Planet Islam தோழரே ? என்னதான் வேண்டும் ?

ஓசை செல்லாவின் கார் பின்னால் நானும் சஞ்ஜெயும்.முதலில் சில மின்னஞ்சல்கள் அனுப்பினீர். இது போன்ற மின்னஞ்சல்களை எனக்கு அனுப்பவேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொண்டு திரும்ப பதில் அனுப்பினேன். அதன் பிறகு மீண்டும் சில.

இப்போதும் நான் உங்களுக்கு பதில் அனுப்பினேன். வேண்டாம். என்னை விட்டுவிடுங்கள் என்று. ம்ஹும். கேட்பதாயில்லையே நீர் ? இன்றைக்கு மீண்டும் மின்னஞ்சல். எனக்கு உங்களிடம் சில கேள்விகள்.

- நீங்கள் மின்னஞ்சல் முகவரியை , Compose செய்ய மட்டும்தான் பயன்படுத்துகிறீரா ? என்னுடைய மின்னஞ்சல்கள் ஏன் உமது பார்வையில் படவில்லை ?

- ஆங்கிலத்தில் மின்னஞ்சல் அனுப்புகிறீர்கள். நீங்கள் தமிழர் இல்லையா ? அப்படியென்றால் எனக்கு ஏன் அனுப்புகிறீர் ?

- நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல் படித்து எனக்கு ஹதீசு வந்து நான் முஸ்லீமாக மாறி ஜமால் என்றோ பாரூக் என்றோ பெயரை மாற்றிக்கொள்வேன் என்று நினைக்கிறிர்களா ?

- நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்று நிறைய பேருக்கு தெரியும். ஒருவேளை என்னுடைய மின்னஞ்சலை அவர்கள் உங்களிடம் கொடுத்து என்னை திருத்தி நல்வழிப்படுத்துமாறு கொடுத்தார்களா ?

- நான் முஸ்லிமாக மாறினால் எதாவது அமவுண்டு தருவீர்களா ? குறைந்தபட்சம் என்னுடைய ஜீவன் ஆனந்து எல்.ஐ.சி பாலிசி பிரிமியம் தொகையையாவது கட்டுவீர்களா ?

- எனக்கு ரம்ஜான் நோன்பு கஞ்சி ரொம்ப பிடிக்கும். ஜாகீர் என்று என்னுடைய சின்னவயசு நன்பனோட மம்மி பீவி ஒரு தூக்குவாளியின் அவனிடம் கொடுத்தனுப்புவார்கள். பூண்டு இஞ்சி எல்லாம் போட்டு ஒரு மாதிரி வாசனை வரும். அட்லீஸ்ட் அந்த நோன்பு கஞ்சியாவது பார்சல் அனுப்புவீர்களா ?

- பார்வதியம்மா திரும்ப போனது, ஐபிஎல் விவகாரம், ஐரோப்பாவில் வால்கேனோ புகை, சாரு ஜெமோ உயிர்மை மனுஷ்யபுத்ரன் பிரச்சினை, தமிழ் இணைய மாநாடு என்று எந்த பிரச்சினையும் உங்களுக்கு தெரியவில்லையா ? நான் ஏன் இந்த ஜினாயுல் ஆபிதீன் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் ?

இதுக்கு மேல என்னால பொறுக்க முடியாது...

ஏண்டா முண்ட கலப்ப. சனியனே. சகடையே ? அபிஷ்டு அபிஷ்டு. குல்லா போட்ட குரங்கே. மண்டை வீங்கிய மடையா. உனக்கு எத்தனை முறை சொல்வது. திரும்ப திரும்ப அனுப்பற நீ. திரும்ப திரும்ப அனுப்பற நீ..

நீ சோறு திங்கறியா இல்ல சோத்த தின்னுட்டு போட்ட லத்திய திங்கறியா ? ஒரு முறை சொன்னா புத்தி வராது உனக்கு ? நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. உனக்கு நூறு சூடு போட்டாலும் திருந்த மாட்டே போலிருக்கே பனியன் போட்ட சனியனே ?

-| SanjaiGandhi™ |-
அதிரை ஃபரூக் என்ற பெயரைக் கேட்டாலே பலருக்கு வயித்தைக் கலக்கும் போல. பய புள்ளைக இந்த மதவெறியனை பத்தி சொல்லி லிட்டர் லிட்டரா கண்ணீர் வடிக்கிறாங்க.. கொஞ்ச நாளா எனக்கும் வந்தது.கண்ணீர் இல்ல.. மெயில் தான்.. 

இதுல இருந்து தப்பிக்கிறது மட்டுமில்லாம அவர் இனி யாருக்கும் மெயிலே அனுப்பாம செய்யலாம். மேட்டர் சிம்பிள் மச்சிஸ்.. யாருக்கெல்லாம் இந்த மதவெறி மெயில் வருதோ அவங்க எல்லாம் யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்..
 
ஜிமெயிலில் தேடும் பெட்டிக்கு அடுத்து Create Filter என்பதை அமுக்கி அதனுள் சென்றுவிடுங்கள்.

அந்தப் பக்கத்தில் From என்ற இடத்தில் athiraifarook@gmail.com என்ற முகவரியைக் கொடுத்துடுங்க.
மற்ற அனைத்தையும் காலியாக விட்டு next Step என்ற பட்டனை அமுக்குங்க.

Choose Action என்ற பகுதியில் Forward it to என்பதை தேர்வு செய்துவிட்டு athiraifarook@gmail.comஎன்ற முகவரியை அதற்கான பெட்டியில் அளித்துவிடுங்கள்.

அடுத்த வரியில் இருக்கும் delete it என்பதையும் தேர்வு செய்து பின்னர் கடைசி வரியில் இருக்கும் Also apply filter to X conversations below என்பதையும் தேர்வு செய்துவிடுங்கள். 

இப்போது Create Filter என்ற பட்டனை அமுக்குங்க.வேலை முடிந்தது.

சஞ்ஜெய் எழுதிய ஆக்கம் ஒன்றில் அதிரை பாருக்குக்கு ஆப்பு வைக்க சொல்லிக்கொடுத்தாரு. ஆனா உன்னை விட்டுட்டாரே. படுபாவி. நீ எல்லாம் உருப்புடுவியா ?

எந்த பள்ளிக்கூடத்துல படிச்ச ? ம்ஹும். நீ மழைக்கு கூட பள்ளிக்கூடம் ஒதுங்கியிருக்க மாட்டே. எங்கியாவது கொடுக்கப்புளி மரத்திலயோ நாவப்பழ மரத்திலயே ஏறி நேரத்தை கழிச்சுட்டு பொய் கையெழுத்து போட்டு ப்ராக்ரஸ் ரிப்போட் தயாரிச்சிருப்ப. இங்கிலீஷ் வெறும் கட் அண்டு பேஸ்டு தானே உனக்கு செய்ய தெரியும் ?

த்ராபை. அடுத்தவன் சிலேட்டுல சாந்தி டீச்சருக்கும் குப்பனுக்கும் ஒரு இதுக்கு கிறுக்கிவெச்ச பயதானே நீ ? பாத்ரூம் செவத்துல கரியால படம் வரைஞ்சு பாகம் குறிச்சவன் தானே நீ ? மூஞ்சப்பாரு. மொகரையப்பாரு. பிச்சக்காரன் வாந்தியெடுத்தமாதிரி இனிமே மெயில் அனுப்பனே ? மவனே நான் மனுசனா இருக்கமாட்டேன்...!! இப்பமட்டும் என்னாங்கறியா ? மெயில் அனுப்பிப்பாரு தெரியும்.Comments

ரெம்ப பாதிக்க பட்டு இருக்கீங்க போல இருக்கே !!!
Unknown said…
நசரேயா நீயாவது புரிஞ்சுக்கறீயேப்பா...அவ்வ்வ்வ்
அண்ணே...நானும் பாதிக்கப்பட்டிருக்கேன்
pichaikaaran said…
இலக்கிய கூட்டம் எதுக்கும் கூப்பீட்டு இருக்காங்களா ?
காருக்கு வெளியே என்ன செய்கிறீர்கள் இருவரும்?

டீயுசன் டீச்சர் படம் மாதிரியா?:)))
விஷூ அன்னைக்கு சேச்சி குடுத்த பாயசம் திரும்ப ஒரு கப் குடிச்சமாதிரி இருக்கு:)

நம்ம ஆளை ஒருத்தன் கும்மும் பொழுது அடா அடா வரும் சந்தோசம் இருக்கே! சொல்லி புரியாது:)
//எதாவது அமவுண்டு தருவீர்களா ? குறைந்தபட்சம் //

இவ்விடம் சிறந்த முறையில் "கட்" செய்யப்படும்!

இப்படிக்கு
ஆல் இன் ஆல் அழகு ராஜா
ஒயர் கட்டிங் சர்வீஸ்
Sanjai Gandhi said…
மாம்ஸ், அது ஒரு மதவெறி புடிச்ச சைக்கோ கும்பல். பன்னாடைங்க ஒரு மார்க்கமா தான் அலையறானுங்க. இது மாதிரி ஏழெட்டு ஐடில எனக்கு மெயில் வந்துச்சி. எல்லாத்துக்கும் ஃபில்டர் தான் :))

இவனுங்களுக்கு கட் பண்ணாம விட்டுட்டாங்க போல.. அதான் ரொம்ப ஆடறானுங்க..இந்த பொறம்போக்குகளுக்கு சப்பை கட்டு கட்டினாங்க என் பதிவுல சில நல்லவர்கள் .
:)))

அண்ணே,

இதே மாதிரி இன்னொரு சிவசேனா குரூப்பும் இருக்குது. வேணாம்டா வேணாம்டா சொல்லி சொல்லி அலுத்துடுச்சு. சிவசேனா பேரு வந்தாலே குப்பைத்தொட்டியில போய் உக்கார வைச்சிருக்கேன்.

ஆளைத் தேடிப்பிடிச்சு, பாத்து அனுப்பறாங்களோ :)
அடங்க மாட்டாங்க போலிருக்கே!

என்ஜாய்!
சஞ்சய் சொல்லிருக்கிற அதே மெத்தேட் தான் ரொம்பகாலமா ஃபாலோயிங்க். :))
அந்தாளுக்கு நம்ம மொக்கை மெயில் அட்ரஸை கொடுத்து ரீடைரக்ட் பண்ணு தம்பி..!

அங்கிட்டாச்சும் வந்து பொழைச்சுக்கட்டும்..!
யாராக இருந்தாலும் அவர் வாழ்க. உங்களுக்கு மேலும் பல மெயில்கள் அனுப்ப அவருக்கு எல்லாம் வல்ல இறைவன் நீண்ட ஆயுளை தருவாராக. அமெரிக்க ஏகாதிபத்திய கம்பனிகளில் இருந்து வரும் வயாக்ரா மெயில்களுக்கு எதிராக எழுத வக்கில்லாத ரவி, ஒரு எளிய தனிமனிதரை தாக்குவதில் இருந்தே அவரது தெகிரியம் தெரியுது . முடிஞ்சா ஏகாதிபத்தியத்தை எதிரு ரவி !

இவ்வளவு ஒல்லியா எல்லாம் நீங்க இருந்து இருக்கீங்களா ? :)-
Unknown said…
ஓ கார்க்கி ?
Unknown said…
பார்வையாளன் ? ஏன் கும்மறதுக்கா ?

Popular Posts