ஜடாயு மேல உங்களுக்கு அப்படி என்ன கொலைவெறி?

Hari said...

உண்மையை சொல்லுங்க உங்க கம்பனியில புரொஜெக்ட் இருக்கா இல்லையா?

:)

சும்மா பதிவா போட்டுத் தாக்குறீங்க.

வெற்றி said...

:)

கோவி.கண்ணன் [GK] said...

//கதை விவாதம் என்றால் ஆஜராவான் கண்ணன், கோவி.கண்ணன், என்று ஜேம்ஸ்பாண்டு ஸ்டைலில் சொல்லிக்கொண்டு சின்னப்பிள்ளை மாதிரி ஸ்கேட்டிங் விட்டுக்கொண்டு வருகிறார் பின்னூட்ட நாயகர் கோவியார்...//

என்னிய வச்சி காமடி கீமடி பண்ணலயே. கதைங்க ... சாரி கதையை குடுங்க ... பின்னி சிக்கு எடுத்துடுவோம்.

பின்னூட்ட நாயகர் கிடக்கிறார் விடுங்க...நடுநிலை நாயகர்களையும் (யாரு?) விவாதத்திற்கு கூப்பிட்டு இருக்கலாம்...அவரு தான் நீ சொல்றதும் சரி இல்லை இவர் சொல்றதும் சரியில்லை ன்னு சொல்லிப்போடுவாங்க (வி.த.பீப்பிள் மண்ணிக்க )
:))))

கிடக்கிறது கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனையில் வையின்னு சொல்லுவாங்க ... எதுக்கு இதைச் சொல்றேன்னா ? பஞ்ச் டயலாக்கைவிட பழமொழிதான் பாதாளம் வரை பாயும் !
:))

✪சிந்தாநதி said...

//செக்குமாடு ஜனநாயகமும் பாலகுமாரனும்//

அட இதுகூட நல்லாத்தேன் இருக்கு...கதைவிவாதம் முடியட்டும் என்ன தேறுதுன்னு பாப்போம்.

நாடோடி said...

இந்த நாடோடி எங்கே?..
எனக்கு இடமில்லையா?..

பாத்தியா நானே வந்து ஆப்புல உக்காருரேனே இந்தமாதிரி ஒரு பெருந்தன்மை யாருக்காவது வருமா?..

ரவி said...

நாடோடி, நீங்க இல்லாமலா ஆட்டம்...அதான் உங்களை வரவேற்க ஒருத்தர் நிக்குறாரே பாக்கலையா...வாங்க வாங்க, அந்தா லெப்டுல கீற சேருல கட்டைய சாயுங்க.

ரவி said...

///உண்மையை சொல்லுங்க உங்க கம்பனியில புரொஜெக்ட் இருக்கா இல்லையா?///

செத்து சுண்ணாம்பாவுற வரைக்கும் இருக்கு..!!!!

ரவி said...

///அட இதுகூட நல்லாத்தேன் இருக்கு...கதைவிவாதம் முடியட்டும் என்ன தேறுதுன்னு பாப்போம். ///

எங்களிடம் ஏதாவது உருப்புடியா தேறும்னு நினைச்சா உங்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும் ஹி ஹி

Anonymous said...

///பஞ்ச் டயலாக்கைவிட பழமொழிதான் பாதாளம் வரை பாயும் !
///

இது சூப்பர்...

ரவி said...

வழிமொழிகிறேன் அனானி !!!!

Anonymous said...

இங்கே நடக்கும் பின்னூட்ட கயமை கொடூரங்களை கண்டுக்கொள்ள ஆளே இல்லையா? போலிஸ்காரர் பொங்கல் லீவுலே இருக்காரா?

Anonymous said...

மவனே ஒனக்கு இவ்ளோ எகத்தாளம் கூடாதுடா அம்பி!

Anonymous said...

அது சரி என்னிய ஏன் கத கதக்கற சே கதைக்கிற வெவாதத்துக்கு அழப்பு வுடல...

Anonymous said...

உன்னிய கூப்டாக்கா ஆடு நனயுதேன்னு ஓநாய் அழுதுச்சுன்னு அக்கப்போர் ஆடுவ ...அதுக்கு தான் உன்னிய ரிசர்வ்ல வெச்சிக்கறாங்க

Anonymous said...

ரிசர்வோ பெர்மனன்ட்டோ ...யார்னா என்னிய வெச்சிக்கனா சர்தான்

Anonymous said...

ப்லொக்கர் ஆஃப் த யியர் ஆயிட்டாக்கா என்னவேனாலும் எழுதலாமா

Anonymous said...

செல்லாவுக்கும், சர்வேக்கும் எவ்ளோ அழுத மாமு? மடத்துல கேக்க சொன்னாங்க...

Anonymous said...

என்னது மடத்து வாசல் பிள்ளையாரடியா? யோவ் அதெல்லாம் எனக்கு தெரியாது.

Anonymous said...

மாமு என்னிய தெர்தா?

Anonymous said...

நீ என்னா கேப்டனோட பொண்டாட்டியா? உன்னிய பாத்தவொடனே தெரிஞ்சிக்கறதுக்கு...

Anonymous said...

பதிவுக்கு சம்மந்தமில்லாமல் கிறுக்கும் அனானியே...உன் ஆட்டை இங்க செல்லாது.

Anonymous said...

ஒர் சொட்டு
சொட்டு
சொட்டாய்
சொட்டியது...

சொட்டு சொட்டாம ஊத்தவா செய்யும்...எந்த எழவெடுத்த கவிஞன்டா அவன்...சரி ஃப்ரீயா வுடு...நா ஒரு கவுஜ சொல்லவா...

Anonymous said...

அடப்பாவி...தழலோட ஆளு திவ்யா தானே...இங்க எப்பிடி ப்ரியா வந்துச்சு?

Anonymous said...

//Anonymous said...
did u found that KPN thing ? //
கேபிஎன் லாரில மோதி நாலு பேரு காலியாம்மா..:((

Anonymous said...

பிளேடு கீறியது
காலிலிருந்து
இரத்தம் பீறிட்டு
வழிந்தது

இதையெல்லாம் கவுஜன்னு சொல்ல மாட்டாங்களா?

Anonymous said...

இது கவுஜ இல்லடா...
கவுச்சடா கஸ்மாலம்

Anonymous said...

சிந்தியது இரத்தம்
பிந்தியது குரோதம்
முந்தியது இரக்கம்

✪சிந்தாநதி said...

பாலாபாய் தனியா கதைவிவாதம் நடத்தி ஒன்லைன் சொல்லிட்டாருங்கோய்...

இந்தாருங்கோ முதல்பாகம்

http://valai.blogspirit.com/archive/2007/01/17/aids.html

தொடரப் போவது யாரோ?

Anonymous said...

என்னோட கமென்ட் ரிலீஸ் பன்னலன்னா கெம்பகவுடா சர்க்கிள்ல பாம் வெடிக்கும்னு வார்ன் பன்றேன்

வைகோ தற்கொலை படை
தாயகம் போஸ்ட்
போயஸ் கார்டன்

சென்ஷி said...

லேட்டா வந்தது வாஸ்தவம்தான். அதுக்காக கைப்புள்ள கையில பிலிம் இல்லாத கேமராவா கொடுக்குறது. எவ்ளோ நேரம் தான் படம் பிடிக்குற மாதிரி நடிப்பாரு. பாவம்ல

சென்ஷி

gulf-tamilan said...

தொடரும் ???
tomorrow!!??

பினாத்தல் சுரேஷ் said...

அதான் எல்லாரும் வந்தாச்சில்ல.. கதைய விவாதிக்க ஆரம்பிங்கப்பா..

எனக்குத் தெரியும் என்ன கதைன்னு..

"அயோக்யா மண்டபம்" தானே?

கப்பி | Kappi said...

:))

உதைவிவாதம்..ச்சே கதைவிவாதம் சீக்கிரம் ஆரம்பிங்கப்பா :))

Unknown said...

கதை வி(தண்டா)வாதம் எப்பொழுது ஆரம்பிக்கும்?

நாடோடி said...

//அந்தா லெப்டுல கீற சேருல கட்டைய சாயுங்க.//

யாரு கட்டைய?..

சிறில் அலெக்ஸ் said...

கலக்கலா துவங்கியிருக்கீங்க..
:)

Muse (# 01429798200730556938) said...

மையமாக பாலபாரதி வழிசல் சிரிப்பு சிரித்துவைத்தார

நம்புகிறேன்.

ரவி said...

////மையமாக பாலபாரதி வழிசல் சிரிப்பு சிரித்துவைத்தார

நம்புகிறேன். ////

என்ன ம்யூஸ், பாலபாரதியை கலாய்க்கும் சங்கத்துல மெம்பராய்ட்டீங்களா என்ன ???

ரவி said...

////மையமாக பாலபாரதி வழிசல் சிரிப்பு சிரித்துவைத்தார

நம்புகிறேன். ////

என்ன ம்யூஸ், பாலபாரதியை கலாய்க்கும் சங்கத்துல மெம்பராய்ட்டீங்களா என்ன ??? இல்லை ஏதாவது உள்குத்தா ??

ரவி said...

////கலக்கலா துவங்கியிருக்கீங்க..
:) .///

நன்றி சிரில்...:))

ரவி said...

//அந்தா லெப்டுல கீற சேருல கட்டைய சாயுங்க.//

////யாரு கட்டைய?.. ////

ஒரு க்ரூப்பாத்தாம்யா கிளம்பியிருக்காங்க...

ரவி said...

///கதை வி(தண்டா)வாதம் எப்பொழுது ஆரம்பிக்கும்? ///

அருட்பெருங்கோ, இது சும்மா ஒரு ஜல்லி...உருப்புடியா எதுவும் எழுதுறமாதிரி இல்லை...!!!!

ரவி said...

//அட இதுகூட நல்லாத்தேன் இருக்கு...கதைவிவாதம் முடியட்டும் என்ன தேறுதுன்னு பாப்போம். ///

நன்றி சிந்தாநதி அவர்களே...

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....