Saturday, January 08, 2011

திமுகவுக்கே ஓட்டு போடலாம்னு இருக்கேன் !!!

.

இணையத்தில் மட்டும் வீசும் திமுக எதிர்ப்பலை, இப்ப இன்னும் கொஞ்சம் அதிகமாயிட்டதோ என்று தோன்றும் அளவுக்கு, கொஞ்சம் கொலைவெறியோடு அலைகிறார்கள். அதற்கு பல காரணங்கள். பல நியாயங்கள். பல கற்பிதங்கள்.

ரசினிகோந்து வாய்ஸ் கொடுத்ததால் ஏமாந்து திமுக-தமாக கூட்டணிக்கு 96 அடியேன் ஓட்டு போட்டது வரலாற்று நிகழ்வு, அதை பற்றி அதிகம் வேண்டாம், ஆனால் இந்த முறை, திமுகவுக்கு ஓட்டு போடுவது என்று முடிவெடுத்துவிட்டேன்.

காரணங்களை கீழே அடுக்குறேன் !!!

சூப்பரா இருக்கு இதெல்லாம்.

1. கடந்த அதிமுக ஆட்சியின் ஹிட் திட்டங்களை (மகளிர் சுய உதவிக்குழு, மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் போன்ற பல) ஒழிக்காமல் அப்படியே செயல்படுத்தியது. அம்மா ஆட்சியில் உழவர் சந்தை, சமத்துவபுரம் திட்டங்கள் பொலிவிழந்துபோனது போல் இல்லாமல்.

2. மத்திய அரசின் நூறு நாள் வேலைத்திட்டத்தை சுணங்கடிக்காமல் செயல்படுத்தி, கிராம அளவில் நல்ல பணப்புழக்கம் ஏற்பட வகைசெய்தது.

3. ஒரு ரூபாய் அரிசி ! இலவச வண்ணத்தொலைக்காட்சி பெட்டி. வயிறும் மனசும் நிறையும் திட்டங்கள்.

4. கிராம குளங்கள் / ஏரிகள் தூர்வாறப்பட்டு, புதிய நீர் ஆதாரங்கள் தமிழகமெங்கும் உருவாக்கப்பட்டுள்ளது.

5. அரவாணிகள், நரிக்குறவர்கள் மேல் அக்கறையான நடவடிக்கைகள், தனி நல வாரியம் அமைத்தது.

6. அரசு பள்ளிகளில் கட்டணம் ரத்து, வாரத்தில் ஐந்து நாளும் முட்டை(புள்ளைங்களா, பாடத்துல இதை வாங்கிடாதீங்க) !

7. வீட்டு வசதி திட்டம் (முன்னால அவர் பெயரை சேர்த்துக்கோங்க. நான் அதிமுகக்காரன், அம்மாவுக்கு மொட்டை கடுதாசி போட்டுடுவாங்க)

8. இலவச மருத்துவ காப்பீடு

9. அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, வாத்தியார்கள் / டீச்சர்களுக்கு வழக்கம்போல சம்பள உயர்வு ( இவர் ஆட்சின்னாலே இவங்களுக்கு தனி குஷி தெரியுமா)

10. 108 ஆம்புலன்ஸ் சேவை. (நான் கூட ஒரு ஆக்ஸிடெண்ட் அப்போ போன் செய்தேன். அதி அவசர சேவை. வெரிகுட்)

11.  இலவச எரிவாயு அடுப்புகள் மற்றும் இணைப்புகள்

12. கனிமொழி தலைமையில் நடக்கும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி முகாம்கள். லட்சக்கணக்கானோர் பயனடைந்துள்ளனராம்.

13. தேசிய கடல்வாழ் பல்கலையை தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்தது.

14. புதிய பொறியியல், மருத்துவ கல்லூரிகள் அமைக்க சீரிய முயற்சிகள் ( கடலூர் திண்டுக்கல் மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் வரப்போவுதாமே)

15. உடல் ஊனமுற்றோர் என்ற பதத்தை ஒழித்து மாற்றுதிறனாளிகள் என்று அழைக்கவேண்டும் என்று சட்டம் கொண்டுவந்தது

இன்னும் பல இருக்கு. தமிழகம் பல துறைகளில் இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருக்குன்னு ஸ்டேட் சொல்லுது.

இனி, என்ன என்ன செய்யவேண்டிய தேவை :

தனியார் பள்ளி கட்டணங்களை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதே பெரிய சாதனைதான். தொடர்ந்து இதனை கவனித்து, இந்த பெருமுதலாளிகள் சட்டத்தின் சந்துபொந்துகளில் நுழைந்துவிடாமல் காத்து, கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்

கள் இறக்க அனுமதி கொடுக்கவேண்டும். கள் என்பது உடலுக்கு ஊறு விளைவிக்காத சாதாரண சரக்கு. இதை ஏன் சட்டம் போட்டு தடுக்கவேண்டும் ? டாஸ்மாக் மது விற்பனை செய்யும் நாட்டில் கள்ளுக்கு ஏன் அனுமதி மறுக்கவேண்டும் ? புரியாத புதிர். இதில் பனைப்பொருள் நலவாரியத்துக்கு ஒரு உருப்புடாத கோயில்ல உண்டசோறு வாங்கி தின்ற குமரி அனந்தன் தலைவர். கொடுமை.

கிராம சாலைகள் எல்லாம் என்றைக்கு தான் சரியாகும் ? மத்திய அரசின் சாலைகள் எல்லாம் பள பளவென மாறிய பிறகும் நீங்கள் திருந்தவேண்டாமா ?

சேது சமுத்திர திட்டம், மத்திய அரசின் சட்டையை பிடித்து பெறவேண்டிய ஒன்று. விடவேண்டாம். வொர்க் ஹார்ட் !

ஈழத்தமிழர்களின் நாடுகடந்த தமிழ் ஈழ அரசை வெளிப்படையாக ஆதரித்து சட்டமன்றத்தில் தீர்மானம் போடவேண்டும்

அனைத்து மக்களுக்கும் - குடும்ப அட்டைக்கு ஒன்று - என்று இலவச மொபைல் வழங்கிடவேண்டும். இதை விட மாநிலத்தை நாலு கால் பாய்ச்சலில் முன்னேறவைக்க ஒரு திட்டம் தேவையில்லை.

104 சேவை. குஜராத் அரசின் சிறப்பான திட்டம். 24 மணி நேரமும் மருத்துவரை அழைத்து காய்ச்சல் தலைவலி பெண்கள் பிரச்சினை என்று எதுவாக இருந்தாலும் சொல்லி மருந்து கேட்கலாம். கண்டிப்பாக செயல்படுத்துங்கள், சூப்பர்ஹிட் ஆகும்.

ஆன்லைனில் வெப்சைட் ஆரம்பித்த துணைமுதல்வர், ஏன் மக்களுடன் நேரடியாக தொலைபேசியில் உரையாடக்கூடாது ? ஜனநாயகத்துக்கு பெயர்போன(?) பாகிஸ்தான் பிரதமர் பேசுகிறார். நீங்களும் செய்யலாமே ?

சின்னத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கவேண்டும். ஆபாசம், மூடநம்பிக்கைகளை சொல்லும் நிகழ்வுகளை தடுக்கவேண்டும்.


இந்த ஆர்டிஓ ஆபீஸ், தாலுக்கா ஆபீஸ்ல எல்லாம் லஞ்சம் வாங்கக்கூடாதுன்னு ஒரு போர்டு வைங்க. முடிந்தால் கர்நாடகாவில் இருப்பது போல ஒரு பவர்புல் லஞ்ச ஒழிப்பு துறையை (லோக் அயுக்தா) ஆரம்பிங்க. ட்ராபிக் ராமசாமியை இதுக்கு தலைவரா போட்டுடுங்க. அப்புறம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் வேட்டி இன்ஸ்டண்டா உருவப்படும்.

தமிழகம் எங்கும் உள்ள தீண்டாமை / பாவச்செயல் / பெருங்குற்றங்களை தயவு தாட்சண்யம் இல்லாமல் நசுக்கவேண்டும். இங்கெல்லாம் காவல்துறை ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக செயல்படுவதை தடுக்கவேண்டும். ( உதா: திருச்சி தீண்டாமை கல்லறைகள்)

மலையாளிகள் அவர்களது சுற்றுலாத்துறையை எப்படி எப்படியோ பிரபலப்படுத்துகிறார்கள். எந்த நாட்டு இந்தியன் எம்பஸி போனாலும் அங்கே குமரகத்தில் மஸாஜ் செய்ய அழைக்கிறார்கள். தமிழகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சென்னை ஏர்ப்போட்டில் இருந்தே ஆப்பு தான் காத்திருக்கிறது. தேவை எபக்ட்டிவ் மார்க்கெட்டிங் in சுற்றுலா துறை மற்றும் வரவேற்ப்புக்கு என்று தனி வாரியம் and படித்த ஊழியர்கள்.

கோபம் - இது சரியில்ல

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த காத்திரமான நடவடிக்கை இல்லாமை.

லஞ்ச ஊழல் செய்யும் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் மீது தயவு தாட்சண்யம் இல்லாத நடவடிக்கை தேவை. சமூக சேவகர் என்று பொய் சொல்லி வீட்டு வசதி வாரிய நிலம் வாங்கி அப்பார்ட்மெண்ட் கட்டும் ஒரு அதிகாரி, முதல்வர் கையால் பதக்கம் வாங்கி குத்திக்கொள்கிறார். வெட்கக்கேடு.

கொலைவெறியொடு நடக்கும் மணல் கொள்ளை, நிலத்தடி நீரை பாதாளத்துக்கு தள்ளுகிறது. முந்தைய அதிமுக அரசில் கட்டாயமாக செயல்படுத்தப்பட்ட மழைநீர் சேமிப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது வருத்தமே !

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்காது, அது ஒரு ரவுடி ராஜ்ஜியம் என்ற பெயரை தொடர்ந்து காத்துவருகிறது இந்த அரசு.

தலையை சொறிந்து சொறிந்து தமிழகத்தையே இருளில் மூழ்கடிக்கும் மின் தட்டுப்பாடு

சுட்டுக்கொல்லப்படும் தமிழக மீனவர்களை காக்க லெட்டர் எழுதுவதை தவிர எதுவும் செய்யாதது

ஊடக ஏகாதிபத்தியம். சினிமா துறையிலும். ஏம்பா மீதி பேரும் கொஞ்சம் பொழைக்கட்டும் விடுங்களேன்.

மற்றபடி, பொதுவாக இது ஒரு சிறப்பான ஆட்சி என்பதில் சந்தேகமில்லை. மீண்டும் திமுக அரசை தேர்ந்தெடுக்கவில்லை என்றால் இப்படி நினைக்கலாம், (ஒருவேளை அதிமுக வென்று ஆட்சியில் அமர்ந்தால், ஆட்சியாளர்கள் நினைப்பார்கள், என்னடா, திமுக அவ்வளவு பணிகள் செய்தும் மக்கள் மாற்றித்தானே குத்தினார்கள், ஆக மக்கள் பணியை பார்க்காமல் மணியை தான் பார்க்கிறார்கள் என்று, ஆக ஒரு பணியும் நடைபெறாது.). விடுங்க அது சும்மா லூலுவாயி. முதல் மதிப்பெண் பெற்ற மாணவனை பாராட்டுவதில்லையா ? அதுபோல சிறப்பாக செயல்படும் திமுக அரசை பாராட்டாமல் என்ன செய்ய ? ஆகவே என்னுடைய ஓட்டு திமுகவுக்கே.



ஆனால் பாவம் இந்த ஸ்டாலின். இவர் ஆறாவது முறையாக முதல்வர் பதவியில் தொடர, இவர் துணை முதல்வராகவே குப்பை கொட்டவேண்டியிருக்கும். பேசாம தமிழ்மணம் அல்லது பஸ் / ட்விட்டர் பக்கம் வந்திருங்களேன் ஸ்டாலின், ஓட்டு போட்டு லைக் பண்ணி ரீ ட்வீட் பண்றோம்.  கும்தலக்கடி கிரிகிரியா இருக்கும் !!!

33 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நல்ல முடிவுண்ணே...
எப்படியும், தி,மு.க... காங்கிரஸுடன் கூட்டு சேருவாங்க...


ஆங்... இன்னும் ஈழத்தில, சில தமிழர்கள் இருப்பதாக, உளவுதுறை சொல்லியிருக்குண்ணே...!!!

Prathap Kumar S. said...

நாசமா போச்சு...

//இன்னும் ஈழத்தில, சில தமிழர்கள் இருப்பதாக, உளவுதுறை சொல்லியிருக்குண்ணே//

பட்டா...ஜூப்பருப்பு... வாழைப்பழத்துல ஊசி ஏத்தனாப்புல போட்டாரு பாரு ஒரு கமண்ட்டு...

மாயாவி said...

//இன்னும் ஈழத்தில, சில தமிழர்கள் இருப்பதாக, உளவுதுறை சொல்லியிருக்குண்ணே//

எப்படியும் ரவியோட ஓட்டுல பதவிக்கு வந்த பிறகு ஈழத்தில மீதி இருக்கிற தமிழனுக்கு உதவி??? பண்ணுவாங்க!!

உமர் | Umar said...

என்ன பங்காளி, ஒரு சீரியஸ் பதிவு போட்டா அடுத்தது 'சிரி'யஸ் பதிவு போடணும்னு, கமல் பாணில இறங்கிட்டீங்களா? லேபிள்ல காமெடி அப்படின்னு போடல பாருங்க.

அபி அப்பா said...

நாசமா போச்சு.ரவி இப்படியா வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் தாழிய உடைப்பது? நீங்க பாட்டுக்கு திமுகவுக்கு ஆதரவுன்னு படார்னு சொல்லிட்டீங்க. உடனே பதிவுலகமும் இதிலே உள்ள நல்ல விஷயம் எல்லாம் நினைச்சு பார்த்து திமுக ஆதரவு நிலை எடுத்தா திமுகவின் நிலை என்ன ஆகும்?

பொதுவாவே வலையுலகம் எந்த விஷயத்தை தீவிரமா ஆதரிக்குதோ அது புட்டுக்கும் என்பது உங்களுக்கு தெரியாதா என்ன? இப்போதைக்கு எங்களுக்கு தேவை பதிவுலக எதிர்ப்பு மட்டுமே. எவ்வலவுக்கு எவ்வளவு எதிர்க்கப்படிகின்றோமோ அவ்வளவுக்கு சீட் அதிகமாகும். என்னவோ போங்க!

ரவி said...

காங்கிரசுக்கு உள்குத்து குத்தப்படும்னு இளங்கோவன் தான் சொல்லிக்கிட்டே இருக்காரே செஞ்சுடலாம்

ஆனா தென்னை மரத்துல தேள் கொட்டினதுக்கு பனை மரத்துல நெறி கட்டியது தான் காரணம்னு ஏன் நம்புறீங்க

ரவி said...

கும்மி. நான் விழனும்னு நினைக்கற விக்கட் விழக்கூடாதுன்னு நெனைப்பேன். ஆனா விழுந்துரும். ஆர் யூ கெட்டிங்

அஞ்சா சிங்கம் said...

பட்டாபட்டி.... said...

நல்ல முடிவுண்ணே...
எப்படியும், தி,மு.க... காங்கிரஸுடன் கூட்டு சேருவாங்க...


ஆங்... இன்னும் ஈழத்தில, சில தமிழர்கள் இருப்பதாக, உளவுதுறை சொல்லியிருக்குண்ணே...!!!////////////////
ரேப்பீட்டு ................

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

செந்தழல் ரவி said...

கும்மி. நான் விழனும்னு நினைக்கற விக்கட் விழக்கூடாதுன்னு நெனைப்பேன். ஆனா விழுந்துரும். ஆர் யூ கெட்டிங்
//

அப்ப செரி.....ஹி..ஹி

தறுதலை said...

டாக்டர் கயவரின் மேல் அதீத வெறுப்புடன் இருக்கிறேன். என்னைப்போன்ற பல தி.மு.க சார்பு உடையவர்களை ஈழம் நிலைப்பாட்டால் தி.மு.க இழந்திருக்கிறது. அனால் நல்ல பல மக்கள் நலத் திட்டங்கள் மூலம் அதிக அளவு அ.தி.மு.க வாக்குகளை தன் பக்கம் இழுத்திருக்கிறது. அதிகாரிகள் மட்டத்தில் நிகழும் ஊழல் அதிப்திருத்திகளைத் தவிர்த்து, மக்கள் மத்தியில் ஆதரவுடனே தி.மு.க உள்ளது.

ஆனாலும் என் ஒட்டு தி.மு.கவுக்கு இல்லை. அதைப் பெறும் தகுதி புரட்டுக் கிழவிக்கும், கோட்டானுக்கும் கிடையாது.

என்னுடைய தற்போதைய மனவோட்டங்கள்.
1. காங்கிரசை கருவறுக்க வேண்டும். அதற்கு சீமான் முன்னெடுப்பர் என்ற நம்பிக்கை பொய்த்துவிட்டது. வெறும் கருனானிதி எதிர்ப்பு, அ.தி.மு.க ஆதரவு நிலைப்படு, விஜயை வைத்து படம் எடுத்தல் என்று முரணாக உள்ளார். இவரது ஈழ ஆதரவு எந்த அளவு நம்பகத் தண்மை உடையது என்பது கேள்விக்குறியக உள்ளது. இவரும் இன்னொரு 'கைபுள்ள' கோபால்சாமி போல் ஆகிவிடுவாரோ என்று சந்தேகமாக உள்ளது. கருணானிதி துரோகி என்றால், ஜெயலலித எதிரி. விஜயகாந்து ஒரு மிருகம். அவன் எப்படி இன்னமும் வெட்கம் இல்லாமல் 'கேப்டன்' என்று போட்டுக்கொள்கிறான்? ஈழம் நிலைப்பட்டில் கருணானிதியை எதிர்க்கும் எவரும், ஜெயலலிதா, விஜயகாந்துடன் சமரசம் கூடாது. அது கிடத்தட்ட, சோனியாவை எதிர்க்க ராஜபக்ஷேவுடன் கூட்டு சேர்ந்ததுபோல் ஆகும்.
2.ஈழத்தில் நடந்த சண்டையின்போது, கருணானிதி 'பொய்யகோ' கவிதை எழுதி நாடகம் ஆடினார். அது துரோகமே. அதற்கு மேல் அவர் என்ன செய்திருக்க முடியும், எவ்வளவு தூரம் Hஇந்திய அரசை நிர்பந்திருக்க முடியும் போன்ற விவாதங்கள் இணையத்தில் விரிவாக நடக்க வேண்டும்.
3. சீமான் நேர்மையாக இருந்தால் காங்கிரஸ் இனிமேல் தமிழகத்தில் தலை எடுக்க முடியாது. அவரது வீச்சு அவ்வளவு மட்டுமே. மாற்று சக்தியாக உருவெடுக்க இன்னும் பல தெளிவான சிந்தனைகளும், திட்டங்களும் வேண்டும். அது வரும் காலங்களில் தெரியலாம்.

4.சோமாறிகளின் கூச்சல்கள், சூனிய விகடன் போன்ற பத்திரிகைகளின் அ.தி.மு.க ஆதரவு போன்றவை தி.மு.க வுக்கு சாதகமாக்வே அமையும்.


-----------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்- ஜன '2011)

தறுதலை said...
This comment has been removed by the author.
ராஜ நடராஜன் said...

நீங்க கறந்த 15 லிட்டர் பாலில் 1 சொட்டு ஈழ ரத்தம் கலந்திருப்பதை அப்படியே மறைத்து விட்டு பால் விக்கிறீங்க செந்தழல்!

தமிழ்மலர் said...

ஏன் திமுகவுக்கு ஓட்டு போட கூடாது

1. சொத்துக்களை காப்பாற்ற, கொள்ளைகளை மறைக்க, குடும்ப சண்டையை தடுக்க அப்புறம் மெரினா கடற்கரையில் சமாதி கட்ட இதற்காக மட்டுமே அடுத்து ஆட்சிக்கு வரவேண்டும் என்ற முனைப்புடன உள்ளது திமுக

2. இலவச தொலைகாட்சி பெட்டியில் 30% இப்பவே கருகீடுச்சு, மீதம் தருவாங்கனு எந்த உத்திரவாதமும் இல்லை. அப்படியே தந்தாலும் மாதம் 150 அவங்க கேபிலுக்கு கப்பம் கட்டணம்.

3. ஒரு ரூபாய் அரிசி சரி. அனாலும் சாம்பாருக்கு வழியில்லையே? அதுக்கு கஞ்சிதொட்டியே மேல்

4. தூர்வாரப்பட்ட ஏரிகளில் அடுத்த 5 ஆண்டில் பாதி ரியல்எசுடேட் ஆகியிருக்கும். இப்ப உள்ள ஏரிகள் பல துணைவியின் ரியல் எசுடேட்ட ஆயிடுச்சு.

5. இலவச மருத்துவ காப்பீடு வரவேற்கலாம். ஆனால் அதை வைத்து வியாபாரம் பண்ண மருத்துவமனைகளுடனான ஒப்பந்தங்கள் ஏன்? அதை வெள்ளை அறிக்கையாக வெளியிட தயாரா?

6. அரசு ஊழியர்கள் கொட்டம் தாங்கலை, அதுக்காகவாவது திமுக தோற்கனும்.

7. 108 ஆம்புலன்சு சத்தியம் கம்பியூட்டர்சின் கூட்டுமுயற்சி. யார் ஆட்சிக்கு வந்தாலும் 108 உண்டு. அதற்கும் திமுகவுக்கும் சம்மந்தம் இல்லை.

8. இப்ப எல்லாம் சொகுசு பேருந்துகள் தான் நகர்முழுவதும் வலம் வருது. அதுல கட்டணம் பலமடங்கு. அடுத்த திமுக ஆட்சியில் நகரபேருந்து எல்லாம் சொகுசு பேருந்து ஆகிவிடும். ஆனாலும் நாங்கள் 10 ஆண்டுகளாக பேருந்து கட்டணத்தை உயர்த்தவில்லை என்று சட்டசபையில் பச்சை பொய் சொல்வார்கள்.

9. எல்லாவற்றையும் விட இன்னொரு வாய்ப்பு கொடுத்த மொத்தத்தையும் சுருட்டீட்டு தமிழக மக்களை பிச்சைகாரர்கள் ஆக்கிவிடுவார்கள். அப்புறம், மின்சாரம் வேண்டுமா அந்த குடும்பத்திடம் தான் வாங்க வேண்டும், கேபிள், சினிமா, தண்ணீர், செல்போன், வீட்டுமனை, மணல், அரிசி, போக்குவரத்து உட்பட எல்லா தொழில்களிலும் தமிழகத்தில் காலூன்ற போகிறார்களாம்.

10 தமிழக மக்களே உசார். ஒருவனை 5 ஆண்டு ஆட்சியில் உட்காரவைப்பதே ஆபத்து. அதுல இன்னொரு வாய்ப்பா? நல்லா யோசிசுக்கங்க. ஈழம் பத்தி பேசினா அப்படீனா என்னனு தமிழ்நாட்டு சனங்கள் கேட்பார்கள் என்று துணை மகனே சொல்லி விட்டதால் அதை தவிர்த்து விட்டேன்.

Youngcrap said...

//
ஆங்... இன்னும் ஈழத்தில, சில தமிழர்கள் இருப்பதாக, உளவுதுறை சொல்லியிருக்குண்ணே...!!! //
சரி..யாருக்கு ஓட்டு போட்டால் மிச்சம் இருக்கிற மக்களை காப்பாத்துவாங்கன்னு சொல்லுங்களேன்?
நானும் அவுங்களுக்கே ஓட்டு போடுறேன்...

தனியன் said...

நல்லாச் சொன்னிங்க தலைவா..

ஈழத்தில் இன்னும் கொஞ்சம் தமிழர்கள் இருக்கிறார்களாம் அவர்களுக்காக அடுத்தமுறை உண்ணாவிரதம் இருக்கும் போது
ஒரு மூன்று மணி நேரம் இருக்கச் சொல்லுங்க. அப்படியே உங்கள் தலைவருக்கு இந்த ஈ மெயில் பற்றி ஒரு வகுப்பு எடுத்து
விடுங்கண்ணே .இன்னும் இந்தக் காலத்திலேயே கடிதம் எழுதி மானத்தை வாங்குகிறார்.

Best Online Jobs said...

இந்த பதிவுவை படித்தவுடன் சிரிப்பு தான் வருகிறது.

நீங்க திமுகவுக்கே ஓட்டு போட்டா என்ன போடலைன என்ன?

நீங்க என்ன ரஜினிகாந்தா? நீங்க சொல்லற கட்சிக்கு பதிவுலகம் ஒட்டு போடா?

அதுளையும் இவர் ( அபி அப்பா ) Comment எழுதி இருக்கிறார்.

அபி அப்பா said... நாசமா போச்சு.ரவி இப்படியா வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் தாழிய உடைப்பது? நீங்க பாட்டுக்கு திமுகவுக்கு ஆதரவுன்னு படார்னு சொல்லிட்டீங்க. உடனே பதிவுலகமும் இதிலே உள்ள நல்ல விஷயம் எல்லாம் நினைச்சு பார்த்து திமுக ஆதரவு நிலை எடுத்தா திமுகவின் நிலை என்ன ஆகும்?

நீங்க சொல்லிட்டா பதிவுலகம் அனைத்தும் திமுகக்கு ஆதரவு நிலை எடுக்குமா? ( சாமி தாங்க முடியலப்பா ).

சுய விளம்பரம் சூப்பர் .எப்படியோ நீங்க நினைத்த மாதிரி இங்கு உங்களுக்கு ஜால்ராக்கள் தட்ட நேரிய பேர் இருக்காங்க.

ஜோதிஜி said...

பட்டாபட்டி உங்களைப் பற்றி நண்பர் ரோஸ்விக் ரொம்பவே சிலாகித்து அடிக்கடி பேசுவார். ஆனால் ரவியின் இந்த இடுகையைப் பார்த்து என்ன ரவி ரொம்பவே யோசிக்க நேரம் கிடைத்ததோ என்று எழுதலாமென்று வந்தால் உங்கள் விமர்சனத்தைப் பார்த்து சப்தம் போட்டு சிரித்துவிட்டேன்.

KARMA said...

உலகத்தையே உலுக்குற மெகா ஊழல் (1 .7 லட்சம் கோடி) நடந்த பிறகும்
நீரா - ராடியா டேப் ரிலீஸ் ஆனா பிறகும்
பல்லாயிரக்கணக்கான தமிழர்களை ஈழத்தில் செத்தொழித்த பிறகும்
தினகரன் அலுவலகத்தில் ஏதுமரியாதவர்களை எரித்த பிறகும்
தமிழகத்தை மகனுகளுக்கும் பேரன்களுக்கும் பங்குபோட்ட பிறகு -
கேனத்த் தமிழனுக்கு இலவச T.V , ஒரு ரூபா அரிசி
இவனுக்கெல்லாம் ஓட்டு போட காரணம் வேணுமா ???

ramalingam said...

ஸாரி, உங்கள் உள்குத்து தெரியாமல் நெகட்டிவ் ஓட்டு போட்டு விட்டேன்.

Jayadev Das said...

Good comments by தமிழ்மலர் &KARMA //கள் இறக்க அனுமதி கொடுக்கவேண்டும். கள் என்பது உடலுக்கு ஊறு விளைவிக்காத சாதாரண சரக்கு. இதை ஏன் சட்டம் போட்டு தடுக்கவேண்டும் ? டாஸ்மாக் மது விற்பனை செய்யும் நாட்டில் கள்ளுக்கு ஏன் அனுமதி மறுக்கவேண்டும் ? புரியாத புதிர்.//என்ன மாத்ருபூதம் மாதிரி புதிர், புனிதம் என்று கேட்டுகிட்டு இருக்கீங்க? கள் இறக்க ஆரம்பிச்சா எவன் சாராயம் குடிக்க வருவான், அப்புறம் அரசுக்கு வருமானம் எங்கே வரும், இலவசம் எப்படி குடுக்க முடியும், இலவசம் நின்னு போனா வோட்டு எங்கே விழும்? ஊர்ல இருக்கிற பெண்கள் தாலியை அறுத்து வோட்டு வாங்கும் அரசு உமக்கு நல்லா அரசா? ஆட்சி நன்றாக இருக்கிறது என்றால் தேர்தலில் பணம், பிரியாணி, சாராய விநியோகம் மற்றும் வாக்குச் சாவடியை ரவுடிகள் மூலம் கைப்பற்றுவது எதற்கு? கூட்டணி எதற்கு? 1.76 லட்சம் கோடி ரூபாய் வருமான இழப்பை ஏற்படுத்திய தேசத் துரோகிகள் உமக்கு நல்ல ஆட்சியாளர்களா?

முகவை மைந்தன் said...

இது மாதிரி இடுகைல முத்தாய்ப்பா குறிச்சொல் வைச்சு கலக்குவீங்க... என்ன ஆச்சு?

அஹோரி said...

அசோகர் நட்ட மரத்த வெட்டி ஸ்டாலின் மேம்பாலம் போட்டார் ...
ஒபாமாவே கருணாநிதிய பாத்துதான் காப்பீடு திட்டத்த ஆரம்பிச்சார் ...
கிராமத்துல மக்கள் எல்லாம் உசுரோட தான் இருக்காங்க ...
மக்கள் இன்னும் மண்ண திங்க ஆரம்பிக்கல ...

இதெல்லாம் சேர்த்தால் அல்லக்கைகள் சந்தோஷமா பதிவுக்கு ஓட்டு போடும்.

ரவி said...

///Bruno: //104 சேவை. குஜராத் அரசின் சிறப்பான திட்டம். 24 மணி நேரமும் மருத்துவரை அழைத்து காய்ச்சல் தலைவலி பெண்கள் பிரச்சினை என்று எதுவாக இருந்தாலும் சொல்லி மருந்து கேட்கலாம். கண்டிப்பாக செயல்படுத்துங்கள், சூப்பர்ஹிட் ஆகும். //

தமிழகத்திலும் வருகிறது
///

மருத்துவர் ப்ருனோ தெரிவித்துள்ளார். உரையாடியில்.

ரவி said...

நீர் தெலுங்கரா?மீதம் இருக்கும் ஈழ தமிழரை கொள்ள ஆசை படுகின்டீரா ?சிந்திக்கும் திறன் இல்லன்தவரா?
///

தளவாய் - jesupanivazhan@gmail.com என்பவர் மின்னஞ்சலில் திட்டியுள்ளார். நன்றி தளவாய்.

நான் தமிழன் தான்.

ரவி said...

ஜெயதேவ் தாஸ், கர்மா ஆகிய தோழர்களுக்கு.

ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது ஒரு போலியான கணிப்பீடு. பார்ப்பண ஊடகங்களின் பரப்புரை. இவைகளுக்கு பலியாகவேண்டாம்.

ரவி said...

அன்புள்ள தறுதலை.

காங்கிரஸ் கட்சியின் மீது தேவை இல்லாத கொலைவெறி ஏன் ?

உமர் | Umar said...

//ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது ஒரு போலியான கணிப்பீடு. பார்ப்பண ஊடகங்களின் பரப்புரை. இவைகளுக்கு பலியாகவேண்டாம். //

வாதம் செய்வதற்காக இப்படியெல்லாம் பேசுவதை பார்த்தால் வருத்தமாக இருக்கின்றது. :-(


அது ஊழல் அல்ல இழப்பு என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும், இழப்பு ஏற்படுத்தும் ஒருவன் எதற்கு அமைச்சராக இருக்க வேண்டும்? நடைமுறைகளை சீர்படுத்துவதற்கும், மக்கள் பயன்பெறவும், துறையின் வருமானத்தைப் பெருக்கவும்தானே ஒருவரை தலைமைப் பொறுப்பில் அமர்த்துகின்றனர். அத்தகைய தகுதி இல்லாத ஒருவனை முன்மொழிந்த, வழிமொழிந்த, வக்காலத்து வாங்கும் அத்தனை கபோதிகளையும் சாட வேண்டும்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

nigdyn said...

//
ஆங்... இன்னும் ஈழத்தில, சில தமிழர்கள் இருப்பதாக, உளவுதுறை சொல்லியிருக்குண்ணே...!!! //
சரி..யாருக்கு ஓட்டு போட்டால் மிச்சம் இருக்கிற மக்களை காப்பாத்துவாங்கன்னு சொல்லுங்களேன்?
நானும் அவுங்களுக்கே ஓட்டு போடுறேன்...

//

ஓ.. அந்த கோஷ்டியா நீர்?..

மனசாட்சினு ஒண்ணு இருந்தா...
....நல்லா படிங்கிங்கண்ணே.. ”இருந்தா”னுதான் சொல்லியிருக்கேன்...
எப்பவும் போல, அவருக்கே, நான்கு காலை தூக்கிட்டு போடுங்க..

(அந்த ரோட்ல அடிக்கடி ஆக்ஸிடெண்ட் ஆகுதுனு சொன்னா.. ஆக்கிடெண்ட் ஆகாத ரோடு எதுனு கேக்குறீங்க..)
உம்... கழக ரத்தம்.

:-)

சீனு said...

//கும்மி. நான் விழனும்னு நினைக்கற விக்கட் விழக்கூடாதுன்னு நெனைப்பேன். ஆனா விழுந்துரும். ஆர் யூ கெட்டிங்//

அப்படி நெனச்சா பதிவிட்டுருக்கீங்க? நான் நெனக்கல...

உடன்பிறப்பு said...

நல்ல முடிவு ரவி

இரா.விவேகானந்தன் said...

ஏண்ணே 108 கலைஞர் கொண்டு வந்த திட்டத்தை போல் ஒரு இமேஜ் கொண்டு வரப்பட்டு விட்டது..அது அன்புமணி அமல் பண்ண திட்டம்ங்கண்ணா...

ரவி said...

கும்மி, ஸ்பெக்ட்ரம் மேட்டர் இழப்பை இப்படி பார்க்கலாம்..

1. மொபைல் இன்கம்மிங் அவுட்கோயிங் பயங்கர காசு கட்டிக்கிட்டிருந்தாங்க மக்கள். இது மக்களுக்கு நட்டம்.

2. தலித் ராசா எல்லாருக்கும் லைசன்ஸ் கொடுத்து ஒரு பைசாவுக்கு கூட கால் பண்றமாதிரி ஆக்கிட்டார். மொபைல் சர்வீஸ் கம்பெனிகளுக்கும் லாபம்

3. ஆடிட்டர் அய்யருங்க சேர்ந்து பேனை பெருமாளாக்கி இழப்பு இழப்புன்னானுங்க. இதனால மொபைல் சர்வீஸ் கம்பெனிங்களுக்கு நட்டம்

4. மொபைல் சர்வீஸ் கம்பெனிங்க, கவர்மெண்டுக்கு அதிகம் பணம் கட்டினாங்க. இதனால அவங்களுக்கு நட்டம். கவர்மெண்டுக்கு லாபம்.

5. மொபைல் சர்வீஸ் கம்பெனிங்க நட்டத்தை ஈடுகட்ட மறுபடி கட்டணத்தை உயர்த்துனாங்க. மக்களுக்கு மறுபடி நட்டம்.

லாப நட்ட கணக்கு சரியா வருதா ?

Scindia Karthik said...

படித்த முட்டாள்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....