விரைவாக விந்து வெளியேறுதல் அல்லது துரித ஸ்கலிதம்

இது சித்தூர் முருகேஷா டைப் பதிவல்ல. ஒரு விக்கி பீடியா கட்டுரையை தமிழில் மொழியாக்கம் செய்யும் முயற்சி. மருத்துவர் துமிழ் பல கட்டுரைகள் எழுதி இருக்கிறார். பலர் படிப்பதில்லை, உற்சாகப்படுத்துவதில்லை என்ற குறையும் அவருக்கு உண்டு. ஒரு வேளை அவரது பதிவின் ஆக்கங்கள் சிலருக்கு புரியாமல் இருக்கலாம் அல்லது தேவை இல்லாமல் இருக்கலாம். அதை பற்றி கவலைப்படாமல் அவர் எழுதவேண்டுமே என்பது தான் என் கவலை.

பாலியல் கல்வி என்றால் உவ்வே என்பார் ஏன் பெருகினார்கள் என்று தெரியவில்லை. பழந் தமிழில் உள்ள பாலுணர்வு சம்பந்தமான தகவல்கள் திரிக்கப்பட்டு, ஒரு சொட்டு விந்து நூறு சொட்டு ரத்தத்துக்கு சமம் போன்ற பல்வேறு உடான்ஸ் கதைகள் எழுதப்பட்டு, இதனால் இளம் தலைமுறைக்கு முறையான பாலியல் கல்வி கிடைக்காமல் சில தலைமுறைகளே இந்த தலைப்பை பொருத்தவரை ஆப்ரிக்க இருண்ட கண்டம் மாதிரி ஆகிவிட்டது.

கலவி என்பது வெறும் உடல் சார்ந்த ஒன்றல்ல, அது மனம் (மூளை) சார்ந்த ஒன்றும் என்பதை புரியவைக்கவேண்டும் முதலில். தமிழில் நல்ல புத்தகங்கள் வெளிவந்துள்ளனவா என்று தெரியாது ?ஆனால் மருத்துவர் Helen singer kaplan அவர்கள் எழுதிய the Illustrated Manual Of Sex Therapy என்ற புத்தகததை தமிழில் மொழிபெயர்க்கவேண்டும் என்று ஆசை. கிழக்கு பதிப்பகம் அல்லது எனி இண்டியன் பதிப்பகம் சப்போர்ட் செய்தால் செய்வேன். தற்போதைக்கு விக்கிபீடியா சுட்டி ஒன்றை இந்த பதிவில் மொழியாக்கம் செய்ய முயல்கிறேன். குறை நிறைகளை சொல்லுங்கள்.

இனி பதிவு:

Premature ejaculation

PE என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் இந்த விரைவாக விந்து வெளியேறல் என்பது, புணர்ச்சியின்போது ஒரு ஆண், தான் அல்லது தன்னுடன் உறவில் ஈடுபடும் பெண் விரும்பும் முன்பே தன்னுடைய உச்சநிலையை அடைந்து விந்தை வெளியேற்றிவிடுவதாகும்.

இது குறித்து ஆராய்ந்த மாஸ்டர்ஸ் மற்றும் ஜான்ஸன் ஆய்வுக்குழு ஆண், தன்னுடன் உறவில் ஈடுபடும் பெண் உச்சகட்டத்தை அடையும் முன்பே விந்து வெளியேற்றுவது, அவர்களது 50 சதவீத உறவில் நடைபெறுகிறது என்கிறது. அதாவது 100 முறை உறவில் ஈடுபடுபவர்களுடைய உறவில் 50 முறை இது நடைபெறுகிறது.

இன்னும் சில ஆய்வாளர்கள், புணர்ச்சி ஆரம்பித்த பின் இரண்டு நிமிடத்தில் விந்து வெளியேறுதலை PE என்று அழைக்கலாம் என்று பதிவு செய்துள்ளனர்.

1950 இல் Alfred Charles Kinsey அவர்களால் எடுக்கப்பட்ட ஒரு கருத்து கணிப்பின்படி மூன்றில் ஒருவர் தன்னுடன் உறவில் ஈடுபடும் பெண் உச்சகட்டத்தை அடையும் முன்பே விந்தை வெளியேற்றிவிடுகிறார். இது அந்த மூன்றில் ஒருவரின் 50 சதவீத பாலுறவின்போது நடந்துவிடுகிறது என்று பதிவு செய்துள்ளார். மேலும் பதிவு செய்யப்பட்ட சில கருத்து கணிப்புகளின்படி 75 சதவீதம் ஆண்கள், புணர்ச்சியின்போது அதிகபட்சமாக பத்து நிமிடம் வரை தாக்குபிடிக்கிறார்கள்.

இன்றைய பாலியல் பிரச்சினைகளுக்கான மருத்துவர்கள், விந்து வெளியேறல் என்பது, விந்து வெளியேறும் நிலையை அறிவது மற்றும் கட்டுப்படுத்துவது ஆகியவற்றில் அறிவின்மை, உறவு கொள்பவர்களின் உடல் மற்றும் மன ரீதியான விடயங்கள், இவ்வாறான தன்மைக்கு காரணம் என்பதை அறிந்துள்ளார்கள்.

PE என்ற விரைவாக விந்து வெளியேறும் தன்மையை ஆண் தன் வாழ்வில் ஒருமுறையாவது சந்திக்க நேரிடும்.அமெரிக்கன் பை படம் பார்த்திருப்பீர்களே ? அதில் ஹிரோவுக்கு முதல் முறை மழையில் நனைந்த பட்டாசு மாதிரி புஸ் போவதை நகைச்சுவையாக சித்தரித்திருப்பார்கள்...அமெரிககவில் 25 முதல் 40 சதவீதம் ஆண்களுக்கு இந்த PE பிரச்சினை உள்ளது.இந்த விடயம் ஒவ்வொரு தனிமனிதருக்கும் வித்யாசப்படுவதால் ஆராய்ச்சியாளர்கள் இதனை இன்னும் ஆழமாக படித்துவருகிறார்கள். ஆண் எவ்வளவு நேரம் வரை உடல் உறவில் ஈடுபட விரும்புகிறார், அதே காலகட்டத்தில் பெண்ணின் தேவை என்ன, அவருடைய விருப்பம் என்ன என்பதை நேரம் மற்றும் எண்ணிக்கை அடிப்படையில் (quantitative definition) வரையறுக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.

இப்போது கையில் உள்ள முடிவுகளின்படி 18 முதல் 30 வயதானவர்கள் சராசரியாக (IELT - intravaginal ejaculation latency time) 6 1/2 மணித்துளிகளில் விந்தை வெளியேற்றிவிடுவதாக தெரிவிக்கப்படுகிறது. இன்னும் சிலருக்கு இதை விட குறைவாக கூட இருக்கலாம். IELT என்பது ஒரு கணக்கீடாக வைத்து அது 2.5 என்ற அளவுக்கு கீழே இருந்தால் 1 1/2 நிமிடத்தில் விந்து வெளியேறிவிடும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த ஒன்னரை நிமிட புணர்ச்சியிலேயே திருப்தி அடையும் நபர்களும் உண்டு. மற்றபடி இரண்டு நிமிடத்துக்குள்ளாக விந்து வெளியேறுதல் என்பது மன ரீதியான அழுத்தத்தை ஆணுக்கு கொடுத்து, அது அவரது பேச்சில், செயல்களில், வாழ்வியல் முறைகளில் மாற்றத்தை கொண்டுவருகிறது. அது அவருக்கு தாழ்வு மனப்பான்மையையும் உருவாக்குகிறது. அது குழந்தையின்மை போன்ற பிரச்சினைகளுக்கும் ஆரம்பப்புள்ளியாக அமைந்துவிட்டால், அது தாம்பத்ய உறவில் சிக்கலை ஏற்படுத்துவதாக அமைகிறது. ஆகவே அவருக்கு PE குறைபாட்டுக்கான சிகிச்சை அளிப்பது அவசியமாகிறது.

PE மனவியல் பிரச்சினையா

வி.வி.வெ பிரச்சினையை மன அறிவியல் நோக்கில் அனுகவேண்டிய தேவை உள்ளது. பொதுவாக மனவியல் மற்றும் சூழல் சார்ந்த பிரச்சினை தான் வி.வி.வெ என்று வரயறுத்துள்ளார்கள்.

தமது துணையுடனான உடல் மற்றும் மன ரீதியிலான நெருக்கத்தை, உறவின் ஆழத்தை குறைவாக மதிப்பிடு செய்தல், உணர்வெழுற்சியான உற்சாக வாழ்க்கை இல்லாமை (sexual performance and emotional well-being) ஆகியவை PE க்கு பொதுவான காரணமாகும். அடிக்கடி ஏற்படும் மன உளைச்சல், பொருளாதார ரீதியில் ஏற்படும் அழுத்தங்கள், தன்னுடைய ஆண்மை பற்றிய தேவையற்ற, பொருளற்ற எதிர்பார்ப்புகள் (எதாவது ஆங்கில பிட்டு படங்களை பார்த்து தான் அந்த மாதிரியே நடந்துகொள்ளவேண்டும் என்று நினைப்பது), சமூகம் மற்றும் மதம் சார்ந்ததான தயக்கங்கள் (Sexual repression), ஏற்கனவே பாலியல் மற்றும் உடல் உறவு பற்றிய தேவையற்ற கதைகள், கற்பனைகளை மனதில் இருத்தி வைத்திருத்தல் மற்றும், சோம்பேறித்தனம், உடற்பயிற்சியின்மை, எப்போதும் வேலை மற்றும் அது சார்ந்தவைகளை பற்றி சிந்தித்தல், பொதுவாகவே தன்னம்பிக்கை குறைவு என்ற ஒற்றை வார்த்தையில் அனைத்தையும் அடக்கிவிடலாம்..

இதில் உறவில் ஈடுபடும் மனிதரின் ஆளுமை என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் தனது துணையுடன் இது குறித்து சரியாக விவாதிக்காமையும் ஒரு காரணம். காய்ந்த மாடு கம்பில் விழுந்தது போல என்று ஒரு சொலவடை உண்டு கிராமங்களில். தனது துணை என்ன நினைக்கிறார் என்று கேட்கும் அளவுக்கு கூட பொறுமை இல்லாமல் பாய்ந்து பிறாண்டுவார்கள் நம் மக்கள். இந்த விஷயத்தில் அவசரம் கூட ஒரு தொல்லையே. மன அளவில் தனது துணையை புண்படுத்துதல் கூட, அவரது முழுமையான ஒத்துழைப்பு கிடைக்காமல் போக காரணமாக இருக்கலாம். அப்படி இது போன்ற காரணங்களால் ஏற்படும் PE, இதன் மூலம் மற்ற பிரச்சினைகளுக்கு வழிகோலும். உறவில் திருப்தி இல்லாத நிலையும் ஏற்படும்.

மனவியலாளர் வில்லியம் ரீச் என்பாருடைய ஆராய்ச்சிகள் மற்றும் கூற்றுகளின்படி, பெல்விக் தசைகளில் (pelvic musculature) ஏற்படும் மற்றங்களும் PE என்ற பிரச்சினைக்கு காரணமாக இருக்கலாமாம்.

பிரிதொரு ஆய்வின்படி, துணையின் மாதாந்திர மாதவிடாய் சுழற்சி நிலை கூட IELT அளவை தொட்டு வி.வி.வெ பிரச்சினைக்கு காரணம் ஆகும் வாய்ப்பு உண்டாம். கருமுட்டை உருவாகும் சுழற்சியில் (fertile phase) கூட இதுபோன்ற பிரச்சினைகளை துணைக்கு நேரும் வாய்ப்பு உண்டாம். மேலும் ஒரு ஆய்வில், ஆண்கள் குறைவான வயதிலும் பெண்கள் அதிக வயதிலும் இருப்பவர்கள் உறவு கொண்டால் அந்த பெண்கள் அவர்களது உச்ச நிலையை (ejaculatory threshold )விரைவில் அடைந்துவிட வாய்ப்பு உண்டாம். இது சராசரியாக சம அளவில் இருப்பவர்கள் மற்றும் பெண்ணை விட அதிக வயதுள்ள ஆண்களை விட அதிகமானது. ஆகவே பெண்களை விட அதிக வயதுள்ள ஆண்கள் அதிக நேரம் உறவு கொள்வார்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த வரிசையில் அடுத்த இடுகை / பகுதியில் மற்றயவைகளையும் மொழிபெயர்த்துவிடலாம் என்றுள்ளேன்.

Possible physical factors
Science of mechanism of ejaculation
Premature Ejaculation Diagnostic Tool (Premature Ejaculation Test)
Differential diagnosis
Other ejaculation disorder types
Treatment
Medications
References


 1. ^ "Ejaculation delay: what's normal? [July 2005; 137-4"]. Retrieved 2007-10-21.
 2. ^ Waldinger MD, Quinn P, Dilleen M, Mundayat R, Schweitzer DH, Boolell M (2005). "A multinational population survey of intravaginal ejaculation latency time". The journal of sexual medicine 2 (4): 492–7. doi:10.1111/j.1743-6109.2005.00070.xPMID 16422843.
 3. ^ Waldinger MD, Zwinderman AH, Olivier B, Schweitzer DH (2005). "Proposal for a definition of lifelong premature ejaculation based on epidemiological stopwatch data". The journal of sexual medicine 2 (4): 498–507. doi:10.1111/j.1743-6109.2005.00069.xPMID 16422844.
 4. ^ See for example Body of knowledge: an introduction to body/mind psychology by Robert L. Marrone, SUNY Press, 1990, ISBN 0791403874, 9780791403877, p. 104
 5. ^ Böhlen D, Hugonnet CL, Mills RD, Weise ES, Schmid HP (2000). "Five meters of H(2)O: the pressure at the urinary bladder neck during human ejaculation". Prostate 44 (4): 339–41. doi:10.1002/1097-0045(20000901)44:4<339::AID-PROS12>3.0.CO;2-ZPMID 10951500.
 6. ^ Master VA, Turek PJ (2001). "Ejaculatory physiology and dysfunction". Urol. Clin. North Am. 28 (2): 363–75, x. doi:10.1016/S0094-0143(05)70145-2PMID 11402588.
 7. ^ deGroat WC, Booth AM (1980). "Physiology of male sexual function". Ann. Intern. Med. 92 (2 Pt 2): 329–31. PMID 7356224.
 8. ^ Truitt WA, Coolen LM (2002). "Identification of a potential ejaculation generator in the spinal cord". Science 297 (5586): 1566–9. doi:10.1126/science.1073885PMID 12202834.
 9. ^ Coolen LM, Olivier B, Peters HJ, Veening JG (1997). "Demonstration of ejaculation-induced neural activity in the male rat brain using 5-HT1A agonist 8-OH-DPAT". Physiol. Behav. 62 (4): 881–91. doi:10.1016/S0031-9384(97)00258-8PMID 9284512.
 10. ^ Symonds T, Perelman MA, Althof S, Giuliano F, Martin M, May K, Abraham L, Crossland A, Morris M (2007). "Development and validation of a premature ejaculation diagnostic tool". Eur Urol. 52: (2): 565–73. PMID 17275165.
 11. ^ Althof S, Rosen R, Symonds T, Mundayat R, May K, Abraham L (2006). "Development and validation of a new questionnaire to assess sexual satisfaction, control, and distress associated with premature ejaculation.". J Sex Med 3 (3): 465–75. PMID 16681472.
 12. ^ "Premature Ejaculation"Premature Ejaculation and Male Orgasmic Disorder. Armenian Medical Network. 2006. Retrieved 2007-09-19.
 13. ^ Safarinejad, M. R., & Hosseini, S. Y. (2006). Pharmacotherapy for premature ejaculation. Current Drug Therapy, 1, 37-46.
 14. ^ SadeghiNejad, H., & Watson, R. (2008). Premature ejaculation: Current medical treatment and new directions. Journal of Sexual Medicine, 5, 1037-1050.
 15. ^ Bandolier (2004). Premature ejaculation treatments reviewed. pp. 128–3.
 16. ^ http://mayoclinic.com/health/drug-information/DR602715#89DB9B50-CC99-270F-FF4D198198E465E1
 17. ^ Safarinejad MR, Hosseini SY, Safety and efficacy of tramadol in the treatment of premature ejaculation: a double-blind, placebo-controlled, fixed-dose, randomized study. J Clin Psychopharmacol. 2006 Feb;26(1):27-31.


உசாத்துணைகள்

http://en.wikipedia.org/wiki/Premature_ejaculation
http://en.wikipedia.org/wiki/Masters_and_Johnson
http://en.wikipedia.org/wiki/Orgasm
http://en.wikipedia.org/wiki/Alfred_Kinsey
http://en.wikipedia.org/wiki/Wilhelm_Reich
PE - Premature ejaculation
Orgasam - Orgasm is the peak of the plateau phase of the sexual response cycle, characterized by an intense sensation of pleasure (தமிழில் - உச்சகட்டம். இது பெண்களுக்கு மட்டும் உரியதாகும்)
..


இந்த மொழிபெயர்ப்பில் என்னுடைய சில எண்ணங்களையும் ஆங்காங்கே தூவியுள்ளேன்..ஆகவே நீங்கள் உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தூவுங்கள்..
..
..
..

Comments

அப்ப நான் வெறுமனே ஜல்லியடிக்கிறேங்கறிங்களா?
இல்லே முருகேசன் சார் எல்லா கோணத்துலருந்தும் புரட்டி எடுப்பாரு . இது வெறுமனே மருத்துவ கோணத்திலான கட்டுரையோட மொ.பெயர்ப்புங்கறிங்களா? புரியலிங்கண்ணா. எனி ஹவ் நல்ல பதிவு தலைவரே. தூள் கிளப்புங்க.
ரவி said…
முதல் கமெண்டே உங்க கமெண்டா. சூப்பர். உங்கள் ஆப்புரேஷன் இந்தியா திட்டத்தில் நானும் இணைய தயார். ஆர் யூ ரெடி ?
நான் கூட எதோ சிட்டுக்குருவி லேகியம் விக்கப்போறீங்களோன்னும் நெனச்சேன். வாலிப வயோதிக தமிழர்களுக்கு தேவையான கட்டுரை. நல்ல பகிர்வு. (நிற்க, சித்தூர் எஸ். முருகேசன் ஏன் அரசியல்வாதி மாதிரி கும்பிட்டுக்கொண்டிருக்கும் புகைப்படத்தை வைத்திருக்கிறார்?)
டாக்டர் செந்தழல் ரவி வாழ்க!

சென்னை விஜயம் என்னிக்கு?
Athisha said…
சித்தூர் முருகேசனை வழிமொழிகிறேன்..
ரவி said…
காமெடியா கமெண்ட் போடுங்க. சீரியஸா படிங்க. அது தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு நல்லது.
என்ன? சித்தூர் அண்ணாவுக்குப் போட்டியா? நடக்கட்டும்.
நல்ல இலகு மொழி பெயர்ப்பு.
VISA said…
என் நண்பர் ஒருவருக்கு விரைவாக விந்து வெளியேறும் இந்த பிரச்சனை இருந்தது.
மருத்துவர்கள் ஒரு சிறிய அறுவை சிகிச்சை மூலம் அதை சரி செய்துவிட்டார்கள்.

இப்போது எத்தனை மணி நேரம் ஆனாலும் விந்து மட்டும் வெளியேறுவதே இல்லை.

எனிவே நல்ல பகிர்வு.
////இப்போது எத்தனை மணி நேரம் ஆனாலும் விந்து மட்டும் வெளியேறுவதே இல்லை. //

ஏம்பா இரத்தபூமில காமெடியா?

:-)))

அதுக்கு பேர் குடும்பக்கட்டுப்பாடு. விந்து வெளியேறும் குழாய் கத்தரித்து கட்டப்பட்டுவிடும். இருந்தாலும் விந்தை எடுத்துச்செல்லும் திரவங்கள் வந்துகொண்டுதான் இருக்கும் அவை கருப்பையை அடைவதால் கரு உண்டாகாது.
VISA said…
கல்வெட்டு நீங்கள் சொல்லும் அறுவை சிகிச்சை குடும்ப கட்டுப்பாடு.
என் நண்பனுக்கு செய்ததோ விந்Tஹு கட்டுப்பாடு.

இது எப்படி இருக்கு .....:)
Indian said…
//விந்து வெளியேறும் குழாய் கத்தரித்து கட்டப்பட்டுவிடும். இருந்தாலும் விந்தை எடுத்துச்செல்லும் திரவங்கள் வந்துகொண்டுதான் இருக்கும் அவை கருப்பையை அடைவதால் கரு உண்டாகாது.//

ஆணுக்கு உச்சகட்டமாவது கிடைக்குமா?
Badri Seshadri said…
ரவி: நீங்கள் குறிப்பிடும் புத்தகத்தின் மொழிமாற்ற உரிமையை வாங்கினால் மட்டுமே அதனை கிழக்கு பதிப்பகம் வாயிலாக (நலம் வெளியீடாக) வெளியிட முடியும்.

இந்தத் துறையில் சில புத்தகங்களை நாங்கள் ஏற்கெனவே கொண்டுவந்துள்ளோம். உதாரணங்கள்:

http://nhm.in/shop/978-81-8493-163-1.html
http://nhm.in/shop/978-81-8368-870-3.html
http://nhm.in/shop/978-81-8368-446-0.html
http://nhm.in/shop/978-81-8368-429-3.html

ஆனால் நிச்சயம் நல்ல தரமான புத்தகங்களைத் தமிழாக்கம் செய்து வெளியிடவும் வேண்டும். அது தொடர்பாக பின்னர் உங்களை அணுகுகிறேன்.
Indian said...
// ஆணுக்கு உச்சகட்டமாவது கிடைக்குமா? //


Professional advise

ஆண்களுக்கான கர்ப்பத்தடை (வீடியோவுடன்)
http://thamilmaruththuvam.blogspot.com/2010/04/blog-post_8768.html

......ஆனால் ஒரு ஆண் உறவில் ஈடுபடும் போது வெளிவரும் சுக்கிலப் பாயத்தில் இருக்கும் ஏனைய திரவங்கள் வழமை போல் வெளிவருவதால் அந்த ஆணின் ஆண்மையிலோ அல்லது, உடலுறவின் மீதான ஆர்வத்திலோ எந்த விதமான மாற்றமும் ஏற்படாது.

இந்தச் சத்திர சிகிச்சை செய்து கொள்ளுவதால் ஆண்மை குறையும் என்ற மூட நம்பிக்கையே ஆண்கள் கர்ப்பத்தடை செய்யாமல் பெண்கள் மட்டும் கர்ப்பத்தடை செய்து கொள்ளும் அவலம் எம் சமூகத்தில் இருப்பதற்கானகாரணமாகும்.

-‍துமிழ்
http://thamilmaruththuvam.blogspot.com


.
ரவி said…
வாங்க யோகன்..சித்தூர் அண்ணாவுக்கு நாம் போட்டியா ? மலையுடன் துரும்பை கம்பேர் செய்கிறீர்களே ? நன்றி !!!!!
ரவி said…
அடடே !! கல்வெட்டின் பின்னூட்டம் வந்ததே..இதில் இருந்தே உருப்படியான ஒரு பதிவை எழுதியது எனக்கு தெரிந்துவிட்டது...
ரவி said…
பகிர்வுக்கு நன்றி பத்ரி. எல்லாமே இருக்கிறதே !!!

கிழக்கின் மருத்துவர் காமராஜ் எழுதிய புத்தகத்தை லண்டன் புக் ஃபேரில் வாங்கியதாக ஒருவர் உரையாடியில் தெரிவிக்கிறார்...

நன்றி !!!
ரவி said…
விசா !!

நல்ல ஆப்புரேஷனாக இருக்கிறதே ?
பாலியல் குறித்த அறிவியல் ரீதியான புரிதல் இல்லாத காரணத்தால், பாலியல் ரீதியான குற்றங்களும், பிற குற்றங்களும் அதிகரிக்கின்றன. (ஆனால் குற்றங்கள் அதிகரிக்க இது மட்டுமே காரணமல்ல: பல காரணங்களுள் இதுவும் ஒரு முக்கியமான காரணம்!)

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு தாவரமும், விலங்கும் எவ்வாறு இனப்பெருக்கம் செய்கிறது என்பது பாடத்தில் வருகிறது. ஆனால் மனிதன் எவ்வாறு இனப்பெருக்கம் செய்கிறான் என்பது மருத்துவ பாடத்திட்டத்தில் மட்டுமே இருக்கிறது.

பாலியல் குறித்த அறிவும், தெளிவும் பாலியல் குற்றங்களையும், மற்ற குற்றங்களையும் ஓரளவு குறைக்கும்.

அதற்கு வழிவகுக்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
Sanjai Gandhi said…
சூப்பர் மாம்ஸ்..

10*
கல்வெட்டு said...
////இப்போது எத்தனை மணி நேரம் ஆனாலும் விந்து மட்டும் வெளியேறுவதே இல்லை. //

ஏம்பா இரத்தபூமில காமெடியா?

:-)))

அதுக்கு பேர் குடும்பக்கட்டுப்பாடு. விந்து வெளியேறும் குழாய் கத்தரித்து கட்டப்பட்டுவிடும். இருந்தாலும் விந்தை எடுத்துச்செல்லும் திரவங்கள் வந்துகொண்டுதான் இருக்கும் அவை கருப்பையை அடைவதால் கரு உண்டாகாது.
//

ஓ அது அந்த 95% திரவமா?
//ஆனால் மனிதன் எவ்வாறு இனப்பெருக்கம் செய்கிறான் என்பது மருத்துவ பாடத்திட்டத்தில் மட்டுமே இருக்கிறது. //

லாயர் சார்!

சில வருடங்களுக்கு முன்பாக (அதாவது நான் பத்தாம் வகுப்பு படித்தபோது) அறிவியல் பாடத்தில் இந்த பாடமும் ஒரு பாடமாக வைக்கப்பட்டிருந்தது.

பலத்த சர்ச்சைகளுக்குப் பிறகு அடுத்த ஆண்டிலிருந்து அப்பாடம் நீக்கப்பட்டது. எனினும் முன்பே தயாராகிவிட்ட புத்தகங்களில் அப்பாடம் இடம்பெற்றிருந்தது. குண்டு லட்சுமி டீச்சர் அப்பாடத்தை மட்டும் நடத்தவேயில்லை. நாங்களாகவே படித்து புரிந்து கொண்டோம் :-)
Indian said…
//Professional advise

ஆண்களுக்கான கர்ப்பத்தடை (வீடியோவுடன்)
http://thamilmaruththuvam.blogspot.com/2010/04/blog-post_8768.html

......ஆனால் ஒரு ஆண் உறவில் ஈடுபடும் போது வெளிவரும் சுக்கிலப் பாயத்தில் இருக்கும் ஏனைய திரவங்கள் வழமை போல் வெளிவருவதால் அந்த ஆணின் ஆண்மையிலோ அல்லது, உடலுறவின் மீதான ஆர்வத்திலோ எந்த விதமான மாற்றமும் ஏற்படாது.//

ஆண்மை = விறைப்புத்தன்மை என்ற ரீதியில் பதில் சொல்லப்பட்டதாக நினைக்கிறேன்.

விறைப்புத்தன்மை + உச்சகட்டம் இரண்டும் பாதிப்படையாது எனப் புரிந்து கொள்கிறேன்.

பல்வேறு தளங்களில் ஆர்வத்துடனும், பொறுப்புடனும் மறுமொழி இடும் கல்வெட்டு அவர்களுக்கு மிக்க நன்றி.
SurveySan said…
குட். புக்கா போட்டீங்கன்னா, பாப்புலர் ஆயிடலாம். :)
Indian said…
//
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு தாவரமும், விலங்கும் எவ்வாறு இனப்பெருக்கம் செய்கிறது என்பது பாடத்தில் வருகிறது. ஆனால் மனிதன் எவ்வாறு இனப்பெருக்கம் செய்கிறான் என்பது மருத்துவ பாடத்திட்டத்தில் மட்டுமே இருக்கிறது.
//

மெட்ரிக்குலேஷன் பாடதிட்டத்தில் (89-90) உயிரியல் பாடத்தில் puberty, male/female reproductive organs, coitus(?) என மேலோட்டமாக வரும். ஆசிரியையும் ஒருவாறு 'குன்ஸாக' பட்டும் படாமல் பாடம் நடத்துவார்.
விரைவில் விந்து வெளியேறினால் தான் என்ன, பெரிய கொலை குற்றமா.
உடலுறவு என்பது இனப் பெருக்கத்திற்காக மட்டுமே.

விந்து இருந்தால் போதும், ஐ ஒ யு, ஐ வி எப் போன்ற முறைகளில் இன்று இனப் பெருக்கம் செய்ய முடியும்.

அடுத்த பதிவு படத்துடன் விளக்கமாக போடுங்கள்
Ahamed irshad said…
Nice & Useful Article.

Thank you Mr.Senthazlal Ravi.
Anonymous said…
//விரைவில் விந்து வெளியேறினால் தான் என்ன, பெரிய கொலை குற்றமா. //

புஸ் போன பட்டாசு மறுபடி அல்லது உடனே மறுபடி வெடிக்காது என்று நினைக்கிறேன் :))

தாம்பத்ய உறவில் இந்த பிரச்சினை பாதிப்பை ஏற்படுத்துவதாக வரையறுக்கிறார்கள்.!
செந்தாரப்பட்டி பெத்துசாமி அவர்களே,
இரு கை கூப்பி வணங்குவது தமிழ் பண்பாடுங்கண்ணா..
நல்ல பதிவு. டாகடர், மதுறை விஜயம் எப்போ? எந்த லாட்ஜ்? உங்க சுற்றுப் பயண விபரத்த உடனே தெரியப்படுத்துங்க!

//யுவகிருஷ்ணா சில வருடங்களுக்கு முன்பாக (அதாவது நான் பத்தாம் வகுப்பு படித்தபோது) அறிவியல் பாடத்தில் இந்த பாடமும் ஒரு பாடமாக வைக்கப்பட்டிருந்தது.//
நானும் அந்த பேட்ஜ் தாங்கோ எங்க சார் கிட்ட நாங்க கெஞ்சுனோம் அந்த பாடத்த நடத்த சொல்லி, மனுசன் கெட்ட வார்த்தைல திட்டிப்புட்டார். அதுக்கு பாடத்தையே நடத்தியே இருக்கலாம். (அந்த சைன்ஸ் புக்க பலபேரு வாங்கிப் படிச்சாங்க)
ஓ எப்படி தவறவிட்டேன் இந்தப் பதிவை. Premature ejaculation பற்றி என்னுடைய வலைப்பூவில் கூட ஒருவர் கேட்டிருந்தார். ஒரு ஆங்கிலப் பதிவை அவருக்கு படிக்குமாறு சொன்னேன். முன்பே தெரிந்திருந்தால் இந்தப் பதிவுக்கு இணைப்பு கொடுத்திருப்பேன்.

இப்போது மட்டும் விரைவில் இணைப்பு கொடுக்கிறேன். பாலியல் பற்றி வலையில் எழுதுவது கணிசமாகவே நிகழ்கிறது.
ajith said…
PE விந்து விரைந்து நழுவுதல் பிரச்சனைக்கு ஏதாவது மருந்திருந்தா சொல்லுங்கப்பா..
நானும் பிரபலமான பல மருந்துகளை முயற்சி செய்து பார்த்துட்டேன். யாருக்காவது எந்த மருந்தாவது நல்ல பலன் தந்திருந்தால் அந்த மருந்தின் பெயரையும் கிடைக்கும் இடத்தையும் கூறுங்கள்.
ajith said…
This comment has been removed by the author.
ஒரிதழ் தாமரை சூரணம் சாப்பிட நல்ல பலன் தெரியும் அனைத்து செக்ஸ் வியாதிக்கும் ஒரே மருந்து விந்து முந்துதல்.சிறிய குறி விரைப்பின்மை. நீர்த்துப்போதல் ஆகிய பிரச்சனைகளுக்கு எங்களிடம் ...கலப்படம் இல்லாத. ..ஓரிதழ்த்தாமரை காய்ந்த செடியாகவும் மற்றும் பவுடராகவும் கிடைக்கும் 9600299123

Popular Posts