Friday, May 07, 2010

நித்யானந்தா - விலைபோன காவல்துறை

நித்யானந்தா விவகாரத்தில் யார் கச்சை கட்டுகிறார்களோ இல்லையோ ? ஊடகத்துறை நன்றாக கல்லா கட்டுகிறது. ஒரு ஊடகம் ஒரு படி மேலே போய், காசை கட்டு வீடியோ பார் என்று ப்ளூ ப்லிம் விற்கும் அளவில் சென்றது.





அதுவும் நித்யானந்தா படத்தை போட்டு, அந்த நடிகை இந்த நடிகை என்று யாரையாவது லே அவுட்டில் போட்டு பணம் சம்பாதித்தன புத்தகங்கள். வழக்கமாக நடிகை படத்தை போட காரணம் கிடைக்கவில்லை என்றால் நடிகை கோலம் போடுவது, பொங்கல் வைப்பது, உடற்பயிற்சி செய்வது என்று பக்கத்தை நிரப்புவார்கள். இவர்கள் வெறும் வாயில் அவல் போல நித்தி மாட்டிக்கொண்டார் இப்போது..


லெட்ஸ் பாஸ் ஆன்..!!

இன்றைக்கு நித்யானந்தாவை சிஅய்டி அதிகாரிகள் விசாரணை செய்யும் காட்சியும், அவரை லாக்கப்பில் அடைத்து பூட்டும் காட்சியும், அவர் அங்கே அமருவதும், படுத்து உறங்கிக்கொண்டிருப்பதும் ஆகிய காட்சிகளை காவல் நிலையத்தின் அல்லது காவல் தலைமையகத்தின் சி.சி.டி.வி பூட்டேஜுகளாக செய்தி காட்சி ஊடகங்கள் வெளியிடுகின்றன.

என்ன அய்யா நடக்கிறது இந்த நாட்டில் ? அதி முக்கியமான காவல் நிலைய இண்ட்ராகேஷன் காட்சிகள் ஊடகங்களுக்கு எப்படி விற்கப்பட்டன ? இவை விற்கப்பட்டன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் பாதுகாப்புத்துறை எங்கே அய்யா இருக்கிறது ? இந்த அளவுக்கு லீக்கேஜ் ஆன ப்ராஸஸ் ஐ கையில் வைத்துக்கொண்டிருந்தால், ஒரு கஸாப் அல்ல, நூறு கஸாப் இந்த நாட்டின் மீது தாக்குதல் தொடுப்பான்.

அந்த வீடியோவில் தெரியும் டி.வி குருப்ரஸாத், கருநாடக போலீசு சிஐடியின் டி.ஐ.ஜி. மற்றொருவர் டி.ஜி.பி சரண் ரெட்டி. இவர்கள் அனுமதி கொடுத்தார்களா என்ன, இந்த விசாரணை நடவடிக்கைகளை படம் பிடித்து ஒளிபரப்ப ? இது குறித்து கடுமையான விசாரணை மற்றும் நடவடிக்கை தேவை.

இங்கே மற்றொரு முக்கியமான விடயம். நித்தி குட்டி அதே காவி உடையுடன் இருந்துவருகிறது. கதவை திறந்து உள்ளே போ என்றவுடன் சப்ஜாடாக உள்ளே சென்று உட்கார்ந்துகொண்டு, அப்புறம் அப்படியே உறக்கம்.

உலகம் எங்கும் சுற்றி ஆன்மீகம் பரப்பி அதனை நம்புவோர் வாழ்வில் ஒளியேற்றி வந்த சுவாமியை இப்படியா சாதாரண செல்லில் அடைப்பது ? ஒரு நல்ல கட்டில் மெத்தை கொடுக்கவேண்டாமோ ? சுவாமி நித்யானந்தா எந்த குற்றமும் செய்யவில்லை, அவரது ப்ரைவஸியை கெடுத்த ஊடகத்துறை தான் குற்றம் செய்துள்ளது என்பது என்னுடைய ஸ்டேண்ட் ஆகும்..இந்த சுட்டியில்  முழுமையாக பார்க்கலாம்...

ஆகவே நித்யானந்தா பெரும் சமூக குற்றம் எதுவும் செய்துவிட்டதாக எனக்கு தோன்றவில்லை. உச்சநீதிமன்றம் நார்கோ அனலிஸில் சோதனை தவறு என்று சொல்லிவிட்டது. குறைந்தபட்ச மனித உரிமையாவது காக்கப்பட்டது. இல்லை என்றால் அதற்கும் நித்தியை அழைத்துப்போய், படுக்க வைத்து, மஸாஜ் செய்து, கன்னத்தில் அறைந்து ஊசி போட்டு கொடுமைப்படுத்தியிருப்பீர்கள்.

ஐ சப்போர்ட் நித்தி, For நியாயமான விசாரணை, தவறு இருந்தால் தண்டனை, or Else, Leave Him Alone...!!!

4 comments:

ரவி said...

ரெண்டு நாளைக்கு முன்பே வெளியிட்டிருக்கவேண்டிய பதிவு.

Unknown said...

//தனித்திரு விழித்திரு பசித்திரு.....//

இதுல நித்யானந்தா பசியோட மட்டும் தான் இருந்திருகார். விழிப்போடவும் இல்லை . தனியாவும் இல்லை. அத எப்படி சப்போட் பண்ணுறீங்க

அ.முத்து பிரகாஷ் said...

//**இந்த அளவுக்கு லீக்கேஜ் ஆன ப்ராஸஸ் ஐ கையில் வைத்துக்கொண்டிருந்தால், ஒரு கஸாப் அல்ல, நூறு கஸாப் இந்த நாட்டின் மீது தாக்குதல் தொடுப்பான்.**//

தழல்! கசாப்களை விட நாட்டிற்கு அதிக சேதாரத்தை உண்டு பண்ணுவது நித்திக்களே என்பது என் அபிப்ராயம் ... விவாதத்துக்காய் சொல்ல வரவில்லை ...

அப்புறம் யாழோட வீடியோ பதிவு ... மறந்திடாதீங்க

ரவி said...

நியோ ஏற்கனவே ஒரு சின்ன வீடியோ போட்டிருக்கிறேனே

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....