Thursday, September 20, 2007

சில தன்னிலை விளக்கங்கள்...

யாராவது தன்னிலை விளக்கம் கொடுத்தா போதுமே...அவசரம் அவசரமா தலை போற, வேலை போற வேலையா இருந்தாக்கூட விட்டுட்டு வந்து வரி வரியா விழுந்துவிழுந்து படிக்கிற ட்ரெண்ட் என்னைக்கு ஓயுமோ தெரியாது...இருந்தாலும் தலைப்பை மறுபடி ஒருமுறை பார்த்துக்கிட்டு மேற்கொண்டு டைப்புறேன்...

சமீபகாலமா முகமூடி அவர்கள் இந்த சின்னப்பையனை பிடிச்சு கும்முறதை நீங்க பார்த்திருக்கலாம்...இணையத்துல ரெண்டு மூனு பேரு நான் என்ன சொன்னாலும் அதை சரியான கோணத்துல பார்க்கிறதில்லை....ஒன்னு போலி டோண்டு மூர்த்தி...இன்னோருத்தர் முகமூடி அய்யா...

ஒரு முறை முகமூடி அவர்களை பற்றி ஒரு மூத்த வலைப்பதிவர் சொன்னார்...முகமூடி கிள்ளுவாரு...ஆனா ரத்தம் வராது...வலிக்கும்...ஆனா அழுவ முடியாது...என்று....ஆனா முகமூடி உண்மையிலேயே கையில ஊசிய வெச்சுக்கிட்டு உட்கார்ந்திருந்திருக்காரு...மூல வியாதி போல...உள் மூலமா வெளி மூலமா, ஆதி மூலமா தெரியல...பயங்கர டென்ஷன் ஆகுறாரு...லாஸ் ஏஞ்ஜெல்ஸில் நல்ல மருத்துவர் இருந்தால் பார்க்கவும்...

இன்னோரு விஷயம் இங்கே சொல்லனும்...முகமூடி அவர்கள் எல்லே ராம் என்று நான் நம்பவில்லை....மிச்சமிருக்கும் ஆசிட் வீச்சுக்கும் ஆட்டோக்களுக்கும் பயந்து முகத்தை மூடி எழுதும் லாஸ் ஏஞ்சல்ஸ்காரர் என்பது தான் என்னைப்பொறுத்தவரை....டோண்டு ராகவனுக்கு தெரியும், ஆனால் நான் கேட்கப்போவதில்லை...

முகமூடி பற்றி சொல்லனும்னா, டோண்டு ராகவனுடன் இணைந்து முதல் முதலில் போலி டோண்டு மூர்த்தியை உருவாக்கி, அவன் கையால் ஆபாச பின்னூட்டங்கள் வாங்கிய முதல் பதிவர்...இன்றைக்கும் வந்துகொண்டிருக்கலாம்....அதை குப்பைத்தொட்டிக்கும் அவர் அனுப்பிக்கொண்டிருக்கலாம்....(கிருஸ்துவனாகிய செந்தழல் ரவி, திராவிடனாம்...என்று இன்றும் அவர் பதிவில் ஆபாசம் கலக்காமல் மூர்த்தி பின்னூட்டம் போட்டுக்கொண்டுதானிருக்கிறான்..அதை வெளியிட்டுக்கொண்டுதானிருக்கிறார்...)

இன்றைக்கு பல பதிவுகளில் சென்று நான் கிறிஸ்டியன் என்றும் தலித் என்றும் நான் எப்படி திராவிடன் ஆகமுடியும் என்றும் வாந்தி எடுத்துவரும் போலி டோண்டு மலேசியா மூர்த்தி, முகமூடி பதிவுக்கும் சென்று எழுதுவது எனக்கு ஒன்றும் ஆச்சர்யம் இல்லை...

சொல்லப்போனால் முதன் முதலில் இதனை வலையில் "அம்பலப்படுத்திய" பெருமை திரு.முகமூடி அவர்களையே சாரும்...என்னுடைய மின்னஞ்சல் முகவரியில் இருந்து என்னுடைய முழுப்பெயரை எடுத்து (அங்கே மட்டுமே இருந்தது அது) , அவரது "இந்த வார விவகாரம்" பகுதியில் "ரவீந்திரன் அந்தோனிசாமி" என்று எழுதிய மதவெறி பாஸிஸ்ட் திரு.முகமூடி அவர்கள்...இன்றைக்கு அவர் போட்டிருக்கும் பதிவின் முதல் பின்னூட்டத்தில் கூட "சுகமளிக்கும் கூட்டங்கள்" என்ற வார்த்தை கசட்டு எண்ணத்தோடு சேர்த்திருப்பதன் மூலம் அதை மீண்டும் நிரூபிக்கிறார்...இவர் எப்படி சாதி சொல்லி திட்டுவதை கேள்விகேட்க முடியும் ?

மேலும் என்னுடைய சிறுமூளையில் உதிக்கும் இன்னொரு நினைவுத்துணுக்கு, மகாலட்சுமி என்ற பெண்ணுக்கு உதவி செய்ய முயன்றபோது, ஓகை சார், நிலா போன்றவர்களுடன் சேர்ந்து முகமூடி அவர்களும் அதனை எதிர்த்தார்....அதை பற்றியதான பதிவு நான் எழுதி இருந்தபோதும் சிறுபான்மை இனத்தை சேர்ந்த என்னுடைய பதிவில் தன்னுடைய பின்னூட்டம் வைப்பது இழுக்கு என்பது போல பொன்ஸ் பதிவில் தன்னுடைய கருத்தை "மொழிந்தார்"...இவனுக்கெல்லாம் என்ன நான் பின்னூட்டம் போடுறது என்பது போன்றதொரு அலட்சிய மனபாங்கு என்றும் கொள்ளலாம்...

சுகுணா பற்றி அவர் சர்வேசன் பதிவில் இட்ட பின்னூட்டம் தான் விவகாரத்தின் ஆரம்பம்...துடிக்கும் மீனை ஷூக்காலில் இட்டு நசுக்கினால் அது நிரந்தரமாக துடிப்பதை நிறுத்திக்கொள்ளும் இல்லையா...அதே போலத்தான் அந்த பின்னூட்டமும் இருந்தது...ஆஹா விழுந்துருச்சுடா, போடுறா ஒரேப்போடு...சுத்தமா ஒழிஞ்சுபோகும்...என்பது போல....



இன்னோரு உதாரணம் சொல்லவேண்டும் என்றால், ஊர் நாட்டில், மஸுல் லோடிங் கன் எடுத்துக்கொண்டு அதிகாலை முயல் வேட்டைக்கு போகும்போது, சுட்டால் முதலில் விழுந்துவிடும்...ஆனால் சில, தவ்வி தவ்வி தன்னுடைய இறுதி தப்பிக்கும் முயற்சியை தொடரும்...அப்போது லைட்டாக மருந்து போட்டு, கொஞ்சமாக பால்ரஸ் ( ரவைன்னு நாங்க சொல்லுவோ) போட்டு டப்புனு ஒரு முறை சுட்டால் டோட்டல் டேமேஜாகிப்போயிரும்..அது தான் முகமூடி அவர்கள் செய்ய முயற்சித்தது...

இன்றைக்கு இரண்டு டென்ஷன் பதிவுகள் வெளியாகி ஓஹோவென்று ஓடுகிறது...இதேபோல் தான் அரவிந்தன் நீலகண்டன் அவர்களும் என்னை பக்கம் பக்கமாக திட்டி பதிவிட்டார்...ஏழு பக்க பதிவில் அறுபத்தேழு முறை செந்தழல் ரவி என்று விளித்து எல்லா முறையும் திட்டினார்...பிற்பாடு நன்பராகி, சகோதரரே என்று விளித்து மடல் கூட அனுப்பினார்...அதை விடுங்க...இது எங்க போயி முடியுமோ ?

வலையில் அடுத்த பிரச்சினை, இன்றைக்கு சாதியை சொல்லி திட்டினார் என்பதற்காக வெளியேறுகிறேன் என்று சொல்பவர்களே, நேற்று எங்களை பார்ப்பான் என்று சொல்லி திட்டியபோது எங்கே போயிருந்தீர்கள் என்று கேட்கிறார்கள்...முகமூடி அவர்கள் கேட்கிறார்...நன்பர் என்றென்றும் அன்புடன் பாலா கேட்கிறார்...

மலேசிய போலிடோண்டு மூர்த்தி, காசியை / செல்லாவை, தலித்து என்று திட்டியபோது நீங்கள் கேட்டீர்களா ? முகமூடி அவர்கள் கும்பகர்ண உறக்கத்தில் இருந்து எழுந்து பதிவிட்டாரா ? கி.கூ.கே.கே அனானி என்றென்றும் அன்புடன் பாலாவுக்கு மடல் அனுப்பினாரா ? அதை நன்பர் பாலா பதிவிட்டாரா ?

என்னைப்பொறுத்தவரை நன்பர்களாக இருப்பதாலேயே அவர்களது எல்லா கருத்துக்களையும் ஆதரவளிக்கவேண்டும் என்று கிடையாது.....பார்ப்பணர்கள் / பார்ப்பணரல்லாதோர் / ஹிந்து / முஸ்லிம் / கிருத்துவர் / ஈழம் என்ற எந்த பதிவரையும் சாதி, மதம்,மொழி போன்றவற்றை கொண்ட துவேஷ மொழி மொழிந்தது கிடையாது...

குறிப்பிட்ட சில பதிவர்களை நெருங்கிய நன்பர்கள் சிலரே அவர்களது சாதியை சொல்லி கிண்டல் செய்வதை கண்டு மனவேதனை அடைந்திருக்கிறேன்...என்னுடைய இந்த பதிவில் கிண்டலும் செய்திருக்கிறேன்..

///பொட்டீக்கடை: ( வாயில் வைத்திருக்கும் கிளாஸை எடுத்துக்கொண்டே..) அம்பி கூப்டேளா ?
லக்கிலூக் : பொட்டீக்கடை...நீங்க பார்ப்பணரா ? சொல்லவே இல்ல...இனிமே நமக்கு ஒட்டோ உறவோ கிடையாது...தள்ளி உக்காருங்க...
பொட்டீக்கடை: அது இவ்ளோ நேரம் தெரியலையா...அப்ப என் தட்ல இருந்து தின்ன மிச்சர வாந்தி எடு...////

பள்ளிக்காலத்தில் கம்யூனிட்டி சர்ட்டிபிகேட்டில் போடப்பட்ட சாதி தகவல், பிறகு கல்லூரி காலத்தில் சுத்தமாக மறந்தே போனது...பிறகு அலைச்சல், வேலை, உள்நாடு, வெளிநாடு என்று சுற்றியதில் சாதி என்ற ஒரு கருமம் இருப்பதே மறந்துபோனது....வலைப்பூக்களை பார்வையிட வந்தபோது அங்கொன்றும் இங்கொன்றுமாக சாதீயம் பற்றியதான பதிவுகள், பார்ப்பான், பார்ப்பணீயம், வெங்காயம், பெருங்காயம் போன்ற பதிவுகளை சந்திக்கநேர்ந்தது...ஆரம்பத்தில் எரிச்சலோடு மூடிவிடுவது வழக்கம் என்றாலும், சில பதிவுகளை படிக்க ஆரம்பித்தேன்....எப்படி இரட்டை குவளை முறை நூற்றுக்கணக்கான டீக்கடைகளில் இன்றும் இருக்கிறதாக பெரியார் திராவிடர் கழக சுற்றறிக்கை சொல்கிறதோ அதே போல் சாதி என்ற கசட்டு மனோபாவம் ஒவ்வொருத்தரின் உள்ளத்திலும் இருப்பதாகவே எனக்கு தெரிகிறது...

பைபிள் 'கதை'யில் ஆதாம் பாவம் செய்யாதபோது இறைவனை நிர்வாணமாக சந்திப்பதாகவும், பிறகு ஆப்பிளை தின்று பாவம் செய்துவிட்டபிறகு, நிர்வாணம் உறுத்தலாக, மரத்துக்கு பின்னால் ஒளிந்துகொண்டு பேசுவது போலவும், வலைப்பதிவுகளுக்கு வந்துவிட்டால் சாதி மனோபாவம், சாதிப்பற்று, சாதியை சொல்லி திட்டி புண்படுத்துதல் என்ற 'விட'யங்கள் தன்னாலே வந்துவிடும் போல...

பெரியார் பற்றிய திராவிட தமிழர்கள் தளத்தில் இருக்கும் இந்த கவிதையின் ஸ்னிப்பட் பாருங்கள்...

//பார்ப்பன எதிர்ப்பே
பார்ப்பனீய தத்துவ எதிர்ப்பே
தவிர்த்த ஆளெதிர்ப்பில்லையே!

ஆளடிக்க சொல்லவில்லையே
ஆள் பேசும் பார்ப்பனீய
தத்துவமடிக்க தலைப்பட்டாரே!
///

இது தான் என்னுடைய நிலை...

என்னைப்பொறுத்தவரை சாதி, மத அடையாளங்களில் இருந்து வெளிவரவே விரும்புகிறேன்...கிட்டத்தட்ட ஏழெட்டு ஆண்டுகளாக எந்த கடவுளையும் கும்பிடவில்லை...மற்றவர்களை அழைத்துப்போய் கோவில் காட்டுவது தனி...எங்களூர் (திருக்கோவிலூர்) உலகளந்த பெருமாள் கோயிலுக்கு மூன்று மாதம் முன்பு என்னவளை கூட்டிக்கொண்டுபோய் காட்டி பூ வாங்கியதோடு சரி...(பத்துரூபாய்க்கு மூல கிருகம் வரை செல்லலாம்)...

போலி டோண்டு மூர்த்தி கொடுத்த லெட்டரை எடுத்துக்கொண்டு நன்பர் அருண் நிறுவனத்துக்கு சென்று அவரை பணியில் இருந்து நீக்கியது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம், போலி டோண்டு மூர்த்தியுடன் தாயா புள்ளையா பழகியது...மேலும் நான் ஆபாசமாக அனைவருக்கும் எழுதியதாக போலி டோண்டு மூர்த்தி தன்னுடைய பதிவில் எழுதி இருப்பதும் சுத்த ஹம்பக்..கீழ்கண்ட ஸ்க்ரீன் ஷாட் பாருங்கள்...டோண்டு மனைவி மகள் புகைப்படத்தை துளசிம்மா இவனுக்கு அனுப்பினாங்களாம்...என்ன ஒரு லூசுத்தனம்...




அவனது பெயரை போலி டோண்டு என்று எழுதாமல் மூர்த்தி என்றே அனைவரும் எழுதவேண்டும்...சுகுணா ஆரம்பித்துவிட்டார்...இப்போது இந்த ஸ்க்ரீன் ஷாட் பாருங்கள்...கொஞ்சம் கொஞ்சமாக மூர்த்தி என்ற மின்னஞ்சலில் இருந்தே தன்னுடைய அசிங்க மடல்களை அனுப்ப ஆரம்பித்த காலம் - இப்பத்தான் - மே 2007...



இவனால் வலையுலகை விட்டு விலகி சென்ற மாயவரத்தான் (இவர் எழுதிய முன்னூத்து சொச்ச இடுகையும் சூடான இடுகைதான்) , லண்டன் ஜெயக்குமார் போன்றவர்கள் இதுபோல பல விஷயங்களை திரட்டி வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்...அவர்கள் உதவியோடு மேலும் சில பல ஸ்க்ரீன் ஷாட்களை போடத்தான் போகிறேன்...

சொல்லப்போனால் மாயவரத்தான் தான் முதலில் போலி டோண்டு, மூர்த்தி, விடாது கருப்பு அனைத்தும் மூர்த்தியின் வேலைதான் என்று டெக்னிக்கலாக கண்டறிந்து வெளிப்படையாக சொன்னவர்...ஆனால் அவர் எந்த ஆதாரங்களையும் அப்போது வைக்கவில்லை...

போலி டோண்டுவின் நம்பிக்கையை பெறலாம், அவன் எண்ணங்களை அறியலாம், அதன் மூலம் வலையுலகின் நீண்ட கால பிரச்சினைக்கு ஒரு முடிவை எட்டிவிடலாம் என்று அவனுடன் மடல் தொடர்பில் இருந்தது உண்மை...டோண்டுவுக்கும் இந்த விஷயம் தெரியும்...அவ்வப்போது டோண்டுவை தொடர்புகொண்டு பேசுவேன்...மற்ற நன்பர்களிடமும் எச்சரிக்கையாக இருக்கச்சொல்லி அட்வைஸ் செய்வேன்....இண்பாக்ட் போலி டோண்டு முகவரிக்கு பல மின்னஞ்சல்கள் போட்டேன்...மூர்த்தியை சி.சியில் வைத்து, டூண்டு ஐடிக்கு மின்னஞ்சல் போடுவேன்...இரண்டையும் ஒரே ஐ.பியில் இருந்து திறந்து பார்ப்பான்...பிறகு மூர்த்தி மின்னஞ்சலில் இருந்து - ஏன் இதை எனக்கு அனுப்பி வைத்தீர்கள் என்று காட்டமாக ஒரு கேள்வி வரும்...எல்லாம் சைக்கோத்தனம்...

நான் நடத்திவந்த இரவுக்கழுகு தளத்தை பெயரிலிக்கு விற்று அதன்மூலமாக வேலைவாய்ப்பு தளத்தை முதல் பக்கத்தில் காட்டுமாறு செய்தேனாம்...இதுவும் மூர்த்தியின் சைக்கோ காமெடி தான்...பெயரிலியிடம் தான் கேட்கவேண்டும்...எவ்வளவுக்கு வாங்கினார் என்று...

மீண்டும் முகமூடி அவர்களின் விஷயத்துக்கு வருகிறேன்...அவர் என்னைப்பற்றி பதிவிட்டதும் ஆபாச மூர்த்தி பல பின்னூட்டங்களை என்னுடைய சாதி, மதம், குடும்பம் பற்றி எழுதியபோதும் அதை எல்லாம் வெளியிடாமல் தன்னுடைய பெருந்தன்மையை காட்டினார், அதற்கு அவருக்கு நன்றி...

எப்போதும் என் மீதான நம்பிக்கையை அருணோ, லக்கியோ, டோண்டு ராகவனோ, சுகுணாவோ, மற்ற மூத்த பதிவர்களோ, இளைய பதிவர்களோ, பெண் பதிவர்களோ இழக்கவில்லை என்பதை இந்த பிரச்சினைகளின் போது அவர்கள் அனுப்பிய பல மின்னஞ்சல்கள் தெளிவாக்கின...எல்லோருக்கும் என்னுடைய நன்றி....என் மீதான உங்கள் அனைவரின் நம்பிக்கைக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்...

எப்போதும் போல என்னுடைய வழியில் நான் தொடருகிறேன்...நான் நானாகவே...!!!!

16 comments:

SurveySan said...

சூடோ சூடு!

நான் தெரிந்த கொள்ள விழைவது, யாரந்த மற்ற அல்லக்கைகள்?

:)

ரவி said...

சர்வேஷா...ஒன்னரை லைன் பின்னூட்டத்திலொரு உள்குத்தை திருவள்ளுவர் மாதிரி வெச்சிருக்கிறேப்பா...

SurveySan said...

haha,
seriously, someone should leak all names and put an end to this mess. one day its going to come out anyway
;)

முகமூடி said...

இந்த வார விவகாரம் ?? அந்த மாதிரி நான் எதுவும் எழுதிய ஞாபகம் இல்லை. இருந்தாலும் ரவீந்திரன் அந்தோணிசாமி என்பது உங்கள் மின்னஞ்சல் "மூலமாக" நான் டீகோட் செய்தேன் என்பதெல்லாம் கற்பனை குதிரை தறி கெட்டு அலைவதன் விளைவே. அது ஏற்கனவே ஆங்காங்கே படிக்க கிடைத்த விஷயம்தான். அதுவுமில்லாமல் ரவீந்திரன் அந்தோனிசாமி என்று எழுதுவதன் மூலம் நான் ஒரு பாஸிஸ்டாக கருதப்படுவேன் என்பதுவும் ஒரு புதிய செய்திதான்.

பொன்ஸ் பதிவில் எழுதியது நான் அவர் எழுதியதன் விளைவாக எழுதிய பின்னூட்டம். 'முதல் முதலில்' மகாலட்சுமி மேட்டரை எழுதியவர் என்பதால் அதை கொண்டு வந்து உங்கள் பதிவில் போட வேண்டும் என்பதைத்தான் கட்டற்ற பின் வெளி என்பதா?

சுகமளிக்கும் கூட்டம் என்பது தன்னைத்தானே சொறிந்து கொண்டு சுகமாக இருக்கும் என்பதை குறிக்க எனக்கு கிடைத்த வார்த்தை என்பதையும் அதை எழுதும்போது பெரியார் மீது ஆணையாக நான் செந்தழலை நினைத்து பார்க்கவில்லை என்பதையும் அறியத்தருகிறேன். (எப்ப பாத்தாலும் ரவிய பத்தியே "நான்" நினைக்கிற காலம்னு ஒண்ணு வந்தா... அய்யோ நினைக்கவே முடியலையே... நான் பாவமில்லையா)

// சுகுணா பற்றி அவர் சர்வேசன் பதிவில் இட்ட பின்னூட்டம் தான் விவகாரத்தின் ஆரம்பம்...துடிக்கும் மீனை ஷூக்காலில் இட்டு நசுக்கினால் அது நிரந்தரமாக துடிப்பதை நிறுத்திக்கொள்ளும் இல்லையா...அதே போலத்தான் அந்த பின்னூட்டமும் இருந்தது...ஆஹா விழுந்துருச்சுடா, போடுறா ஒரேப்போடு...சுத்தமா ஒழிஞ்சுபோகும்...என்பது போல.... // காந்தி மகான் படம் போட்டு ஒரு பதிவு வந்ததே. அது அரைபிளேடை "போடுறா ஒரேப்போடு" என்று சுத்தமா ஒழிக்க போட்ட பதிவு என்று ஊரணி கிணத்தாண்ட பேசிக்கிறாங்களே.. (உடனே அரைபிளேடும் நானும் ஒரே ஜாதி அதனாலதான் அவருக்கு வக்காலத்து வாங்கறேன்னு கிளப்பிறாதீங்க..)

// முதல் முதலில் போலி டோண்டு மூர்த்தியை உருவாக்கி // திருந்துங்கடே.. உளறுவதுன்னு முடிவு செஞ்சா அதுல செந்தழல் உட்பட எல்லாருக்கும் பங்கிருக்குன்னு ஒத்துக்கணும் ஓகே?

மற்றபடி காசியை எதிர்த்தது, ஓசையை எதிர்த்தது காலத்தில் எல்லாம் நான் ஓடி வந்து எதிர்க்கவா? எனக்கே தினமும் டஜன் கணக்கில் அருமைத்தமிழில் பின்னூட்டங்கள் வந்துகொண்டிருந்தது/க்கிறது என்பதையும் அதன் விளைவாக மாடரேஷன் கருமத்தை கூகிள் அறிமுகப்படுத்திய உடனேயே போட்ட துர்பாக்கியசாலி நான் என்பதையும் முதன் முதலில் டோண்டுவுக்கு அப்புறம் எனக்குத்தான் போலி வெப்சைட் ஆரம்பிக்கப்பட்டது என்பதையும் அதை பெரிய அளவு ப்ரப்பகாண்டா (சரியாக படிக்கவும்) பண்ணாமல் நான் பாட்டுக்கு கூகிள் நண்பர் ஒருவர் மூலம் அகற்றினேன் என்பதுவும் உங்களுக்கு கொசுறு செய்திதான். எப்போதோ மாயவரத்தான் போலி விஷயங்களை அம்பலப்படுத்திய போது, ஆதாரம் எல்லாம் தந்தார், ஆனால் நம்பத்தான் யாரும் தயாராயில்லை. இன்று காந்தி வேசம் போடும் பலர் உட்பட அவரையே தாக்கினார்கள். மேலும் போலி விவகாரம் குறித்து என் செயல்பாடுகள் நிறைய பேருக்கு தெரியும். ஏதோ ஒரு வகையில் இந்த விவகாரம் முடிவுக்கு வந்தால் சரிதான் என்பதாலும் நான் கருத்து/விமர்சனம் சொல்ல ஆரம்பித்தால் அது அனாவசியமான பல விஷயங்களை கிளறி இன்றைய தார்மீக எதிர்ப்பாளர்களுக்கு எதிராக அமைந்து அது சூழலுக்கு பங்கமாக அமையும் என்பதாலேயே நான் இது குறித்து எல்லாம் எதுவும் சொல்வதில்லை.

யாரும் இங்கே "எங்களை பார்ப்பான்னு கூப்பிட்ட போது எங்க போயிருந்தீங்க" என்று கேட்கவில்லை. அப்பிடியெல்லாம் ஒருத்தரு கேக்க முடியுமா? கேட்கிறது என்னன்னா ஒரே ஆளு பார்ப்பான சாதின்னா ஒரு ஸ்டாண்டர்டும் மத்த சாதி - அது அரசாங்கத்தால கிட்டத்தட்ட ஃபார்வார்டு சாதியில இருக்கும் ஆண்டை சாதின்னாலும் - ஆளுங்கன்னா ஒரு ஸ்டாண்டர்டும் வச்சி பேசறத பத்திதான். அது புரியலையின்னா ஒண்ணும் செய்ய முடியாது.

சாதி மறுப்பு குறித்து இன்று செந்தழல் ரவியும் போன வாரம் சுகுணாவும் விடும் ஸ்டேட்மண்டை நான் 2005லேயே விட்டவன். ஆனால் என்னை எப்பொழுது பார்த்தாலும் சாதி சொல்லித்தான் திட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதில் வேடிக்கை என்னவென்றால் என் சாதி இதுதான் என்று கற்பனை புருடா விடுபவர்கள் அப்படி ஒரு முடிவுக்கு வந்ததற்கான காரணங்கள்.

மேலும் பல இமெயில்கள், தகவல்கள், ஸ்க்ரீன்ஷாட்ஸ் - எந்த விதத்திலும் அவனோடு சம்பந்தப்படாத என்னை, அடிவருடித்தனத்தின் எச்ச புத்தி அவன் தனித்துவம் என்பதால் மட்டுமே கலாய்த்த தமிழ் பார்டெண்டர் யோக்கியவான் யார் என்பதற்கான ஆதாரம் உட்பட - என் வசமும் இருக்கிறது. அது குறித்து எல்லாம் நான் பேசுவதில்லை. சீக்கு பட்ட தமிழ் வலைப்பூ சூழலில் எல்லாமே அனாவசியம் என்று கருதுவதால். நீங்க போலியின் அல்லக்கை என்று நான் நம்பவில்லை. ஆனால் அவன் நம்பிக்கைக்கு உட்படுவதற்காக சென்ற தூரம் ரொம்பவும் அதிகம் என்றும் அது என்னை பொருத்த வரை அருவருப்பாக இருக்கிறது என்பதையுமே நான் சொல்லி வந்திருக்கிறேன். (ஆனால் இன்று எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவிக்கும் லக்கிலுக் போலியின் அல்லக்கை என்பது தனிப்பட என் நம்பிக்கை)

இன்னமும் உங்கள் மற்றும் ஒருசில 'பார்' போற்றும் பதிவாளர்கள் குறித்த இரு டஜன் பின்னூட்டங்கள் ரிஜக்டட் ஸ்டேடஸுக்கு முந்தைய ஸ்டேஜில் இருக்கிறது. அதையெல்லாம் வெளியிடாமல் இருப்பது - ஒரு சில மொக்கை பதிவுகளின் பின்னூட்டங்களில் வெளிவரும் தகவ்ல்களை பார்க்கும்போது - என் பெருந்தன்மைதான் என்பது குறித்து எனக்கே சந்தோஷம்தான்...

மற்றபடி "எப்போதும் போல என்னுடைய வழியில் நான் தொடருகிறேன்...நான் நானாகவே" என்பது சந்தோஷம்தான். ஆனால் எப்போதும் அடுத்தவர் வழியில் குறுக்கே கார் ஓட்டும் நம் வழியில் என்றைக்காவது ஒருத்தன் ஒரே ஒரு முறை ஏர் ஓட்டத்தான் செய்வான் - என் அழுவாச்சி காவிய பதிவும் ஒரு தன்னிலை விளக்க பதிவுதான் என்பதையும் அதை எழுதும்போது நிசமாவே எனக்கு கோவமோ மூலமோ இல்லை என்றால் நம்புவீர்களா - அப்படி நடக்கும்போது நம்மாலும் தன்னிலை விளக்கங்கள் கொடுக்காமல் இருக்க முடிவதில்லை என்பதையும் புரிந்துகொண்டால் சரிதான். ஓகே மேட்? கூல்...

பி.கு: இதை ஒரு தனி மொக்கையாக போடாமல் ஒரு பின்னூட்டமாக போடுவதன் காரணம் புரியாவிட்டாலும் பரவாயில்லை.

லக்கிலுக் said...

:-)))))))))))))

ரவி said...

லக்கிலூக்,

ஒரு லைனுக்காக முழு பின்னூட்டதையும் அழிக்க முடியாது, உங்கள் தரப்பை நீங்க :)))))) போட்டு சொன்னது சரியில்ல...

SurveySan said...

//சீக்கு பட்ட தமிழ் வலைப்பூ சூழலில் எல்லாமே அனாவசியம் என்று கருதுவதால். நீங்க போலியின் அல்லக்கை என்று நான் நம்பவில்லை. ஆனால் அவன் நம்பிக்கைக்கு உட்படுவதற்காக சென்ற தூரம் ரொம்பவும் அதிகம் என்றும் அது என்னை பொருத்த வரை அருவருப்பாக இருக்கிறது என்பதையுமே நான் சொல்லி வந்திருக்கிறேன். (ஆனால் இன்று எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவிக்கும் லக்கிலுக் போலியின் அல்லக்கை என்பது தனிப்பட என் நம்பிக்கை) //

கிட்டத்தட்ட, my thought are aligned to the above lines.
I am sure, many others as well

Mugamoodi, good comment.

Ravi, good post ;)

;)

லக்கிலுக் said...

//ஒரு லைனுக்காக முழு பின்னூட்டதையும் அழிக்க முடியாது, உங்கள் தரப்பை நீங்க :)))))) போட்டு சொன்னது சரியில்ல...//

சொல்வதற்கு ஒன்றுமில்லை என்பதற்காகவே ஸ்மைலி போட்டேன். உண்மையில் பலமுறை வலைப்பதிவுகளிலும், தனிப்பட்ட பதிவர் சந்திப்புகளிலும் பேசிப்பேசி புளித்துப் போன விஷயத்தை திரும்ப திரும்ப பேசினால் நானும் மசோகிஸ்ட் ஆகிவிடுவேனோ என்ற பயம் இருக்கிறது.

இவ்விவகாரத்தை பொறுத்தவரை என்னை சில பேர் வில்லனாகவும், சில பேர் கதாநாயகனாகவுமே எண்ணுகிறார்கள் என தெரிகிறது. நல்லவேளையாக யார் கண்ணுக்கும் காமெடியனாக (குறைந்தபட்சம் இந்த விவகாரத்திலாவது) தெரியாமல் இருக்கிறேன் என்பது குறித்து மகிழ்ச்சி.

இப்பதிவு குறித்து : நிறைய இடங்களில் "முகமூடி அண்ணாத்தே" ஸ்டைலில் திறமையாக எடிட்டிங் செய்யவேண்டியிருக்கிறது :-))))))

லக்கிலுக் said...

அப்புறம் ஒண்ணு சொல்ல மறந்துட்டேன். பெங்களூரில் உங்க பிளாக்கர் அக்கவுண்டை பிளாக் செய்து வைத்தது போல கொரியாவிலும் உங்கள் கம்பெனி செய்து வைத்திருந்திருக்கலாம் :-)))

SurveySan said...

interesting...

anyway, I had serious plans to start blogging in my real name back in Aug 15th, but

சீக்கு பட்ட தமிழ் வலைப்பூ சூழலில் எல்லாமே அனாவசியம் ;)

முகமூடி said...

// உண்மையில் பலமுறை வலைப்பதிவுகளிலும் // அப்படியா? அப்படியா? அப்படியா? - போதுமான அளவு ஸ்மைலிகளை தூவி இளஞ்சூட்டில் இறக்கி வைக்கவும்.

மத்தபடி இந்த வில்லன், கதாநாயகன், காமெடியன் பத்தியெல்லாம் கவலப்படாமல் ஜாலியாக இருக்கவும்.. வலைப்பதிவு மூலமா கிடைக்கிற இமேஜ் பத்து பைசாவுக்கு பிரயோசனம் இல்ல.. unless நீங்க வலைப்பதிவு மூல(தன)மா பொண்ணு தேடறீங்கன்னா தவிர...

லக்கிலுக் said...

//மத்தபடி இந்த வில்லன், கதாநாயகன், காமெடியன் பத்தியெல்லாம் கவலப்படாமல் ஜாலியாக இருக்கவும்.. வலைப்பதிவு மூலமா கிடைக்கிற இமேஜ் பத்து பைசாவுக்கு பிரயோசனம் இல்ல.. unless நீங்க வலைப்பதிவு மூல(தன)மா பொண்ணு தேடறீங்கன்னா தவிர...//

ஜூனியருக்கு நல்ல அட்வைஸ் தந்த சீனியருக்கு நன்றி!

உங்களுக்கு பொண்ணு கெடைச்சிடிச்சா? (ஒரு ஸ்மைலி இங்கே போட்டுக் கொல்லவும்)

உண்மைத்தமிழன் said...

குட்..
வெரிகுட்..
பிரமாதம்..
பலே..
சூப்பர்..
சிம்ப்ளி சூப்பர்..
கொஞ்சுறதுன்னா இப்படித்தான் கொஞ்சணும்..
அடிச்சுக்குறதுன்னா இப்படித்தான் அடிச்சுக்கணும்..
பேசுறதுன்னா இப்படித்தான் பேசணும்..
சண்டை போடுறதுன்னா இப்படித்தான் சண்டை போடணும்..
கடிக்கிறதுன்னாலும் இப்படித்தான்
'பின்னூட்டத்துல' வந்திருக்குற மாதிரி கட்டிக்கணும்..

முடியல கண்ணுகளா.. முடியல..

enRenRum-anbudan.BALA said...

ரவிக்காக இந்த விளக்கம்:

//வலையில் அடுத்த பிரச்சினை, இன்றைக்கு சாதியை சொல்லி திட்டினார் என்பதற்காக வெளியேறுகிறேன் என்று சொல்பவர்களே,
நேற்று எங்களை பார்ப்பான் என்று சொல்லி திட்டியபோது எங்கே போயிருந்தீர்கள் என்று கேட்கிறார்கள்...முகமூடி அவர்கள்
கேட்கிறார்...நன்பர் என்றென்றும் அன்புடன் பாலா கேட்கிறார்...
//
இல்லை, கி.அ.அ.அனானி அப்படி எதுவும் கேட்கவில்லை, அவர் கேட்பது, சாதி சொல்லி (சாதி புத்தியை முன்வைத்து!)
திட்டுவது (பாப்பார ஜாட்டான் என்று என்னை ஒரு தடவை குறிப்பிட்டது!) சுகுணாவுக்கு ஈஸியாக கை வரும்போது, தன்னை ஒருவர் 'சாதி புத்தி உடையவர்' என்று கூறி விட்டார் என்று அங்கலாய்ப்பதும், அதானால் இனிமேல் பதிவுகள் இட மாட்டேன் என்று ஓடுவதும் ஏன், என்பதைப் பற்றித் தான்!

எனது அந்தப் பதிவில் (http://balaji_ammu.blogspot.com/2007/09/355.html) கி.அ.அ.அ தெளிவாகவே ஒன்றைக்
குறிப்பிட்டுள்ளார்:

"இப்படி தெரியாத ஒருவரை அந்த சாதியை பிடிக்காது என்ற காரணத்துக்காக " சாதியுடன் சம்பந்தப் படுத்தி " எழுதினீர்களே
உங்களைப் பற்றி நங்கு அறிமுகமுள்ள..நேருக்கு நேர் சந்தித்துமுள்ள வளர்மதி குறிப்பிட்டுள்ளது சரியாகத்தானே இருக்கும் என்று
சிறுபிள்ளைத்தனமான தர்க்கம் செய்யப் போவதில்லை.. ஏனென்றால் நீங்கள் சாதீயத்திற்கும் (atleast பிராமணர்களுக்கும்) எதிரானவர் என்பதை உங்களுடைய எழுத்து மூலமாக நன்கு அறிந்தே உள்ளேன்"

எ.அ.பாலா

PKS said...

அன்புள்ள ரவி,

கருத்தாக்கங்களைத் தாண்டி எனக்கு இருக்கிற பல நண்பர்களில் நீங்களும் ஒருவர் என்ற என் இதுநாள் வரையிலான நம்பிக்கையின் அடிப்படையில் நான் எழுதுகிறேன். நீங்கள் சொன்னதுபோல போலி டோ ண்டு யார் என்று முதலில் கண்டுபிடித்துச் சொன்னது நண்பர் மாயவரத்தான் தான். அப்போது உங்கள் அருமை நண்பர்கள் பலரும் அதை நம்பவே இல்லை என்பதுதான் நிஜம். போலிடோ ண்டு குறித்த மாயவரத்தான் சேகரித்துப் பகிர்ந்து கொண்ட பல ஆதாரங்கள் இன்னமும் நான் உட்படப் பலரிடம் இருக்கின்றன. முகமூடி, நான், மாயவரத்தான் உள்ளிட்டப் பலர் மலேஷிய அதிகாரிகள் வரை இதைக் கொண்டு போயிருக்கிறோம். இதையெல்லாம் இவ்வளவு நாட்கள் வெளியே சொல்லாததற்குக் காரணம், எதையேனும் செய்துவிட்டுச் சொல்லலாம் என்பதுதானே தவிர வேறொன்றும் இல்லை. போலியைப் பிடிக்க கட்சி, கொள்கை, விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் இணைய வேண்டும் என்று நான் பொதுவில் வேண்டுகோளும் வைத்தது உண்டு. அப்போது நீங்கள், நண்பர் செல்லா, நண்பர் குழலி உள்ளிட்ட யாருமே இதைக் கண்டுகொள்ளவில்லை என்பது நிஜம். ஆனாலும் நீங்கள், செல்லா, குழலி ஆகியோர் போலிக்கு எதிராகக் குரல் கொடுக்க ஆரம்பித்தவுடன், கண்டிப்பாக அதை நான் ஆதரித்தேன். குழலி, செல்லாவுடன் அதுபற்றிப் பேசியிருக்கிறேன். அடுத்தவரைத்தான் போலி தாக்குகிறான் என்று அமைதியாக இருந்தால் நாளைக்கு அது அவர்களுக்கே ஆபத்தாக முடியும் என்பதைச் சொல்லி சொல்லி எனக்கு அலுத்துவிட்டதால், போலிக்கு எதிராக என் ஜென்ம விரோதி நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு என் முழு ஆதரவு உண்டு. இந்த முன்னுரை போதும்.

ஆனால், போலியுடன் உறவு வைத்துக் கொண்டதற்கு நீங்கள் சொல்கிற காரணங்கள், உங்களை நண்பராக நினைக்கிற என்னைப் போன்றோருக்கு நம்பிக்கை அளிப்பதாக இல்லை. அதேபோல, நண்பர் லக்கிலுக் போலிக்கு ஆதரவாகப் பலமுறை செயல்பட்டிருக்கிறார் என்பதற்கான ஆதாரங்கள் தனிமடலில் வலைப்பதிவுகளில் சுற்றிக் கொண்டுதான் இருக்கின்றன பலகாலமாக. உங்களுடைய பெங்களூர் நண்பர்களேகூடப் பலமுறை விவாதங்களில் நீங்கள் போலி சார்பெடுத்துப் பேசியிருப்பதை ஊர்ஜிதப்படுத்துகிறார்கள். அருணுடைய எந்தக் கேள்விக்கும் ஆதாரத்துக்கும் லக்கிலுக் நேரடியான தெளிவானப் பதில் சொல்லவில்லை. இவ்வளவு இருந்தும் போலிக்கு எதிரான உங்களின் எந்த நடவடிக்கையையும் நான் ஆதரிக்கிறேன். ஆனால், எந்த நம்பிக்கையின் அடிப்படையில் மாயவரத்தானோ மற்றவர்களோ அவர்களிடம் இருக்கிற ஆதாரங்களை உங்களைப் போன்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும் என்று யோசித்தீர்களா? தவறுகள் செய்வது மனித இயல்பு. வலைப்பதிவு நீதிமன்றம் ஏதும் இங்கே நடக்கவில்லை. தவறை ஒத்துக் கொள்பவர்கள் மற்றவர் மதிப்பில் உயர்கிறார்கள். தவறை மழுப்புகிறவர்களும், மறைக்கிறவர்களும், தவறுகள் குறித்து மௌனம் காக்கிறவர்களும் அவர்கள் மீதான சந்தேகத்தையே அதிகமாக்குகிறார்கள். நண்பர் லக்கிலுக்கும் நீங்களும் இதை யோசிக்க வேண்டும்.

டோ ண்டு ராகவன் அவர்கள் போலியால் பாதிக்கப்பட்டபோது நான் சொன்னது: "போலி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டால், எந்த நீதிமன்றத்துக்கும் நான் சாட்சி சொல்லவும், பாதிக்கப்பட்டவன் என்பதைச் சொல்லவும் வருகிறேன்". அதையே உங்களுக்கும் சொல்கிறேன். அதற்கு முன், நீங்களும் நண்பர் லக்கிலுக்கும் சந்தேக வளையங்களிலிருந்து உங்களை எப்படி விடுவித்துக் கொள்ளப் போகிறீர்கள் என்பதையும் அறிய ஆவலாக இருக்கிறேன். போலிமீதான சட்டப்பூர்வ நடவடிக்கை என்பது தந்தை காவல்துறையில் இருக்கிற உங்களுக்கோ, ஆளும் தி.மு.க.வின் இளைஞர் அணியில் இருக்கிற நண்பர் லக்கிலுக்குக்கோ பெரிய விஷயம் இல்லை. ஆனால், அதைச் செய்தீர்களா என்று தெரியவில்லை. வலைப்பதிவுகளில் அறிக்கை விடுவதால் என்ன ஆகிவிடும்? அப்படி ஏதும் செய்யாமல் இருந்தால் அதற்குக் காரணம், போலியுடன் சேர்ந்து மற்றவர்களும் மாட்டிக் கொள்வார்களோ என்று மற்றவர்களைக் காப்பதற்கா என்ற கேள்வியும் எங்களைப் போன்றவர்களுக்கு எழுகிறது.

உங்கள் தன்னிலை விளக்கங்கள் திருப்தியளிப்பதாக மட்டுமில்லாமல் ஏமாற்றம் அளிப்பதாகவும் இருக்கின்றன. உன் திருப்தியும் உன் ஏமாற்றமும் எனக்கு முக்கியமில்லை என்று நீங்கள் போகமுடியும். அது உங்கள் விருப்பம்.

அன்புடன், பி.கே. சிவகுமார்

dondu(#11168674346665545885) said...

அன்பு செந்தழல் ரவி,

நான் தெளிவாகவே உள்ளேன். போலி உங்களைப் பற்றி எழுதுவதை நான் லட்சியம் செய்யவில்லை. நீங்கள் உங்கள் பெயர் கெட்டாலும் பரவாயில்லை எனத் துணிந்து செயல் பட்டதால்தான் மூர்த்தி பிடிபட்டான் என்பதில் நான் தெளிவாகவே உள்ளேன். உங்கள் முன்னொரு பதிவிலும் அதே கருத்தில் பின்னூட்டமிட்டுள்ளேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....