சமீபத்தில் வலைப்பதிவர் தமிழ் ஓவியா வெளியிட்ட " கலைஞர் தந்த அற்புத கருத்தோவியக் காவியம் இளைஞன்" என்ற அற்புதமான விமர்சனத்தை கண்டேன்.
உண்மையிலேயே கிலி ஏற்பட்டு, அலறி துடித்தேன். இந்த கொடூரத்தை செய்ய மிஸ்டர் தமிழ் ஓவியாவுக்கு எப்படி மனசு வந்தது என்று தெரியவில்லை.
ஏழு ஓட்டுக்கள் தனக்குத்தானே போட்டுக்கொள்வது கூட பரவாயில்லை. ஆனால் இது போன்ற கொடுமைகளை செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
திரு வீரமணி அவர்கள் தமிழர்களே ப்ரட்டு சாப்பிடுங்கள் என்று சொல்லியதை கூட ஜீரணிக்கமுடியும். ஆனால் இளைஞன் திரைக்காவியத்தை எல்லாரும் பாருங்கள் என்று சொல்வது கொடுத்த காசுக்குமேல் கூவுவதை போல இல்லையா ?
பெரியார் இருந்தால் இதை கண்டிப்பாக தாங்கிகொள்ளமாட்டார். பகுத்தறிவு பிரச்சாரம் செய்ய நேர்மை முக்கியம் :))
17 comments:
அதுவும் இல்லாமல் நான் போட்ட இரண்டு மறுமொழிகளில் ஒன்றை மட்டும் வெளியிட்டு மற்றதை மட்டுறுத்தல் செய்து மாபெரும் ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார்.
விளம்பரங்களே தாங்க முடியல...
தலைப்பை பாத்து விரிவாக எழுதியிருப்பீங்கன்னு பாத்தா டக்குனு முடிச்சிட்டீங்களே? சரி, அந்த மறுக்கப்பட்ட பின்னூட்டத்தையாவது இங்க சேர்க்கலாமே?
கலைஞர் அமைத்த காட்சிகள் - கதையமைப்பு - பேச்சுகள் - எல்லாம் - வசனங்கள் நறுக்குத் தெறித்தவைகளாக - நகைச்சுவை மின்னல்களைக் கொண்டதாக உள்ளன! நாசர் தன் மனைவியை (குஷ்பு) அறைந்து 32 பல்லையும் பேர்த்துடுவேன் என்றவுடன், அமைதியாக குஷ்பு எனக்கு 32 இல்லையே1 பல் முன்னேயே விழுந்துவிட்டது. 31 தாங்க இருக்குது என்ற போது நம்மை அறியாமல் சிரிக்கிறோம்.
=====
குருணாநிதி எழுதிய வசனங்களிலேயே மிகச்சிறந்த வசனமாக எனக்குப்படுகிறது,இதற்கு தங்கப்பேனா பரிசாக தரப்படவேண்டும்.
தேசிய விருதுக்குழவில் சிறந்த வச்சன கர்த்தா விருதும் தரப்படவேண்டும்.
வாங்க கலாநேசன். என்னைச்சொல்லலலியே
வினவு மறுமொழியை சேமிக்கும் பழக்கம் இல்லை. எப்படி திரும்ப வாங்குவது ?
அந்த கம்பெனியில் யாருக்காவது மெயில் அனுப்பித்தான் பார்க்கனும். ஆனா அவுங்க 7 ஓட்டு போடற பிஸில இருப்பாங்க. ரிப்ளை பண்ணுவாங்களா ?
கீதப்ப்ரியன். எவ்ளோ காசு கொடுத்தா இவ்ளோ கூவமுடியும்
//செந்தழல் ரவி said...
வினவு மறுமொழியை சேமிக்கும் பழக்கம் இல்லை. எப்படி திரும்ப வாங்குவது ?//
என்ன எழுதினீங்கன்னு ஞாபகம் இருக்குமில்ல (word by word இல்லாட்டாலும், மையக் கருத்து என்னன்னு சொல்லலாமே!)
இந்த முறை தி.மு.க ஒருவேளை வெற்றி பெற்றால்!
சிறந்த படம் இளைஞன்
சிறந்த கதை, திரைக்கதை, வசனம்!
தமிழ்நாட்டை இனி யாரும் காப்பாத்த முடியாதா!?
****ஏழு ஓட்டுக்கள் தனக்குத்தானே போட்டுக்கொள்வது கூட பரவாயில்லை.***
You seem like "honorable blogger" and selected as one of the judges in TM. I cant believe you are making baseless accusations like this?
அய்யய்யோ வருண்...
எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம். செந்தழல் ரவி அராஜகம் அப்படீன்னு பதிவு போட்டு இடுகையை சூடாக்கிக்காதீங்க !!! நீங்க ஏற்கனவே பேனை பெருச்சாளியாக்கிருவீங்க. அவ்வ்வ்
பெயர் சொல்ல விருப்பமில்லை சார். வேலை மெனக்கெட்டு டைப் பண்ண மறுமொழியை பிடிக்கலைன்னா திருப்பி அனுப்பிடுறது தானே முறை ?
மறுபடி டைப் பண்ண சோம்பேறித்தனம் :))
வால், ஒரு வேளை என்ன. திமுக ஜெயிக்க நிறைய வாய்ப்பு இருக்கு.
nalla potti ... ungka vimarsanam arumai. vaalththukkal
ஹா,ஹா,ஹா,.............. கலைஞர் திறமைய பாத்து உங்களுக்கு பொறாமை , வயித்தெரிச்சல் சார் . என்ன ஒரு அருமையான திரைக்காவியம் தெரியுமா அந்தப் படம் ......... அந்தப் படத்தின் விளம்பரம் பாக்கும் போதே தலைல இருந்து கால்வரைக்கு உடம்புல இருக்க முடியெல்லாம் நட்டமா நிக்குது. ............. படத்த போயி முழசா பாத்தா நம்ம உயிருக்கு எதுவும் சேதாரம் வந்திடுமொன்கிற ஒரே பயத்தால அந்தப் படத்த பாக்காம இருக்கேன் .........
//செந்தழல் ரவி said...
அதுவும் இல்லாமல் நான் போட்ட இரண்டு மறுமொழிகளில் ஒன்றை மட்டும் வெளியிட்டு மற்றதை மட்டுறுத்தல் செய்து மாபெரும் ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார்.//
இன்றுதான் இந்த பதிவைப் பார்த்தேன். அதுவும் தந்தைபெரியார் குழுமத்தில் மது எடுத்துப் போட்டிருந்தார்.
பொய் சொன்னாலும் பொருத்தமாகச் சொல்லுங்கள் ரவி. உங்களின் இரண்டு மறுமொழிகளும் மட்டுறுத்தப்படாமல் அப்படியே வெளியிட்டுள்ளேன்.
காமாலை கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சளா தெரியும் என்று ஒரு சொலவடை உண்டு.அந்த சொலவடை உங்களுக்கு மிகச் சரியாகப் பொருந்துகிறது.
ஒரு படம் ஒரு சிலருக்கு பிடிக்கும். ஒரு சிலருக்கு பிடிக்காது இது இயல்பான ஒன்று.
இந்த சின்ன விசயத்தைக்கூட புரிந்து கொள்ள முடியாத டம்மீ பீசா இருப்பீங்கன்னு இன்றைக்குத்தான் தெரிந்துகொண்டேன்.
//பகுத்தறிவு பிரச்சாரம் செய்ய நேர்மை முக்கியம்//
அதை நீங்க சொல்வதுதான் அசல் காமெடி.
Post a Comment