என்னுடைய தனிப்பட்ட வங்கி கணக்கு ஒரு கோடியை தாண்டியது

இன்று ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கணக்கை நோண்டிக்கொண்டிருந்தபோது சரி, இந்த கணக்கை துவங்கியதில் இருந்து எவ்வளவு ஆகி இருக்கிறது என்று பார்க்கலாம் என்று பார்த்தபோது வந்த வினை...

மொத்த ட்ரான்ஸாக்சன் ரூ ஒரு கோடியே நாற்பத்தைந்து ரூவாய் என்று தெரிகிறது...இதை ஏன் சொல்கிறேன் என்பது பின்னால்...

வேறு சில விஷயம் பார்க்கலாம் : ப்ராஜக்ட் மேனேஜரின் கதையின் இறுதி பாகம் இன்று ரெண்டொரு நாளில் வெளியாகும்...அடுத்த பாகம் எப்போ போடுவீங்க எப்போ போடுவீங்க என்று கேட்டுக்கொண்டேயிருந்த அனைத்து (???) ரசிகப்பெருமக்களுக்கு நன்றி நன்றி நன்றி !!! (அசத்த/கலக்க போவது யாருல இப்படித்தான் ஸ்டீரிடோ டைப்ல முடிக்கறானுங்க)

வடிவேலு உணர்ச்சி வசப்பட்டு விட்ட அறிக்கை நல்ல காமெடி, எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாண்டா, இவன் ரொம்ப நல்லவண்டா என்று நாளைக்கு கல்லு உடாமே இருந்தா சரி...

சின்னப்பையன் சமையல் குறிப்பு மொக்கை போட்டுட்டார், நல்லாருக்கு (நான் படிச்சது தலைப்ப மட்டும்தான்) , எனக்கு மிகவும் பிடித்த பொட்டொகிராபர் மிஸ்டர் மோகந்தாஸ் இன்னும் கொஞ்சம் படங்கள் போட்டிருக்கார்.

நரசிம் சார் ஏதோ கவிதை ட்ரை பண்ணியிருக்கார், பாருங்களேன்...!!

ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னைக்கு மனம் விட்டு சிரிச்ச பதிவு அபி அப்பாவோட சந்துரு பதிவு. (குசும்பா, லிங்க் காணோம், கொஞ்சம் தேடி போடுறியா )

ஆங், மேட்டருக்கு வாரேன்...

மருதமலையில பரிசல்காரன் பொரி வாங்கி கொடுத்தார். பத்து ரூபாய்னு நெனைக்கிறேன்...அந்த காசை கையில வாங்கியிருந்திருக்கலாம்...ஹூம்....!!

இதை ஏன் இங்க சொல்றேங்கறீங்களா ?

அக்கவுண்டுல இப்ப நானுத்து நாப்பத்தஞ்சு ரூவாத்தான் இருக்கு, காருக்கு பெட்ரோல் போடனும், ஏற்கனவே மஞ்ச லைட் எரியுது, யாராவது ஒரு ஐம்பத்தி அஞ்சு ரூவா என்னோட அக்கவுண்டுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணீங்கன்னா ஐநூறா ட்ரா பண்ணீருவேன்...எனக்கு மிகவும் பிடித்த நடிகை இவர்...

யார் இவர் ? பின்னூட்டத்தில் சொல்லுங்க ?

Comments

//ப்ராஜக்ட் மேனேஜரின் கதையின் இறுதி பாகம் இன்று ரெண்டொரு நாளில் வெளியாகும்//

இறுதி பாகமா? அவ்வளவுதானா?
sriram said…
catherine zeta jones
endrendrum anbudan
Sriram
Boston, USA
அவர் பெயர் கேத்தரின் ஜீடா ஜோன்ஸ்
மாஸ்க் ஆப் ஜெரோ படத்தில் நடித்திருக்கிறார்

இனிமே தான் பதிவுக்கு போகணும்
//ஒரு ஐம்பத்தி அஞ்சு ரூவா என்னோட அக்கவுண்டுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணீங்கன்னா ஐநூறா ட்ரா பண்ணீருவேன்...//


எவ்வளவு வேணும்
போதுமா
சும்மா கேக்குறது தானே


என்னையும் மனிசனா மதிச்சி கேட்டிங்க பாருங்க
நீங்க கிரேட்டுங்க
//சின்னப்பையன் சமையல் குறிப்பு மொக்கை போட்டுட்டார், நல்லாருக்கு (நான் படிச்சது தலைப்ப மட்டும்தான்) //

அவரு என்னிக்கு சீரியஸா பதிவு போட்டார்???

அவரு போடறது பூராவுமே தேவையில்லாத மொக்கைதான் (ஃப்ரெண்ட்ஸ் வடிவேலு பாணியில் படிக்கவும்!!!)
//அக்கவுண்டுல இப்ப நானுத்து நாப்பத்தஞ்சு ரூவாத்தான் இருக்கு, காருக்கு பெட்ரோல் போடனும், ஏற்கனவே மஞ்ச லைட் எரியுது, யாராவது ஒரு ஐம்பத்தி அஞ்சு ரூவா என்னோட அக்கவுண்டுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணீங்கன்னா ஐநூறா ட்ரா பண்ணீருவேன்...//
எந்த ஊரில் இருக்கிறீர்கள்? மினிமம் இருப்பே ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் இருக்க வேண்டுமே? இல்லாவிட்டால் அபராதம் போடுவார்களே?

அன்புடன்,
டோண்டு ராகவன்
நல்லது. 55 ஐ ஆயிரமாக்கும் வழியைக் கூறுகிறீர்கள். நன்றி
Anonymous said…
rapp, மீ த டெண்த்.
///பாகம் இன்று ரெண்டொரு நாளில் வெளியாகும்//

இறுதி பாகமா? அவ்வளவுதானா?///

ஆமாம் பின்ன...தொடர்கதைன்னு எழுதுனா என்னைக்காவது ஒரு நாள் முடிச்சு தான ஆவனும் ?
படத்தை நல்லா எடுத்துட்டு போஸ்ட் புரொடெக்சனில் முக்கிய இடங்களை கருப்பாக்கிய கருங்காலி யார்?

நம்ம லெவலுக்கு எல்லாம் லோக்கல் பிகருதான்!
///எந்த ஊரில் இருக்கிறீர்கள்? மினிமம் இருப்பே ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் இருக்க வேண்டுமே? இல்லாவிட்டால் அபராதம் போடுவார்களே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Tuesday, September 23, 2008
///

0 பேலன்ஸ் அக்கவுண்டு என்று இருக்கிறது அல்லவா ? சில சமயம் முப்பந்தைந்து பைசா மைனஸ்லயும் கூட போயிருக்கு/./
///நல்லது. 55 ஐ ஆயிரமாக்கும் வழியைக் கூறுகிறீர்கள். நன்றி///

அண்ணா அது ஐநூறா தான ஆவும் ? ஷேர்பாய்ண்ட்ல நேம்ஸ்பேஸ் ஒர்க் ஆவலியா ?
http://abiappa.blogspot.com/2008/09/blog-post_22.html


//மொத்த ட்ரான்ஸாக்சன் ரூ ஒரு கோடியே நாற்பத்தைந்து ரூவாய் என்று தெரிகிறது//

அதுக்கு எத்தனை சைபருஊஊஊஊஊஊஊஊஊ?
///எவ்வளவு வேணும்
போதுமா
சும்மா கேக்குறது தானே
///

யோவ் வால்ஸ்

நான் சீரியஸா கேக்குறேன் !!!!
///அவர் பெயர் கேத்தரின் ஜீடா ஜோன்ஸ்
மாஸ்க் ஆப் ஜெரோ படத்தில் நடித்திருக்கிறார்///

நல்ல பிகர் என்றால் நீ ஜொள்ளாம இருக்கம்மாட்டியே ?
///rapp said...
me the first

Monday, September
///

வாங்க ராப். கும்மிப்பதிவு போடும்போது ஆட்டோமேட்டிக்கா உங்க பின்னூட்டம் வந்திருதே ? இயல்பிலேயே கும்மியர் ஆகிய உங்களுக்கு "இயற்பியல் கும்மியர்" என்ற பட்டத்தை வழங்கி பெருமிதம் கொள்கிறேன்...
///catherine zeta jones
endrendrum anbudan
Sriram
Boston, USA///

அவ்வ்வ்வ்வ்

நீங்க ஊஎஸ்ல கீறதால டக்குனு சொல்லிப்புட்டீங்க...பாருங்க வாலைத்தவிற வேற யாரும் சொல்லக்கானோம் ?

அந்தம்மா இருக்க ஊரா உங்கூரு ?
narsim said…
வணக்கம் தல..(ழல்)

ஏதோ கவிதையையே இடம் "சுட்டி" பொருள் விளக்குனதுக்கு நன்றி..


அந்த படத்துல இருக்கும் அம்மிணிய இன்னும் கொஞ்சம் திரும்பி நிக்கச்சொல்லுங்க தல.. கரெக்ட்டா சொல்லிருவோம்..
//ப்ராஜக்ட் மேனேஜரின் கதையின் இறுதி பாகம் இன்று ரெண்டொரு நாளில் வெளியாகும்//

வன்மையாக கண்டிக்கிறோம்...

தொடர வேண்டும் தொண்டு..


நர்சிம்
narsim said…
//யாராவது ஒரு ஐம்பத்தி அஞ்சு ரூவா என்னோட அக்கவுண்டுக்கு ட்ரான்ஸ்பர் //

ருபீஸ் இன் லாக்ஸ் ஆ குரோர்ஸா தல.. அத விட்டுட்டீங்களே..

narsim
என்னாது திரும்பி நிக்கனுமா ? தமிழ்மணத்தில இருந்து பதிவு அப்பீட் ஆகிரூம் சவுரியம் தானா ?

அந்தம்மா பேரை போட்டு கூகிளிட்டால் வருது ஆயிரக்கணக்கான படம்...
தோழர்!

தலைப்பை பார்த்ததுமே ஒரு லட்சம் கடன் வாங்கலாம் என்று ஓடோடி வந்தேன் தோழர் :-(

ஏமாற்றி விட்டீர்கள்!!
//எந்த ஊரில் இருக்கிறீர்கள்? மினிமம் இருப்பே ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் இருக்க வேண்டுமே? இல்லாவிட்டால் அபராதம் போடுவார்களே?//

நான் சென்னையில் இருக்கிறேன். என்னுடைய ஆக்ஸிஸ் பேங்க் கையிருப்பு 23 ரூபாய்.

குறிப்பு : என்னுடையது சேலரி அக்கவுண்ட் :-)
///தலைப்பை பார்த்ததுமே ஒரு லட்சம் கடன் வாங்கலாம் என்று ஓடோடி வந்தேன் தோழர் :-(

ஏமாற்றி விட்டீர்கள்!!////

ஆகக்கூடி, நாம எல்லாரும் இந்த கவலையை மறைக்கத்தான் ப்ளாகிக்கொண்டிருக்கிறோமா ?

//நான் சென்னையில் இருக்கிறேன். என்னுடைய ஆக்ஸிஸ் பேங்க் கையிருப்பு 23 ரூபாய்.///

ஆமாம், அந்த தங்க காசை சேட்டு கடையில் வைத்தால் ஏதாவது தேறுமா என்று பார்க்கவேண்டியது தானே ? விகடனார் இப்போதெல்லாம் ரொம்ப உஷார், செம்பு காசை தங்க முலாம் பூசி குடுத்துறபோறாய்ங்க.
senthil said…
என்னோடத விட அதிகமா பேலன்ஸ் இருக்கே நியாயமா ?
///என்னோடத விட அதிகமா பேலன்ஸ் இருக்கே நியாயமா ?

Tuesday, September 23, 2008
//

பேலன்ஸ் இல்லாதோர் சங்கம்னு ஏதாவது ஆரம்பிக்கனும் போல !!
சிவா, பெங்களூர் பாஸ் ஆகி போகும்போது நடுவால எறங்குற ஐடியா இருக்கா ? நம்ம வீட்டுக்கு வரவும்..
///நான் சென்னையில் இருக்கிறேன். என்னுடைய ஆக்ஸிஸ் பேங்க் கையிருப்பு 23 ரூபாய்.///

யோவ் அவரு உன்னையா கேட்டாரு ? சரி நோ டென்ஷன் ரிலாக்ஸ், இருபது ரூபாய்க்கு கிங்ஸ் ஒரு பாக்கெட் வாங்கவும், மீதி ரெண்டு ரூபாய்க்கு பாஸ் பாஸ் வாங்கவும், அப்புறம் மீதி உள்ள ஒரு ரூபாய்க்கு டோண்டு சாரின் மொபைலுக்கு காயின் பூத்தில் இருந்து போன் செய்து இந்த விசயம் சொல்லவும்.
சரி.. சரி.. நான் எதுவும் கேக்கலை.. மறந்திரு..

இதுக்கெல்லாம் ஒரு பதிவு போட்டுக் கொல்லணுமாப்பா..?

கல்யாணமானாலே டப்பு தங்காம இருந்தாத்தான மரியாதை..

ஒழுங்கா, சின்சியரா குடும்பம் நடத்துறன்னு நல்லாத் தெரியுது..

இனிமேலாச்சும் சிக்கனமா இருக்கப் பாரு.. மொதல்ல அந்த சிகரெட் சனியனைத் தூக்கியெறி.. மிஞ்சுற காசுல பொரிகடலையாவது வாங்கிச் சாப்பிடலாம்..
///இனிமேலாச்சும் சிக்கனமா இருக்கப் பாரு.. மொதல்ல அந்த சிகரெட் சனியனைத் தூக்கியெறி.. மிஞ்சுற காசுல பொரிகடலையாவது வாங்கிச் சாப்பிடலாம்..//

அண்ணே சிகரட் புடிச்சு முடிஞ்சப்புறம் அந்த பட்ஸை எதுக்கு வெச்சிருக்கனும் ? தூக்கி போட்டுடறேன் டோண்ட் ஒரி.

விக்குற விலைவாசியில பரிசல்காரன் பொரிகடலை வாங்கித்தந்தா தான் சாப்புடுவேன்.
SanJai said…
//மொத்த ட்ரான்ஸாக்சன் ரூ ஒரு கோடியே நாற்பத்தைந்து ரூவாய் என்று தெரிகிறது...இதை ஏன் சொல்கிறேன் என்பது பின்னால்...//

இவ்ளோ நாளா அடுத்தவன் ப்ளாகர் அக்கவுண்டை தான் நோண்டிட்டிருந்திங்க.. இப்போ அடுத்தவன் பேங்க் அக்கவுண்டுமா?..
அதுல அக்கவுண்ட் ஹோல்டர் பேர் நல்லா பாத்திங்களா ரவி? :))

அது சரி.. காற்றாலை அதிபருக்கு இதெல்லாம் சப்பை மேட்டர்பா.. :))
அட அறிவே... காப்பி பண்ணி போடுறப்ப அந்த நடிகை படத்தோட ஃபைல் நேமாவது மாத்தியிருக்கலாம்ல.. :))))

http://home.att.net/~rcoffey/CatherineZetaJones.jpg

இதுல கேள்வி வேற.. :)
SanJai said…
//எந்த ஊரில் இருக்கிறீர்கள்? மினிமம் இருப்பே ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் இருக்க வேண்டுமே? இல்லாவிட்டால் அபராதம் போடுவார்களே?

அன்புடன்,
டோண்டு ராகவன்//

எனக்கு கூட ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் ஐசிஐசிஐல அவங்களாவே ஓபன் பண்ணி குடுத்தாங்க.. நானும் அவங்க விருப்பத்தை ஏன் கெடுக்கனும்னு இன்னும் ஜீரோ பேலன்ஸ்லயே வச்சிருக்கேன்.. :)).. இதெல்லாம் எங்களை மாதிரி காசில்லாத ஏழைகளுக்குத் தான்.. உங்களை மாதிரி பணக்காரங்க எல்லாம் மினிமம் 5000 ரூபாய் வச்சிருக்கனும்.. இப்போ அதுவும் 10000 ரூபாய் என்று நினைக்கிறேன்.. :))
SanJai said…
//வெண்பூ said...

அட அறிவே... காப்பி பண்ணி போடுறப்ப அந்த நடிகை படத்தோட ஃபைல் நேமாவது மாத்தியிருக்கலாம்ல.. :))))

http://home.att.net/~rcoffey/CatherineZetaJones.jpg

இதுல கேள்வி வேற.. :)//

அட அட அட.. என்னமா புடிக்கிறாய்ங்கயயா மேட்டர? :))

Popular Posts