Thursday, October 16, 2008

டாஸ்மாக்கில் பின்னவீனத்துவ எதிர் அழகியல் 'கவிஜ'ர்கள்

20/07/2007 8:03 AM க்கு பதிந்தது !!! சீனியர்களோட மேட்டர்களை வெச்சு நாங்க எப்படியெல்லாம் மொக்கை போட்டோம் என்று இள மண்ணுங்களான வால்,பரிச,கார்க்,அதிஷ,நர்சி,குசும் தெரிஞ்சுக்கங்க !!!!

நேராவிஷயத்துக்கு வந்திருவம்...சென்னையில் ஒரு பிரபல(?!) டாஸ்மாக்கில் பின்னவீனத்துவ எழுத்தாளர்களும் கவிஞர்களும் சந்தித்துக்கொள்ளும் நிகழ்ச்சியை பதிவாக்கி உங்கள் பார்வைக்கு வைப்பதில் பெருமிதம் கொள்கிறேன்...

பங்கேற்பாளர்கள்: வரவணையான், மிதக்கும்வெளி, பொட்டீக்கடை, லக்கிலூக், குழலி, ஓசை செல்லா, எஸ்.பாலபாரதி, மகேந்திரன் பெ, முத்து தமிழினி பின்னே ஞானும்..

பாலபாரதி (தமிழ் வலைப்பதிவு அமைப்பாளர்) : வாங்க எல்லோருக்கும் வணக்கம்...!!! இந்த கவிதை அரங்கத்துக்கு உங்களை வரவேற்பதில் பெருமகிழ்வு அடைகிறேன்...

மிதக்கும்வெளி:(சூடாக) யோவ் அப்ப தண்ணியடிக்க வரலையா...நான் போறேன்...

வரவணையான்: அட இருங்க தோழரே...ச்சும்மா மாம்ஸ் இப்படித்தான் வழக்கம்போல ஏதாவது உளறுவாரு...ஒரு க்வாட்டர் ஓல்டு மங்க ஓப்பன் பண்ணா மோந்து பார்த்து மயக்கமாகிருவாரு...

எஸ்.பா: ஏஏஏஏப்பா...வம்பிளுக்கறதுக்குன்னே வருவீங்களா...

வரவணை: சரி, விடுங்க மாம்ஸ்...தோழர் செந்தழல் ஒரு ஆப் ஓல்டு மங்கு, மூனு பீரு, ரெண்டு எம்ஸி க்வாட்டர் சொல்லுங்க...அப்படியே ரெண்டு பாக்கெட் வில்ஸ்...

செந்தழல்: சரி சொல்லிடுறேன்...ஏதாவது ஒரு கவிதை சொல்லுங்களேன்...

பொட்டீக்கடை: (உள்ளே புகுந்து)...நாந்தான் சொல்லுவேன் நாந்தான் சொல்லுவேன்...

செந்தழல்: சரி சொல்லித்தொலை...

பொட்டீக்கடை: தொண்டையை செருமிக்கொண்டு...

ஆய் போவது குழந்தை...
மூத்தாவிடுவது அந்த குழந்தையின் தம்பி...
முளையில் கிள்ளுவது முறையாகுமா...
இல்லை கிளையில் அள்ளுவது குறையாகுமா...

மிதக்கும்வெளி: ( டென்ஷனாகிறார்...) டேய்...எவண்டா உன்னை இந்தமாதிரி எல்லாம் கவிதை சொல்லச்சொன்னது...

செந்தழல் : ஏன் மிதக்கும் வெளி டென்ஷனாகிறீங்க...ஆய் கீய் முளை னு அசிங்கமா இருக்கா ?

மிதக்கும்வெளி: இல்ல...அசிங்கம் குறைவா இருக்கு...இதை எல்லாம் என்னால கவிதையா ஏத்துக்க முடியாது...

செந்தழல்: சரி அப்ப நீங்க சொல்லுங்க கவிதை...

மிதக்கும்வெளி: குவாட்டர் வந்திருச்சா ?

செந்தழல்: இதுவா கவிதை...

ஓசை செல்லா: ச்ச்சும்மா நச்சுன்னு இருக்கு மிதக்கும்வெளி..

மிதக்கும்வெளி: யோவ் நான் இன்னும் கவிதையே சொல்ல ஆரம்பிக்கல...குவாட்டர் வந்திருச்சான்னு கேட்டேன்...

செந்தழல்: இவரு இப்படித்தான்...நச்சின்னு இருக்கு பச்சையா இருக்குன்னு..நீங்க கவிதைய சொல்லுங்க மிதக்கும்வெளி...

மிதக்கும்வெளி: போஸ்ட் மார்டனிசத்துல பொடிப்பயலுகளா...இப்ப கேட்டுக்கோங்க...

யோனி இல்லாதது ஆகாது போனி
கொலை இல்லாதது போகாது விலை
குறி இல்லாமல் குவியாது கூட்டம்
முளை இல்லாத கவிதையில் ஏதடா கலை !!! ( மூனு ஆச்சர்யக்குறி)

வரவணையான் : கலக்கிட்டீங்க தோழர்...அருமை...இந்தாங்க சரக்கு...அடிங்க...இப்படித்தான் என்னுடைய பாலியல் தோழி ஒருத்தர் கவிதை சொல்லியிந்தார்..

செந்தழல்: (இடைமறித்து) பால்ய வயது தோழி எப்படி கவிதை எல்லாம் சொல்ல முடியும் ? அது என்ன அதிசய குழந்தையா ?

வரவணை: (கடுப்பாக), யேய் அது பாலியல் தொழில் செய்யும் பெண்...இப்ப சொல்றேம் பாரு அவங்க எழுதின கவிதையை...

படுக்கையில் படுத்தேன்..
பக்கத்தில் அவன்...
காலையில் எந்திருச்சேன்...
அந்த நாயை காணோம்...
அம்பது ரூபாய்க்கு ஒரு குட்டி..
அவன் எடுத்துட்டு போனதோ என்னோட நூறு ரூபா ஜட்டி...

இதெப்பிடி இருக்கு...என்று ரஜினி மாதிரி கில்லியடிக்கிறார் வரவணை...சிலிர்க்கிறார்கள் பொட்டீக்கடையும் மிதக்கும் வெளியும்...

இந்தப்பக்கம் செந்தழல் கடுமையாக கைத்தட்டிக்கொண்டிருக்கிறார்...பாலா முறைப்பாக பார்த்துக்கொண்டிருக்கிறார்...

முத்து தமிழினியும், குழலியும் உள்ளே நுழைகிறார்கள்..

முத்து தமிழினி: என்ன இங்க பிரச்சினை...என்ன இங்க பிரச்சினை...எதுவார்ந்தாலும் சொல்லுங்க பேசித்தீத்துக்கலாம்...

செந்தழல் : நீங்க தான் பிரச்சினை..இங்க எந்த பிரச்சினையும் இல்ல...எல்லாரும் கவிதை சொல்றாங்க...நாங்க ரசிக்கிறோம்..பாலா தான் உம்முனு இருக்கார்..என்னன்னு கேளுங்க..

குழலி : நீங்க இருங்க முத்து...நான் கேட்கிறேன்...என்ன பாலா சொல்லுங்க பாலா...

எஸ்.பா: ச்ச்சும்மா போறவரவன் எல்லாம் நான் வேலைபாக்குற கிழக்கு பதிப்பகத்தை குத்தம் சொல்லிக்கிட்டே இருக்கானுங்க பா...அந்த டென்ஷன்ல நான் இருந்தா, கவிதை சொல்றேன்னு இவனுங்க தொல்லை தாங்க முடியல..

குழலி : அப்ப ரெண்டு பிரச்சினைன்னு சொல்லுங்க..

லக்கிலூக்: எனக்கு மூனு பிரச்சினை...

முத்து.தமிழினி: லக்கி, உங்க பிரச்சினைய அப்பால பார்க்கலாம்...இப்ப பாலா பிரச்சினையை கவனிப்போம்...

செந்தழல்: ஆரம்பிச்சிட்டாருப்பா...இனி ஓஞ்ச வாழப்பழம் வாங்கிக்கொடுத்தாலும் முடிக்கமாட்டாரு...

முத்து.தமிழினி: தம்பி தழல்...என்னையா சொல்றீங்க...

செந்தழல்: அட உங்களை இல்லீங்க...மகேந்திரன..இங்க எவ்ளோ பிரச்சினை ஓடிக்கிட்டு இருக்கு...இந்த ஆளு பாட்டுக்கு மிச்சர் தின்னுக்கிட்டிருக்காரு பாருங்க...

முத்து.தமிழினி: அவர் பிரச்சினையை அப்புறம் கவனிக்கறேன்..நீங்க சொல்லுங்க பாலா...

பாலபாரதி: நேத்து புக்ஷாப்புக்கு ஒருத்தன் போனடிக்கறான்...என்னான்னு கேட்டேன்...நாதாரி...வீட்டு பாத்ரூம்ல தண்ணி வரலையாம்...அதுக்கு கிழக்கு பதிப்பகம் தான் காரணம்ங்கறான்...பக்கத்து பொட்டிக்கடையில சிகரெட் விக்கலைன்னு அதுக்கும் எங்க ஆபீஸ் தான் காரணமுன்னு பீடாக்காரன் சொல்றான்...ஒரு மனுசன் எவ்ளோதான் தாங்குறது...

பொட்டீக்கடை: ( வாயில் வைத்திருக்கும் கிளாஸை எடுத்துக்கொண்டே..) அம்பி கூப்டேளா ?

லக்கிலூக் : பொட்டீக்கடை...நீங்க பார்ப்பணரா ? சொல்லவே இல்ல...இனிமே நமக்கு ஒட்டோ உறவோ கிடையாது...தள்ளி உக்காருங்க...

பொட்டீக்கடை: அது இவ்ளோ நேரம் தெரியலையா...அப்ப என் தட்ல இருந்து தின்ன மிச்சர வாந்தி எடு...

( இரண்டு பேரும் சட்டையை பிடித்துக்கொண்டு கைகலப்பில் இறங்க பார்க்கிறார்கள்..)

ஓசை.செல்லா: (குறுக்கே விழுந்து தடுக்கிறார்)...ஏய் விடுங்கப்பா...ஆர்க்குட்ல கூட இப்படித்தான் அடிச்சுக்கறாங்க...

செந்தழல்: யாருய்யா இவரு சம்பந்தா சம்பந்தம் இல்லாம பேசிக்கிட்டு...

குழலி: ஏய், இட ஒதுக்கீடு பற்றி ஓசை செல்லாவுக்கு தெரிஞ்சதுல ஒரு சதவீதம் தெரியுமா உனக்கு ? ஆதிக்க சாதியின் அழிச்சாட்டியங்களும் ஆண்ட சாதிகளின் ஆணவங்களும் தெரியுமா உனக்கு ? மருத்துவர் அய்யாவின் பார்வைகள் பற்றி அவர் கண்ணால் பார்த்ததை விட அதிகம் பார்த்தவன் இந்த குழலி...

செந்தழல்: அண்ணா என்னை மன்னிச்சிருங்க, ஏதோ தெரியாம பேசிட்டேன்...கொஞ்சம் இந்த பக்கம் பாருங்க மகேந்திரன் பெ உர்ர்ர்ருனு உக்காந்திருக்கார்...என்னன்னு கேளுங்க...

குழலி: அப்படி சரண்டர் ஆகு தம்பி...சரி கேட்கிறேன்...மகேந்திரன் பெ வை நோக்கி..தம்பி உன்னை எனக்கு அவ்வளவு பரிச்சயம் இல்ல...நீங்க இட்லிவடைன்னு ஒரு பதிவு எழுதறீங்க சரியா...

மகி: யோவ் அது நானில்லை...

குழலி: அப்போ நீங்க சட்னிவடையா ?

மகி: யோவ் அதுவும் நானில்லையா...

குழலி: அப்போ நீங்க போலியா ?

மகி: அய்யோ அது நானில்லைய்யா...

குழலி: அப்போ நீங்க விடாது.கருப்பா ?

மகி: அய்ய்யய்ய்ய நான் அந்தப்பக்கம் போறதில்லையா...

குழலி: அப்ப யாருதாண்டா நீ...சொல்லித்தொலையண்டா...

மகி: ஏன்யா இவ்ளோ பேரச்சொல்லி நானா நானான்னு கேட்டியே...நீ மகேந்திரன் பெ யான்னு ஒருதடவையாவது கேட்டியா ?

செந்தழல்: ஆமா, மிச்சர வாயில புல்லா கொமுக்கிக்கிட்டிருந்தா எப்படி பதில் சொல்லமுடியும்...

முத்து.தமிழினி: இங்க என்ன பிரச்சினை...

செந்தழல்: ம்ம்...நீங்க தான் பிரச்சினை...

முத்து.தமிழினி: என்ன ???

செந்தழல்: ஆமாம், சரக்கு எதுவும் குடிக்காம மொக்கை போட்டுக்கிட்டே இருந்தா எப்ப வீட்டுக்கு போறது

ஓசை.செல்லா: எல்லாரும் அப்படியே குரூப்பா நில்லுங்க, ஆப்டிக்கல் ஜூம் போட்டு கிழக்கில இருந்து வடக்கா எடுத்தா திருடி எப்பக்ட் வரும்...

வரவணை: என்ன திருடியா ?

ஓசை.செல்லா: யோவ், அது 3D. காமிரா பற்றித்தெரியாத ஞான சூனியங்களிடம் எப்படி சொல்றது ?

லக்கிலூக்: செல்லா...ஞான சூனியம் அப்படீங்கற வார்த்தை வெஸ்ட் மாம்பலத்துல தான் அதிகம் உபயோகிப்பாங்க..அப்ப நீங்க அவாளா ? அப்படி இருந்தா நான் போட்டோவுல நிக்க மாட்டேன்...

செந்தழல்: இல்ல சேலத்து மாம்பழத்துல தான் வண்டு அதிகமா இருக்கும்...

மிதக்கும்வெளி: இல்லை...திருச்சி மாம்பழ சாலை மாம்பழத்துல அதிகம் வண்டு இருக்கும்...அங்கே இருந்து பக்கம் லால்குடி போனா கவிஞர் சல்மா இருப்பாங்க...பெண் கவிஞர்...நிறைய கெட்டவார்த்தை போட்டு கவிதை எழுதுவாங்க...

வரவணை மற்றும் பொட்டீக்கடை கோரஸாக: அப்ப வாங்க தோழர்...உடனே கோயம்பேட்டுல பஸ் புடிச்சு போய் பார்த்து பேசிட்டு வருவேம்...(க்வாட்டர் பாட்டில்களை கையில் எடுத்துக்கொண்டு அப்பீட் ஆகிறார்கள் மூவரும்) (குவாட்டரோடு அப்பீட்)

முத்து.தமிழினி: அங்க எதுவும் பிரச்சினை வராம பார்க்கனும்...நானும் கெளம்புளேன்...(அப்பீட்)

குழலி: நான் தோட்டம் வரைக்கும் போய் அய்யாவை பார்த்துட்டு வந்துடுறேன்..அன்புமணிக்கிட்ட இருந்து இப்போதான் தொலைபேசி அழைப்பு வந்தது...(அப்பீட்)

எஸ்.பா: நானும் அப்படியே போறேன்...கும்மிடிப்பூண்டி வலைப்பதிவர்கள் மாநாட்டுக்கு சிறப்பு அழைப்பாளரா கூப்டிருக்காங்க...(அப்பீட்)

மகேந்திரன் பெ: நான் யார் நான் யார் நீ யார்...யார் யார் என்பதே தெரியார்..அவர் தான் அவர் தான் பெரியார்...என்று பாடிக்கொண்டே கையில் வந்த சரக்கை (பீர் பாட்டில்னு நெனைக்கிறேன்) எடுத்துக்கொண்டு சொல்லிக்கொள்ளாமல் நைசாக நழுவுகிறார் ( அப்பீட்)

ஓசை.செல்லா: கோவையில ஒரு இடத்துல கும்மியடிக்கிற வேலை இருக்கு...நான் கிளம்புறேன்..(அப்பீட்)

செந்தழல்: யோவ் எல்லாரும் போனா பில்லு யாருய்யா குடுக்கறது ? யோவ் யோவ்...

" யாழாவழு குழுங்கப்பா..ழனியனுங்கழா...அந்துமழி நமேழ் ழொம்ப ழல்லவர்." என்று ஈனஸ்வரத்தில் ஒரு குரல்...

யாருடா அது மப்புல கவுந்தது...அலறி அடித்து பார்த்தால்...

ழக்கிழூக்...ச்ச்சே...லக்கிலூக்....

வரவணை சரக்கடித்த க்ளாஸை, ச்சும்மா சரக்கு வாசனை எப்படி இருக்கும் என்று முகர்ந்து பார்த்த லக்கிலூக்......

சரி லக்கிலூக்கை வீட்ல கொண்டுபோய் விடனுமே என்று கைத்தாங்கலாக பிடித்துக்கொண்டு எழுப்பினேன்...

சார் ஒரு கிங்ஸ் கிடைக்குமா...என்றபடி பக்கத்து டேபிள் பெரியவர் கையை நீட்டுகிறார்...

செந்தழல்: யோவ் இது என்ன பொட்டிக்கடையா...

இல்லைங்க...சிக்கனும் ஒரு பியரும் ஆர்டர் செஞ்சேன்...சிகரெட் வாங்க மறந்துட்டேன்...நானே வருஷத்துக்கு ஒருமுறை தான் குடிக்கறது...சிகெரெட் கொடுங்க சார் ப்ளீஸ்...உங்களை மகரநெடுங்குழைகாதன் காப்பாத்துவான் என்றபடி...

டோண்டு...!!!!!!!

40 comments:

கோவி.கண்ணன் said...

ரவி,

டயலாக் டெலிவரியும்...நக்கலும் சூப்பர்.

கலக்கல் ! (க்ளாசிலும் சேர்த்து)

:))

✪சிந்தாநதி said...

வரவர ரவி காமெடி மன்னனாகி வர்ரீங்கப்பா...அசத்தல். சிரித்துச் சிரித்து வயிறே.....

Ayyanar Viswanath said...

தாவு தீருது

:((

Unknown said...

Grrrrrrrrrrrrr

i will "beer" back

லக்கிலுக் said...

இந்த பதிவை படிச்சதுக்கு பதிலா பேசாம வெளியே மிதக்கும் அய்யாவோட கவிதைகள் ரெண்டை மனப்பாடம் பண்ணியிருக்கலாம் :-((((

Osai Chella said...

யோவ், நெசமாலுமே வயிறு வலிக்க சிரிச்சேன்யா!

முரளிகண்ணன் said...

7 1/2 காமெடி காலனி

முத்துகுமரன் said...

கலக்கல்.

இந்த கவிஞனை விட்டுட்டீங்களே :-(((((((((((

Osai Chella said...

தழலாரே, நாளைஎனது பதிவின் தலைப்பு.. "ரவியும் கருப்பும் சிங்கை பாரில் என்ன பேசினாங்க" தான்! கழக்குவோம்லா... சே.. கலக்குவோம்ல!

Anonymous said...

Ayya saami mudiyalaaa!!!!!

குசும்பன் said...

சூப்பர் காமெடி நன்றாக இருக்கிறது...

இருந்தாலும் அதில் ஒரே ஒரு குறை துபாய் பின்னவீனத்துவ கவுஜர் அய்யானார் பேரை சேர்காமல் விட்டதுக்கு துபாய் சங்கம் கண்டணங்கள் இங்கு பதிவு செய்கிறேன், அவரையும் ஓரு ஓர மாக சேர்த்துக்கொள்ளவும்.

ILA (a) இளா said...

பிரியுது வாத்யாரே எங்கே வரேன்னு! சோக்கா கீதுபா மேட்டரு. வயறு வலிக்க சிரிச்சேன்பா.

Anonymous said...

டாஸ்மாக்குக்கு நம்ம டோண்டு மாமாவையும் கூட்டிடுப்போயிருக்கலாம்.
கவிதையரங்கம் கள கட்டியிருக்கும். மிஸ் பண்ணீடிங்களே ரவி.

Anonymous said...

ரவி உங்களிடம் மிக நல்ல விசயங்கள் காமெடியாக வருமென எதிர்பார்த்தேன்

இதான் பின்னவீனத்துவமா ? ;))

Anonymous said...

Yappa ... mudiyalappaa

ரவி said...

பின்னூட்டமிட்ட கோவியார், சிந்தாநதி,அய்யனார், மகி, செல்லா, முரளி, குசும்பன்,இளா,அனைவருக்கும் நன்றி...

யாரும் கோவிச்சுக்க மாட்டீங்கன்னுதான் ஓட்டினேன்...நீங்க எல்லாரும் ரசிப்பீங்கன்னு தெரியும்..புண்படுத்துவதாக இருந்தால் மன்னிக்கவும்...

Unknown said...

//மகி: யோவ் அது நானில்லை...

குழலி: அப்போ நீங்க சட்னிவடையா ?

மகி: யோவ் அதுவும் நானில்லையா...

குழலி: அப்போ நீங்க போலியா ?

மகி: அய்யோ அது நானில்லைய்யா...

குழலி: அப்போ நீங்க விடாது.கருப்பா ?

மகி: அய்ய்யய்ய்ய நான் அந்தப்பக்கம் போறதில்லையா...

குழலி: அப்ப யாருதாண்டா நீ...சொல்லித்தொலையண்டா...

மகி: ஏன்யா இவ்ளோ பேரச்சொல்லி நானா நானான்னு கேட்டியே...நீ மகேந்திரன் பெ யான்னு ஒருதடவையாவது கேட்டியா ?//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
என்னைய வச்சி காமெடியா பன்றே
இருடி ஒன்ன வச்சிக்கிறேன்

Pot"tea" kadai said...

அடிக்காத சரக்கோடு
அப்பீட்டான நான்

கிழிந்த சொக்காயோடு
ரோட்டில் ஒரு நாய்

இந்த பதிவு படிச்சதுல இப்பிடி தான் எழுத வருது

வரண்டி வரேன்...திசம்பர்ல இருக்கு எல்லாத்துக்கும்....

Pot"tea" kadai said...

:)))))))))

என் டவுசரும் கிழிஞ்சிடுத்து இப்போதான்

Unknown said...

Comedy o comedy...

Naai kadikkum neenga comedylley kalakkurathukkum ethuvum sambandham irrukkaa

kalakkal redfire

வரவனையான் said...

ரவிம்மா, ( சித்திரம் பேசுதடி "சாரும்மா" ஸ்லாங்கில் )
உண்மையில் மனம் விட்டு சிரித்தேன். அதுவும் முத்து(தமிழினி)யை காலாய்த்தது கிளாசிக்.

நல்ல பிள்ளைல, அந்த தாய் பிகரு நெம்பர் கொடுமா

வெட்டிப்பயல் said...

கலக்கல்...

பல இடங்களில் விழுந்து விழுந்து சிரித்தும் அடி படவில்லை :-)

நாமக்கல் சிபி said...

//மகி: யோவ் அது நானில்லை...

குழலி: அப்போ நீங்க சட்னிவடையா ?

மகி: யோவ் அதுவும் நானில்லையா...

குழலி: அப்போ நீங்க போலியா ?

மகி: அய்யோ அது நானில்லைய்யா...

குழலி: அப்போ நீங்க விடாது.கருப்பா ?

மகி: அய்ய்யய்ய்ய நான் அந்தப்பக்கம் போறதில்லையா...

குழலி: அப்ப யாருதாண்டா நீ...சொல்லித்தொலையண்டா...

மகி: ஏன்யா இவ்ளோ பேரச்சொல்லி நானா நானான்னு கேட்டியே...நீ மகேந்திரன் பெ யான்னு ஒருதடவையாவது கேட்டியா ?//

ஒரு படத்துல நம்ம கஞ்சா கருப்பு ஒரு வீட்டுக்குள்ள புகுந்து அங்க சாப்பிட்டுக்கிட்டிருந்த போலீஸ் காரங்களை பார்த்து

நீங்க மருந்தடிக்குறவங்களா? எலக்ட்ரீசியனா ன்னு ஒவ்வொண்ணா கேப்பாரே! அது மாதிரி!

:)

சிவபாலன் said...

Ha Ha Ha..

Kuzhali & Mahendran - Nice one!

Ha Ha Ha.

Santhosh said...

Good Ones Ravi.

ப்ரியன் said...

பாலா வை சரியாக கலாய்க்காததால் இப்பதிவ்வை பா.க.ச புறக்கணிக்கிறது.

பா.க.ச தொண்டன்
சென்னை

Anonymous said...

Climax with Dondu is superb....

- யெஸ்.பாலபாரதி said...

ரவி.. ரொம்ப நல்லவன்னு ஆடிக்கடி சொல்லுவேன். அது மெய்யாலுமேன்னு காட்டீட்டிங்க..! எல்லோரையும் கலாய்த்த ரவி நீர் வாழ்க.. குடி இருக்குமட்டும் கோமான்னாக! :))

(அப்பாடா... எல்லாருக்கும் இனி சங்கம் தொடங்கீடலாம்... ப்ரியன்.. இருயா.. நீயும் மாட்டுவ ஒருநாள்..கிர்ர்ர்ர்ர்)

Anonymous said...

கொலைவெறியாரே!

நண்பர் மகி என் வலைப்பூவுக்கு ஐஎஸ்ஓ சர்ட்டிபிகேட் தந்திருக்கிறார். என் பிளாக் டெம்ப்ளேட்டில் பார்க்கவும். நீங்களும் உடனே அப்ளை செய்து வாங்கவும்!

அன்புடன்
லக்கிலுக்
செந்தழலார் கொலைவெறிப்படை, (இப்போதைக்கு) சியோல்.

Osai Chella said...

//செந்தழல் ரவி said...

பச்சையக்காவை கலைக்கண்ணோடு எடுத்தீங்க...

செத்தே முந்தி வந்திருந்தீங்கன்னா பந்து விளையாடிய புள்ளைங்களை எடுந்திருந்து இருக்கலாம்...//

அடி வாங்கற சூழ்நிலைன்னு வந்தா...

செந்தழல்:என்னாது பதிவா, பதிவரா... நம்மளுக்கு இதெல்லாம்என்னன்னே தெரியாதுங்க.. நான் இவரைப் பாத்ததே இல்லங்க.. நம்ம பொழைப்பே பொட்டி மாத்துரது .. ச்சே.. பொட்டி தட்டறது தானுங்க

மோ"கன்"தாஸ்: நம்மளுக்கு கம்ப்யூட்டர்னாவேஎன்னன்னு தெரியாதுங்க.. மல்லிகைப்பூ பாதிருக்கேன் வலைப்பூவெல்லாம் பாத்ததே இல்லங்க... நம்ம வேளையே மகளிருக்கு ஈயப்பாத்திரத்தையும் ஆம்பிளைகளுக்கு பித்தள பாத்திரமும் விக்கரதுதானுங்க

அசீப்: நான் துபாயில விவேகனந்தர் தெருவில இருக்கிறவனுங்க.. அவர் மாதிரியே கரீக்டான ஆளுங்க.. பந்தைத் தவிர வேறஎங்கனையும் பாக்கலங்க...
எல்லாரும் ஜூட்விட.. செல்லா அடிமேல் அடி வாங்க்கி "அடி காந்தா" ரேஞ்சுக்கு.. அடையாளம் தெரியாம லால்பாக்குல இருந்து வெளியே வரார்!

லக்கிலுக் said...

மேலே இருக்கும் ஆபாச கமெண்டுக்கான ஐ.பி.யை கண்டறியவும். இன்னொரு ஆபரேஷன் சல்மா அயூப் தேவைப்படுகிறது என்று நினைக்கிறேன்.

ஜே கே | J K said...

சூப்பர்!...

அதென்ன பதிவு நாளைய தேதியில்....

Anonymous said...

யோவ் ரவி.. உள்ளூர்ல தொல்லை தாங்கலைன்னு சொல்லித்தான கொரியாவுக்கு பார்சல் கட்டிருக்காக.. அங்க போயும் இப்படியா? அதெப்படிய்யா கவிஜையர்களையெல்லாம் ஒண்ணா சேர்த்து சம்பந்தமில்லாம டோண்டுவை கடைசியா சேர்த்திருக்க. அவர் என்ன பின் நவீனத்தை எழுதிருக்காரு..? புரியலை தம்பி.. புரியலை..

Anonymous said...

அய்யனார காணோம், என்னாய்யா வெளாடுறீங்களா?

மிதக்கும்வெளி said...

super talai

dondu(#11168674346665545885) said...

//இல்லைங்க...சிக்கனும் ஒரு பியரும் ஆர்டர் செஞ்சேன்...சிகரெட் வாங்க மறந்துட்டேன்...நானே வருஷத்துக்கு ஒருமுறை தான் குடிக்கறது...சிகெரெட் கொடுங்க சார் ப்ளீஸ்...உங்களை மகரநெடுங்குழைகாதன் காப்பாத்துவான் என்றபடி...
டோண்டு...!!!!!!!//

:))))))))))
ஆனால் இதில் பொருட்குற்றம் உள்ளது. இவ்வளவு கலாட்டா பக்கத்து டேபிளில் நடந்திருக்கு, டோண்டு ராகவன் சும்மாயிருந்திருப்பானா? இஸ்ரேலைப் பத்திப் பேசி எல்லோரையும் முதல்லேயே அப்பீட்டாக்கியிருப்பானே?

நாட்டாமை, பதிவை ரீரைட் செய்யவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

///செந்தழல் : ஏன் மிதக்கும் வெளி டென்ஷனாகிறீங்க...ஆய் கீய் முளை னு அசிங்கமா இருக்கா ?

மிதக்கும்வெளி: இல்ல...அசிங்கம் குறைவா இருக்கு...இதை எல்லாம் என்னால கவிதையா ஏத்துக்க முடியாது...///

super !!!!!!!

ILA (a) இளா said...

:))
சிரிப்புத்தாங்காம கேபினை விட்டு எந்திருச்சு வெளியே போயி சிரிச்சுட்டு வந்தேன்

நவநீதன் said...

3 வது வரியில் ஆரம்பித்தது..
கடேசி வரைக்கும் தொடர்ந்தது...
என்னது?
சிரிப்புத்தான் .... வேற என்ன ...?

முதல்ல கஞ்சா... இப்ப தண்ணி...
இதுக்கு பேரு தான் பதிவு போதையா?

ஆமா... எப்படி இப்படி எல்லாத்தையும் வரிஞ்சு கட்டி ஓட்டுறீங்க...???
முடியல.... வேண்டாம்... சிருச்சுருவேன்....

வசீகரா said...

Chanceless!!! Sirichi maalala...

- Manikandan

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....