தேடுங்க !

Friday, April 23, 2010

மனசேதான் கடவுளடா - டிவிஆர் அய்யா நாடகம்

[IMG_1019_.JPG]

படம் உதவி : காலம் வலைதளம்

25-4-10 ஞாயிறு மாலை 7 மணி அளவில் நாரத கான சபாவில் நடைபெறும் கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் கோடை நாடக விழாவில் வலைப்பதிவர் டி.வி.ஆர் எழுதி, இயக்கும் 'மனசேதான் கடவுளடா' என்ற நாடகம் அரங்கேறுகிறது.


இதுபோன்ற நிகழ்வுகளில் சோனா, ரகசியா, முமைத்கான் போன்றவர்களின் குத்தாட்டம் இருக்காது. கல்யாண மண்டபத்தில், ரிசப்சன்களில் 'அப்படிப்போடு போடு போடு' என்று ஸ்பீக்கருக்கு அருகில் உட்கார்ந்து காது கிழிபட்டு வரும் தேவை இருக்காது.


கேண்டீனில் நல்ல மெதுவடை, மசால்தோசை, கெட்டிச்சட்னி கிடைக்கலாம். குடும்பத்துடன் போக இதைவிட வேறு என்ன நல்ல நிகழ்வு அமைந்துவிடமுடியும் ? தங்கமணியை, ரங்கமணியை, குழந்தைகளை வெளியே அழைத்துப்போகவும் ஒரு நல்ல வாய்ப்பு. 


இங்கே இன்னொரு விஷயம். டிவிஆர் அய்யா ஒரு பிரபல பதிவர் என்பதால் சில பதிவர்களும் வர வாய்ப்புண்டு. ரெண்டு பதிவர்கள் சந்திந்தால் சந்திப்பு. இன்னும் ரெண்டு பேர் சேர்ந்தால் அது மாநாடய்யா மாநாடு..!!


இதைவிட முக்கியமான ஒன்று, அனுமதி இலவசமாம். பர்சுக்கும் ஆபத்தில்லை மக்களே !!! ரெடி ஜூட்...உங்கள் வாக்குகளை அள்ளித்தெளித்து, இந்த பதிவு பலரையும் சென்று சேரும்படி செய்யுங்கள். சென்னையில் உள்ள நட்புகளுக்கும் அனுப்பிவையுங்கள்..!!


..

10 comments:

நசரேயன் said...

//இன்னும் ரெண்டு பேர் சேர்ந்தால் அது மாநாடய்யா மாநாடு..!!//

எட்டு பேரு சேர்ந்தா சங்கமா ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

Thanks Ravi

Technology said...

நன்றி நசரேயன் ஆமாம்யே

ராஜ நடராஜன் said...

வெறும் நாடகம் என்ற பார்வைக்கும் அப்பால் சொன்னவைகளுக்கு பாராட்டுக்கள்.

திரு.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

பா.ராஜாராம் said...

வாழ்த்துக்கள் டி.வி.ஆர் சார்!

பகிர்தலுக்கு நன்றி ரவி!

வவ்வால் said...

Ravi, gud info.tvr pirabala pathivar mattuma or pirabala samiyaruma,ashramam unda?

ராம்ஜி_யாஹூ said...

மேடை நாடகங்கள் இன்னும் இருக்கின்றனவா.

வசனங்கள் என்ற பெயரில் சொற்பொழிவு ஆற்றி கொன்னுர மாட்டாங்களே.

எனக்கு பொறுமையாக் உக்காந்து கேட்டு கொண்டு இருக்கும் பழக்கம் எல்லாம் போய் வெகு நாளாகி விட்டது ரவி.

அதிஷா said...

மனசேதான் கடவுளடாவா?

பேர கேட்டாலே சும்மா அதிருதே..

செந்தழல் ரவி said...

வசனங்கள் என்ற பெயரில் சொற்பொழிவு ஆற்றி கொன்னுர மாட்டாங்களே.

எனக்கு பொறுமையாக் உக்காந்து கேட்டு கொண்டு இருக்கும் பழக்கம் எல்லாம் போய் வெகு நாளாகி விட்டது ரவி///////

அது ஒரு அற்புத கலைவடிவம். இன்றைய சினிமாவின் மூலம் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. இருந்தாலும்

அந்த கலையை அழிந்துவிடாமல் காக்கவேண்டிய கடமையும் நமக்கு உண்டு.

மனோகரன் பூர்ணம் இவர்களின் நாடக நடிப்பு பற்றி கேள்விப்பட்டதில்லையா ?

முடிந்தால் ஒரு முறை போய் பாருங்களேன்.

செந்தழல் ரவி said...

நன்றி ராஜ நடராஜன்..