இளையதளபதி விஜய் மீது காண்டா ? பதிவு போட்டு தீர்த்துக்கொள்ளுங்கள்விஜய் பிரஸ் மீட்டுல கத்தினார் என்று சஞ்ஜெய் உட்பட பதிவுகளை காண முடிந்தது. ( சஞ்ஜெய் உன்னோட பேரு ஏன் கட்டம் கட்டமா வருது ? அதை ஏன் அடிக்கடி நோண்டிக்கிட்டிருக்க ? )

பிரஸ் மீட் அவன் வைக்கிறான், அதுல எவனோ தொந்தரவு செய்யறான், அதனால் அவன் கத்துறான்...இதுல என்ன பெரிய பிரச்சினை ?

இது அஜித் ரசிகர்களின் வேலை என்று எளிதாக விட்டுவிடமுடியவில்ல.

ஏதோ ஒரு நுண்ணரசியல் இதில் உறுத்திக்கொண்டே இருக்கிறது...

தமிழக சாதி சார்ந்த அரசியலை, சினிமா சார்ந்த அரசியலை கூர்மையாக கவனித்துவருபவர்களால் இதை எளிதாக உணரமுடியும்...

இன்னுமா உங்களுக்கு புரியல ?? கூட்டி கழிச்சு பாருங்க உங்களுக்கே புரியும்...

Comments

நாந்தே மொதோ...
நீங்க என்ன சொன்னாலும் அந்த வீடியோ பயங்கர காமெடியா இருந்தது ரவி ! விஜய் சினிமா ரொம்ப பாக்கறாரு போல் !
உங்க கிட்டே இருந்து இரண்டு பதிவு இதுவரை வந்து இருக்கு! நானும் நோட் செஞ்சுக்கிட்டேதான் இருக்கேன் மிஸ்டர்.தழலார்.
விஜய் என்னா புத்தரா கோவமே வராம இருக்க!

அவரும் மனுசன் தானே, இதை ஏன் பெருசு படுத்தனும் என்று கேட்டேன் மிஸ்டர்.சஞ்யக்கிட்ட வழக்கம் போல முழ நீளத்துக்கு காரணம் வெச்சு இருக்கார்:)))
//தமிழக சாதி சார்ந்த அரசியலை, சினிமா சார்ந்த அரசியலை கூர்மையாக கவனித்துவருபவர்களால் இதை எளிதாக உணரமுடியும்...//

இதுல சாதி எங்கிருந்து வந்தது!
என்ன கொடும சார் இது!
ரவி said…
வால், கூர்மையா கவனிக்க சொன்னேன்....
தம்பீ..

என்ன திடீர்ன்னு ஆரம்பிச்சிட்ட..? ப்ரீயாயிட்டியா.. இல்லாட்டி இந்தியாவுக்குள்ள கால் வைச்சுட்டியா..?

ஏதோ விஜய்க்கு ஒரு டென்ஷன்.. மனுஷன்னு இருந்தா கோபம் வராதா என்ன..? இதைப் போய் பெரிசு பண்ணிக்கிட்டு..!
அதானே அண்ணே என்ன இன்னைக்கு திடீர்னு இரண்டு பதிவு ?

விஜய் கத்தினது இதை நான் ஏற்கனவே facebook ல பாத்திருந்தேன் நேற்று...
ரவி said…
உண்மைதமிழன் அண்ணே

நேத்து தான் ஆசுபத்திரியில இருந்து டிஸ்சார்ஜ் ஆனேன்.

இன்னைக்கு தான் கொஞ்சம் பரவால்லாம இருக்கு.

அதான் பதிவு...
ரவி said…
தமிழன்.

உங்க படைப்புகளை பிரபல பத்திரிக்கைகளுக்கு அனுப்பும் நேரம் வந்திட்டது...
தமிழ் சினிமா ஹீரோ = லூசு
Unknown said…
செந்தழல் ரவிண்ணா... ஆசுப்பத்திரிலேருந்து நேத்துதான் வந்ததா சொல்றீங்க.. எல்லா நலமும் பெற்று பூரண குணமடைய வாழ்த்துக்கள்.

விஜய் கத்தரார்னு சொல்றதுல கூட ஜாதி பார்க்கிறீங்களே... இப்படியே நல்லா இருக்கறவங்க புத்தியையும் கெடுத்துராதீங்க.. ஆசுப்பத்திரிலே கொடுத்த மருந்து இன்னும் வேலை செய்யுதோ?
Sanjai Gandhi said…
யோவ் மாம்ஸ்.. ஹாஸ்பத்திரியில மருந்து மாத்தி குடுத்துட்டாங்களா? இல்லை அக்கா கூட சேர்ந்து என் டார்லிங்கும் உதைக்க ஆரம்பிச்சிட்டாளா?

நேத்து எனக்கு அந்த விடியோ மெயில்ல வந்தது.. இது வரைக்கும் விஜய் மேல நாம் வச்சிருந்த அபிப்ராயத்துக்கு மாறா இருக்கேன்னு 2, 3 பிட்டு சேர்த்து ப்ளாக்ல போட்டேன். ரசிகர்களை இப்டி “டேய்”னு கோவமா கத்தறது திமிர் இல்லையா? ரசிகர்கள்னா இவருக்கு அடிமைகளா?


சத்தியமா இதுல இருக்கிற அரசியல் புரியலை. குசும்பன் மாதிரி தீவிர விஜய் ரசிகர்கள் தான் டென்ஷன் ஆகறாங்கன்னா நீங்களுமா?

இதுல ஒரு உள் நோக்கம் புண்ணாக்கும் இல்ல ரவி. நான் பதிவு போடும் போது இவ்ளோ பெரிய விஷயம் ஆகும்னும் எதிர்பார்க்கலை.

ஆனா இப்போ சொல்றேன்.. ஒருவேளை இவனெல்லாம் அரசியலுக்கு வந்தா..... ரொம்ப கஷ்டம் தான். என்னா ஒரு சர்வாதிகாரத் தன்ம்டா சாமி? :(
விஜயகாந்த் தான் இப்டி எல்லாம் பொதுவுல திட்டுவார்.. நாக்கை கடித்து மிரட்டுவார்.. உமாபாரதி மாதிரி பொது இடத்துல பளார் விட்டாலும் விடுவார்.. சினிமாக் காரனுங்கள் வெளியிலயும் ஹீரோவாவே இருக்கனும்னு நெனைச்சா எப்டி சாமி?

ஏன் ரவி, பதிவு போட எனக்கு தான் மேட்டர் இல்லாம இப்டி ஒப்பேத்தறேன். உங்களுக்குமா? :))
Sanjai Gandhi said…
//மிஸ்டர்.சஞ்யக்கிட்ட வழக்கம் போல முழ நீளத்துக்கு காரணம் வெச்சு இருக்கார்:)))//

அதென்னா முள நீளக் காரணம்னு நானும் தெரிஞ்சிக்கலாமா மிஸ்டர் குசும்பன்.? இது ஒரு சப்பை மேட்டர். இதை அரசியல் ஆக்கறதே நீங்க தான். உங்கள் தலைவரை சொன்னா மட்டும் பொத்துக்கிட்டு வருதாக்கும்?
Sanjai Gandhi said…
///தமிழக சாதி சார்ந்த அரசியலை, சினிமா சார்ந்த அரசியலை கூர்மையாக கவனித்துவருபவர்களால் இதை எளிதாக உணரமுடியும்...//

இதுல சாதி எங்கிருந்து வந்தது!
என்ன கொடும சார் இது!//

’திருப்பாச்சி’ அருவா வச்சி கவனிசிட்டேன் ரவி. ஒரு சாதி அரசியலும் தெரியலை.. நான் அஜித் ரசிகன் கூட இல்லையே.. பின்ன என்னவா இருக்கும்? :(
Sanjai Gandhi said…
//ஏதோ விஜய்க்கு ஒரு டென்ஷன்.. மனுஷன்னு இருந்தா கோபம் வராதா என்ன..? இதைப் போய் பெரிசு பண்ணிக்கிட்டு..!//

மனுஷனா இருந்தா கோவம் வரது சகஜம் தான் அண்ணாச்சி? ஆனா விஜய் மனுஷனா?

தெய்வம்னு சொல்லிக்கிறாங்களே.. பய புள்ளைங்க பொய் சொல்லிட்டாங்க போல.. :((
தலைப்பு ரொம்ப நல்லா இருக்கு!!!
ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு --> நல்லாவே புரிஞ்சிடிச்சி செந்தழல் சார். விஜய்க்கு எதுக்காக இப்படி ஒரு சப்போர்ட்டுன்னு!

Popular Posts