Friday, March 23, 2007

சபரி - திரைவிமர்சனம் :))

சேலம் சந்திரசேகர் (பாவம் இந்தாளு) தயாரிப்பில் சுரேஷ் டைரக்ஷனில் வந்துள்ள இந்த சபரி ( அரசு படத்தை டைரக்ட் செய்தவர்), கேப்டன் விஜயகாந்தின் 149 ஆவது படம். பத்தோட பதினொன்னு அத்தோட இது ஒன்னு என்றில்லாமல் இந்த படத்தில் உலகத்திலேயே யாரும் செய்யாத ஒரு மாற்றத்தை கேப்டன் விஜயகாந்த் செய்துள்ளார்...அதாவது போலீஸ் / கலெக்டர் / உள்துறை செயலாளர் / ப்ரொபசர் போன்ற வேடங்களை விடுத்து இந்த படத்தில் டாக்டராக ( இலங்கை தமிழில் டொக்டர்) களம் கண்டுள்ளார் நமது கேப்டன்..

படத்தில் ஜோதிர்மயி மற்றும் மாளவிகா நாயகிகளாக நடித்து(?)ள்ளார்கள்...இது பற்றி விவாதிக்க எதுவுக் இல்லை என்றாலும் (??) இதை பற்றி கண்டிப்பாக சில விஷயங்கள் சொல்லியே ஆகவேண்டும்....நாயகி ஜோதிர்மயியின் கதாபாத்திரம் மிகவும் கொடுமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது....அவங்க டூவீலர் லைசென்ஸ் பெற எட்டு போட முடியாமல் பதினொன்று போட்டு லைசென்ஸ் தேர்வில் பெயில் ஆவது மிகவும் சோகமான காட்சி...பெண்ணியத்துக்கும் இது எதிரான காட்சி....பா.ம.க மகளிர் அணியினரை நினைத்து ஏசி குளிரிலும் வியர்வை வந்திட்டது எனக்கு...

நரசிம்மா படத்தில் கரண்டுக்கே ஷாக் கொடுத்து நம்மை அதிர்ச்சியில் உறைய வைத்தார் கேப்டர்...அப்புறம் பேரரசோ / தருமபுரியோ தெரியலை, அர்ச்சனை தட்டை வைச்சு துப்பாக்கி குண்டை எல்லாம் தடுத்தார் என்று கேள்விப்பட்டேன்...ஆனால் இந்த படத்தில் தன்னுடைய இண்டலிஜெண்டலியை காட்டி நம்முடைய அப்ளாஸை அள்ளுகிறார்...

ஆமாம்...இந்த படத்தில் சபரிநாதன் என்ற டாக்டர் வேடத்தில் வருகிறார் நம்ம கேப்டன் என்று சொன்னேன் இல்லையா...(சபரிநாதனின் சுருக்கம் சபரி..அதுவே படத்தின் தலைப்பு...டைரக்டருக்கு என்ன ஒரு ஞானம்...பின்னே, ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே அப்படீன்னோ / எனக்கு 60 உனக்கு 10 அப்படீன்னோ தலைப்பு வெச்சு கேப்டன் அதுல நடிச்சா நாராசமா இருக்காது) , விஷயத்துக்கு வருகிறேன்...இந்த படத்தில் நமது கேப்டனின் இண்டலிஜெண்டலி பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன் இல்லையா...

நமது கேப்டன் ஒரு க்ரிட்டிக்கல் ஆப்பரேஷன் செய்ய விழைகிறார்....கேப்டனின் முந்தைய படம் ஒன்நில் அவர் கை நகத்தை கடித்து துப்பும் காட்சியை தியேட்டரில் கண்ட ஒரு பெரியவரின் இதயம் வாய்வழியே வெளியே துள்ளி விழுந்துவிட்டது...அதை திரும்ப கிழித்து உள்ளே வைக்கும் ஆப்பரேஷன்...(டெக்னிக்கல் புருடா விஷயங்களை வீ.எஸ்.கே சார் கண்டுகொள்ளாமல் இருப்பாராக)...இந்த க்ரிட்டிக்கல் நிலைமையில் தீவிரவாதிகள் ( வேற யார் கேப்டனுக்கு எதிரி,) கேப்டனுக்கு பிரச்சினையை ஏற்ப்படுத்த, கரண்டை ஆப் செய்து விடுகிறார்கள்.....(வழக்கமாக தீவிரவாதிகள் முட்டிக்கால் தண்ணீரில் உள்ள டண்ணலில் தான் இருப்பார்கள்...ஆனால் இந்த படத்தில் ஆயிரம் பாதுகாப்புகளையும் மீறி துப்பாக்கிகளுடன் ஆஸ்பத்திரியிலேயே புகுந்துவிடுகிறார்கள்) அப்போது நமது கேப்டன் ஆப்பரேஷன் த்யேட்டரில் பார்த்துக்கொண்டிருந்த வீராசாமி திருட்டு விசிடீ ஆப் ஆனது பற்றி நான் ஒன்றும் சொல்ல வரவில்லை, ஆப்பரேஷன் தடைப்படுகிறது...இந்த இக்கட்டான நிலைமையை கேப்டன் மிகத்திறமையாக சமாளிகிறார்...சொல்லிடுறேன் சொல்லிடுறேன்...தன்னுடைய மொபைலில் உள்ள லைட்டை ஆன் செய்து, இண்டலிஜெண்டலியாக ஆப்பரேஷனை முடிக்கிறார்.....(அட லூசு டைரக்டரே, அவ்ளோ பெரிய ஆஸ்பத்திரியில ஒரு ஜெனரேட்டர் கூடவா இருக்காது...)

இப்படி இண்டலிஜெண்டலியா இருக்கும் ஒரு டாக்டர் எப்படி சமூக குற்றத்தை எதிர்ப்பது...அங்கேதான் வில்லன் உள்ளே நுழைகிறார்...வழக்கம்போல் சைஸில் பெரிசான வில்லன்...அவருக்கொரு மைத்துனர்...(தயவுசெய்து யாரும் எல்.கே.சதீஷை) கற்பனை செய்யவேண்டாம்...அது ரியல் லைப்...இது ரீல் லைப்...ரியலில் மச்சான் ஹீரோவின் பக்கம்..படத்தில் இந்த தெய்வ மச்சான் வில்லன் பக்கம்....ஏதோ ஒரு மொக்கையான குற்றத்தை ( பஸ்ஸில் பான்பராக் எச்சில் துப்பும் அளவுக்கு மொக்கையானது இல்லைங்க) செய்யும் வில்லன் மச்சானை போலீஸில் கோள் மூட்டி ( ஹி ஹி எங்க ஸ்கூல்ல அப்படித்தான் சொல்லுவோம்) தூக்கு தண்டனையே வாங்கித்தந்துடுறார் கேப்டன்...(பாருங்க நிலைமையை, இதே போலீஸ் வேடம்னா கேப்டனே அரசாங்க செலவில் - அதான் ஒரே ஒரு புல்லட் - போட்டுத்தள்ளி இருப்பார்...) இதை கண்டு கொதித்த வில்லன் ப்ரதாப் ராவத் ( அதுதான் வில்லனோட பேருங்க) கேப்டனை பழிவாங்க கடுமையாக துடிக்கிறார்.....துரத்தி துரத்தி தொல்லையும் தருகிறார்.....கடைசியில் என்ன ஆனது என்பது க்ளைமாக்ஸ்...

ஈழத்தவர்களுக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை...இல்லையா பின்னே, மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள குறைந்த வசதிகளை சொல்லி அரசை சாடும் நமது கேப்டன் நெஞ்சில் நிறைகிறார்...ஆனால் அவர் பேசும் மூன்றரை பக்க வசனத்தில் " இதுக்கு முன்னாடி வந்தவங்களெல்லாம் வேடிக்கை பார்க்க வந்தாங்க. நான் உங்க வேதனையை போக்க வந்தவன். நம்புங்க நல்லதே நடக்கும்" என்று சொல்லும்போதுதான் ஆகா, கேப்டன் தே.மு.தி.க பிரச்சாரத்துக்கு இந்த மேட்டரை பயன்படுத்துறாரூடோய் என்று உறைக்கிறது...

ரமணா படத்தில் மருத்துவமனை படத்தின் அலட்சியங்கள் காட்டப்பட்டன...படம் நன்றாக ஓடியது...அதனால் இந்த படத்திலும் மருத்துவமனை அலட்சியங்கள் காட்டப்படுகின்றன...எனக்கென்னமோ இனிமேல் எல்லா கேப்டன் படங்களிலும் ( கேப்டன் அமெரிக்க ஜனாதிபதியாக நடித்தால் கூட) - அங்குள்ள ஒரு மருத்துவமனை ப்யூன் சாண்ட்விச் திருடி தின்பதை காட்டுவார்கள் என்று நினைக்கிறேன்...

சில பல அருமையான கயிற்றில் தொங்கி உயிரை பணயம் வைத்து செய்யப்படும் சண்டைக்காட்சிகள், எங்கே "ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் சைனா", "36 சேம்பர் ஆப் சீக்ரெட்ஸ்" மாதிரி ஜெட்லி படத்துக்குள் நுழைந்துவிட்டோமோ என்று ஒரு முறை திரும்பி பார்க்க வைத்தது...

கேப்டன் டூயட்டும் பாடுகிறார்.....நேற்று கே டிவீயில் பார்த்த ஒரு பிரபு படத்தில் நம்ப பிரபு டான்ஸ் ஆடுவது போல் காட்ட வேண்டும் என்பதற்க்காக கையை காலை தூக்கி எக்ஸர்ஸைஸ் மாதிரி செய்ய விட்டு, அதை பார்ஸ்ட் பார்வேர்ட் செய்து காட்டினார்கள்.....அந்த மாதிரி எந்த கொடுமையும் இந்த படத்தில் நம்ம கேப்டன் செய்யவில்லை...மெய்யாகவே (அட தேவுடா) டான்ஸ் ஆடுகிறார்....

காமெடி பற்றி சொல்லவேண்டுமே...ஸ்ஸ்ஸ்ப்ப்பா...இப்பவே கண்ணைக்கட்டுதே....சொல்லிடுறேனுங்க...விஜயகாந்த் படத்துக்கு எதுக்குங்க தனியா காமெடியன்...அவர் போதாதா....

ம்ம்ம், க்ளைமாக்ஸுக்கு வந்தாச்சுங்க...கேப்டன் (அ)சிங்கம் போல சீறி வில்லனை பழிவாங்கி அடித்து தூள் கிளப்பும்போது, அடுத்த முறை உடம்பு சரியில்லைன்னு டாக்டரிடம் போகும்போது கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று மட்டும் நினைத்துக்கொண்டேன்.....

எல்லாரும் இந்த படத்தை பார்க்கவேண்டும், அதுவும் தியேட்டரில் சென்று பார்க்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்...டி.வி.டி கிடைத்தால் நல்ல ப்ரிண்ட் ஆக இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும்...அப்படி வாங்கி நீங்கள் படத்தை பார்த்தால் உண்மையான அல்லது முழுமையான விமர்சனத்தை எழுதவும்...நான் எப்படி எழுதினேன் என்று கேட்கிறீர்களா...படத்தை பார்த்து வெறுத்து, முகம் வெளிறி வந்த அலுவலக நன்பன் ஒருவனை நோண்டி நொங்கெடுத்து / நெட்டில் கொஞ்சம் ரிவ்யூஸ் படித்து கதையை தெரிந்துகொண்டேன்....அம்புட்டுத்தேன்...நான் எந்த தவறும் செய்யவில்லை என்று வெள்ளை அறிக்கை அளிக்கிறேன்...

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

20 comments:

தென்றல் said...

/அட லூசு டைரக்டரே, அவ்ளோ பெரிய ஆஸ்பத்திரியில ஒரு ஜெனரேட்டர் கூடவா இருக்காது...)
/
:) ;)

/....CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.
/
ஏதோ சொல்லவந்தேங்க... மேல உள்ள comment பார்த்ததுக்கு அப்புறம்... .. மூச்...

Anonymous said...

இரு இரு எங்க மாமாட்டெ சொல்ரேன். உன்ன அடிக்க வந்துட்டே இருக்கார்

Anonymous said...

Excuse me Mr.Panrutti.

can I have a Pala pazam ?

Anonymous said...

வாங்க, தென்றல்...நீங்க எழுதலாம், எழுதுங்க.

வாங்க பண்ருட்டியாரே. யாரு உங்க மாமா ?

அனானி, நீங்க பண்ருட்டீயாரிடமே கேட்டுக்கோங்க. ஹி ஹி

கானா பிரபா said...

பின்னீட்டீங்க

ஆக, சேலம் சந்திரசேகருக்கு நடந்தது மேஜர் ஆபிரேஷன் ;-))

சென்ஷி said...

//கேப்டனின் முந்தைய படம் ஒன்நில் அவர் கை நகத்தை கடித்து துப்பும் காட்சியை தியேட்டரில் கண்ட ஒரு பெரியவரின் இதயம் வாய்வழியே வெளியே துள்ளி விழுந்துவிட்டது...அதை திரும்ப கிழித்து உள்ளே வைக்கும் ஆப்பரேஷன்...//

:))))))))

எதையும் மூளைய கழட்டி வச்சிட்டு பாத்தாத்தான் உருப்பட முடியும். இல்லன்னா இப்படி விமர்சனம்தான் செய்ய முடியும்....

சென்ஷி+

சென்ஷி said...

//ஆக, சேலம் சந்திரசேகருக்கு நடந்தது மேஜர் ஆபிரேஷன் ;-))//

ஆமா.. பேஷண்ட் அவுட்டா.. நாட் அவுட்டா :))

சென்ஷி-

இராம்/Raam said...

இந்த பதிவு எழுதியவர்க்கு என்னுடைய கடுமை கண்டனங்களை தெரிவித்து கொள்கிறோம்...

இவண்,

அகில ஒலக Gaptain ரசிகர் மன்றம்,
பெங்களூரூ கிளை,
Near நிம்ஹான்ஸ் ஆஸ்பத்திரி,

VSK said...

சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது!

இதுல என்னை வேற இழுத்து, என் புதுப்பெயரை உலகத்துக் காட்டியதுக்கு மிக்க நன்றி, ரவி!

நான் ஒரு கேப்டனின் அரசியல் ரசிகன்!
நினைவில் கொள்ளவும்!
:))

தென்றல் said...

ஏதோ புள்ளி விவரமலாம் சொல்லுவாறே நம்ம "Gaptain" -னு பாக்கிறதுண்டு..!

'தர்மபுரி'-யில முதல் காட்சிலேயே escape....
அந்த 'பேரரசை' மட்டும் நேரில பார்த்தா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெடியாது...

கோவி.கண்ணன் said...

அடப்பாவி நிசமாவே படம் பார்கலைய்யா நீய்யீ
:) ;)

ஆதிபகவன் said...

//படத்தை பார்த்து வெறுத்து, முகம் வெளிறி வந்த அலுவலக நன்பன் ஒருவனை நோண்டி நொங்கெடுத்து / நெட்டில் கொஞ்சம் ரிவ்யூஸ் படித்து கதையை தெரிந்துகொண்டேன்....//

என்னடா விஜயகாந் படம் பார்க்கிற அளவுக்கு ரவிக்கு தைரியம் வந்திருச்சான்னு பார்த்தா, ரவியாவது தியேட்டர்ல போய் விஜயகாந் படம் பார்க்கிறதாவது!!!

Beemboy-Erode said...

வாழ்க..செந்தழில் ரவி.. எனது சித்தப்பா வின் கேவலமான திரைப்பபடத்தை இவ்வளவு ரசித்து அனுபவித்து விமர்சனம் எழுதுயிருக்கும் ரவியாரே வாழ்க.

பின்ன என்னபா..நீ பாட்டுக்கு படம் நல்லா இருக்குனு எழுதி அதையும் மக்கள் பார்த்து
வசூல் ஆச்சுனு வச்சுக்கோ....அவர் அரசியல் இல்லனா சினிமானு நினைச்சுடார்னா?

இப்பதான் சினிமா ரசிகர்கள் நாங்கலாம் கொஜ்ஜம் மூச்சு விடுரோம்..ஒரு ஆளு சினிமா விட்டுட்டு அரசியலுக்கு போயிடாரேனு...

ஒன்னுமட்டும் சொல்லிகறபா...ஆராவது சபரி படம் மட்டும் நல்லா இருக்குனு எழுதுனிங்கோ வூட்டான்டா ஆட்டோ வரும்...

பின்குறிப்பு: கிரிட்டிகல் ஆப்ரேசன் செய்யும் எந்த ஒரு மருத்துவமனையும் ஜெனரேட்டர் மின்சாரம் தான் உபயேகப்படுத்துவார்கள், ஈ.பி கரன்ட் இருந்தால் கூட...

மு.கார்த்திகேயன் said...

படத்தோட காமெடியை நான் இங்கேயே அனுபவச்சுட்டேன்.. அதனாலா நோ படம் ரவி :-)

Anonymous said...

வி.எஸ்.கே அவர்களே

நன்றி !!!!!!

அபி அப்பா said...

படத்த பாக்காமயே இவ்ளவு பிட்டா?:-)

Ayyanar Viswanath said...

உங்க போதைக்கு இவங்க ஊறுகாயா?
ஆனா உங்களுக்குன்னே படம் எடுக்கறாங்கப்பா ..இவிங்களும்

வீராசாமி,சபரி,..கொஞ்ச நாளைக்கு உங்க காட்ல அட மழைதான்..

லிவிங் ஸ்மைல் said...

//அட லூசு டைரக்டரே, அவ்ளோ பெரிய ஆஸ்பத்திரியில ஒரு ஜெனரேட்டர் கூடவா இருக்காது...)
//

எல்லா ஆஸ்பிட்டல்லயும் ஐ.சி.யு./ஆப்ரேசன் தியேட்டர் எல்லாத்திலயும் பவர் போனாகூட குறைந்த பட்சம் 3 மணிநேரமாவது சப்ளை இருக்கும்ன்னு கேள்விபட்டேன்ப்பா....

இருந்தாலும் நான் தே.மு.தி.க. ல சேரும் வாய்ப்பு இருக்குற மாதிரியிருக்கு சோ.. இப்பதிக்கு நோ கமெண்ட்ஸ்...

Anonymous said...

i am also DDMK

ஜே கே | J K said...

//தன்னுடைய மொபைலில் உள்ள லைட்டை ஆன் செய்து, இண்டலிஜெண்டலியாக ஆப்பரேஷனை முடிக்கிறார்.....//

ஆப்பரேஷன் தியேட்டர்ல மொபைல் ஃபோன் பயன்படுத்தலாமா? சொல்லவேயில்ல...

//எதுக்குங்க தனியா காமெடியன்...அவர் போதாதா....//

அவரோட நோக்கம் மக்கள சிரிக்க வைக்கனும் அப்படிங்கரதுதான்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....