Thursday, July 03, 2008

ஏங்க, அவன் என்னை மொறைக்கிறான்..!!!

அலுவலகம் விட்டு வந்தவுடன் வீடு இரண்டுபடுவது போல கத்தினாள்...

ஏய்...ஏன் இந்த கொலைவெறி ? என்ன ஆச்சு ?

அவன்...அவன்...பல்லை நறநறவென கடிக்கிறாள்...

என்னாச்சு சொல்லும்மா...

அவன் என்னை மொறைக்கிறான்...

யாரு ?

எதிர்த்த அப்பார்ட்மெண்ட் வாச்மேன்...

ஹெஹ்ஹே...

ஏங்க...நீங்க என்ன லூசா ? இவ்ளோ சீரியசான விஷயத்தை சொல்லிக்கிட்டிருக்கேன்...

என்னம்மா இது...உன்னை கல்யாணம் பண்ணப்பவே தெரியாதா ? இப்பதான் கண்டுபிடிச்சமாதிரி சொல்ற...

ஏங்க...உங்க மொக்கை காமெடியை நிறுத்துங்க...மொதல்ல விஷயத்துக்கு வாங்க...

இதுல என்னம்மா பெரிய சீரியஸ்...மொதல்ல ஒரு கேள்விக்கு பதில் சொல்லு...அவன் யாரு ?

முகத்தை சிடுசிடுவென வைத்தபடி...எதையுமே புரிஞ்சுக்கமாட்டியாடா என்றதுபோன்ற ஒரு பார்வையுடன்...

ஏன் உங்களுக்கு தெரியாதா ?

சும்மா சொல்லேன்...

எதிர்த்த வீட்டு வாச்மேன்...

அப்புறம் ? மொறைக்காம என்ன செய்வான்...கேட்ல நின்னுக்கிட்டு மொறைக்கறதுக்கு தான் அவனுக்கு சம்பளம் தறாங்க...ஹி ஹி...

ஏங்க, இப்படி லூசுமாதிரி பேசுறதை என்னைக்கு தான் நிறுத்தப்போறீங்களோ ? அவன் போறவறவங்களை பார்த்து மொறைக்கறதை நான் சொல்லலை...இந்த புதுவீட்டுக்கு குடிவந்த ஒரு வாரமா நான் எப்ப வெளிய வந்தாலும் என்னையே மொறைச்சு பார்க்குறான்..

அவன் கண்ணு இன்னுமா அவிஞ்சு போகாம இருக்கு ? ஹி ஹி

சர்ர்ர்ரென பறந்து வந்த வாட்டர் பாட்டில் ஒன்று பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்தியது எனக்கு...

ஓக்கே ஓக்கே செல்லம்...நான் இப்பவே கவனிக்கறேன்...

மெதுவாக வெளியே வந்தேன்...பெங்களூரின் மெல்லிய காற்று முகத்தை வருடியது...எங்கோ பார்ப்பதுபோல் லேசாக எதிர்விட்டு கேட் பக்கமாக பார்வையை திருப்பினேன்...

குள்ளமான வடக்கத்தி வாச்மேன்...குறுகுறுவென பார்க்கிறான்...ஆமாம்...இவன் பார்வையில் ஏதோ வித்யாசம் இருக்கிறது...எனக்கு ஜில்லென்றது...

போனவாரத்திலிருந்து வாச்மேன் கொலைகாரனாக மாறிய கேஸ் ஒன்று ஆங்கில செய்தி தொலைக்காட்சிகளை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது...

மனைவியை தனியாக விட்டுவிட்டு அலுவலகம் போகும் எனக்கு அது வேறு நினைவுக்கு வந்து லைட்டாக கிறுகிறுத்தது...

வேகமாக உள்ளே வந்தேன்...

ஏய்..ஆமாண்டி..என்னையும் குறுகுறுன்னு பார்க்கிறான்...

நான் சொன்னேனே...மடையா...என்றதுபோன்ற ஒரு பார்வையோடு சரேலென்று சமையல் கட்டுக்குள் புகுந்துகொண்டாள்...

என்ன பண்றது இவன....ராம்கிக்கு போனை போட்டு வரச்சொல்லலாமா...என்று மனசுக்குள் கணக்கு போட்டபடி மீண்டும் வெளியே வந்தேன்...

வாச்மேன் என்னை பார்த்து கிடுகிடுவென வருகிறான்...அய்யோ என்னடா இது கிட்டயே வர்றான் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே....

கிட்ட நெருங்கிவிட்டான்...

சாப்...துமாரா காடி க்ளீன் கரேங்கே சாப் டெய்லி...டூ ஹண்ரட் ருப்பீஸ் சார்ஸ் தேதே சாப் மந்த்லி... என்று தலையை சொறிகிறான்....

ங்கே !!!!

8 comments:

SP.VR. SUBBIAH said...

////சாப்...துமாரா காடி க்ளீன் கரேங்கே சாப் டெய்லி...டூ ஹண்ரட் ருப்பீஸ் சார்ஸ் தேதே சாப் மந்த்லி... என்று தலையை சொறிகிறான்....
ங்கே !!!! ////
:-)))))))))

மர்ம வீரன் said...

கான மயிலாட கண்டிருந்த வான்கோழி

g said...

நான் உங்க வண்டியை தினமும் துடைக்கிறேன். மாதம் இருநூறு ரூபாய் கொடுங்கனு சொன்ன வாட்ச் மேனைப் போய்...
மொறைத்துப்பார்த்தால் என்ன விஷயம்னு கேட்கவேண்டியதுதானே!

Anonymous said...

மர்மவீரன் என்ற பெயரில் பின்னூட்டம் போட்டிருப்பது மாயவரத்தான் :-)

ரவி said...

பின்னூட்டத்துக்கு நன்றி வாத்யாரே...

ரவி said...

நன்றி மர்ம-வீரன்...

உங்களோட 'மயில்' எதுன்னு தெரிஞ்சுக்கலாமா ??

கண்டிப்பா சுஜாதாவோ, அசோகமித்திரனோவாத்தான் இருக்கும்...

அவனா நீ ???

ரவி said...

வாங்க ஜிம்ஷா...!!!!

மொழிபெயர்ப்புக்கு நன்னி..!!!

ரவி said...

கொண்டை ஸ்பெஷலிஸ்ட்...

மாயவரத்தான் அவரோட பேர்லயே போடுவாரே...

எதுக்கு மர்ம வீரன் கர்ம வீரன்னு போடனும் :))

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....