Thursday, July 03, 2008

ஹிராநந்தானி இட்லி

என்ன ? நேத்து நைட்டு சாம்பாரா ?

சாப்பாட்டு தட்டை தடாரென வீசி எறிந்தவுடன் அதிர்ந்து போனாள் அம்மா...

அதிகம் அலம்பல் எல்லாம் பண்ணாத நான் இப்போதெல்லாம் யாரையும் மதிப்பதில்லை...தகவல் தொழில்நுட்பத்துறையில் ஆறு இலக்க சம்பளம் வாங்கும் எனக்கு யாரை மதிக்கவேண்டிய அவசியம்...

என்னுடைய ப்ராஜக்ட் மேனேஜரும், அப்ரைசலும், ப்ராஜக்ட்டும் தான் முக்கியம் எனக்கு...

என்னுடைய நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றங்களை அம்மா, அப்பா உட்பட எல்லோரும் சகித்துக்கொண்டுதானிருக்கிறார்கள்...

வேற வழி...

ஆனால் இப்போதெல்லாம் அதிகம் கோபம் வருகிறது எனக்கு...ஹும்...

ஏண்டா சாப்பாட்டு தட்டை வீசுற...பிடிக்கலைன்னா வெச்சிடலாமில்ல...

என்னது...பிடிக்கலைன்னா வெச்சுடறதா ? என்ன பண்ணிவெச்சிருக்க நீ ?

இட்லி தாண்டா...இவ்ளோநாளா சாப்பிட்டுக்கிட்டு தானே இருக்கே...தெரியாதா...

இட்லி சரி...ஏன் நேத்து நைட்டு சாம்பாரை ஏன் சூடு பண்ணி வெக்குற ? ஏன் புதுசா செய்யவேண்டியது தானே ?

நேத்து நைட்டு உனக்காக பண்ணது தாண்டா...நீ லேட்டா வந்தெ...ஆபீஸ்ல பிசா சாப்பிட்டேன்னு சொன்னே...அப்படியே நின்னுபோச்சு...

நானும் அப்பாவும் இதை தாண்டா சாப்பிட்டோம்...நல்லாத்தானே இருக்கு...

நல்லா இருக்கு - நல்லா இல்லைங்கறது இல்லை பிரச்சினை...நேத்து சாம்பார் எதுக்கு வெச்சே ? ஆபீஸ்ல நாலு வெரைட்டி சாப்பாடு இருந்தும் இங்கே சாப்பிடுறேன் பாரு...என் தலையெழுத்து...

சரேலென வெளியேறினேன்....

***************************************************

மும்பைக்கு மாற்றலானது...மேனேஜராக உடனே பணி ஏற்கும்படி அலுவலகத்தில் சொல்லிவிட்டார்கள்...

அந்தேரிக்கு அருகில், ஹிராநந்தானி காம்ப்ளக்ஸில் ஆபீஸ்...

ஒரு வாரமாக ஐந்து நட்சத்திர ஓட்டல் வாசம்...

அடுத்த வாரம் அப்பார்ட்மெண்ட் ஷிப்ட் ஆகிறேன்...

ஆபீஸ்ல வெறும் சப்பாத்தி சப்ஜிகள், நார்த் இண்டியன் ஐட்டம்ஸ்...

ஒரே வாரத்தில் வெறுத்துப்போனது...

உடன் பணியாற்றும் பஞ்சாபி கேள், அந்தேரி ஈஸ்ட்டில் இருந்து வருகிறாள்...

அவளிடம் உணவுப்பிரச்சினையை சொல்லி, ஈவ்னிங் ஏதாவது நல்ல சவுத் இண்டியன் ஹோட்டலுக்கு அழைத்துப்போகுமாறு சொன்னேன்...

ஹோ யூ வாண்ட் ஸவுத் இண்டியன் புட் ? இன் அவர் கேப்பஸ் நீல்கிரீஸ் ஈஸ் தேர் யா...

ஐ வில் டேக் யூ டுடே லஞ்ச் ஒன்லி...என்றால்...

நீல்கிரீஸ் நான் நினைத்த அளவு பெரியதாக இல்லை என்றாலும்...ஏதோ தமிழ் முகம் அங்கே கவுண்டரில் இருந்தது...

வாட் யூ வான்ன ஹாவ் சார் ?

தமிழ்லேயே சொல்லுங்கப்பூ...என்ன இருக்கு...

இட்லி இருக்கு சார்...ரொம்ப ப்ரஷ்...பிப்டி ருப்பீஸ் பர் ப்ளேட்...என்றான்...

ஓக்கே ரெண்டு ப்ளேட்டா கொடுத்திருங்க என்றேன்...

நாக்கு உள்ளுக்குள் தாளம்போட்டது...

சார் வீ டோண்ட் ஹேவ் சட்னி...சாம்பார் மட்டும்தான் சார்...என்றான்...

ஓக்கே பரவால்ல கொடு என்றேன்...

ரெண்டு ப்ளேட்களில், ப்ளேட்டுக்கு இரண்டு இட்லியாக வந்துசேர்ந்தது...

படபடவென சாம்பாரில் நனைத்து நான்கு இட்லிகளை ஐந்து நிமிட நேரத்தில் உள்ளே இறக்கியதை பார்த்து 'ஆ' வென வாயை பிளந்தது பஞ்சாப்...

பில் கொடுக்கும்போது...

இட்லி நல்லா இருக்கே...நீங்க இங்கேயே பண்றீங்களா...

நோ சார்...ஈரேட்ல இருந்து வருது...கிங்பிஷர் ஏர்லைன்ஸ்ல...சண்டே நைட் பாக் ஆகி, மண்டே மார்னிங் வந்திரும் சார்...அது ஒன் வீக் ப்ரிஜ்ல வெச்சு, ஹாட் பேக்ல சூடு பண்ணி தரோம் சார்...என்றான்...

கையில் இருந்த வாட்சில் கிழமையை பார்த்தேன்...வெள்ளிக்கிழமை...

ஹே. நவ்ஜோத்...ஐ நீட் மை போன் கால்யா...கேன்யூ கிவ் யுவர் மொபைல்...

வீட்டு தொலைபேசி எண்ணை டயல் செய்தேன்...அம்மாவிடம் பேசவேண்டும்போலிருந்தது.

*******************************************

15 comments:

இவன் said...

ங்ண்ணா இது உங்க சொந்த கதையா சோககதையாங்ண்ணா?? இது லொல்லு

இனி

கதை நல்லா இருந்திச்சு... இருக்கிற நேரம் அருமை தெரியாது இல்லையா ரவி?? அது அம்மா என்னாலும் சரி சாம்பார் என்னாலும் சரி

ஷைலஜா said...

நல்லாருக்கு ரவி. நலம்தானே?

ILA (a) இளா said...

எல்லாருக்கும் இந்த ஜம்பம் இருக்கும். அம்மாகிட்ட இப்படி குறும்பு பண்ணும்போதெல்லாம் சொல்லுவாங்க "சோத்துக்கு சிங்கி அடிக்கும்போதுதாண்டா இந்தச் சாப்பாட்டோட அருமை தெரியும்"னு. எனக்கு கல்லூரி விடுதிக்கு போன உடனேயே தெரிஞ்சுருச்சு :)

rapp said...

நல்ல கதை.

Sivaram said...

நல்ல கதை..
உண்மையைச் சொல்லப் போனால்,
இதே அனுபவம் எனக்கும் நிகழ்ந்துள்ளது..(ஐந்து நட்சத்திர விடுதி, பஞ்சாபி பொண்ணு, இத்யாதிகளைத் தவிர)..

கோபிநாத் said...

தல

சேம் பிளட் அவ்வ்வ்வ்வ்வ்

மர்ம வீரன் said...

இன்னும் எத்தனை பேரு எத்தனை தடவ இதே கதைய எழுதுவீங்க? :(
புதுசா ஏதாவது யோசிங்கப்பா...

ரவி said...

வாங்க இவன்...மொதல் மொதலா உங்க கமெண்ட பாக்குறேன்...

அவன் பெரிய "இவனா" அப்படீன்னு யாரும் கேட்டுட்டாங்களோ ? ஏன் இந்த பெயர் தேர்வு >?

ரவி said...

வணக்கம் ஹை(ஷை)லஜா...

நலம்...

நீங்க ?

ரவி said...

வாங்க இளா...

நாங்க எல்லாம் பள்ளியிலேயே விடுதிக்கு போனவய்ங்களாக்கும் :))

ரவி said...

வாங்க ஜீவன்...முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....

ரவி said...

நன்னி ராப் :)

ரவி said...

நன்னி ராப் :)

ரவி said...

வா கோபி...

கருத்துக்கு (இது ஒரு கருத்தா) நன்றி...

ரவி said...

வாங்க மர்ம வீரன்...

முயற்சி பண்றேன்...சட்டியில இருந்தாத்தானே ஆப்பையில வரும் ? :)))

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....