Friday, July 04, 2008

லவ் லெட்டர்...!!!!

கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்தபின் வேறு பெரிய வேலை ஒன்றும் இருக்காது...நாங்கள் நான்கு பேச்சுலர்ஸ் ஒரு வீடு எடுத்து தங்கியிருக்கோம்...

நான், மணி, கோயிந்தன் மற்றும் இளா நாலுபேரும் ரூம்மெட்ஸ்..

திருச்சியில இப்பல்லாம் ரெண்டாயிரத்துக்கு பேச்சுலர்ஸ் வீடு கிடைக்கறது ரொம்ப கஷ்டமாயிருது...

மாம்பழச்சாலை ஏரியாவுல ஒரு சிங்கிங் பெட்ரூம்...

வீட்டுக்கு பக்கத்துல கேள்ர்ஸ் ஹைஸ்கூல்...

நம்ம மணி ஒரு 'காதலன்'...எங்க ரூம்லயே லவ், அது இதுன்னு போனது அவன் மட்டும்தான்...லவ் லெட்டர்லாம் வரும் அவனுக்கு...காலேஜ் கட்டடிச்சுட்டு வந்து கேர்ல்ஸ் ஸ்கூல் பக்கம் அலைஞ்சுக்கிட்டிருபான்...

நாங்க மாரீஸ்ல படம்பார்க்க போனா, எவளோ ஒருத்திக்கு ட்யூசன் முடியும், பார்க்க போவனும்னு போவான்...

இந்த லவ் மேட்டர் எல்லாம் அதிகம் எங்கக்கிட்ட ஷேர் பண்ணமாட்டான்னு வைங்களேன்...

நான் தான் அப்பப்ப சொல்லிக்கிட்டிருப்பேன்...இந்த லவ் அது இது எல்லாம் வேண்டாம், ஏதாவது பிரச்சினை வரும்டா என்று...

நாங்க மூனுபேரும் வெத்துவேட்டுங்க...எதும் செட்டாகலன்னு வைங்களேன்...

ஆங்...எதுல விட்டேன்...காலேஜ்ல இருந்து வந்தபிறகு நாங்க அப்படியே வீட்டுக்கு பக்கத்துல ப்ளாஸ்டிக் பால் கிரிக்கெட் விளையாடுவோம்னு வைங்களேன்...

அன்னைக்கு அப்படித்தான்...ஒரு நாலுமணி இருக்கும்...நாங்க விளையாடிக்கிட்டிருக்கோம்...

ஏதோ பாரின் கார் வந்து நிக்குது...

தடார் புடார்னு நாலுபேர் இறங்குறானுங்க...

ஏய்...எவண்டா இங்க மணி...அவனுங்களோட குரல்ல அனல் பறக்குது...

எங்க கை விரல் மட்டும் தானா அவனை காட்டுது...

என்ன சார் விஷயம்...இது நான்...

இளா மட்டும், சார், எதுவா இருந்தாலும் உள்ள வாங்க சார், பேசிக்கலாம் அப்படீன்னு அவங்களை தேக்குறான்...

அவனுங்க பேசுற மூட்லயே இல்லை...

பொடேர்னு ஒரு அப்பு அப்பிட்டானுங்க...மணி எழுதுன ரெண்டு 'கவிதை' லவ் லெட்டரை எடுத்து மூஞ்சி மேலே வீசுறானுங்க...(அந்த கவிதை யாருக்கும் புரியாதுங்கறதுன்றது வேற விஷயம்...)

விசயம் இது தான்....பொண்ணோட அண்ணன் அவளோட புத்தகத்தை திறந்து பார்க்கையில...அதுல மணியோட லெட்டர் சிக்கிருச்சு...

பொண்ணு நல்லவ வேஷம் போட்டுட்டு...மணி தான் தன்னை தொந்தரவு செய்யறதாவும், அவ ரொம்ப நல்லவன்னும் சொல்லிட்டா...

அதான், மண்டகப்படி நடத்த பொண்ணோட அண்ணனும் அவனோட ப்ரெண்ஸும் வந்துட்டானுங்க...

காட்டுக்கார்த்தின்னு ஒரு காலேஜ் பிரெண்டு...அவன் யானை மாதிரி இருப்பான்...அன்னைக்குன்னு பார்த்து ஏதோ வேலையா எங்க ஏரியாவுக்கு வந்தவன், வீட்டுப்பக்கம் வரவும்...

நல்ல வேளை....

அதிக மொத்து விழாம அந்த தடியனுங்களை தேக்கிட்டான்...

அப்புறம் என்ன...காம்பரமைஸ் அது இதுன்னு ஒரு வழியா முடிஞ்சது.....இந்த காம்பரமைஸ் நடக்கும்போதும் சரி, அவனுங்க மொத்தும்போதும் சரி, மணி ஒரு விஷயத்தை மட்டும் ஓப்பன் பண்ணவேயில்லை...

எனக்கும் பயங்கர டென்ஷன் தான்...அது என்னன்னு கேக்குறீங்களா...

அந்த பொண்ணும் இவனுக்கு சில பல லெட்டர்களை எழுதுச்சு தானே...அதை பட்டுனு எடுத்து அவனுங்க மூஞ்சியில எறிஞ்சிருந்தா, அவனுங்களே ஆப் ஆகி போயிருப்பானுங்க...

ஆனா இந்தப்பய கெணத்துல போட்ட கல்லுமாதிரி கம்முனு இருக்கான்...அதான் எனக்கும் டென்ஷன்...

சரி அவனே சொல்லலை...அதுக்கு ஏதாவது காரணம் சொல்வான்...அந்த பொண்ணை காட்டி கொடுக்க விரும்பல அப்படீ இப்படீன்னு ஏதாவது... அதனால நானும் அமைதியா இருந்துட்டேன்...

ஒருவழியா ஓஞ்சு போய் - பெரிய வார்னிங் மெஸேஜ் எல்லாம் கொடுத்துட்டு கிளம்பினானுங்க.....காட்டுக்கார்த்தி அனுப்பிவுட்டுட்டானுன்னு வெய்ங்களேன்...

நான் எரிச்சலா கேட்டேன்...மணிய...

ஏண்டா நாதாரி...அவனுங்கக்கிட்ட அந்த பொண்ணு எழுதுன லட்டரை எடுத்து போட்டிருந்தின்னா, இவ்ளோ நேரம் அவனுங்க பேசியிருப்பானுங்களா....அப்படீன்னேன்..

இவன் அமைதியா சொல்றான்...

டேய் அது எனக்கு தெரியாதா...இவனுங்க என்ன பெரிய ஆளா...ஆனா...இந்த லட்டர்ஸை நான் மாலாவுக்கு எழுதினேனா இல்லை அவங்கக்கா பிரதீபாவுக்கு எழுதினேனான்னு தெரியலடா...அதுமட்டும் நியாபகம் வந்து தொலைஞ்சிருந்துது....கரெக்டா எடுத்து மூஞ்சியில வீசியிருக்கமாட்டேன்...ஹூம்...

13 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

தல, மணி பேரு செந்தழல் ரவியா???!!! :)

மர்ம வீரன் said...

மத்த கதைய விட இது பெட்டர். ஆனா நடை ரொம்ப சுமார் :(

கோபிநாத் said...

தல காதல் கடுதாசி - நல்ல காமெடி ;))

ஆமா இன்னா தல கதையா எழுதி வுட்றீங்க!? ;)

ரவி said...

சுந்தர்...மணி பேரு மணி தான் :))

ரவி said...

பின்னூட்டத்துக்கு நன்றி மர்மவீரன்...

ரவி said...

யோவ் கோபி...அசோகமித்திரன் எல்லாம் கதை எளுதும்போது, நாங்க எளுதி, எளுத்தாளராவகூடாதா :)))

இரா.சுகுமாரன் said...

ஏதோ தினம் ஒரு செய்திய போட்டு அசத்துரீங்கப்பா!!

நல்ல அனுபவஙகள்................

ஆனா ரவி நமக்கு நடந்தாக்கூட நண்பன் அவன் இவன் என்று எழுதரது தான் நல்லது போல.

ரவி said...

வாங்க சுகுமாரன்...

சுகம்தானே...

என்னது இது ? கதை எழுத கிளம்பினா இப்படி நிகழ்ச்சி, சொந்த அனுபவம்னா நாங்கள்ளாம் எப்பத்தான் கதை எழுதி எளுத்தாளராவது ?

இரா.சுகுமாரன் said...

//சுகம்தானே...

என்னது இது ? கதை எழுத கிளம்பினா இப்படி நிகழ்ச்சி, சொந்த அனுபவம்னா நாங்கள்ளாம் எப்பத்தான் கதை எழுதி எளுத்தாளராவது //

நலம்

ஒரு நகைச்சுவைக்காக சொன்னேன்!! சொந்த அனுபவமா இருந்தாதான் என்ன? நல்லத்தானே எழுதுரீங்க அதனால நீங்க எழுத்தாளர் தான், சந்தேகமே வேணாம் ரவி.

என்ன யாரையாவது ஐஸ் வச்சி ஒரு புத்தகம் போட்டாதான் எழுத்தாளரா? என்ன நீங்களும் எழுத்தாளர் தான் இப்படி ஓசியிலே பிளாகிலே எழுதுனா எவனும் நம்பள எழுத்தாளர் என்று ஒத்துக்கலன்னு நினைக்கவேண்டாம் நல்ல இருந்தா அத மாத்தி பத்திரிக்கையில அவனுங்க கதை மாதிரி எழுதிடுவானுங்க.

அதனால உங்கள போன்றவர்கள் எழுதினாலும் எழுத்தாளர் பெயர் வாஙக முடியறதில்ல,அதையெல்லாம கண்டுக்க வேணாம் ரவி எழுதுங்கள்.

தினமலர் பார்த்தாக்கூட வாரமலரில் கூட இது போல செய்திகள் வருகிறது எழுத ஆள் இல்லையெனில் உல்டாப்பண்ணி எவன் பேரையாவது போட்டுப் பானுங்க மாதிரி உள்ளது இது.

FunScribbler said...

haahaha....மணி ரேம்ம்ம்பப நல்லவருங்க! :)

Unknown said...

:-) Nalla irundhadhu anna..!!

rapp said...

ஆஹா அதெப்படி ப்ளாக் எழுதுற முக்காவாசிப் பேருக்கு இப்படி ஒரு பிரெண்டு இருக்காங்க?:):):)

Anonymous said...

dhatcha
mani you are very
great

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....