சாய்பாபா மேஜிக் ஷோ!! டிக்கெட் ரெண்டு ரூபாய்!!

மீண்டும் ஒரு விளம்பர பதிவு !!!! ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவும் இருந்தால் நான் பொறுப்பல்ல...( அட, இப்படி கூட டிஸ்கி போடலாமோ !!! ) வீடியோ லிங்க் இருந்தது, அதை இப்போது தான் சிந்தாநதி சொல்லி பார்த்து அப்டேட் செய்தேன். இப்போ வீடியோவும் இருக்கு...பாருங்கப்பு...

தெலுங்கு கங்கை திட்டத்திற்காக 200 கோடி வழங்கிய சாமியார் சாய்பாபாவுக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் "ஆன்மீக சக்தியால் மொதிரம் வரவழைத்து கொடுத்தார் பாபா" என்று பெருமிதம் கொண்டாராம். செய்தி வெளியிட்டிருக்கிறது 'தினமலர்'.

அதே கூட்டத்தில் (21.1.2007 காலை நிகழ்ச்சியில்) மத்திய அமைச்சர் மாண்புமிகு தயாநிதி மாறன் பேசும் போது, "அருள்மிகு பாபா முதலமைச்சர் வீட்டிற்கு வந்தபோது, எனக்கு மோதிரம் வரவழைத்துக் கொடுத்தார். அப்போது அவருக்கு மோதிரம் கொடுத்துவிட்டீர்கள், எனக்கும் ஒரு மோதிரம் தாருங்கள் என்று அமைச்சர் துரைமுருகன் கேட்டார். உடனே அவருக்கும் மோதிரம் வரவழைத்துக் கொடுத்தார். எங்களுக்குக் கொடுத்து விட்டீர்கள்; கலைஞருக்குக் கொடுங்கள் என்று (துரைமுருகன்) கேட்டபோது, அவருக்கு என் மனதையே தருகிறேன் என்றார். அவர் மனதில் நானும், என் மனதில் அவரும் இருக்கிறார் என்று பாபா தெரிவித்தார்.’’ (`தினத்தந்தி’, 22.1.2007) என்று கூறியுள்ளார்.

ஆகா! அற்புதம்...அற்புதம்....மோதிரம் ஸ்டாக் தீர்ந்து போச்சுங்கிறதை எவ்வளவு அழகா சமாளிச்சிருக்கிறாரு பாபா! இல்லாட்டி இவ்வளவு காலம் தப்பிச்சிருக்கமுடியுமா? எத்தனை கொலைகள், எத்தனை பாலியல் வன்முறைகள் (நடமாடும் கடவுளுக்கு பேதம் கிடையாது.. அதனால் இருபாலரும்...)... அத்தனையையும் சமாளித்து வருபவருக்கு இதெல்லாம் ஜுஜுபி..தான்! என்னமோ... என்ன மாயமோ தெரியல... அவருக்கு ஒன்னுமே ஆவறதில்ல.... இன்னும் நடத்திக்கிட்டே இருக்காரு!

பொதுப்பணித்'துரை' தான் புளகாங்கிதம் அடையுதுன்னா, தகவல் தொழில்நுட்பம் அதுக்கும் மேல! இந்திய வாய்க்காலை அறிவியலை நோக்கித் திருப்பிக்கிட்டிருக்கிற தயாநிதி மாறன் என்னடான்னா, எனக்குதான் 'முதல் மரியாதை'... அவருக்கு 'அடுத்த மரியாதை'ன்னு உரிமை கொண்டாடுறாரு!

வெறுங்கையை நீட்டினால் மோதிரம் வருதுன்னா, சாய்பாபாவை அரசுடமையாக்கி வெறுங்கையை விசுக் விசுக்குன்னு நீட்டச் சொல்லி தங்கம் வரவழச்சு, இந்தியப் பொருளாதாரத்தை வளர்த்து, இந்தியா வாங்குன கடனை எல்லாம் அடைச்சு, அப்துல் கலாம் போறதுக்குள்ள வல்லரசாக்கிட வேணாமா? அரசுடமையாக்கலைன்னாலும் குறைந்தபட்சம் சன் குழும உடமையாகவாவது ஆக்கி, குங்குமம் 'பெஸ்ட் கண்ணா பெஸ்ட்'-ல சாக்லெட், முட்டாயி, எவர்சில்வர் டம்ளரெல்லாம் குடுக்கிறதுக்கு பதிலா... வாரம் 7 தங்க மோதிரம் பரிசுன்னு விளம்பரம் பண்ணவாவது ஏற்பாடு பண்ண வேண்டாமா?

அதென்னையா.. வெறுங்கையை நீட்டினா விபூதி குங்குமமும், செயினு மோதிரமும்... இப்படி வெறும் கைக்கு அடங்குற பொருளாத்தான் வருமா? பத்து பைசாக்கு பெறாத விபூதிக்கு பதிலா, ஒரு புடலங்காயோ, ஒரு பூசணிக்காயோ குடுத்து வாயடைக்க வேண்டாமா?

பருத்தி புடவையாக்காய்ச்ச மாதிரி 'செய்கூலி இல்லாம', 'சேதாரம் இல்லாம' சும்மா கம்ப்யூட்டர் கட்டிங்கோட தங்க செயினும், மோதிரமும் வருதே... அட கூறுகெட்ட கூபேக்களா... இந்நேரம், கோலார் தங்கச் சுரங்கத்துக்கு பதிலா பாபா தங்கச்சுரங்கம்-னு ஆரம்பிச்சு அதுக்கு சாய்பாபாவையே சி.இ.ஓ. வாப் போட்டு, புரொடக்சனை டெவலப் பண்ணக்கூடாதா?

கொஞ்சமாவது அறிவுன்னு ஒன்னு இருந்து அதையும் கொஞ்சமே கொஞ்சம் பயன்படுத்தினாலும் போதுமே! விபூதி வருதுன்னா சரி, அது பக்தி புராடக்ட், டைரக்டா நடமாடாத கடவுள்கிட்ட இருந்து நடமாடும் கடவுளுக்கு சப்ளை ஆகுதுன்னு சொல்லலாம். கோலார்ல கிடைக்கிற தாதுக்களிலயே, எவ்வளவுதான் சுத்தப்படுத்திப் பார்த்தாலும் பக்கத்து ஏரியால சின்னப்புள்ள தொலைச்ச தோடுதான் கிடைக்குதே தவிர, தங்கத் துகள்கள் கிடைக்க மாட்டேங்குதுங்கறான். இங்க என்னடான்னா பாபா நினைச்சா தங்கம் வருது... அதுவும் பிரிச்செடுத்து, சுத்தப்படுத்தி, உருக்கி, செம்பு கலந்து 22 காரட் அளவுக்கு வந்து, அதுவும் கரெக்ட்டான சைஸ்ல, 916 ஹால்மார்க் முத்திரை தரத்தில தயாராகி வருதுன்னா சாய்பாபா எவ்வளவு பெரிய தங்க பேக்டரியா இருப்பாரு! என்னங்க சாதாரண காரியமா? இந்த தங்கம் எங்க தயாரானது, சரவணா ஸ்டோர் தரமா... சென்னை தங்கமா? மும்பை தங்கமா? இல்ல சிங்கப்பூர் சரக்கா? கஸ்டம்ஸ் கஷ்லமெல்லாம் இல்லாம எப்படிப்பா இந்த தங்கம் பரந்து வருது?

ஆமா! அதென்ன மோதிர சைஸ் எல்லாம் மீடியம் சைஸ்லயே வருது.. லார்ஜ், ஸ்மால் எல்லாம் புரொடக்சன்-ல இல்லயோ? துரைமுருகன் கேட்டதால தப்பிச்சாரு... இதுவே கலைஞர் பேரன் எனக்கு ஒரு மோதிரம் குடுங்கன்னு கேட்டிருந்தா... என்ன செஞ்சிருப்பாரோ? பணக்காரன் பதவிக்காரன்-க்கு மட்டும் தங்க செயின். மத்தவன் கேட்டா பிரயோஜனத்துக்கு இல்லாத விபூதியைத் தர்றாரு.

இப்படிதான் ஒருதடவை பி.வி.நரசிம்மராவ்-னு ஒரு பிரதமர் இருந்தாரே (ஞாபகம் வருதா?) அவர் கலந்துக்கிட்ட ஒரு விழாவில ஒரு பிரமுகருக்கு தங்க செயினை திடீர்னு வரவச்சுக் கொடுத்தாரு. அதை படமெடுத்த டிடி தொலைக்காட்சி கேமராமேன் திரும்பப் போட்டுப்பார்த்தா, மனிசன் வெறுகையால செயினு கொடுக்கிற லட்சணம் தெரியுது.... அதை நீங்களும் இங்க பாருங்க! இந்த மாதிரி தான் துரைமுருகனுக்கும், தயாநிதி மாறனுக்கும் மோதிரம் கொடுத்தது..(இந்த மோதிரம் இந்த வருசத்து இன்கம் டாக்ஸ் கணக்கில வருமா மத்திய அமைச்சர் சார்?)

இப்படி சின்னப்புள்ளத்தனமா, ரொம்ப சாதாரண மேஜிக் கத்துக்கிறவன் கூட நல்லாச் செய்வான் போல, அந்தளவுக்கு கேவலமா செய்யிற வித்தைக்கே இவ்வளவு இளிச்சவாய்க்கூட்டம், பாராட்டு, பணம், பவிசு, பாதுகாப்புன்னா பி.சி.சர்க்காரெல்லாம் சாமியார் வேஷம் போட்டா, இந்தியாவையே கொண்டு வந்து அடகு வச்சிடுவாங்க போலிருக்கே!

சரி, சரி இப்போததக்கு அந்த சிக்கல் இல்ல... சாய்பாபாவோட சின்னப்புள்ள விளையாட்டுக்கள்..... like விபூதி கொடுக்கிறது, லிங்கம் கக்குறேங்கிற பேரில காமெடி பண்றது... இதையெல்லாம் பார்க்க ரெண்டு ரூபா! ரெண்டு ரூபா! ரெண்டு ரூபா! சார்........!!

முக்கிய டிஸ்கி : இந்த பதிவால் யார் மனதாவது புண்படுகிறது என்று ஒரே ஒரு பிண்னூட்டம் வந்தால் கூட பதிவை நீக்குவது பற்றி யோசிப்பேன்...

Comments

அடப்பாவி 'சாமி'யையும் விட்டுவைக்க மாட்டீரா ?
:)
//இந்திய வாய்க்காலை அறிவியலை நோக்கித் திருப்பிக்கிட்டிருக்கிற தயாநிதி மாறன் என்னடான்னா, எனக்குதான் 'முதல் மரியாதை'... அவருக்கு 'அடுத்த மரியாதை'ன்னு உரிமை கொண்டாடுறாரு!
//
ஹா ஹா ஹா கலக்கல்
அப்படியே புதுப் படத்துக்கு முதல் நாள் ஷோவுக்கு ரெண்டு டிக்கெட் கிடைக்குமான்னு கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன்.

:))
அவருக்கு விருப்பப்பட்டதை கொடுப்பாரா? அல்லது நாம் விரும்பிக் கேட்பதையும் (கைக்குள் அடங்கும் சைஸில் இருப்பதையே கூட) கொடுப்பாரா?
இரு நூறு கோடி கொடுத்தவரை இப்படி இரண்டு ரூபாய்க்காக மானாவாரியாக வாருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

உங்களுக்கு சாயிபாபா செலவில் சூனியம் வைக்கப்படும் என்பதையும் இந்தச் சமயத்தில் சொல்லிக்கொள்கிறேன்.
//வெறுங்கையை நீட்டினால் மோதிரம் வருதுன்னா, சாய்பாபாவை அரசுடமையாக்கி வெறுங்கையை விசுக் விசுக்குன்னு நீட்டச் சொல்லி தங்கம் வரவழச்சு, இந்தியப் பொருளாதாரத்தை வளர்த்து, இந்தியா வாங்குன கடனை எல்லாம் அடைச்சு, அப்துல் கலாம் போறதுக்குள்ள வல்லரசாக்கிட வேணாமா? அரசுடமையாக்கலைன்னாலும் குறைந்தபட்சம் சன் குழும உடமையாகவாவது ஆக்கி, குங்குமம் 'பெஸ்ட் கண்ணா பெஸ்ட்'-ல சாக்லெட், முட்டாயி, எவர்சில்வர் டம்ளரெல்லாம் குடுக்கிறதுக்கு பதிலா... வாரம் 7 தங்க மோதிரம் பரிசுன்னு விளம்பரம் பண்ணவாவது ஏற்பாடு பண்ண வேண்டாமா?//

இது மேட்டரு...அப்படியே காலர ஏத்திக்குங்க ரவிஜி...

சென்ஷி
விளம்பரம்?

//படமெடுத்த டிடி தொலைக்காட்சி கேமராமேன் திரும்பப் போட்டுப்பார்த்தா, மனிசன் வெறுகையால செயினு கொடுக்கிற லட்சணம் தெரியுது.... அதை நீங்களும் இங்க பாருங்க! //

எங்க?
David blaine, criss angel எல்லாம் இந்தியா வந்தா கடவுளாகிடலாங்கறீங்க அவங்க வித்தை காட்டி காசு சம்பாதிக்கறாங்க? இவர் என்ன பண்ணறார் ??!!!!
////அடப்பாவி 'சாமி'யையும் விட்டுவைக்க மாட்டீரா ?////

சாமிகிட்ட நாங்க ஏன் போறோம் ? ஆசாமிகிட்ட தானே போனோம் :)))
பின்னூட்டத்துக்கு நன்றி குழலி !!!
////அப்படியே புதுப் படத்துக்கு முதல் நாள் ஷோவுக்கு ரெண்டு டிக்கெட் கிடைக்குமான்னு கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன்.////

நமக்கு சூனியம் வெக்க போக்கிரி படத்துக்கோ / வல்லவன் படத்துக்கோ / வீராசாமி படத்துக்கு டிக்கெட் வாங்கி கொடுத்திட போறாரு...
////அவருக்கு விருப்பப்பட்டதை கொடுப்பாரா? அல்லது நாம் விரும்பிக் கேட்பதையும் (கைக்குள் அடங்கும் சைஸில் இருப்பதையே கூட) கொடுப்பாரா?////

ரோலக்ஸ் வாட்சு ஏதும் கேக்குற ஐடியா இருக்கா ? அதெல்லாம் முன்னாடியே சொல்லிருக்க...அப்படியே சொன்னாலும் ஆந்திராவில் தயாரான போலி ரோலக்ஸ்தான் கிடைக்கும்..
இதுங்கள மாதிரி புத்தி மந்தமாகி ஒரு கோமாளிய சுத்திசுத்தி வர்ரதும் ஒரு வகையில் வேறு ஒருசிலருக்கு நன்மைதான். அந்த நேரத்திலயாவது தப்பு தண்டா செய்யாமா, மத்தவங்களுக்கு குறிப்பா ஏழை எளியவங்களுக்கு எந்த தொந்தரவும் செய்யாம இருக்கறதும் நல்லதுதான். நமக்கு வயிறு வ்லிக்க சிரிக்க சில சந்தர்ப்பங்கள். ஏனய்யா எப்பவும் கெட்ட கண்ணோட பாக்கறீங்க? போனா போவுது உட்டுடுங்க அநத நாதாரிய. எல்லாம் டைம் வேஸ்ட்!

"ஒரு காச்சி ரெண்டே ரூவாதான்.
போனா வராது, பொளுது போனா தங்காது!
இந்தா புடிச்சிக்க!"
//இது மேட்டரு...அப்படியே காலர ஏத்திக்குங்க ரவிஜி...

சென்ஷி ///

என்னங்க என்னை குருஜி அளவுக்கு ஆக்கிப்புட்டீங்க ? நான் எழுதினதில்லை சாமி இந்த கட்டுரை !!!
/////உங்களுக்கு சாயிபாபா செலவில் சூனியம் வைக்கப்படும் என்பதையும் இந்தச் சமயத்தில் சொல்லிக்கொள்கிறேன். ////

ஏயப்பா !!! இந்த வம்புல நான் மாட்டலை..அந்தாள் சூனியத்தை ஆட்டோவிலயோ இல்லை டாட்டா சுமோவிலயோதான் அனுப்புவார்...நான் தாங்கமாட்டேஞ்சாமி. பிஞ்சு உடம்பு ஹி ஹி :)))))
//படமெடுத்த டிடி தொலைக்காட்சி கேமராமேன் திரும்பப் போட்டுப்பார்த்தா, மனிசன் வெறுகையால செயினு கொடுக்கிற லட்சணம் தெரியுது.... அதை நீங்களும் இங்க பாருங்க! //

எங்க? //

இப்போ போட்டாச்சு பாருங்க...லிங்க் வீடியோவுக்கு போகும்....!!!!
Anonymous said…
http://home.hetnet.nl/~ex-baba/engels/movies.html

அள்ள அள்ள கிடைக்குமுங்கோ...

ஆனா அதுக்காக இவர் செய்யற நல்லவேலைகளை குறை சொல்லாதீங்க.

ஆள் தவறா இருந்தாலும் பின்பற்றுவோர்களின் 95% உண்மையில் கடவுளுக்கு பயந்தும், நன்மை செய்தால் நன்மை விளையும் என்று தொடர்பவர்கள். திருந்தி வாழ்பவர்களும் பலர். பல ஆயிரம் பேர் நல்லா இருக்க காரணமா இருக்கார். இருந்துட்டு போகட்டும்.

--பக்தனல்லாத ஆத்திகன் --
///மத்தவங்களுக்கு குறிப்பா ஏழை எளியவங்களுக்கு எந்த தொந்தரவும் செய்யாம இருக்கறதும் நல்லதுதான். //

தப்பு மாசிலா...பலருக்கு பாலியல் தொந்தரவு உட்பட பல தொந்தரவுகள்...யாழிசைச்செல்வன் லிங்ல உள்ள இணையதளத்தை பாருங்க...
பாபா பெத்த சாமினா ஏன் சில்லறைத்தனமா மோதிரம் செயின் எடுத்து தரணும். ஒரு டாடா சுமோ, இல்லை 21 இஞ்ச் கலர் டீவி எடுத்து தரலாம்ல. இல்லை துப்பாக்கி, பீரங்கினு எடுத்து தந்தா ராணுவத்துக்காவது உதவும்ல.

அப்பிடி எடுத்து தரச்சொல்லுங்க. நாங்களும் ஆகிடறோம் பக்தர்களாக :-)
///David blaine, criss angel எல்லாம் இந்தியா வந்தா கடவுளாகிடலாங்கறீங்க அவங்க வித்தை காட்டி காசு சம்பாதிக்கறாங்க? இவர் என்ன பண்ணறார் ??!!!! ///

ஆமாம்.....நான் கூட பிசி.சர்க்கார் டீவோட்டீன்னு ஒரு வெப் தளம் ஆரம்பிச்சு அவருடைய அருமை பெருமைகளை சொல்லி மாதம் 800 கோடி சம்பாதிக்கலாம்னு இருக்கேன்...

ஆசிரமத்துக்கு ஐ.டி குழு தலைவர் தேடும்போது உங்களை அதில் உட்கார வைக்க ஆசை....இப்போ இருக்க வேலையை ரிசைன் செஞ்சுட்டு வந்திருங்க ஓக்கே !!!!
ஜெய்ப்பூர் செயற்கைக் கால்கள் எடைமிகுந்ததாய் இருப்பதால் ஊனமுற்றவர்கள் படும் அவதியை விஞ்ஞானிஅப்துல்கலாம் எடைகுறைந்த செயற்கைக் கால்களைக் கண்டுபிடித்துத் தீர்த்தார்.

அப்துல்கலாம் ஒரு முட்டாள்.

நம்மூர் சென்னை மெரீனாகடற்கரை சீரணி அரங்கில் நடக்கும் "அற்புத சுகமளிக்கும் சுவிசேஷக் கூட்டத்தில்" பங்கேற்கும் முடவர்கள் நடக்கின்றார்கள், செவிடர்கள் கேட்கிறார்கள்,
குருடர்கள் பார்க்கின்றார்கள்.. பெங்களூருவில் அமெரிக்காவில் இருந்து வந்து பாதிரிமார்கள் சென்ற ஆண்டு இப்படி பெரிய அளவில் அற்புத சுகமளிக்கும் கூட்டம் நடத்தினார்கள். நீங்களும் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

இந்த அற்புத சுகமளிப்புக்கூட்டத்தில் டிவிகேமெராவில் பார்க்கவேண்டிய சிரமமும் இருக்காது நேரிலேயே தியேட்டர் ஆர்டிஸ்டுகள் முட,செவிட்டு,குருட்டுப் பாத்திர நடிப்பில் பின்னுவார்கள் :-)))

இந்த சுவிசேஷ மேஜிக் பார்க்க ரெண்டு ரூபாய் கூட டிக்கெட் இல்லை அல்லேலூயா.. அல்லேலூயா என ரெண்டுதரம் சொன்னால் போதும்:-))

இதுபற்றியும் ஒரு பதிவிட அன்புடன் கோரிக்கை ரவியிடம் வைக்கிறேன்:-))
நகைச்சுவை மதம் தாண்டியதுதானே!
உண்மைதான் ஹரிஹரன்...

அதிலும் இந்த டி.ஜி.எஸ்.தினகரன் என்று ஒரு அல்லேலூயா குடும்பம் இருக்குது பாருங்க...அவன்க செய்யற அழிச்சாட்டியம் தாங்கமுடியாது...டி.வியில ஸ்லாட்டை வாங்கிக்கிட்டு, கண்ணைமூடி பிராத்தனை செய்தே கோடிக்கணக்கில் குவிச்சு, காருண்யா கல்வி நிறுவனங்களை ஆரம்பிச்சு அமவுண்டு குவிக்கிறானுங்க...

இவனுங்க ப்ராத்தனை செஞ்சு இதுவரை எந்த முடவனும் நடந்ததா சரித்திரமே கிடையாது...அவ்வளவும் நடிப்பு...

இந்த பதிவு ஒரு விளம்பர பதிவு ஹரி...நீங்க இந்த விஷயம் பற்றி பதிவு போட்ட சூப்பரா இருக்கும்...செய்வீர்களா ?
Anonymous said…
இந்த பதிவு ஒரு விளம்பர பதிவு ஹரி...நீங்க இந்த விஷயம் பற்றி பதிவு போட்ட சூப்பரா இருக்கும்...செய்வீர்களா ?////வேண்டாம். இதை அவர் செய்தார் எனில் பார்ப்பன வெறியர் என்று பாய்வார்கள். நீங்கள் நடுநிலைமையுடன் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. நீங்கள் இதை சற்று விவரமாக எழுதுங்கள் இரவி.

--பக்தனில்லாத ஆத்திகந்-
//நீங்க இந்த விஷயம் பற்றி பதிவு போட்ட சூப்பரா இருக்கும்...செய்வீர்களா ? //


ரவி,

எவ்ளோ அடிச்சாலும் நான் தாங்குவேன்னு நம்புற உங்க நம்பிக்கையைக் காப்பாற்ற முயற்சிக்கிறேன் :-))
G.Ragavan said…
நல்ல காமெடிதான் போங்க. எல்லா அரசியல்வாதிங்களும் இவ்வளவுதாங்க. இதத்தான் நான் தேர்தல் சமயத்துல இருந்து சொல்றேன். யாரும் கேக்கலை. என்ன செய்ய...எல்லாரும் நல்லா சாப்புடுறாங்கப்பா. சாய்பாபா கருணாநிதி ஏதோ பொதுத் திட்டம் வெச்சிருக்காங்க. அதான் கூடிப் பேசியிருக்காங்க. மத்திய அமைச்சரும் மாநில அமைச்சரும் இலவச விளம்பரம் குடுக்குறாங்க. சீச்சீ.

ஹரிஹரன் எடுத்துக் குடுத்தாரே தினகரன். அவரும் ஒன்னும் கொறைஞ்சவர் இல்லைங்க. இங்க இந்து மதம்னா...அங்க கிருத்துவ மதம். அவ்வளவுதான். என்னைக் கேட்டா ஹரிஹரனை விட நீங்கதான் அவரைப் பத்திச் சொல்லவும் சரியான ஆள். ஹரிஹரனோட நான் பல கருத்துகள்ள ஒத்துப் போகாட்டியும் ஹரிஹரன் தினகரனைப் பத்தி எழுதுனா..அது சரியா எடுபடாது. திசை மாறும். நீங்களோ லக்கியோ எழுதுனா சரியா இருக்குங்குறது என் கருத்து. தினகரன் காஞ்சி சங்கராச்சாரியாரைப் பாத்துப் பேசுறாராம். வெள்ளிப் பூஜைப் பாத்திரங்கள் எல்லாம் பரிசாக் குடுத்திருக்காராம். எப்பயோ படிச்சது.
பார்த்தேன் ரசித்தேன்

அந்த இரண்டு ரூபாய மணியார்டர்ல அனுப்பியிருக்கேன். கிடைச்சதும் மறக்காம அக்னாலட்ஜ் அனுப்பிடுங்க..
நிங்க சொன்னது எல்லாம் உண்மை.

நல்ல பதிவு .

இவுங்க எல்லாரையும் நிக்க வச்சு சுடனுங்கிறேன்.
தங்கம் வரவழைச்சி இந்திய பொருளாதாரம் உயர்த்துவது இருக்கட்டும்.மொதல்ல தள்ளுவண்டியில போறவரு தன் காலை சரிசெஞ்சிக்கட்டுமே.
தி.மு.க தலைமை பாபாவை பார்த்ததுகூட பெரிசில்லை பகுத்தறிவு சிங்கத்தின் வீட்டிலேயே மோதிரம் வரவழைத்த மோடி மஸ்தன் வேலைதான் சூப்பரோ சூப்பர்
ஜோ / Joe said…
ராகவன்,
தினகரன் பத்தி நான் எழுதுனா ஒத்துக்க மாட்டீங்களோ? ஹி..ஹி..சும்மா தமாசு.. தினகரன் காமெடியை நானும் நேருல ஒரு தடவை பாத்திருக்கேன்.
காச்சி செம சூடு புடிச்சிடுது போல இருக்கு. அதுக்குள்ள இம்மாங்கூட்டமா? அம்மாடியோவ்! அப்ப ரேட்ட கொஞ்சம் ஏத்து சாமி. காத்துள்ள் போதே தூத்திக்க! இனனா பிரிஞ்சிதா?

அப்புறம் //யாழிசைச்செல்வன் லிங்ல உள்ள இணையதளத்தை பாருங்க// எங்க ஐயா அந்த லிங்க். கொஞ்சம் தேடி புடிச்சி குடுங்களேன்.
நன்றி.
ஒங்காச்சிக்கி போட்டா போட்டியா இன்னொருத்தன் புதுசா ஒரு காச்சி உட்டுக்கிறான் கவனிச்சியாபா?
ஜாக்கிரதை ஒம்பொழப்பு கெட்ற போவுது.
ஒருத்தவன் நல்லா இருக்கிறதே பிடிக்காதே அந்த நாதரிங்களுக்கு.
ஜென்ம புத்தி.
சரியான் சுழி!
// பணக்காரன் பதவிக்காரன்-க்கு மட்டும் தங்க செயின். மத்தவன் கேட்டா பிரயோஜனத்துக்கு இல்லாத விபூதியைத் தர்றாரு//

கேட்டீங்களே சூப்பர் கேள்வி. செம காமெடி ஷோங்க உங்களோடது. அப்புடியே அடுத்த தடவை பசிக்கற பக்தருக்கு மசால் ரோஸ்ட் வர வழைக்க சொல்லுங்க. மாஜிக் ஷோ சூப்பரா இருக்கும். :)))))))
சோமி said…
தமிழ் நாடு அரசு விலைவில் ஒரு அறிவிப்பு விடப் போகுதாம்.இலவசத் திட்டங்களுக்கு இனி மத்திய அரசிடம் பணத்திற்கு கையேந்தப் போவதில்லை இனி அவற்ரை பாபா பார்த்துகொள்ளுவார்.துரை முருகன் தலமையில் இதுக்கு ஒரு குழு நியமிக்கப்படவுள்ளது.......இப்பிடி ஒரு நண்பர் போன்போட்டுச் சொன்னார்.
ஊண்மையாவா........????????????.
G.Ragavan said…
// ஜோ / Joe said...
ராகவன்,
தினகரன் பத்தி நான் எழுதுனா ஒத்துக்க மாட்டீங்களோ? ஹி..ஹி..சும்மா தமாசு.. தினகரன் காமெடியை நானும் நேருல ஒரு தடவை பாத்திருக்கேன். //

தாராளமா எழுதலாம். நான் தமாசுக்குச் சொல்லலை. உண்மையாவே சொல்றேன். நீங்க இதப் பத்தி ஏற்கனவே எங்கயோ எழுதீருந்தீங்களே. படிச்ச நெனவு இருக்கு.
அழகு said…
துரைமுருகன் மாதிரியே இளிச்சவாய நண்பன் ஒருவன் எனக்கிருந்தான்.

ஒருநாள் எங்கள் தெருவிலுள்ள தர்ஹாவில் ஒரு பெண் சாமியாடிக் கொண்டிருப்பதாகவும் அவள் வானத்திலிருந்து(!) பலவிதப் பொருட்களை வரவழைத்து(!)க் கொடுப்பதாகவும் சொல்லி என்னை அங்கு அழைத்துச் சென்றான்.

சாமி மும்முரமாய் ஆடிக் கொண்டிருந்தது!

பக்கத்திலேயே ஊசி, ஆணி, (ஜாக்கெட்?) பட்டன் போன்ற பல சிறு பொருட்கள் சிதறிக் கிடந்தன.

"ஊம் ... கேளு ... யாருக்கு என்ன வேணும்?"

"பாத்தியா? இதெல்லாம் பொய்யின்னு சொல்லிட்டிருந்தியே! கேளுடா ... உனக்கு என்ன வேணும்?"

"இது கிழிஞ்சி போச்சு. புதுசு வேணும். தரலேன்னா ஒன்னயும் சாமியயும் சேர்த்துக் கிழிச்சுடுவேன்"

என் கையில் வாய்க்கட்டு விட்டுப்போன வாலிபால்.

திகைத்துப் போன சாமியின் மடியை ஒரு துணிச்சலான பெண்ணை வைத்துச் சோதனை போட்டு, எதிர்கால வானச் சமாச்சாரங்களை வெளிப் படுத்தி, அவளையும் கூட இருந்த அவள் புருஷனையும் எச்சரித்து, ஊரை விட்டுத் துரத்திதிலிருந்து தொடங்கியது மூடநம்பிக்கை ஒழிப்புப் போராட்டம் -‍ என் நண்பனுக்கு.
ஊருக்கெல்லாம் குல்லா போடுற சாய்பாபாவுக்கே குல்லா போட்ட டாக்டர் கலைஞர் வாழ்க!!!!
G.Ragavan said…
// அனுசுயா said...
// பணக்காரன் பதவிக்காரன்-க்கு மட்டும் தங்க செயின். மத்தவன் கேட்டா பிரயோஜனத்துக்கு இல்லாத விபூதியைத் தர்றாரு//

கேட்டீங்களே சூப்பர் கேள்வி. செம காமெடி ஷோங்க உங்களோடது. அப்புடியே அடுத்த தடவை பசிக்கற பக்தருக்கு மசால் ரோஸ்ட் வர வழைக்க சொல்லுங்க. மாஜிக் ஷோ சூப்பரா இருக்கும். :))))))) //

எனக்கு மட்டன் பிரியாணி + சிக்கன் 65. தயிர்ப்பச்சடி கண்டிப்பா இருக்கனும்.
திரு said…
ரவி,

சாய்பாபாவை எல்லா ஏழைநாடுகளுக்கும் அனுப்பி ஆளுக்கு ஒரு தங்க லிங்கம் அல்லது மோதிரம் அல்லது செயின் எடுத்து தரச்சொல்லலாம். நம்ம நாட்டு கல்லாவை தங்கத்தால நிறைக்க சொல்லலாம். கண்சிமிட்டும் நேரத்தில் 'அற்புதம்' நிகழ்த்தும் இந்த மாஜிக் மன்னன் கைக்கு அடங்காத பொருளை வரவழைத்து தரட்டுமே!

தினகரன் வகையறாக்களை அனுப்பி நோயை குணமாக்க அனுப்பலாம். இனி மருத்துவர்கள், மருத்துவமனையெல்லாம் அவசியமில்லையோ?

நல்ல கேள்விகள் கொண்ட பதிவு ரவி!
சேட்டா, எனிக்கி ரெண்டு கட்டஞ்சாயா..
ஏய் என்னப்பா ரேட்டோட ஓட்டல் மாதிரி ஆக்கிட்டீங்க என்னோட பதிவை...
//ஹரிஹரன் எடுத்துக் குடுத்தாரே தினகரன். அவரும் ஒன்னும் கொறைஞ்சவர் இல்லைங்க. இங்க இந்து மதம்னா...அங்க கிருத்துவ மதம். அவ்வளவுதான். என்னைக் கேட்டா ஹரிஹரனை விட நீங்கதான் அவரைப் பத்திச் சொல்லவும் சரியான ஆள். ஹரிஹரனோட நான் பல கருத்துகள்ள ஒத்துப் போகாட்டியும் ஹரிஹரன் தினகரனைப் பத்தி எழுதுனா..அது சரியா எடுபடாது. திசை மாறும். நீங்களோ லக்கியோ எழுதுனா சரியா இருக்குங்குறது என் கருத்து. தினகரன் காஞ்சி சங்கராச்சாரியாரைப் பாத்துப் பேசுறாராம். வெள்ளிப் பூஜைப் பாத்திரங்கள் எல்லாம் பரிசாக் குடுத்திருக்காராம். எப்பயோ படிச்சது//

அய்யோ பாவம் அப்பாவி ராகவன் , இப்போ ரவி கொஞ்சம் பிஸி , பொறுங்க , ஒரு 48 வருசம் கழிச்சு எழுதுவாரு கிருத்துவ பிராடுகளை பத்தி .
G.Ragavan said…
// லக்கிலுக் said...
ஊருக்கெல்லாம் குல்லா போடுற சாய்பாபாவுக்கே குல்லா போட்ட டாக்டர் கலைஞர் வாழ்க!!!! //

ஆனாலும் ஒங்களுக்கு இவ்வளவு நகைச்சுவை உணர்ச்சி கூடாதுங்க. ஹா ஹா ஹா...பாம்பைப் பாம்பெனப் பாம்பறிந்துத் தாம்பெனத் தாம் பொய்த்த நிகழ்ச்சிதான் இது.
Anonymous said…
//லக்கிலுக் said...
ஊருக்கெல்லாம் குல்லா போடுற சாய்பாபாவுக்கே குல்லா போட்ட டாக்டர் கலைஞர் வாழ்க!!!!//

மாமன் மகள் படத்துல சத்தியராஜ் தேர்தலில் ஜெயித்த பிறகு ஒரு தொண்டன் கவுண்டமணியிடம் வந்து தலைவரு தொகுதிக்கு என்னங்க பண்ணுவாருனு கேப்பான். அப்போ கவுண்டமணி ஒரு நீண்ண்ண்ண்ண்ட டயலாக் உடுவாரு. அதுல ...கை வேலை என்னனு சொல்லுவாரு . அதை உண்மையிலேயே லக்கிலுக் பின்பற்றாருப்பா. இவரு ரொம்ப நல்லவரு.
Anonymous said…
என்னடா எல்.ஜி HR department க்கு வேலை நேரத்தில் மத சண்டை போடறேன்னு கடுதாசி அனுப்பனுமா.
நான் உள்ளே போகவில்லை என்றால்,
தமிழ்நாட்டுக்கு கங்கையையே கொண்டு வந்திருப்பேன். நான் இருக்கிற வேண்டிய இடத்தில் இப்பொழுது புட்டபர்த்தி. பாருங்க இன்னும் 20 வருசத்தில் என் இரட்டை ஆயுள் தண்டனை முடிந்துவிடும். இமயமலையிலிருந்து பிரம்மபுத்திராவையையே தமிழ்நாட்டுக் குள்ள கொண்டு வருகிறேன். ஜெயிலில் அந்த வித்தையைத் தான் கற்றுக் கொண்டிருக்கிறேன்

ஓம் மகா சக்தி !
வாழ்த்துக்கள் ரவி! கலக்குங்க!!
Anonymous said…
உனக்கு ஆப்பு அடிச்சா தான் சரியா வரும்
அய்.....ஷோ நல்லா ஜோரா கீதுபா.
பாபா டங்குவாறு கிழிகிழின்னு கிழியுதுபா!
நான் அப்பவே சொனேன்ல? இந்த மாரி கேணைங்கை ஒன்னு ரெண்ட கைவசமா ரெடியா வெச்சிருக்குனும்னு. போரடிக்கிற சமயத்தல எடுத்து உட்டு பட்டைய கெளப்பி சும்மா ஜோரா சூட்டல குளிர் காய்லாம்ல. இவனுங்கல அழிக்கவே உடக்கூடாதுபா. அழிக்கிற மேரி நடிக்கனும். இன்னொரு பக்கம் நல்லா கிர்ரு ஏத்தி உட்டு வேடிக்கை பாக்கனும். மனசுக்கு என்னமா எதமா கீது தெரியுமா. ஒரே ஜாலிதான்.

மாசிலா!
சேவியர் said…
மேரி எப்படி கன்னியானாள்? கன்னியா இருந்தா எப்படி குழந்தை பொறக்கும்?
அழகு சொன்னதைப் போன்ற பெண்களால் இஸ்லாத்துக்கு இழுக்கு என்று முஸ்லீம்களும்,
தினகரன் போன்றவர்களால் கிறிஸ்துவத்துக்கு இழுக்கு என்று கிறிஸ்தவர்களும்,
புட்டபர்த்தி சாய்பாபாவால் இந்து மதத்துக்கு இழுக்கு என்று இந்துக்களும்,
மக்கள் மத்தியில் சொல்லி, இந்த இழிவுகளை கண்டிக்க முன் வர வேண்டும்.

முஸ்லீம்களில் நாங்கள் ரெடி, கிறிஸ்தவர்களில் ஜோ முதலானோர் ரெடி எனத் தோன்றுகிறது.
ஹரிஹரன் பகுதியில் எப்படி?
இந்தியாவிலேயே இந்த பம்பத் தலையன் பாபாவுக்கும் ஆரெஸ்ஸெஸ் கும்பலுக்கும் தான் மிக அதிகமாக அந்நியச் செலாவணி நிதியம் வந்து குவியிதுன்னு அஞ்சு வருசமாவே இணையத்தில புள்ளிவெவரம் போட்டுக்கிட்டிருக்காங்க.

நரசிம்மராவ் பிரதமரா இருந்தபோதும், வாஜபேயி பிரதமரா இருந்த போதும் இவர ந்நெரில போயி பலமுறை பாபா ஆசிரம விழாக்கள்ள கலந்துக்கிட்டிருக்காங்க.

இப்பம் இவருக்கும் பிஜேபி கும்பல் ஆதரவ விடவும் யுபிஏ ஆதரவு தேவை போல! அதான் இந்தப்பக்கம் வந்து இழைகிறார்!.
(அந்த விழாவில 'அடுத்த மதத்துக்காரங்கள வெறுக்காதிங்கன்னு பாபா பேசினதப் பாத்து அரை டவுசர் கும்பலுக்கு BP எகிறியிருக்கும்!! ;))))

இந்தியாவில் பார்ப்பனீய அதிகார மையங்களை உடைத்துநொறுக்கும் வரை பாபா போன்றவர்களின் மாஜிக்குகள் தொடரும்.
இப்படியெல்லாம் எழுதினா அடுத்த மேஜிக்ல மோதிரம் வராது, அருவாள்தான் வரும்.

- சோன்பப்டி தலையன் சாய்பாபா ரசிகன்
G.Ragavan said…
// சுல்தான் said...
அழகு சொன்னதைப் போன்ற பெண்களால் இஸ்லாத்துக்கு இழுக்கு என்று முஸ்லீம்களும்,
தினகரன் போன்றவர்களால் கிறிஸ்துவத்துக்கு இழுக்கு என்று கிறிஸ்தவர்களும்,
புட்டபர்த்தி சாய்பாபாவால் இந்து மதத்துக்கு இழுக்கு என்று இந்துக்களும்,
மக்கள் மத்தியில் சொல்லி, இந்த இழிவுகளை கண்டிக்க முன் வர வேண்டும்.

முஸ்லீம்களில் நாங்கள் ரெடி, கிறிஸ்தவர்களில் ஜோ முதலானோர் ரெடி எனத் தோன்றுகிறது.
ஹரிஹரன் பகுதியில் எப்படி? //

என்னது இது...என்னையெல்லாம் கணக்குல சேக்கலையா? இந்தப் பதிவுலயே பாருங்க. கோவி இருக்காக...அனுசுயா இருக்காக...சிபி இருக்காக...மற்றும் நம் உறவினர்கள் எல்லாம் இருக்காக....நீங்க ஹரிஹரந்தான் வேணும்னா எப்படி? சரியாயில்லையே! :-(
Anonymous said…
//முஸ்லீம்களில் நாங்கள் ரெடி, கிறிஸ்தவர்களில் ஜோ முதலானோர் ரெடி எனத் தோன்றுகிறது.
ஹரிஹரன் பகுதியில் எப்படி?//

இந்த பாப மாதிரி செப்படிவித்தை, ஹதிஸு அப்படினு ஒருத்தர் பண்ணாரு..

அவர முஸ்லீம்கள் ஒதுக்க தயாரா?...
Anonymous said…
//என்னடா எல்.ஜி HR department க்கு வேலை நேரத்தில் மத சண்டை போடறேன்னு கடுதாசி அனுப்பனுமா.//

ஏண்டா டெலிலாஜிக்குக்கு கடுதாசி அனுப்பனுமா முண்டகலப்பை?
1.மதங்கள் அனைத்தும் சர்க்கஸ் கூடாரங்கள் என்பது இந்த சாமியார்களின் தெய்வீக மேஜிக்களில் இருந்து தெரிகிறது.

2.பாபா-முதல்வர் சந்திப்பு கோட்டையில் நடந்து இருக்கலாம். முதல்வரைச் சொல்லி குற்றம் இல்லை. பகுத்தறிவுக் கொள்கைகளை வீட்டிலோ/கட்சிக்காரர்களிடமோ அமல்படுத்துவது முடியாத காரியம். யாரும் சுயமாகத் திருந்தினால்தான் உண்டு.

பாபா உண்மையில் கில்லாடிதான்.இவரது அருள் இல்லையென்றால் பகுத்தறிவுப் பாசறைகளில் வசித்து வரும் மந்திரிகளின் மேஜிக்-மோதிர பக்தி சமாச்சாரங்களும் வெளியில் வந்து இருக்காது.

3.மத்திய அமைச்சரும்,மாநிலத்தில் உள்ள முக்கிய அமைச்சரும் மேஜிக் மோதிரம் வாங்கிக் கொள்வது காட்டுமிராண்டித்தனம் இல்லை.அரசியல் என்று வரும்போது பகுத்து அறியும் அறிவு இளைப்பாறச் சென்றுவிடும்.அதன் பெயர் சாணக்கியத்தனம். முதல்வர் கொஞ்சம் கண்டித்து இருக்கலாம்.

4.ஏற்கனவே அமைச்சர் அன்புமணி, "யோகா எல்லாத்தையும் குணமாக்கும்" என்பது போன்ற அல்டாப்பு விளம்பரங்களுக்கு ஆப்பு வைக்க ஆரம்பித்துவிட்டார்(பார்க்க 1*).இந்த சமயத்தில் இந்த மேஜிக் வியபாரம் நல்ல முறையில் நடக்கவும் மத்திய அரசின் ஆதரவு தேவை.அதன் கடிவாளம் கோபாலபுரத்தில் உள்ளது.பாபா ஒருவேளை அதற்காக போயிருக்கலாம்.அல்லது வருமானவரி சம்பந்தமான ஏதாவது ?? யார் கண்டார்

5.பாபா முதல்வரைப் பார்ப்பது இருக்கட்டும். டி.ஜி.எஸ் தினரகரன் அவரின் குணமாக்கும் விளம்பரத்தை நிறுத்தாவிடில் அவரே தைலாபுரத் தைலம் வேண்டி காவடி தூக்க நேரலாம்.

6.அரசியலும் ஆன்மிகமும் பிரிக்கமுடியாதவை. win-win situation என்றால் யாரும் யாரையும் பார்க்கத் தயங்கமாட்டார்கள்.

மக்கள்ஸ்???

மக்கள் எல்லாம் ஆழ்(ள்)வார்களை அண்ணாந்து பாத்துக்கொண்டே 'போக்கிரி'யாய் அலைய வேண்டியதுதான்.

1*
http://timesofindia.indiatimes.com/articleshow/1042084.cms

// After a 14-year-old boy with a heart ailment died on Wednesday at Baba Ramdev's camp, ....The death could lead to more trouble for Swami Ramdev, who has already been warned by Union health minister Anbumani Ramadoss to stop making tall claims about the powers of yoga to cure complicated diseases like AIDS, diabetes, asthma, migrate and even cancer.//
Anonymous said…
கருனாநிதி கொடுக்கு இலவசங்கள் எல்லாம் பாபாஜி வரவழைச்சு கொடுத்ததா?

உழைச்சு சம்பாதித்த விஜயகாந்த் வீட்டுக்கு ரைடு போனமாதிரி

சும்மா உட்காந்துகிட்டே உள்ளங்கையில் இவ்வளவு தங்கத்தை வச்சிருகாரே? இவர் வீட்டுக்கு ஒரு இன்கம்டாக்ஸ் ரைடு விடலாமே?

கருனாநிதி பழனிமாணிக்கத்துக்கிட்ட சொல்லி ஏற்பாடு செய்வாரா?
Anonymous said…
இவ்வளவு பேசுகின்ற எவராவது இந்தப் பதிவுகள் பக்கம் திரும்பியாவது பார்த்தீர்களா? நடத்துங்க. நடத்துங்க. நல்லா நடத்துங்க. வாழ்க வளமுடன்.

http://sathyasaivideos.blogspot.com/2007/01/blog-post_24.html

http://sathyasaivideos.blogspot.com/2007/01/blog-post_771.html

இவ்வளவு பேசற ஒருத்தராவது ஏன் இப்படி பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னும் அவரை தெய்வமா கும்புடறாங்கன்னு யோசிச்சிருக்கீங்களா?
ஒரு அனானி :
//இவ்வளவு பேசற ஒருத்தராவது ஏன் இப்படி பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னும் அவரை தெய்வமா கும்புடறாங்கன்னு யோசிச்சிருக்கீங்களா? //


இனம் இனத்தோடுதான் சேரும்பா!
Anonymous said…
//இனம் இனத்தோடுதான் சேரும்பா!
//

மாசிலா. உலகத்து மக்களெல்லாம் ஒரே இனம் அது மனித இனம் என்பதை காட்டுகிறார்கள சாயி பக்தர்கள். சாதி, மதம், இனம், நாடு என்ற எந்த வேற்றுமையும் பாராட்டாதவர்கள் சாயி பக்தர்கள். அதனை தானே சொல்கிறீர்கள்?

உங்களை போல் இல்லாத இன வேற்றுமைகளை ஊதி ஊதி பெரிதாக்கி மக்கள் நடுவில் பிளவுகளை உண்டாக்குவதில்லை.
//என்னது இது...என்னையெல்லாம் கணக்குல சேக்கலையா? இந்தப் பதிவுலயே பாருங்க. கோவி இருக்காக...அனுசுயா இருக்காக...சிபி இருக்காக...மற்றும் நம் உறவினர்கள் எல்லாம் இருக்காக....நீங்க ஹரிஹரந்தான் வேணும்னா எப்படி? சரியாயில்லையே! :-(//

நாம எல்லாம் சேர்நது சொல்ல வேண்டும். சரிதான்.
கோவி. மற்றும் உங்களையெல்லாம் சேர்க்காமல் ஹரிஹரன் பகுதிதான் வேணும்னது புரியல்லன்னா ஸாரி தான்.

//இந்த பாப மாதிரி செப்படிவித்தைஇ ஹதிஸு அப்படினு ஒருத்தர் பண்ணாரு..
அவர முஸ்லீம்கள் ஒதுக்க தயாரா?... //

யாரு? எப்படி? என்று கொஞ்சம் விபரமா சொன்னா தேவலை அனானி.
இப்பெல்லாம் ப்லேக்ல ஒரு டிக்கடு 50 ரூவா.
ஐய்யயோ, போலீஸு வருது.
ஜூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊட்!
மாசிலா, அனானியின் கேள்விக்கு பதில் அளியுங்க...!!!!
திரு said…
//மாசிலா. உலகத்து மக்களெல்லாம் ஒரே இனம் அது மனித இனம் என்பதை காட்டுகிறார்கள சாயி பக்தர்கள். சாதி, மதம், இனம், நாடு என்ற எந்த வேற்றுமையும் பாராட்டாதவர்கள் சாயி பக்தர்கள். அதனை தானே சொல்கிறீர்கள்?

உங்களை போல் இல்லாத இன வேற்றுமைகளை ஊதி ஊதி பெரிதாக்கி மக்கள் நடுவில் பிளவுகளை உண்டாக்குவதில்லை.

By Anonymous//

அப்ப என்ன வாங்க எல்லாரும். திருப்பதியில, காஞ்சியில எல்லாம் அர்ச்சகர் ஆவ உரிமை எடுப்போம். ரங்கநாதனை போய் தொட்டு பார்ப்போம். என்ன எல்லாரும் ஒண்ணு தானே! சாதி இல்லைன்னா அப்புறம் என்ன ஆகம் வேண்டியிருக்கு? சாயி பக்தர்கள் இதுக்கு உதவ ஊர்வலம் போலாமா?
Anonymous said…
//சாயி பக்தர்கள் இதுக்கு உதவ ஊர்வலம் போலாமா?
//

சாயிபாபாவை இந்துவாக மட்டுமே பார்க்கும் திரு.

கட்டாயம் சாயி பக்தர்கள் அதனை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். இந்து மதத்தில் இருப்பவர்கள் மட்டும் இல்லாமல் வேறு மதங்களில் இருப்பவர்களும் மதம், மொழி, நாடு, இனம் என்ற வேறுபாடுகளையெல்லாம் கடந்து தான் வாழ்கிறார்கள். திட்டி திட்டி செய்ய முடியாததை அன்பின் வழியில் நன்கு செய்ய முடியும் என்பதற்கு வாழும் எடுத்துக்காட்டு சாயிபாபாவும் சாயி பக்தர்களும்.
//மாசிலா. உலகத்து மக்களெல்லாம் ஒரே இனம் அது மனித இனம் என்பதை காட்டுகிறார்கள சாயி பக்தர்கள். சாதி, மதம், இனம், நாடு என்ற எந்த வேற்றுமையும் பாராட்டாதவர்கள் சாயி பக்தர்கள். அதனை தானே சொல்கிறீர்கள்? //

ஆமாம்பா, நாங்க குனிய குனிய நீங்களும் அடிக்கற வரைக்கும் ஓச்சல் இல்லாம அடிப்பீங்க. நாங்களும் வாங்குற வறைக்கும் வாங்குவோம். அப்பல்லாம் இதுமாதிரி ஒரே இனம் ஒரெ குலம் அப்பிடீ இப்பிடீன்னு பேசமாட்டீங்க. ஆனா, பெறகு நாளடைவுல நாங்கெல்லாம் கொஞ்சம் முழிச்சிகினு எகுத்து ரெண்டு கேள்வி கேக்க ஆரம்பிச்சுதும் ஒடனே இப்பிடி ஏதாவத ஒளரி சமாளிக்க பாப்பீங்க. அந்த பப்பெல்லாம் இனி இங்கு வேவாது அனானியே.
Anonymous said…
//அப்ப என்ன வாங்க எல்லாரும். திருப்பதியில, காஞ்சியில எல்லாம் அர்ச்சகர் ஆவ உரிமை எடுப்போம். ரங்கநாதனை போய் தொட்டு பார்ப்போம். என்ன எல்லாரும் ஒண்ணு தானே! சாதி இல்லைன்னா அப்புறம் என்ன ஆகம் வேண்டியிருக்கு? சாயி பக்தர்கள் இதுக்கு உதவ ஊர்வலம் போலாமா?
//

சாய் பாபா கோவில்களிலும் பஜனை மண்டலிகளிலும் எல்லோரும் இன மத மொழி நாட்டு வேறுபாடுகள் இன்றி ஆரத்தி காட்டி அர்ச்சகர்களாகத் தான் இருக்கிறார்கள். எல்லோருமே சாயிரங்கனைத் தொட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். அங்கே ஆகமங்களும் இல்லை.
Anonymous said…
மாசிலா. நான் சொல்வதை புரிந்து கொள்ளாமல் புரிந்து கொள்ள மறுக்காமல் திரும்பத் திரும்ப உங்கள் பழைய பல்லவியையே பாடிக் கொண்டிருக்கிறீர்கள். ஆப்பிரிக்கர்கள், அமெரிக்கர்கள், ஆஸ்திரேலியர்கள், ஆங்கிலேயர்கள், தாய்லாந்தினர், மலேயர், சிங்களர், ஈழத்தவர், இந்தியர் என்று பல நாடுகளிலிருந்தும் பல மொழிகளிலிருந்தும் பல இனங்களிலிருந்தும் பல மதங்களிலிருந்தும் சாயிபக்தர்கள் இருக்கிறார்கள். நீங்கள் நினைப்பது போல் சாயிபாபா பார்ப்பனரும் இல்லை. இனிமேலாவது நீங்கள் அணிந்திருக்கும் கண்ணாடியை எடுத்துவைத்துவிட்டு பாருங்கள்.
//சாய் பாபா கோவில்களிலும் பஜனை மண்டலிகளிலும் எல்லோரும் இன மத மொழி நாட்டு வேறுபாடுகள் இன்றி ஆரத்தி காட்டி அர்ச்சகர்களாகத் தான் இருக்கிறார்கள். எல்லோருமே சாயிரங்கனைத் தொட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். அங்கே ஆகமங்களும் இல்லை.// அப்படீன்னா பஜனையில் இசுலாமியரும், (இந்திய) கிறித்தவரும் கூட உண்டா?
Anonymous said…
என் கருத்துகளை சொல்லிவிட்டேன். இதுவரை சாயிபாபாவை கிண்டலும் கேலியும் செய்த புனிதர்கள் எல்லோரும் தங்கள் மனத்தைத் தொட்டுப் பார்த்துக் கொள்ள ஒரு வாய்ப்பாகத் தான் என் கருத்துகளை சொல்லிவிட்டேன். இனி வரும் கேள்விகளில் ஜல்லிகள் மட்டும் இருந்தால் (மாசிலாவும் திருவும் அடிப்பதை போல்) பதில் சொல்ல விருப்பமில்லை. நல்ல கேள்விகள் கேளுங்கள். பதில் வரும்.
Anonymous said…
//அப்படீன்னா பஜனையில் இசுலாமியரும், (இந்திய) கிறித்தவரும் கூட உண்டா? //

கட்டாயம் உண்டு. பலரை பலமுறை பார்த்திருக்கிறேன்.
திரு said…
//பல நாடுகளிலிருந்தும் பல மொழிகளிலிருந்தும் பல இனங்களிலிருந்தும் பல மதங்களிலிருந்தும் சாயிபக்தர்கள் இருக்கிறார்கள். நீங்கள் நினைப்பது போல் சாயிபாபா பார்ப்பனரும் இல்லை.//

உண்மை தான். சாய் பக்தர்களில் கணிசமான எண்ணிக்கையில் ஆதிக்க சாதியினர் உண்டு. அவர்களுக்கு 'பகவானின்' 'அருள்வார்த்தைகள்' காதில் ஏறவில்லையா? பார்ப்பனீய அதிகாரம் வளர பிற்படுத்தப்பட்ட சாதியில் பிறந்த சாய்பாபாவை பயன்படுத்துவதை மறுக்க இயலுமா?
Anonymous said…
//யாரு? எப்படி? என்று கொஞ்சம் விபரமா சொன்னா தேவலை அனானி.//

சாமி நீங்க சந்துல சிந்து பாட வந்தீங்க உங்க ......கேப்புல நான் கானேவே பாடிட்டேன். சும்மா புரியாத மாதிரி நடிக்காதீங்கண்ணோவ்..


:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
//ஆப்பிரிக்கர்கள், அமெரிக்கர்கள், ஆஸ்திரேலியர்கள், ஆங்கிலேயர்கள், தாய்லாந்தினர், மலேயர், சிங்களர், ஈழத்தவர், இந்தியர் என்று பல நாடுகளிலிருந்தும் பல மொழிகளிலிருந்தும் பல இனங்களிலிருந்தும் பல மதங்களிலிருந்தும் சாயிபக்தர்கள் இருக்கிறார்கள்.//
இவர்கள் போன்ற இனங்களில் முட்டாள்களே இருக்ககூடாது என அவர்கள் நாட்டில் சட்டம் ஏதேனும் இருக்கிறதா? இவர்களும் முட்டாள்களே! இதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். இந்த மடையர்களைவிட இத்தமிழ் மண்ணில் அறிவாளிகள் ஏராலம். இதையும் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
Anonymous said…
கட்டாயம் மறுக்க இயலும் திரு. ஆதிக்க சாதியினர் என்று நீங்கள் சொல்லும் சாதியினர் எல்லாம் சமத்துவத்தில் இறங்கி நடைமுறைப் படுத்த பகவானின் அருள்வாக்குகள் தான் தூண்டிக் கொண்டிருக்கின்றன என்பது கண்கூடு. மக்களின் மனம் அன்பின் வழியிலேயே மாறும் என்பது வரலாறு காட்டும் உண்மை. உண்மையிலேயே சமத்துவம் வரவேண்டும் என்றால் அது அன்பின் வழியிலேயே வரும். திட்டுவதால் வரவே வராது. திட்டுவதாலும் வன்முறையாலும் பிளவுகள் அதிகரிப்பது மட்டுமே நடக்கும். இதுவும் கண்கூடு. நாட்டிலும் வலையுலகிலும் நீங்களும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறீர்கள்.
Anonymous said…
//என்னடா எல்.ஜி HR department க்கு வேலை நேரத்தில் மத சண்டை போடறேன்னு கடுதாசி அனுப்பனுமா.

ஏண்டா டெலிலாஜிக்குக்கு கடுதாசி அனுப்பனுமா முண்டகலப்பை?//

கடுதாசி போடுடா புட்பால் தலையா !
Anonymous said…
உலகத்து மக்களில் இவ்வளவு பேர் முட்டாள்கள் என்று நம்புவது உங்கள் உரிமை மாசிலா. ஆனாலும் நீங்கள் சொல்லும் அறிவாளிகள் எத்தனை தான் பிரிவினை பிரசாரம் செய்தாலும் அன்பின் வழியில் அனைவரும் ஒன்றுபடுவதை அந்த அறிவாளிகளால் தடுக்க இயலாது. அதனையும் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். மாற்றுக் கருத்துகள் கொண்டவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்பது அறிவுடையோர் வாதமாக இருக்காது.
Anonymous said…
மீண்டும் சொல்கிறேன். என் கருத்துகளை சொல்லிவிட்டேன். இதுவரை சாயிபாபாவை கிண்டலும் கேலியும் செய்த புனிதர்கள் எல்லோரும் தங்கள் மனத்தைத் தொட்டுப் பார்த்துக் கொள்ள ஒரு வாய்ப்பாகத் தான் என் கருத்துகளை சொல்லிவிட்டேன். இனி வரும் கேள்விகளில் ஜல்லிகள் மட்டும் இருந்தால் (மாசிலாவும் திருவும் அடிப்பதை போல்) பதில் சொல்ல விருப்பமில்லை. நல்ல கேள்விகள் கேளுங்கள். பதில் வரும்.
Anonymous said…
சாய் டிவோட்டீ அவர்களே.

ஒரே விஷயத்துக்கு பதில் சொல்லுங்க.

சாய்பாபா மந்திரத்தில் மோதிரம் மற்றும் விபூதி வரவழைப்பது உண்மையா ?
ரபிபெர்னாட் said…
இதென்ன பிரம்மாதம், எங்க இயேசு தண்ணீல நடந்துருக்காரு. சும்மா ஒரு பிரட்டை வச்சிக்கிட்டு பல ஆயிரம் பேருக்கு பிரட் கொடுத்துருக்காரு.. பேயோட்டியிருக்காரு...

தண்ணீல ஒயின் பண்ணியிருக்காரு..

தெரியுமா?
Anonymous said…
சாய் டிவோட்டியிடம் கேள்வி கேட்ட அனானி. நீங்கள் இதே கேள்வியை அவருடைய பதிவிலேயே கேட்டிருந்ததைப் பார்த்தேன். அவர் தான் உங்களுக்குத் தெளிவாக பதில் சொல்லியிருக்கிறாரே. இன்னும் என்ன?
நபிமுகமது said…
இதென்ன பிரம்மாதம்..

எங்க நபி சந்திரனை ரெண்டா ஒடச்சிருக்காரு.. குதிரையில ஏறி அல்லாவை போயி பாத்துட்டு வந்திருக்காரு..

இதெல்லாம் எங்க நபிக்கு ஜூஜூபி...
Anonymous said…
அவர் கூறியதில் திருப்தி இலலை என்று வைத்துக்கொள்ளுங்கள். நீர் சொல்லுங்கள்.
Anonymous said…
நபியை பற்றிய பின்னூட்டம் வெளியிட்ட செந்தழல் மீது பட்வா வைத்து இன்னும் மூனு நாளைக்குள் கொல்வோம்.
யாருப்பா அது கொலைவெறியோட சுத்துறது ? நான் ஊருக்கு போறேன் போ !!!!
Anonymous said…
அவர் சொன்ன பதில் தான் என் பதிலும். உங்களுக்குத் திருப்தி வர வேண்டும் என்றால் நீங்களே தீர விசாரித்து அறிந்து கொள்ளுங்கள். எங்களுக்கு அந்த பதில் திருப்தியைத் தருகிறது.
Anonymous said…
ஊருக்கு போனாலும் சரி, நீர் புதியதாக இணைந்துள்ள விப்ரோ நிறுவனத்துக்கு போனாலும் சரி. அங்கே ஆட்டோவோ, கால் டாக்சியோ அனுப்புவோம் யாம்.
அடப்பாவி, தெரிஞ்ச ஆளுதானா நீர் ? யாருப்பா அது, இவ்ளோ நேரமா கலாய்க்கிறது...நான் வீட்டுக்கு போவனும் உடுங்கப்பா..
சாமி நீங்க சந்துல சிந்து பாட வந்தீங்க உங்க ......கேப்புல நான் கானேவே பாடிட்டேன். சும்மா புரியாத மாதிரி நடிக்காதீங்கண்ணோவ்..
:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

இன்னும் பிரியலங்கண்ணோவ். அல்லாருக்கும் பிரிற மாறி போட்டுடைங்கண்ணோவ்.............
ஷாஜி said…
எங்க நபி நேரா அல்லாகிட்டேயிருந்து டிரங்கால் போட்டு பேசுவாரு... உங்க சாயியால முடியுமா?
Anonymous said…
அது எந்த பதிவு என்று தெரியாது எனக்கு. அதனால் தான் உங்களிடம் கேட்டேன்.
அனானி, அந்த பதில் என்ன என்று கொஞ்சம் காப்பி பேஸ்ட் செய்து போட முடியுமா ? அனானி 2 தொல்லை தாங்கலை..எனக்கு தெரியாது அந்த பதிவு எங்கே இருக்குன்னு..ஹெல்ப் ப்ளீஸ்...
நபிமுகமது said…
இயேசுவுக்கு என்ன பிரச்னையோ... அதெல்லாம் எதுக்கு.. நீங்க ஏன் சவத்தை தொங்கவுட்டு கும்புடறீங்க?
பொணத்தை யாராவது வூட்டுக்குள்ள வச்சி கும்புடுவானா? வூடு வெளங்குமா?
//எங்க இயேசு தண்ணீல நடந்துருக்காரு. சும்மா ஒரு பிரட்டை வச்சிக்கிட்டு பல ஆயிரம் பேருக்கு பிரட் கொடுத்துருக்காரு..//

தண்ணீர் மேலே நடந்த ஏசுவை பார்த்து, தண்ணீரில் நீந்தி வந்த அப்போஸ்தலர்கள் கூறியது :
"ஏ! ஏசு. தண்ணி நல்ல வெதவெதன்னு இருக்குது. நீயும் வந்து குளியல் போடறதுதானே!"

சும்மா ஒரு தமாஷுக்கு! ஹி! ஹி!
ரபிபெர்னாட் said…
நபி ஒம்போது வயசு ஆயீஷாவை அசிங்கம் பண்ணிய விஷயத்தை வெளியிட பயப்படும் செந்தழல் ரவியை கண்டிக்கிறேன்.
Anonymous said…
http://saibhajans.blogspot.com/2007/01/blog-post_22.html
நபி முகமது said…
எங்க நபி ஒரு கல்லில தட்டினா அதிலேர்ந்து தண்ணீர் ஊத்து கிளம்பும் தெரியுமா?
ரபிபெர்னாட் said…
சும்மா ஒரு ரவுண்டு கிளம்பி அரேபியா முழுக்க கல்லில எல்லாம் தட்டி அதை செழுமையா ஆக்கிருக்க வேண்டியதுதானே? இன்னும் ஏங்கப்பா பாலைவனமா இருக்கு?
ரபிபெர்னாட் said…
எங்க இயேசு நல்லா பேயோட்டுவாரு.. உங்க நபி பண்ணுவாரா? சேலேஞ்ச்...!
//எங்க நபி ஒரு கல்லில தட்டினா அதிலேர்ந்து தண்ணீர் ஊத்து கிளம்பும் தெரியுமா?//
இன்னாபா! பாபா இசுலாமுக்கு போயிட்டாரா?
எனக்கு யாரும் சொல்லவே இல்லிய!
நபி முகமது said…
உங்க ஏசுவே ஒருபேய்மாதிரிதானே? பொணமாத்தானே தொங்கறாரு?
//நபி ஒம்போது வயசு ஆயீஷாவை அசிங்கம் பண்ணிய விஷயத்தை வெளியிட பயப்படும் செந்தழல் ரவியை கண்டிக்கிறேன்.//
அதுக்கு ஒங்க கிட்ட போட்டோ ப்ரூஃப் இருக்கா?
ரபிபெர்னாட் said…
கைபார் யூதப்பெண்களை முகம்மது நபி கற்பழித்ததை வெளியிட பயப்படும் செந்தழல் ரவியை கண்டிக்கிறேன்
//உங்க ஏசுவே ஒருபேய்மாதிரிதானே? பொணமாத்தானே தொங்கறாரு?//
யோவ்! யார்ர்யா இது? இதெல்லாம் ரொம்ப ஓவரு!
பாவம்யா. உட்டுடுங்கயா. வலிக்குது வயிறு!
//உங்க ஏசுவே ஒருபேய்மாதிரிதானே? பொணமாத்தானே தொங்கறாரு?//
அதனாலதான் அவங்க பிரார்த்தன செய்யும்போது கையேந்தி அழுவுறாங்களா?
இங்கே நபிமுகமது என்று எழுதுபவரது ஐபியும், ரபிபெர்னாடு என்று எழுதுபவரது ஐபியும் ஒன்று...

அடுத்தவனுக்கு முத்திரை குத்தவேண்டும் என்றால் எப்படி எல்லாம் சிந்திக்கிறாங்க பாருங்க..

அதாவது இதுபோல் இரண்டு தரப்பையும் தூண்டுவோம், அதன் மூலம் நாம் குளிர்காயலாம் என்ற நரித்தன சிந்தனை...

தமிழ்மணத்தில் ஒரு ஆண்டாகவும் / இணையத்தில் ஏழெட்டு ஆண்டுகளாகவும் கணிணியை பிரித்து காயப்போடும் எனக்கு யார் பின்னூட்டம் போடுகிறார் என்று தெரியாதா ? அசிங்கப்பின்னூட்டம் வந்தப்போதே கொஞ்சம் உசாராத்தான் இருந்தேன்..கொஞ்சம் விட்டு பிடிப்ப்போம் என்று தான் காத்திருந்தேன்....

ஓக்கே ஓக்கே அனானி ஆட்டம் போட்டவரே...உமது முகமூடியை எப்போ கிழிக்கலாம் என்று நாள் நீங்களே குறித்துக்கொள்ளுங்கள்...இப்போது நான் செல்கிறேன்..திங்கள் கிழமை பார்க்கலாம்...

ஆனால் ஒன்று...இந்த பதிவால் இவ்வளவு டெண்ஷன் ஆனது ஏன் ? இந்த கட்டுரை வந்தது "விடுதலை" இதழில்..அதை நான் வெளியிட்டேன்...வந்ததே ஆவேசம் உமக்கு...இது போன்ற போலி அசிங்க பின்னூட்டங்கள் பொதுவாக டோண்டு பதிவில் பின்னூட்டம் இட்டால்தான் கிடைக்கும்...இப்போது நீரும் அளிக்க ஆரம்பித்துவிட்டீரா ? நன்றி...!!

மாசிலா / திரு, நன்றி அனானியுடன் விவாதித்ததுக்கும் நல்லா மனம்விட்டு சிரிச்சதுக்கும்...

குடியரசு தின வாழ்த்துக்கள்...!!!!
உங்களுக்கும் நன்றி செந்தழல் ரவி.
வயிறு வலிக்க சிரித்தது உண்மைதான்!
வணக்கம்.
Anonymous said…
//சாய் பாபா கோவில்களிலும் பஜனை மண்டலிகளிலும் எல்லோரும் இன மத மொழி நாட்டு வேறுபாடுகள் இன்றி ஆரத்தி காட்டி அர்ச்சகர்களாகத் தான் இருக்கிறார்கள். எல்லோருமே சாயிரங்கனைத் தொட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். அங்கே ஆகமங்களும் இல்லை.// அப்படீன்னா பஜனையில் இசுலாமியரும், (இந்திய) கிறித்தவரும் கூட உண்டா?//


கண்டிப்பா உண்டு. நானே கண்டிருக்கிறேன்.
நபி முகமது said…
ரவி டென்ஷனும் ஆகவில்லை. ஒரு மண்ணும் ஆகவில்லை. இது ஒரு விளையாட்டு. உங்களைப்போலவே நானும் ஒரு விளையாட்டுக்காரன். நான் சாயிபக்தனும் அல்ல.

சாயியும் நல்லவர். அவர் தொண்டு செய்கிறார். ஏதோ அற்புதம் செய்வதாக கூறிக்கொள்கிறார். அவ்வளவுதானே. நீங்கள் ஏன் டென்ஷனாகி விடுதலை கட்டுரையை எடுத்துபொட்டு காயவேண்டும்?

ரிஷிமூலம் நதிமூலம் பார்க்கக்கூடாது. சாயியை கேவலப்படுத்துவதன் மூலம் நீங்கள் எனன சாதித்தீர்கள்?

சகிப்புத்தன்மை என்பது ஒருவழிப்பாதை அல்ல என்று உங்களுக்கு புரியவேண்டும் என்பதற்காகத்தான் இந்த விளையாட்டு. எனக்கு நபிகள் நாயகம் மீதும் இயேசுபிரான் மீதும் நம்பிக்கையும் அளவுகடந்த மரியாதையும் உண்டு. ஆனால், அவர்களை அசிங்கமாக விமர்சிப்பது ஒன்றும் பெரியவிஷயம் இல்லை என்று உங்களுக்கு புரியவைப்பதற்காகத்தான்.

தாராளமாக ஐபியை போட்டுக்கொள்ளுங்கள். பிரச்னை இல்லை.

குடியரசு தின வாழ்த்துக்கள்
aathirai said…
ஹாஹாஹா...

இந்த ஷோ வில் எவ்வளவு லட்சம் தேறியது? :)//
//ஆப்பிரிக்கர்கள், அமெரிக்கர்கள், ஆஸ்திரேலியர்கள்,
ஆங்கிலேயர்கள், தாய்லாந்தினர், மலேயர், சிங்களர்,
ஈழத்தவர், இந்தியர் என்று பல நாடுகளிலிருந்தும் பல
மொழிகளிலிருந்தும் பல இனங்களிலிருந்தும் பல மதங்களிலிருந்தும்
சாயிபக்தர்கள் இருக்கிறார்கள்.//

முட்டாள்கள் எல்லா நாட்டிலும்தான் இருக்காங்க. இங்க ஒரு கும்பல்
டிவியில் ஒன்பதாவது சேனலில் கடவுள் வருகிறாரென்று விடிய விடிய
உக்காந்திருக்கு.
Anonymous said…
//இவ்வளவு பேசற ஒருத்தராவது ஏன் இப்படி பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னும் அவரை தெய்வமா கும்புடறாங்கன்னு யோசிச்சிருக்கீங்களா?//
சாமி ஏன் வீல் சேரில் உக்காந்திருக்குன்னு நீங்க யோசிச்சீங்களா?
SurveySan said…
நல்ல நகைச்சுவை தொகுப்பு.

நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா சில விஷயங்கள கண்டுக்காம இருக்கரதுல தப்பில்ல ரவி.

சாய் சமிதி மூலமா பல பொது சேவை விஷயங்கள் செய்யறாங்களாம். ஏழை பசங்க படிப்பு, சாப்பாடு இதெல்லாம் பாத்துக்க்கறாங்க.

நிறைய பணம் புழங்கும் இடத்தில் சில விரிசல்கள் இருக்கத்தான் செய்யும்.

அவர் விபூதி வரவழைக்கும் மேஜிக் எல்லாம் நானும் வீடியோல பாத்துருக்கறேன். எனக்கென்னமோ அந்த மேஜிக் செய்வது நல்லதுதான். நம்மாளுங்க சும்மா நின்னு நான் தான் கடவுள்னா உண்டியல்ல காசு போட மாட்டாங்க.
மேஜிக் காட்டி கலெக்ஷண் செய்யும் பணத்தி பெருவாரியானது பொதுநலத்துக்குத்தான் பயன்படுது.

அவர் பக்கா ப்ராடுன்னு தெரிஞ்சா பிரதம மந்திரியும், கலாமும், கலெக்டரும் எல்லாம் போய் காலில் விழ மாட்டார்கள்.

கண் பார்வை தரேன், கை கால் வர வெக்கறேன்னு சொல்லி ஏமாத்தரதுக்கு விபூதி எவ்வளவோ பரவால்ல :)

இதுக்கு ஒரு சர்வே போடலாமா? சாமியார்கள் ஏமாத்தி சம்பாதித்து கிடைக்கும் பணத்தை ராபின் ஹுட் மாதிரி செலவு பண்ண சரியா/தவறா?
:)
Anonymous said…
Hello Annas and thambis.. Please tell me how to reply in Tamil. What font I need and how do I go about it...

Half the population is mentally weak. They want to be a SHEEP. (Ba.. Ba... Ba..) and looking for a Shepard. Pakutharioo is off the door.. Spirutuality is different than this MAGIC... Cheap mind cannot comprehend spirituality... but these magic tricks...
அந்த 200 கோடியில் 100 கோடி கருனாநிதியின் அடிப்பொடிகளுக்கு போய்விடும்.
ஆமாம், நாய் வித்த காசு குரைக்கவா செய்யும். ஒரு கெட்டவனிடம் காசு வாங்கி நாட்டுக்கு நல்லது தானே செய்கிறார் என்று எல்லோரும் சொல்கிறீர்கள். ஆனால் காசு வாங்கிவிட்டோமே என்கிற நன்றிக்கடனில் அவர்கள் செய்யும் தப்புகளை நாம் கண்டுகொள்ளாமல் இருக்கவேண்டும், அதற்கான லஞ்சம்தானே இது. நாளைக்கே நம்ம காஞ்சி காமகோடி பீடாதிபதி மாட்டியது மாதிரி இந்த சாய்பாபாவும் மாட்டினால் அவரால் பயனடைந்த நாம் அதற்காக அவமானப்படத்தானே வேண்டும்.


பாபாவின் சித்து வேலைகளைப்பார்க்க இங்கே கிளிக்கவும்
Anonymous said…
செந்தழல் ரவி,

முதலில் இந்த பின்னூட்டங்களை அனுமதித்தே இருக்கக்கூடாது. அனுமதித்துவிட்டு பிறகு ஐபி காட்டுகிறேன் பார் என்று சொல்வது உங்கள் பதிவுகளை வெள்ளந்தியாக படிக்கும் பலரது வயிற்றில் புளியை கரைக்கக்கூடியது. அதுவும் இந்தமாதிரி விஷயங்களில்.

எழுதியவர் தவறு செய்திருக்கிறார். அனுமதித்திருக்கக்கூடாது. இப்பவும் தவறில்லை. நீக்கிவிடுங்கள். அதற்காகத்தானே மாடரேஷனே.

ஐபியை போட்டு யாருடைய வேலையாவது போவதற்கு துணை நிற்காதீர்கள்.
Johan-Paris said…
ரவி!
தங்கள் "பாபா மெஜிக் ஷோ பார்த்தேன். அவர் இன்னும் நல்ல பயிற்சி எடுக்கவேண்டும்.
யோகன் பாரிஸ்
cyber police said…
அசிங்க பின்னூட்டம் இட்டவனின் ஐ.பி. முகவரி 125.16.135.34
Thamizhan said…
நல்ல பதிவு போட்டு பதில்களும் கொடுத்துப் பின்னீட்டிங்க.வாழ்த்துக்கள்.கேள்வி கேட்டாலே பிடிக்காத,மற்ற மதங்கள் போலப் போலிப் பெயர்களிலே மாமாக்கள் இதுகள் விச ஜந்துக்கள்.BBC புகழ் சாயிபாபா வீடியோவில் மாட்டிப் பல கேசுகளில் மாட்டி விரைவிலே கோர்ட்டிலும் மாட்டினாலும் பல அறிவுஜீவிகள் அவரிடம் இவ்வளவு பக்தியில் துடிப்பது மூளையிலே மாட்டப்பட்டுள்ள விலங்கினால்தான்.
பகுத்தறிவு பாசறையில் பாடம் படித்த கலைஞர் முன் இப்படி மேஜிக் காட்சிகள் நடந்தது சிரிப்பை வரவழைக்கிறது.

கலைஞரும் பாபாவும், தங்கள் வேஷத்தை அப்புடியே மெயிட்டெய்ன் பண்ணிக்கொண்டிருக்கிறாரகள், அவர்கள் வேஷததை கலைப்பது இயலாத காரியம்.

நல்ல பதிவு, ரவி சார்,

(ஹரிஹரன் அவர்களின் பதிவிலும் பின்னூட்டம் இட்டுருக்கிறேன், அவருடைய பதிவும் சரியான பதிவு என்று தான் நினைக்கிறேன்).
Anonymous said…
//BBC புகழ் சாயிபாபா வீடியோவில் மாட்டிப் பல கேசுகளில் மாட்டி
விரைவிலே கோர்ட்டிலும் மாட்டினாலும் //
யாரோ நீத்பதி ராமசுப்ரமணியமாம். சாய்பாபாவை கடவுள் போல
புகழ்ந்து பேசியதா தினமலர் பக்தியோடு செய்தி போட்டிருந்தது.

அப்பாவி தமிழனா நீங்க!

அம்மணமான நாட்டில கோவணம் கட்டியவன்தான் பைத்தியம்.

Popular Posts