Tuesday, May 18, 2010

கூகிள் விளம்பரமும் பள்ளிக்கல்வித்துறையும்

தமிழக அரசு, தனியார் பள்ளிகளுக்கு பெரிய ஆப்பை அடித்து சொருகிவிட்டது. அவர்களும் உச்சநீதிமன்றம் வரை சென்று முட்டிப்பார்த்துவிட்டு, ஸ்ட்ரைக் அது இது என்று பூச்சாண்டி காட்டிவிட்டு, இன்றைக்கு ஓஞ்ச வாழைப்பழமாகிவிட்டார்கள்.

2 ஆம் தேதி பள்ளிக்கூடம் திறப்பாங்களாம். பீஸை அஞ்சு மடங்கு அதிகரிக்கச்சொல்லி நீதிபதி கோவிந்தராசன் அய்யாவிடம் கோரிக்கை விடுப்பார்களாம். கோவிந்தராசன் அய்யா தலையாட்டினால், ஜூலை மாதம் கட்டணத்தை உயர்த்திவிடுவார்களாம்.

பொட்டியை நீட்டி சரி செய்துவிடலாம் என்று இவர்கள் நினைப்பது வெள்ளிடை மலை. இதை தமிழக அரசு உறுதியாக கவனிக்கவேண்டும்..

பொட்டி தர ஏற்கனவே ரொம்ப முயற்சி செய்திருப்பார்கள் போலிருக்கிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஒரு உறுமலும் விட்டுவிட்டார்...

இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு இந்த கட்டண விகிதம் தான் என்றும் உறுதியாக தெரிந்துவிட்டது. இந்த அற்புதமான நடவடிக்கைக்கு எனது பாராட்டுக்கள்.

இது குறித்து மேல் விவரம் பார்க்க தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையின் இணைய தளத்துக்கு போனால், அங்கே தாய்லாந்து நாட்டில் பேசப்படும் தாய் மொழியை கற்கவோ அல்லது தாய் ச்சி என்ற உடற்பயிற்சியை கற்கவும் என்னை அழைக்கிறார்கள்...

அதிர்ச்சி. ஒருவேளை தமிழ் எழுத்து சீர்மை முழுமையாக செயல்படுத்தப்பட்டு, தாய்லாந்து நாட்டின் மொழிதான் தமிழ்மொழி என்ற அளவில் மாற்றிவிட்டார்களோ என்று வருடத்தை பார்த்தேன். இன்னும் 2010 இல் தான் இருக்கிறேன்..

அப்புறம் எப்படி தமிழக அரசின் இணைய தளத்தில் தாய்லாந்து மொழி வந்தது ? அவர்கள் காண்ட்ராக்டு கொடுத்துள்ள நிறுவனமோ அல்லது ஊழியர்களோ அதில் கூகிள் விளம்பரங்களை இட்டு நிரப்பியுள்ளார்கள்.

அதனால் கண்ட கண்ட விளம்பரங்கள் வந்து தொலைக்கின்றன. கூகிள் விளம்பரம் என்றால் அதில் ஒரு ப்ரொபைல் மின்னஞ்சல் எல்லாம் போடவேண்டும். ஆகவே எளிதாக இதனை யார் செய்கிறார்கள் என்று கண்டறிந்துவிடலாம்.

எனக்கு சந்தேகம் என்னவென்றால், இது தளத்தை நடத்தும் நிறுவனத்தின் வேலையா அல்லது பணியாற்றும் ஊழியர்கள் வேலையா என்று தெரியவில்லை. அரசு சம்பந்தமான இணைய தளங்களில் கூகிள் விளம்பரங்கள் போடவேண்டிய தேவை என்ன ?

இது அரசின் ரெப்யூட்டேஷனை பாதிக்காதா ? இன்றைக்கு தாய் ச்சீ பழகலாம் வா என்று அழைக்கும் விளம்பரம் நாளைக்கு தாய்லாந்து அழகி இருக்கிறாள் வா என்று அழைக்க 100% சதவீதம் வாய்ப்பு உண்டே ?





கூகிள் விளம்பரங்கள் தளத்தில் இருக்கும் வார்த்தைகள் மற்றும் நீங்கள் தளத்தினை திறக்கும் இடம் ஆகியவைகளை கருத்தில் கொண்டே வெளியாகின்றன என்று நினைக்கிறேன். ஆகவே இதனை கண்டிப்பாக அரசுத்துறையை சேர்ந்தவர்கள் கவனித்து உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். 

இல்லையென்றால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பத்து ருபாய் செலவழித்து அந்த கூகிள் கணக்கு யாருடையது, அல்லது அந்த கணக்கில் எவ்வளவு நாளாக இந்த விளம்பரங்கள் அந்த தளத்தில் வருகிறது என்று வழக்கு தொடர்வேன் என்று உறுதியாக சொல்கிறேன்...
.
.
.

13 comments:

நசரேயன் said...

//தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பத்து ருபாய் செலவழித்து அந்த கூகிள் கணக்கு யாருடையது, அல்லது அந்த கணக்கில் எவ்வளவு நாளாக இந்த விளம்பரங்கள் அந்த தளத்தில் வருகிறது//

தகவல்ல தகவல் கிடைக்குமா ?

Athisha said...

பத்திரிகைகளில் வரவேண்டிய செய்தி!

கார்மேகராஜா said...

அரசு கஜானாவை நிரப்ப புது திட்டமோ என்னவோ? :)

கயல் said...

அடப் பாவிங்களா அங்கேயும் விளம்பரமா? அரசின் கவனமின்மைக்கு சரியான எடுத்துக்காட்டு... கல்வித் துறை பல நல்ல விசயங்களை மாணவ சமுதாயத்துக்குச் சொல்லுது போல!

Gokul said...

//Established as a public-private partnership and entailing no cost on the State, the site will serve as a virtual hub for implementing e-governance programmes in the Department.

It will be maintained jointly by the Tamil Nadu State Parent Teacher Association and Mark and Meclin Solutions (P) Ltd.//

//Funds for these programmes would be generated from online advertisement revenue, Mr. Thennarasu said.//

Details I got on googling..
http://www.thehindu.com/2009/03/02/stories/2009030259210700.htm

But..Mark and Meclin Solutions (P) Ltd ?? What is the revenue??
Hope everything is fair.

ரவி said...

பள்ளிக்கல்வித்துறை அவ்வளவு ஏழையாவா இருக்கு ?

ரவி said...

நன்றி கோகுல்..

வவ்வால் said...

Ravi ,already innoru govt sitela vayagra advertise vanthathu,govt site maintanance latchanam avvalavu than.ministerkal net pakkamlam ponathane ithellam theriyum.

ரவி said...

ஆமாம் வவ்வால். மேலும் இது போன்ற தகவல்கள் அவர்களுக்கு தெரிந்தே நடக்கிறதா என்று தெரியாது.

Vignesh Dhandapani said...

As i know about internet rules, government website URL registered with websitename.gov.in. Following is the website of TamilNadu School Education Department ( http://www.tn.gov.in/schooleducation/). Government can take action against who making business with fake website (http://www.pallikalvi.in/) use of government information.

Karthick Chidambaram said...

தலைப்ப தவிர எதிலும் தமிழில் இல்லை - கல்வித்துறையின் இணையபக்கத்தில்.
பள்ளி கல்வி துறை நிறையவே செய்தாலும் - இப்படியும் செய்யனுமா ?

Anonymous said...

என்னாது இந்த வெப்சைட்டே உடான்ஸா ? என்ன சார் குண்டை போடுறீங்க ?

Anonymous said...

தலைப்ப தவிர எதிலும் தமிழில் இல்லை - கல்வித்துறையின் இணையபக்கத்தில்.
பள்ளி கல்வி துறை நிறையவே செய்தாலும் /////////////

இந்தியில் இல்லாதவரை சந்தோஷப்படுங்க

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....