Wednesday, March 18, 2009

நிலவுப்பாட்டு அல்லது அழுகாச்சி பாட்டு


யோவ் நிலவுப்பாட்டு...

தினமும் எதாவது ஒரு பொலம்பல் பதிவு போடலைன்னா தூக்கம் வராதா ? அய்ய்ய்யா...நிறுத்துய்யா...

திரட்டியால தான் வாசகர்கள் வருகிறார்கள் என்பது ஒரு விதத்தில் உண்மைதான்...

ஆனால் திரட்டியில் இணையாத பல பதிவர்களின் ஹிட் திரட்டியில் இணைந்திருக்கும் பதிவர்களை விட அதிகம் இருக்கும் உதாரணம் இருக்கிறது அய்யா...

நல்ல பதிவுகளை தொடர்ந்து தந்துவரும் pkp.in பற்றி தெரியுமா ? போய் பாரும் அய்யா..இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மின்னஞ்சல் மூலம் படிக்கிறார்கள்...

தமிழ்நாட்டில் ஆர்க்குட் பாவிக்கும் இளையோரின் எண்ணிக்கை பத்து லட்சத்துக்கும் மேல் என்று ஒரு சர்வே சொல்கிறது..

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு....

தினமும் காத்தால அழுகாச்சி பதிவு போடுவதை நிறுத்தி தொலையும்...மைக் மற்றும் எல்லாளன் போடும் பதிவுகளை புதினத்தில் சென்று நேரடியாக படிக்கும் அளவுக்கு நிறைய பேருக்கு அறிவு இருக்கிறது...

எதுவும் கோச்சுக்காதீங்க, மனசுல பட்டதை சொன்னேன்...

டிவி சீரியல் அசிங்கங்கள்


பொதுவாக பாலிவுட் திரைப்படங்களில் உறவுச்சிக்கல்கள் ஆபாசமாக அமைந்திருக்கும். அடுத்தவன் மனைவியை லவ் பண்ணுவது (??), ஆனால் அவளோ புருசனை விடுத்து இன்னோருத்தனை லவ்வுவது, அவள் புருசனோ அவளை விட்டுவிட்டு இன்னொருத்தி பின்னால் போவது என, சமுதாயத்தில் மிக குறைவாக இருக்கும் செய்திகளை மிக மலிந்திருப்பது போல் காட்டி பணம் செய்வார்கள் பாலிவுட்டார்...

தென்னிந்திய அல்லது தமிழ் திரைப்படங்களில் இந்த ஆபாச விஷயங்கள் சற்று குறைவு தான் என்று சொல்லலாம். தென்னிந்தியர்கள் பொதுவாக குடும்ப உறவுமுறைக்கு மதிப்பு தருவதுடன், கலாச்சார வேலியில் ஓனான் ஏறிவிடாமல் கல் எறிபவர்கள். அதனால் தான் பாலசந்தர் பாலுமகேந்திராவின் சில முயற்சிகள் கூட தோற்றன..

ஆனால் இப்போது அந்த ஆபாச ரசாபாசங்களை டி.வி சீரியல்கள் அரங்கேற்றிவருவது, குடும்ப உறவுகளை சிதைக்க போதுமானதாக இருக்கிறது. என்னதான் சீரியலின் முடிவில் எல்லாம் சுபமாக காட்டினாலும், கொண்டு செல்லும் விதத்தில் பல அசிங்கங்களை அரங்கேற்றுகிறது டிவி சீரியல்கள்.

அழுகாச்சிகளையே எவ்வளவு நாள் காட்டுவது என்று இந்த ஆபாச அவதாரம் எடுத்துவிட்டார்கள் போலிருக்கிறது திருக்குமரன்கள். எத்தனை எத்தனை சீரியலடா அதில் எத்தனை எத்தனை ஆபாசமடா என்று நினைக்கையில், மகளிரும் சில சமயம் வலுக்கட்டாயமாக குழந்தைகளும் பார்க்கும் டி.வி சீரியல்களின் கதைக்கும் கருப்பொருளுக்கும் கட்டாய சென்சார் தேவை என்று தோன்றுகிறது...

வசந்தம் என்று ஒரு சீரியல்.

துளசி கல்யாணமான பெண். கணவன் ஆட்டோக்காரன். அதனால் வேலைபார்க்கும் அலுவலகத்தில் தன்னுடைய முதலாளியை காதலிக்கிறாள். முதலாளியோ இவளை எப்போது கொடைக்கானலுக்கு தள்ளிக்கொண்டு போகலாம் என்ற எண்ணத்தில் திரிகிறான்...

அத்திப்பூக்கள் என்று ஒரு சீரியல்.

மேகலா ஏற்கனவே விஸ்வத்தை காதலிக்கிறாள். ஆனால் மேகலா வேலை பார்க்கும் அலுவலக முதலாளி அவளை காதலிக்கிறான்.

வேறு சில கந்தாயங்கள்

ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ள ஒருவன், இன்னோருத்தியை காதலித்து திருட்டு கல்யாணம் செய்ய முயல்கிறான்.

ஏற்கனவே கல்யாணம் ஆகி டைவர்சும் ஆனவனின் ரெண்டாவது பொண்டாட்டியை பர்ஸ்ட் நைட் கொண்டாட விடாமல் தடுக்கிறாள் முதல் மனைவி.

ரெண்டு பொண்டாட்டிக்காரன் ஒருவன், ரெண்டாவது பொண்டாட்டியின் குறைகளை கண்டறிந்து அவளுக்கு பாடம் புகட்ட அவள் வீட்டுக்கு சொத்துக்களை உதறி குடியேறுகிறான். அவளுக்கு ஏற்கனவே நான்கு காதலர்கள் மட்டும்.

காதலிப்பவன் ஒருவன், தன்னுடைய காதலியின் தந்தை அவமானப்பட வேண்டும் என்பதற்காக பத்திரிக்கை அடித்து கல்யாண மேடைக்கு மணமகள் போகும் வரை காத்திருந்து, அப்புறமாக தள்ளிக்கொண்டு ஓடுகிறான்.

எங்கே பிராமணன் என்று சாதி பெயரை வைத்து ஒரு சீரியல். அதை தயாரிப்பது மண்டையில் முடி இல்லாத ஒரு தயாரிப்பாளர்.

மகள், மேகலா, அத்திப்பூக்கள், கோலங்கள், வசந்தம், அரசி, செல்வி என ஆபாசம், அசிங்கம் இல்லாத சீரியலை காதில் கூட கேள்விப்பட்டிருக்கமாட்டீர்...

டேய் டேய் டேய் என்று ஒவ்வொரு சீரியலிலும் ஒவ்வொரு ஆபாசங்கள், சமூக தளத்தில் ஒவ்வாத விஷயங்கள்.

பரபரப்பு வேண்டும் என்பதற்காக நியாயம் இல்லாத செயல்கள், அதனை நியாயப்படுத்தும் வசனங்கள்.

இது போன்ற சீரியல்களை வைத்த கண் வாங்காமல், கணவனுக்கு உணவளிக்கக்கூட நேரமில்லாமல், குழந்தைகளை பராமரிக்கக்கூட சரியான நேரத்தை ஒதுக்காமல் பார்க்கும் சமுதாயம், உருப்படுமா ?

தொலைக்காட்சி இன்றைக்கு வீட்டில் நுழைந்து, வரவேற்பறையில் அமர்ந்துவிட்ட ஒரு விஷயம்.

அதில் பொறுப்பான விஷயங்களை காட்டவேண்டும், நல்ல விஷயங்கள் மக்களை சென்று சேரவேண்டும் என்ற பொறுப்பு கொஞ்சமாவது இருக்கவேண்டும்..

<<<<< பி.கு : இந்த சீரியல்களை எல்லாம் நீ ஏன் பார்க்கிறாய் ? என்ற கேள்வியை கேட்காமல் ஓட்டு மட்டும் போட்டுவிட்டு போகவும் அக்காங் >>>>

வாக்களிக்க

Tuesday, March 17, 2009

இளையதளபதி விஜய் மீது காண்டா ? பதிவு போட்டு தீர்த்துக்கொள்ளுங்கள்



விஜய் பிரஸ் மீட்டுல கத்தினார் என்று சஞ்ஜெய் உட்பட பதிவுகளை காண முடிந்தது. ( சஞ்ஜெய் உன்னோட பேரு ஏன் கட்டம் கட்டமா வருது ? அதை ஏன் அடிக்கடி நோண்டிக்கிட்டிருக்க ? )

பிரஸ் மீட் அவன் வைக்கிறான், அதுல எவனோ தொந்தரவு செய்யறான், அதனால் அவன் கத்துறான்...இதுல என்ன பெரிய பிரச்சினை ?

இது அஜித் ரசிகர்களின் வேலை என்று எளிதாக விட்டுவிடமுடியவில்ல.

ஏதோ ஒரு நுண்ணரசியல் இதில் உறுத்திக்கொண்டே இருக்கிறது...

தமிழக சாதி சார்ந்த அரசியலை, சினிமா சார்ந்த அரசியலை கூர்மையாக கவனித்துவருபவர்களால் இதை எளிதாக உணரமுடியும்...

இன்னுமா உங்களுக்கு புரியல ?? கூட்டி கழிச்சு பாருங்க உங்களுக்கே புரியும்...

புதுகை அப்துல்லா, தாமிரா மற்றும் தமிழ்மணத்துக்கும் பரிசலுக்கும்


ஒருமுறை ஜேகே ரித்திஷ் பதிவு ஒன்றில் பின்னூட்டம் போட்டிருந்த புதுகை அப்துல்லா, "உங்களுக்கு பின்னூட்டம் போடக்கூடாதுன்னு நினைச்சிருந்தேன்...போட வெச்சுட்டீங்களே" அப்படீன்னார்...

ஏன் அப்படி சொன்னார் ??

என்னுடை அல்போன்ஸ் எபிசோட் 2 பதிவில் வந்த ஆதிமூலகிருஷ்ணன், பின்னூட்டம் போட்டுட்டு அதை டெலீட் பண்ணிட்டு போயிருக்கார் ?

ஏன் அப்படி செய்தார் ??

தமிழ்மணத்துக்கு ஒரு வேண்டுகோள்...

சூடான இடுகையில சில பதிவர்களுக்கு தனிப்பட்ட செட்டிங்ஸ் செய்திருக்கீங்களே ? அதை நீக்கிருங்களேன்...லக்கி, கோவியார், டோண்டு, மோகன் கந்தசாமி, அதிஷா என்று இந்த லிஸ்ட் ஏன் நீளுது ?

நான் வேண்டுமானா எல்லார் சார்பாவும் தமிழ்மணத்துக்கு பகிரங்க மன்னிப்பு கடிதம் எழுதவா ?

நன்றி..

பரிசல்...

அவியல் உருவான கதையை நீட்டி முழக்கியிருந்தீங்க...ஆக்சுவலா அதன் ஆன்ஸர் சிங்கிள் வேர்ட். லக்கி.

தொடர் பதிவு, எதிர்பதிவு போன்ற பல விஷயங்களுக்கு ட்ரெண்ட் செட்டர் லக்கிலூக் தான். அந்த பதிவில் அதற்கான பல விஷயங்கள் எழுதப்படவில்லை. உங்களுக்கு தெரியாமலும் இருந்திருக்கலாம். பிரபல பதிவரானாலே இப்படித்தான் பிரச்சினை வரும்னு நினைக்கிறேன். (உங்களை சொன்னேன்.), நீங்க பத்துரூபாய்க்கு பொரி வாங்கி கொடுத்ததால அதை வாய் புல்லா அப்பிக்கிட்டு நான் கம்முனு இருப்பேன்னு நீங்க நெனைச்சா அது தப்பு. அந்த பொரி எல்லாம் என்னக்கோ செரிச்சு சுண்ணாம்பாயிருச்சு.

பை.

அறிவுகெட்ட அல்ப்போன்ஸின் அனுமார் வேலை - EPISODE 2


வாத்தியாரிடன் கேள்வி கேட்ட அல்ப்போன்ஸு

நம்ம அல்ப்போன்ஸுக்கு பள்ளியில் ஒதுக்கப்படுவது எப்போதும் முதல் பெஞ்சுதான். சார் அறிவாளி என்பதால் அல்ல. பயல் வழக்கத்தை விட குள்ளம்.

எங்கள் பள்ளியில் ஆங்கில மற்றும் கணிதம் எடுத்த ஆசிரியர் ஆரோக்கிய ராஜ் என்று ஒருவர், அவரது ஆங்கில பீரியட் மிகவும் பிரபலம்..

மெக்கனாஸ் கோல்ட், ட்ரஷர் ஹண்ட் போன்றதொரு ஆங்கில புத்தகத்தை படித்து அதை தமிழாக்கி சுவையாக கதைசொல்வார்.

அவரது ஆங்கிலப்பாட வகுப்பு தேன். அவரே எங்களுக்கு கணித பாடத்தையும் எடுத்துவந்தார். பொதுவாக வகுப்பில் எந்த தண்டனையும் வழங்காதவர், அதனால் அனைவருக்கு பிடித்தமானவர்.

பாடத்தில் எந்த சந்தேகம் வந்தாலும் கேட்டால் அமைதியாக சொல்பவர்..பொறுமையாக விளக்கி புரியவைப்பார்...

அன்றைக்கு அப்படித்தான்...

ஏதோ ஒரு கணக்கை அப்படி இப்படி போர்டில் இழுத்துக்கொண்டிருந்தார். ஏனோ கணக்கு விடை பிடிபடவில்லை...புத்தகத்தில் எளிமையாக விடை கொடுத்திருந்தாலும், அவர் ஆரம்பத்தில் ஏதோ தவறிழைத்துவிட்டதால் இறுதி விடை வராமல் போக்கு காட்டிக்கொண்டிருந்தது.

மொத்தத்தில் சார் கொஞ்சம் டென்ஷனில் இருந்தார்...

நாங்கள் சாரின் மூட் தெரிந்ததால் அமைதியாக அமர்ந்திருந்தோம்...

பை X 7 = 22 என்று ஒரு ஸ்டெப் எழுதினார்.

பை என்பது 22/7 என்று அதற்கு முந்தைய ஸ்டெப்பில் எழுதி விட்டிருந்தார்.

அதனால் 7 க்கு 7 ஐ அடித்துவிட்டு 22 என்று எழுதினார்.

திடீரென அமைதியை குலைத்துக்கொண்டு ஒரு குரல்...

குரலுக்கு சொந்தக்காரன் அல்ப்போன்ஸு...

சார்...அந்த 22 எப்படி வந்துச்சு ?????

சார் அமைதியாக அவனை அழைத்தார்...

இங்க வா சொல்றேன்...

இவனும் வெளந்தியாக கிட்டே நெருங்க...

டமால் டுமீல் என்று முதுகில் அடி போட்டார்...

நொக்கு நொக்கு என்று நொக்கிவிட்டு கேட்டார்...

இப்ப தெரிஞ்சுதா அந்த 22 எப்படி வந்ததுன்னு ?

தெரிஞ்சுது சார்...இது அல்போன்ஸு...

அப்ப போய் இடத்துல உக்கார்...

சந்தமில்லாமல் பய வந்து உட்கார்ந்தான்...

பீரியட் முடிஞ்சதும் வெள்ளந்தியாக என்னிடம் வந்து கேட்டான்...

டேய் சார் என்னை எதுக்குடா அடிச்சார் ? சாருக்கு அந்த இருவத்திரெண்டு எப்படி வந்துதுன்னு தெரியாதா என்ன ?

    மற்ற எபிசோடுகளை காண தவறாதீர்கள்


செஞ்சியாருடன் அல்ப்போன்ஸு
சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே, பின்னால வந்த பாதிரியாரே
சாவியை தொலைச்ச அல்ப்போன்ஸு
பாவ மன்னிப்பு கேட்ட அல்ப்போன்ஸு
எலக்ரிக்கல் மோட்டார் ரீவைண்டிங் குரூப்பில் அல்போன்ஸு
விக்கிபீடியாவில் வந்த அல்போன்ஸு
அல்ப்போன்ஸு பொங்கலில் புழு
காலையில் சப்பாத்தி சாப்பிட்ட அல்ப்போன்ஸு
சவுத் ஆப்ரிக்கன் மிஷனில் அல்ப்போன்ஸு

Friday, March 06, 2009

கல்லூரி- சங்கமம் போட்டிக்காக

வாழ்க்கை என்னும் இயந்திரத்தில் பின்னோக்கி நகர வழி ஒன்று இருந்தால் அனைவரும் திரும்பப் போக விரும்பும் காலகட்டம் கல்லூரிக்காலம். வாழ்க்கைக்குத் தேவையான ஏட்டுக் கல்வியை மட்டுமில்லாமல், அனுபவக் கல்வியையும் பயிற்றுவிக்கும் இடம் கல்லூரி. அடுத்து வாழப்போகும் வாழ்க்கைக்கு தேவையானப் பாடங்களை நமக்கு சொல்லித் தருமிடம்தான் கல்லூரி.

கல்லூரி என்றதும் பெரும்பாலோனோர்க்கு நினைவுக்கு வருவது நண்பர்களும், காதலும்.. காதலித்தவரை கைப்பிடித்தவர்களுக்கு அதை நிறைவேற்ற உதவிய நண்பர்கள் மேல் கோபம் வரலாம். நண்பர்கள் செய்த தியாகம், துரோகம், அதனால் இன்று இருக்கும் நிலைமை, அவர்கள் மூலம் நாம் கற்ற வாழ்க்கை பாடம் எல்லாம் கண் முன்னே தோன்றலாம்.

கல்லூரியில் நிகழ்ந்த விழாக்கள், கொண்டாட்டங்கள், விடுதி விளையாட்டுக்கள், கும்மாளங்கள், சுவர் ஏறிக் குதித்து கண்டத் திரைப்படங்கள், மூத்தோர் - இளையோர் சண்டை இவையெல்லாம் நினைக்கையில் அதன் இன்பமே தனி. இதைத் தாண்டாமல் வந்தவர்கள் நம்மில் சொற்பமே. நம்மில் பெரும்பாலானோர் கல்லூரித் தினங்களை கடந்தே வந்திருப்போம், ஆனாலும் இன்னும் பலர், கல்லூரியில் படிக்க இயலாமல் போன சோகத்தை ஏதாவது கல்லூரி ஒன்றைக்கடக்கையில் அவர்கள் விடும் பெருமூச்சில் அருகில இருந்து உணர்ந்திருப்போம்.

நட்பு, காதல் என்று வாழ்க்கையையே தொலைத்த பலரையும் நாம் கல்லூரியில் பார்த்திருப்போம். நட்புக்காகவும், காதலுக்காகவும் புகை, மது என அடிமையாவதும் இந்தக் காலத்தில்தான். எதிலும் கலக்காமல் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி பிறகு வருந்துபவர்களும் உண்டு, மகிழ்பவர்களும் உண்டு. ஒவ்வொருவருடைய கல்லூரி அனுபவங்களை படிக்கும் போது நாமும் அவர்களுடன் கால இயந்திரத்தில் பயணித்து நமது கல்லூரிக்கேச் செல்கின்றோம். கல்லூரியின் அரசியல் குணங்களும் நாமறிந்த ஒன்றுதான்.

இப்படிப் பல நிறங்களையும், கலாச்சாரங்களையும், நிகழ்வுகளையும் கொண்ட 'கல்லூரி'யே இந்தப் போட்டிக்கான தலைப்பு. இந்தத் தலைப்பினை அடித்தளமாக அமையும் கதை, கவிதை, சொந்த அனுபங்கள், கட்டுரைகள், படங்கள், குறும்படங்கள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.


சமர்பிக்கப்படும் இடுகையானது உங்கள் படைப்பாக இருத்தல் வேண்டும்.
ஒருவர் ஒரு படைப்பினை மட்டுமே அனுப்பலாம்.
போட்டிக்கான இடுகையானது 2-மார்ச்-2009 தேதிக்கு பின்னர் எழுதப்பட்டதாக இருத்தல் வேண்டும்.
வாக்கெடுப்பின் மூலமும், நடுவர்கள் மூலமும் முடிவுகள் தேர்ந்தெடுக்கப்படும்.
போட்டிக்கான இடுகைகள் தணிக்கை செய்யப்பட்ட பிறகே வாக்கெடுப்பிற்கு வைக்கப்படும்.
சிறந்த முதல் 3 படைப்புகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
பரிசு: முதல் பரிசு பெறும் படைப்புக்கு Oviam Hosting நிறுவனத்தார் வழங்கும் ஒரு வருடத்துக்கான தனி இணையச் சேவை (Domain Name & Web hosting for a Year) அல்லது ரூ. 1,250/- மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்படும். (கிழக்குப் பதிப்பகம் அல்லது எனி இந்தியன்).

நடுவர்கள்: நாம் நன்கறிந்த இரு பதிவர்களே நடுவர்களாக பணியாற்ற சம்மதித்திருக்கிறார்கள். அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க அவர்களின் பெயர்கள் வாக்கெடுப்புக்கு பின்னர் அறிவிக்கப்படும்.

படைப்பினை அனுப்ப கடைசி நாள்: மார்ச்-20-2009. (இந்திய நேரப்படி11:59 PM)

வாக்கெடுப்பு: 22-மார்ச்-2009 இருந்து 27-மார்ச்-2009 வரை
முடிவுகள்: ஏப்ரல்-2-2009

Wednesday, March 04, 2009

தலைவா - உனக்காக டீயும் குடிப்பான் இந்த செந்தழல் ரவி



தமிழகத்து ஒபாமாவே !!!!
தென்னகத்து அர்னால்டே !!!!
வருங்காக ஆஸ்கர் நாயகனே !!!!
எதிர்கால அமெரிக்க ஜனாதிபதியே !!!!
நிகழ்கால பாரியே ஓரியே காரியே !!!!
தமிழ் இனம் காக்கும் தங்க சட்டை போட்ட வேங்கையே !!!!
நீ வாழ்க நின் புகழ் ஓங்க !!!!

இவன்
அகிலாண்ட நாயகன் ஜே கே ரித்திஷ் மன்ற அடிப்படை தொண்டன்,
செந்தழல் ரவி, அய்ரோப்பிய கண்டம்.
உலகம்.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....