Tuesday, June 27, 2006

திருந்தவே மாட்டீங்களாப்பா நீங்க..

ஜெயராமன் அவர்களுடைய பதிவில் அன்பர் மியூஸ் போட்ட பின்னூட்டம்..

சிலர் புனிதர் பட்டத்திற்காக கேமராக்களின் முன்பு தொழுநோயாளிகளுக்குச் செய்யும் சேவைகளின் மதிப்பும் உண்மையில் குறைவுதான் என்கிற வகையிலும் நான் இந்தக் கதையைப் புரிந்து கொண்டேன்.

என்ன கொடுமை அய்யா இது...நான் ஒரு பின்னூட்டம் இட்டு இருந்தேன்...அதாவது மியூஸ் அவர்களே...நீங்கள் அன்னை தெரசாவைதான் சொல்லுகிறீர்கள் என்று முதலில் சொல்லுகிறேன்...பிறகு என் வாதங்களை எடுத்து வைக்கிறேன் என்று...இது வரை வெளிவரவில்லை...ஆகவே பதிவு போடவேண்டிய கட்டாயம்....

என்ன ஒரு அவதூறு மனோபாவம் பாருங்கள்....இதை படிக்கும் ஒவ்வொருவரிடமும் நியாயம் கேட்கிறேன்...இதுபோன்ற புழுதியை வாரி தூற்றும் முயற்ச்சி எப்படி நியாயமாகும் ?

வருத்தத்துடன்,
செந்தழல் ரவி

75 comments:

Anonymous said...

பேய்கள் ஆட்சி செய்தால் சாத்திரங்கள் பிணம் தின்னும் என்று தெரியாதா?

ரவி said...

ஒன்னும் புரியவில்லை - கொஞ்சம் விளக்குங்கள்..

Anonymous said...

சயராமன் பதிவில் மியூசு எப்படி எழுதும்?இப்படித்தான்.அதைஅனுமதிக்கும் சயராமன் மிக நல்லவர் என்ரு வைத்திக்கொள்ளுங்களேன்..

ரவி said...

ஆமாம்...இது என்ன மனோபாவம் என்றால் - கண்மூடித்தனமான எதிர்ப்பு..இந்த விஷயத்தை பக்கத்தில் இருக்கும் கொல்கத்தா நன்பனிடம் சொல்லுகிறேன்...

அவன் அவர்கள் இருவரையும் பெங்காலியில் வசைபாடிக்கொண்டுள்ளான்..

என்ன திட்டுகிறானோ - யாருக்கு தெரியும்...

╬அதி. அழகு╬ said...

1. தூய சேவை

2. மனம் நிறைய அழுக்கு

ஒன்றைப் பற்றி இரண்டு

அன்னை தெரசாவைப் பற்றி ம்யூஸ் வேறெப்படி எழுதும் என்று எதிர் பார்க்கின்றீர்கள்?

Anonymous said...

ம்யூசும் ஜெயராமனும் போலி டோண்டு ரேஞ்சுக்கு போகிறார்கள்.

லக்கிலுக் said...

ரவி!

இதைத்தானப்பா திராவிடர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் தட்டிக் கேட்கிறோம்.... எங்களுக்கு என்னவெல்லாம் பட்டம் கொடுக்கிறார்கள் தெரியுமா?

திராவிட உணர்வு கொண்டவர்களில் கடைசி உயிர் இருக்கும் வரை சிறுபான்மையினர் எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்பட வேண்டாம்...

Anonymous said...

தெரசாவைப் பற்றி எழுதும் அழுக்கு மனம் படைத்தவன் ஏன் காமகேடி சங்கராச்சாரியாரைப் பற்றி எதுவும் எழுத மாட்டேன் என்கிறான்?

ரவி said...

அட நாங்களும் திராவிடர்கள் தாம்பா...பாத்தாலே தெரியல்லியா..

:):)

உங்களோட மாரல் சப்போட்டுக்கு நன்றி லக்கி...

ரவி said...

போலியாரையும் அழைத்து வந்துவிட்டீங்களா ?

அவர் கமெண்ட் வரும் பாருங்க...

Sivabalan said...

// திராவிட உணர்வு கொண்டவர்களில் கடைசி உயிர் இருக்கும் வரை சிறுபான்மையினர் எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்பட வேண்டாம்... //

இதை நான் வழிமொழிகிறேன்..


நன்றி.

ரவி said...

///சங்கராச்சாரியார் said...

தெரசாவைப் பற்றி எழுதும் அழுக்கு மனம் படைத்தவன் ஏன் காமகேடி சங்கராச்சாரியாரைப் பற்றி எதுவும் எழுத மாட்டேன் என்கிறான்? //

ரொம்ப குசும்புதான்...சங்கராச்சாரியார் என்ற பெயரிலியே அவரை தாக்குகிறீரே...

குழலி / Kuzhali said...

என்னத்த சொல்ல, 12 ஆண்டுகள் கிறித்துவ பள்ளிகளில் தான் படித்தேன், பெரும்பான்மையான மாணவர்கள் இந்துக்கள் தான், ஆனால் எந்த ஒரு மத மாற்ற முயற்சியும் செய்யவில்லை, இப்படி எழுதுபவர்கள் மனசாட்சி இல்லாமல் தான் எழுதுகிறார்கள்

ரவி said...

நான் படித்த புனித வளனார் (கடலூர்) பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை பத்தாயிரம்...யாராவது ஒருவர் சொல்லட்டும் - அங்கு மதமாற்றம் நடைபெறுகிறது என்று...

பிலாகு எழுதுவதை விட்டு விடுகிறேன்...

Anonymous said...

வந்துட்டேன்பா. இப்பவாவது தெரியுமே நாங்க ஏன் முகமூடி போட்டு இந்த கொள்ளைக்காரனுங்களுக்கு எதிரா போராடிக்கிட்டு இருக்கோம்னு. உன் மேல பாய அடுத்து டோண்டு வந்துடுவாரு மோளம் அடிச்சிக்கிட்டு. ஏன்னா ம்யூஸ் அந்த ஆளோட சிஷ்யன் இல்லையா?

ஏதாவது பிரச்சினைன்னா தயங்காமல் போலி டோண்டு ரசிகர் மன்றம், பெங்களூர் கிளை, நமீதா ஜூஸ் Centreஐ உடனே அணுகவும்.

குழலி / Kuzhali said...

//நான் படித்த புனித வளனார் (கடலூர்) பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை பத்தாயிரம்...//
ரவி நானும் அதே அதே பள்ளிதான் (மஞ்சக்குப்பம் பள்ளியா?)

ரவி said...

ஆமாம்...தனிமடல் செய்யுங்க..நாம கதைக்க ஆரம்பித்தால் அஜெண்டா போயிடும்...நாயகர்கள் தப்பித்துவிடுவாங்க..

வெற்றி said...

செந்தழல் ரவி,
வணக்கம்.
நீங்கள் தந்த சுட்டிக்குச் சென்று அன்பர் முசே அவர்களின் பின்னூட்டத்தை வாசித்தேன். அவர் இப்படிச் சொல்லியிருந்தார்:

"சிலர் புனிதர் பட்டத்திற்காக கேமராக்களின் முன்பு தொழுநோயாளிகளுக்குச் செய்யும் சேவைகளின் மதிப்பும் உண்மையில் குறைவுதான் என்கிற வகையிலும் நான் இந்தக் கதையைப் புரிந்து கொண்டேன்."

ஆனால் அவர் எந்த இடத்திலும் அன்னை திரேசாவின் பெயரைக் குறிப்பிடவில்லையே! அப்படியிருக்க அவர் அன்னை திரேசாவைத்தான் சொல்கிறார் என எப்படி முடிவுக்கு வந்தீர்கள்? அவர் சும்மா பொதுவாகச் சொல்லியிருக்கலாம் அல்லவா? அவர் அரசியல்வாதிகளையோ அல்லது திரை உலக நட்சத்திரங்களைக் கூடக் குறிப்பிட்டிருக்கலாம் அல்லவா? அவர் என்ன பொருளில்[அர்த்தம் - context]அப்படிச் சொன்னார் என்பதை நன்றாக அறிந்த பின்னரே அவரின் பதிவு பற்றி கருத்துச் சொல்வது சரியாக இருக்குமென நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ரவி?

ஜயராமன் said...

ரவி அவர்களே,

தங்கள் பின்னோட்டத்தை நான் இதுவரை பார்க்கவில்லை. தாங்கள் 4;32 மாலைக்கு பதிந்துள்ளீர்கள்.

தாங்கள் நான் பின்னோட்டத்தை அனுமதிக்ககவில்லை என்று யூகித்து என்மீது வழக்கம்போல் அவதூறான ஒரு பதிவை வழங்கியுள்ளீர்கள்.

இதற்கு முன்பும் (தலித் கிருத்துவர்கள்) என் பதிவில் பின்னோட்டம் இட்டு 5 அல்லது 10 நிமிடங்களுக்குள் அது பிரசுரமாகாது என்று சொல்லி 'ஜயராமன் கக்கிய விஷம்' என்று அவதூறாக பதிந்தீர்கள்.

நான் இதுவரை எந்த பின்னோட்டங்களையும் கருத்து விரோத்த்துக்காக பிரசுரிக்காமல் இருந்ததில்லை. அது தங்கள் உள் மனதுக்கு தெரியும் என்று எனக்கு தோன்றுகிறது.

நான் தங்களை தனிமடலில் தொடர்பு கொண்டு என் போன் எண்ணையும் கொடுத்து தங்களிடமிருந்து மாற்று கருத்துகளை ஒரு ஆரோக்கியமான முறையில் பெற முயற்சித்தேன். அதற்கும் தாங்கள் செவி சாய்க்காமல், இவ்வாறு பதிந்து வருகிறீர்கள்.

நான் தங்கள் பின்னோட்டத்தை மற்றும் பிரசுரிக்காமல் இருக்கிறேன் என்று நினைக்கவேண்டாம். தங்களுக்கு முன் ஜோகான் பாரீஸ் ஒரு அற்புதமான கருத்தை பின்னோட்டத்தில் வைத்துள்ளார். அதையும் தங்களின் அதிர்ச்சியூட்டும் பதிவை பார்த்த பின்னரே நான் பார்த்தேன்.

நானும் அலுவலக விஷயங்களில் மூழ்கி விடுவதால் உடனுக்குடன் கவனிக்க முடியாமல் ஆகிவிடுகிறது. அதற்காக இரண்டாவது முறை என் மீது அவதூறு பரப்பியுள்ளீர்கள்.

ம்யூஸின் கருத்துக்கு என் விளக்கம்; அவர் அன்னை தெரீசாவை சொல்லி இருக்கமாட்டார் என்று மனமார நம்புகிறேன். அவ்வாறானால், அவரின் கருத்து எனக்கு ஒப்புதல் இல்லை. அன்னை தெரீசா என்றும் புனிதர் பட்டத்துக்கு யோசித்ததில்லை. ஆதலால், ம்யூஸ் அன்னை தெரசாவைத்தான் இங்கு சொல்கிறார் என்று எனக்கு பொருத்தமாக தோன்றவில்லை. மேலும், அவர்தான் விளக்கவேண்டும்.

நன்றி

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

வெற்றி சொல்வது சரியென்றே எனக்கு தோன்றுகிறது.

ரவி said...

இன்றைய உலகில் புனிதர் பட்டத்திற்க்காக பரிசீலனையில் உள்ளபெயர் அவர்களுடையது...பிறகு தொழுநோயாளிகளின் சிகிச்சை சம்மந்தமாக - கேட்டால் சின்ன குழந்தை கூட பதில் சொல்லும்...

நான் அவரது பதிவில் பின்னூட்டம் இட்டு கேட்டிருந்தேன்...பதில் வரும் வழியில்லை...அதனால் தான் இந்த பதிவு...

அபத்த வாதங்களை மீண்டும் மீண்டும் எழுதி உண்மை ஆக்கும் முயற்ச்சி

Anonymous said...

//அபத்த வாதங்களை மீண்டும் மீண்டும் எழுதி உண்மை ஆக்கும் முயற்ச்சி
//

எது? உங்கள் பதிவுகள் தானே? அப்படித்தான் தோன்றுகிறது. உங்கள் பதிவுகள் அபத்த வாதங்களை மீண்டும் மீண்டும் எழுதி உண்மை ஆக்கும் முயற்ச்சி என்ற உங்கள் கருத்தை நான் மனதார வழிமொழிகிறேன். வாழ்க உங்கள் தனிமனித வெறுப்பு. வளர்க உங்கள் அபத்தப் பதிவுகள்.

ஜயராமன் said...

ரவி அவர்களுக்கு,

நான் தங்களுக்கு நீண்ட பதில் எழுதினேன். ப்ளாக்கர் சொதப்பலில் அது பதிய முடியாமல் போனது. மறுபடியும் டைப் செய்கிறேன்.

தங்கள் பின்னோட்டத்தை நான் இதுவரை பார்க்கவில்லை. தங்களின் அதிர்ச்சியூட்டும் இந்த பதிவை பார்த்ததும் விரைந்து போய் பார்த்தேன். தங்கள் பின்னோட்டத்துடன், தங்களுக்கு முன் யோகான் பாரீஸின் அற்புதமான கருத்துள்ள ஒரு பின்னோட்டமும் காத்திருந்தன. அவற்றை பிரசுரித்து விட்டேன்.

தாங்கள் அதற்குள் என் மீது அவதூறாக பதிந்துள்ளீர்கள். இது தாங்கள் என்மீது இரண்டாவது முறையாக இப்படி அவதூறு பதிப்பு இதே முறையில் பதிந்துள்ளது மிகவும் வருத்ததற்குரியது. இதற்கு முன் என் பதிவில் (தலித் கிருத்துவர்கள்) தங்கள் கருத்து பின்னோட்டம் இட்டு 5 அல்லது 10 நிமிடத்திற்குள் அதை நான் போட மாட்டேன் என்று சொல்லிக்கொண்டு என்மீது அவதூறாக பதிந்தீர்கள். ஆனால், தாங்கள் இப்படி பதியும் முன் நான் தங்கள் பின்னோட்டத்தை பிரசுரித்திருந்தேன்.

நான் எப்போதும் எதிர் கருத்துக்களை ஆரோக்கியமான முறையில் பரிமாறிக்கொள்வதில் மிகுந்த ஈடுபாடு உள்ளவன். என் பதிவுகளில் என்னை கண்டித்து ஏகப்பட்ட பின்னோட்டங்களை பார்க்கலாம்.

அவ்வாறு இருக்கும்போது ம்யூஸின் பின்னோட்டத்துக்கு தாங்கள் பதில் சொல்வதில் எனக்கு என்ன தடை இருக்க முடியும்!

அவ்வாறு தங்களின் ஆரோக்கியமான கருத்து பரிமாற்றத்துக்கு நானும் முயன்றேன். தங்களிடம் என் போன் நம்பர் கொடுத்து தனி மடலில் அழைத்தேன். தாங்கள் மறுத்துவிட்டீர்கள்.

தங்களின் பதிவுகள் வெறும் வசை பதிவுகளாக வருவது மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது. அது யார் மேலாகவும் இருக்கட்டும்.

ம்யூஸ் அவர்கள் அன்னை தெரசாவை சொல்லவில்லை என்று மனதார நம்புகிறேன். மேலும் அவர்தான் விளக்க வேண்டும்.

நன்றி

ரவி said...

நீங்கள் உங்கள் பெயரிலேயே எழுதலாம்..அனுமதிப்பேன்..

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

///
புனிதர் பட்டத்திற்க்காக பரிசீலனையில் உள்ளபெயர் அவர்களுடையது
///

இது எனக்கு தெரியாது ரவி அப்படி என்றால் நீங்கள் பதிவிட்டது சரியே என் சார்பிலும் அவர்கள் இரண்டு வசைகள் போய்ச் சேரட்டும்...

Anonymous said...

//நான் அவரது பதிவில் பின்னூட்டம் இட்டு கேட்டிருந்தேன்...பதில் வரும் வழியில்லை...அதனால் தான் இந்த பதிவு...
//

எத்தனை நாள் காத்திருந்தீர்கள்? ஒரு வாரம்? இரண்டு நாட்கள்? ஒரு 24 மணி நேரம்? 12 மணி நேரம்? எத்தனை நேரம் காத்திருந்துவிட்டு இப்படி தனிமனிதத் தாக்குதல் பதிவுகள் போடுகிறீர்கள்?

Anonymous said...

இதோ ஜெயராமன் வந்து விளக்கம் சொல்லியிருக்கிறார். இதுவரை வந்து விஷம் உமிழ்ந்த உங்கள் ஜால்ரா பாம்புக்குட்டிகள் எல்லாம் எங்கே போயின?

நாகை சிவா said...

ரவி,
தன் வாழ்வை சேவைக்காக அர்ப்பணித்து கொண்ட அன்னை தெரசாவை பற்றி தவறாக கூறி இருந்தால் அது மன்னிக்க முடியாத குற்றம். அதை யார் எழுதி இருந்தாலும், அதை ஆதரித்து கருத்து கூறி இருந்தாலும் தவறு.

//திராவிட உணர்வு கொண்டவர்களில் கடைசி உயிர் இருக்கும் வரை சிறுபான்மையினர் எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்பட வேண்டாம்...//
இங்க எதுக்கு தேவையில்லாமல் சிறுபான்மையினர், பெருபான்மையினர் பத்தி எல்லாம் பேசிகீட்டு...

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

ஜயராமன் கூறுவதைப் பார்த்தால் நீங்கள் சிறுது பொறுமையாக கூட இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது ரவி. ஒரு ஆரோக்கியமான விவாதமாக இதனைத் தொடர முயற்சி செய்யுங்கள்.

Anonymous said...

//சிலர் புனிதர் பட்டத்திற்காக கேமராக்களின் முன்பு தொழுநோயாளிகளுக்குச் செய்யும் சேவைகளின் மதிப்பும் உண்மையில் குறைவுதான் என்கிற வகையிலும் நான் இந்தக் கதையைப் புரிந்து கொண்டேன்.
//

குமரன் எண்ணம். ம்யூஸ் எழுதியது இது. இங்கே புனிதர் பட்டத்திற்காக கேமராக்களின் முன்பு என்று சொல்லியிருக்கிறார். அன்னை தெரசா புனிதர் பட்டத்திற்காக பரிந்துரை செய்யப்பட்டது அவர் மறைந்த பின்னால். அதனால் அவர் புனிதர் பட்டத்திற்காக கேமராக்களின் முன்பு நின்றார் என்று சொல்ல முடியாது. அதனால் இந்தக் கருத்து அன்னை தெரசாவைப் பற்றியதாக இருக்க முடியாது. புனித பிம்பங்கள் என்று ஒருவர் (இப்போது பலபேர்) சொல்லிக்கொண்டு திரிகிறார்களே. அந்த மாதிரி சொன்னது இந்த 'புனிதர் பட்டம்' என்பது. அதனை ரவி தவறாக 'செயின்ட்' என்று புரிந்து கொண்டு வசை பாடியிருக்கிறார். அதற்குப் பல பேர் துணை வசை பாடுகிறார்கள். நீங்கள் அதே தவறு செய்யாதீர்கள்.

ரவி said...

சரி அய்யா...புனிதர் பட்டம் என்பது புத்த மதத்தில் கொடுப்பதா அல்லது சீக்கிய மதத்தில் கொடுப்பதா...

குறிப்பிட்ட இந்த பின்னூட்டத்தை அனுமதித்து வழிமொழிந்ததன் மூலம் எந்த வகையான துவேஷத்தினை வலைப்பதிவில் வளர்க்கிறீர்...

இதயம் என்பதும் அதில் ஈரம் என்பதும் இருந்தால் --- என்ன செய்யவேண்டும் என்பது உங்களுக்கே தெரியும்...

அதுசரி...ஏன் அனானி பெயரில் மறைந்து 4 பின்னூட்டம்...நேரடியாக உங்கள் பெயரிலேயே அனுப்பலாமே...விட்டுவிடுகிறேன் இதை..காரணம் நிரூபிக்கப்பட்டால் மக்கள் வாயால் சிரிக்கமாட்டாங்க..(மனசால சிரிப்பாங்கன்னு சொல்லவந்தேன்)

ரவி said...

இந்த அனானி கண்டுபிடிச்சது தான் சரியான கண்டுபிடிப்பு...

சும்மாவா...தமிழனாச்சே...(ஆ / தி )

ரவி said...

கீழே பாருங்கள்...

புனிதர் பட்டம் என்று சொல்லிக்கொண்டு அலைவது சரி..அவர்கள் எல்லாம் தொழுநோயாளிகளுக்கு சேவைசெய்கிறார்களா என்ன ?

ரவி said...

லக்கிலூக் "நான் ஏன் சாதியம் பேசவேண்டி இருக்கிறது என்று பதிந்த மாதிரி" நான் ஏன் தனிமனிதர்களை சாடவேண்டியுள்ளது என்று பதிவு எழுதனும் போல..

நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!!

ஜயராமன் said...

ரவி அவர்களே,

தங்களின் கருத்துக்கள் என்னை வியக்கவைக்கின்றன.

///
குறிப்பிட்ட இந்த பின்னூட்டத்தை அனுமதித்து வழிமொழிந்ததன் மூலம் எந்த வகையான துவேஷத்தினை வலைப்பதிவில் வளர்க்கிறீர்...////

அதாவது எதிர்மறையான கருத்துக்களை நான் பின்னோட்டத்தில் அனுமதித்ததால் நான் வெறுப்பை வளர்க்கிறேன் என்கிறீர்கள். இது தங்களின் அடிப்படை பிராப்ளமாக எனக்கு படுகிறது.

என் பதிவில் மட்டுமல்ல, தமிழ்மணத்திலும் என் நம்பிக்கைகளுக்கு நேர் எதிர்மறையாக பதிவுகளும், பின்னோட்டங்களும் வருவதால் எனக்கு என் மீது வெறுப்பும் அவர்கள் எல்லோரும் ஒரு காம்பைன் பண்ணுவதாகவும் தாங்கள் ஒரு வெறுப்பை ஏன் தேவையில்லாமல் சுமக்கிறீர்கள்?

என் பதிவுகளை பாருங்கள். எத்தனை பேர் நான் பெருமையாக மதிக்கும் என் இந்து மத்த்தை தூற்றுகிறார்கள் என்று. அதை நான் அனுமதிக்கவில்லையா. அதை அவர்களை ஆரோக்கியமான முறையில் எதிர் கருத்தை வைக்கிற வரையில் அதை நான் வரவேற்கிறேன். அது அவர் கருத்து. அதை கூடுமான வரையில் நான் என் 'கருத்துகளின் ஆழத்தால்' அவர்களை இன்ப்பூலயன்ஸ் செய்கிறேன். திறந்த மனமுள்ளவர்கள் ஒருவேளை ஒப்பலாம். மாறாக இயலாது என்றால், அதில் எனக்கு ஒரு வருத்தமும் இல்லை.

தாங்கள் என் பதிவுகளில் தங்கள் கருத்துக்கு எதிர்மறையாக எதுவுமே வரக்கூடாது என்று எண்ணுவது மிகவும் தவறு.

நன்றி

ஜயராமன் said...

அனானியாக பின்னோட்டமிடுவது ஒரு கோழைத்தனமான செயல் என்பது என் தனிமையான தீர்வு.

நான் எத்துனையோ கான்ட்ரோவர்சியான விஷயங்களையும் என் சொந்த பெயரில், படத்துடன், பிரசுரிக்கிறேன். பல மிரட்டல்களும், ஆபாச வசைகளும் தினசரி வந்துகொண்டுதான் இருக்கின்றன. என்னை 'எச்சரிக்கும்' அமைப்புகளும் தினசரி முளைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. என் தனி ப்ளாக் உலக நண்பர்கள் கூட இது என் ஆபிஸ் வேலையில் பாதிப்பை ஏற்படுத்தும் (என் படமும் என் தொலைபேசியும் பலரிடம் உள்ளது) என்று அறிவுரை கூறியும் எனக்கு என்னவோ இதுதான் சரி என்று படுகிறது.

இப்படிப்பட்ட என்னை தாங்கள் அனானி ஆப்ஷனை இழிவுபடுத்தியும் என்னை நேரிடையாக கேள்விகேட்டும் ஒரே பின்னோட்டத்தில் இணைத்து சொல்ல வருவது என்ன?

காமாலை கண்ணனுக்கு கண்டதெல்லாம் பேய். என் வாழ்நாளில் நான் அனானியாக பின்னோட்டம் இட்டதில்லை. இடவும் மாட்டேன்.

தங்கள் வக்கிரமான எண்ணங்களுக்கு நான் எத்தனை விளக்கம் கொடுத்துக்கொண்டே இருக்க முடியும் என்று எனக்கு புரியவில்லை

நன்றி

ரவி said...

எதிர்மறை கருத்து வேறு....தூற்றுவது வேறு...

இப்போது போலி வலைப்பதிவு உருவாக்குவது தூற்றுவதற்க்கு...அதற்க்கு யாராவது ஆதரவளிக்கிறார்களா இங்கே ?

ஆனால் எதிர்மறை கருத்து ஆரோக்கியமான முறையில் தரமான விவாதங்களோடு வரவேண்டும்...

மியூஸ் செய்ததற்க்கும் போலி செய்வதற்க்கும் நூலிழை வித்தியாசம்...வார்த்தை பிரயோகத்தில்...

போலி நாமெல்லாம் அறிந்த டோண்டுவை எழுதுகிறார்...மியூஸ் அன்னை தெரசாவை எழுதுகிறார்...

நீங்கள் சொல்லுவீர்....அன்னை தெரசா என்ன உங்க வீட்டு சொத்தா ? யார் எழுதினா என்ன என்று...பலர் மதிக்கிறார்கள்...பல மதத்தை சேர்ந்தவர்கள் மதிக்கிறார்கள்...

ஒருமுறை அன்னை தெரசா ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு கேட்டு சென்றபோது, எச்சில் உமிழ்ந்தார் ஒருவர்..(நமது மியூஸ் போன்ற ஒருவர் அல்லது உங்களை போன்ற ஒருவர் என்று வைத்துக்கொள்ளுங்கள்) - அதற்க்கு அவர் சொன்ன பதில் - எச்சிலை எனக்கு தந்தீர் - உணவு என் பிள்ளைகளுக்கு தாரும் என்பது....

உண்மையிலேயே மியூஸ் யாரை சொல்லுகிறார் என்று தெரியாமல் அந்த பின்னூட்டத்தை அனுமதித்தேன் என்று நீர் கூறுவீரானால் அது நகைப்புக்கு உள்ளாகும்..

நன்றி..

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நாலாவது பின்னூட்டம் இது. இருந்தாலும் பரவாயில்லை. பிராமிணர் என்றாலே தவறானவர் என்ற கருத்து சிலருக்கு உண்டு அதுவும் அவர் மற்ற மதத்தை எதிர்த்து பதிவிட்டால் அவரை முத்திரை குத்தி விடுவது என்பது சரியல்ல. நானும் கூடத்தான் கிறிஸ்துத்தை எதிர்த்து சில பதிவுகளை எழுதி இருக்கிறேன். என்னைத் திட்டாத நீங்கள் இவ்வளவு தூரம் தன்னிலை விளக்கம் கொடுக்க வரும் ஜயராமனின் கருத்துக்களையும் அதே அளவில் நின்று கேட்பதுதான் சரி. பிராமிணர் என்பதால் அவரை முத்திரை குத்தி விட முயற்சி செய்யாமல் ஆரோக்கியமான முறையில் தொடர முயற்சி செய்யுங்கள்.

ரவி said...

மியூஸ் பதில் சொன்னால் தான் அடுத்த பின்னூட்டம் வெளியாகும்.

Anonymous said...

//திராவிட உணர்வு கொண்டவர்களில் கடைசி உயிர் இருக்கும் வரை சிறுபான்மையினர் எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்பட வேண்டாம்...//
no dravida uNarvu folks in paappaapatti, keerippatti then?

பொன்ஸ்~~Poorna said...

ரவி,
கண்ணை மூடிகிட்டு இருக்கிற மாதிரி நடிக்கிறவங்களை... அதே "என்னமோ போங்க".

வெற்றி said...

செந்தழல் ரவி,
இப் பிரச்சனை ஒரு misunderstanding பிரச்சனை போல் தான் எனக்குத் தெரிகிறது. முசே ஏதோ சொல்ல வர நீங்கள் தப்பாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள் என்றே நான் நினைக்கிறேன். புனிதர்கள் என்ற சொல்லை நானும், நீங்களும், முசேயும் வேறுபட்ட பொருளில் பாவிப்பதாலேயே இக் குழப்பம் என நம்புகிறேன். புனிதர்கள் என்றால் Saint எனும் பொருளில் நீங்கள் பார்க்கிறீர்கள். Saint எனும் சொல்லுக்கு இணையன தமிழ்ச் சொல் புனிதர்கள் தான் என்பது இதுவரை எனக்குத் தெரியாது. புனிதர்கள் எனும் சொல்லுக்கு நான் கருதும் பொருள், தூய்மையானவர்கள், மாசற்றவர்கள், நல்லவர்கள் என்பதாகும். முசே அவர்களும் அப்படித்தான் கருதியிருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.

ஆக முசே சொன்னது இதுதான்:

" சிலர் புனிதர் பட்டத்திற்காக கேமராக்களின் முன்பு தொழுநோயாளிகளுக்குச் செய்யும் சேவைகளின் மதிப்பும் உண்மையில் குறைவுதான் என்கிற வகையிலும் நான் இந்தக் கதையைப் புரிந்து கொண்டேன்."

இதில் இருந்து நான் புரிந்து கொண்டது இதுதான்:

'சிலர் நல்லவர்கள்/வள்ளல்கள் போல் தங்களை விளம்பரப்படுத்துவதற்காக கமிரா முன் தொழுநோயாளிகளுக்குச் சேவை அல்லது உதவி செய்வது போல் காட்டிக்கொள்வதில் உண்மையான சேவை மனப்பான்மை இல்லை'

முசே அவர்களின் பின்னூட்டத்தில் இருந்து நான் இதைத்தான் புரிந்து கொண்டது. அவர் சொல்ல வந்தது போலி நாடகம் ஆடும் அரசியல்வாதிகள் , திரையுலக நட்சத்திரங்கள் போன்றோரைத்தான் என்பது என் தாழ்மையான எண்ணம்.ஆக அவர் அன்னை திரேசாவை அப்படிச் சொல்லவில்லை என்றே நான் நினைக்கிறேன். அவருக்குப் பல வேலைப்பளுக்கள் காரணமாக அவர் உங்களின் பதிவுக்குப் பின்னூட்டம் இடாமல் இருந்திருக்கலாம். எனவே அவர் உங்களுக்குப் பதிலளிக்கவில்லை என்பதற்காக அவர் அன்னை திரேசாவைத்தான் அப்படிச் சொல்கிறார் எனும் முடிவிற்கு வருவது நல்லதல்ல என்றே நான் நினைக்கிறேன். இல்லையா ரவி?

Anonymous said...

ரவி muse பதில் தரப்போவதில்லை. அன்னை தெரசாவை மதமாற்றம் செய்பவர் என்று கூட எழுதி இருக்கிறார்கள். சேவை என்றால் என்ன என்றே தெரியாதவர்கள் இவர்கள். நீங்கள மேலே குறிப்பிட்ட விஷயம் அன்னை தெரசாவைத்தான் குறிக்கும் என்பது சிறு குழந்தைக்குக்கூடத் தெரியும். இப்படி திட்டமிட்டு விஷம் கக்குகிறவர்களிடம் நியாயம் கேட்பதில் எந்த லாபமும் இல்லை.

ஜெயராமனும் விஷம் கக்குகிறவர்களில் ஒருவர் தான் என்றாலும் மியூஸின் பின்னூட்டத்தை அனுமதித்தது தவறு என்று எனக்குத் தோன்றவில்லை.

Ganesh Prabu

Anonymous said...

இங்கு புனிதர் வேஷம் கட்டும் இந்த ஜெயராமன் ஒரு பதிவில் கழிசடைகள்
என்று யாரை திட்டினார் என்று கேளுங்கள்.ரவி அவர்களே.இவனுங்க டெக்னிக்கே இதுதான்.நல்லவனுங்க மாதிரி நடிப்பானுங்க.அத்தனையும் வினை.

கோவி.கண்ணன் said...

ரவி,
இது கொஞ்சம் ஓவரா இல்லை ?
நாளு வரி எழுதிவிட்டு 40+ பின்னூட்டம். ஓ இதுக்குத்தான் 'தீ' பிடிக்கும் பதிவா எழுதனுமா ?

ரவி said...

//////ரவி muse பதில் தரப்போவதில்லை. அன்னை தெரசாவை மதமாற்றம் செய்பவர் என்று கூட எழுதி இருக்கிறார்கள். சேவை என்றால் என்ன என்றே தெரியாதவர்கள் இவர்கள். நீங்கள மேலே குறிப்பிட்ட விஷயம் அன்னை தெரசாவைத்தான் குறிக்கும் என்பது சிறு குழந்தைக்குக்கூடத் தெரியும். இப்படி திட்டமிட்டு விஷம் கக்குகிறவர்களிடம் நியாயம் கேட்பதில் எந்த லாபமும் இல்லை. ////////

கனேஷ் பிரபு அவர்களே...புரிதலுக்கு நன்றி..

///ஜெயராமனும் விஷம் கக்குகிறவர்களில் ஒருவர் தான் என்றாலும் மியூஸின் பின்னூட்டத்தை அனுமதித்தது தவறு என்று எனக்குத் தோன்றவில்லை. ///

ஒரு பதிவில் இருக்கும் பின்னூட்டங்களுக்கும் பதிவெரே பொறுபுங்க.....சரி..இதே பதிவில் யாரவது போலி போய் - கன்னாபின்னான்னு திட்டி இருந்தா அதை ஏற்றுக்கொண்டு வெளியிடுவாரா கேளுங்க...

ரவி said...

கண்ணன்...பாதி பின்னூட்டம் என் பெயரில் இருக்குங்க :)) அப்படி பார்த்தால் மொத்தம் 20 தான்...:)...

இது என்னமோ பெரிய (பின்)ஊட்டச்சத்து மாவு மாதிரி சொல்லிட்டீங்க...

நான் ரொம்ப புஷ்டியா பீல் பன்றேனுங்க..:)

மனதின் ஓசை said...

நண்பரே,
உங்கள் பின்னுட்டம் அனுமதிக்கப் பட வில்லை என்பதும், அனானியாக அவரே பின்னூட்டம் போடுகிறார் என்பதும் தவறானதாக எனக்கு படுகிறது...அது உண்மையாக இருந்தால் கூட, உறுதியாக தெரியாமல் இப்படி கூறுவது தவறு..இது சம்பந்தமாக ஜயராமன் சொல்லும்கருத்துக்களை எற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

மற்றபடி ஜயராமன் சொல்லும் கருத்துக்களை 1% கூட என்னால் எற்றுக்கொள்ள முடியவில்லை.
//ம்யூஸ் அவர்கள் அன்னை தெரசாவை சொல்லவில்லை என்று மனதார நம்புகிறேன்// என்பதை நிச்சயமாக நம்ப முடிய வில்லை...அந்த வரிகளை (தொழு நொயாளிகளை..) படிக்கும் யாருக்கும் அன்னை தெரசா தான் ஞபகத்துக்கு வரும்.. விவாதங்கள் பல செய்யும் ஜெயராமனுக்கு ஞாபகத்துக்கு வராதது நம்பவே முடியாதது..
ம்யூஸ்-உம் தெரசாவை தான் குறிப்பிட்டு இருக்கிறார் என நினைக்கிறேன்.. இல்லாவிடின் ஒரு மறுப்பாவது தெரிவித்து இருக்கலாம்.. இனியாவது(ஒருவேளை இன்னும் இதை பார்த்து இருக்கவிட்டால்) விளக்கம் கொடுப்பாரா? பார்க்கலாம்.

ரவி said...

மனதின் ஓசை அவர்களே...உங்கள் பின்னூட்டத்தின் இரண்டாம் பத்திக்கு நன்றி...

ஆனால் முதல் பத்தி - இன்னும் கொஞ்சம் பகுப்பாய்வு செய்தால் விளங்கிவிடும்...

உங்களுக்கு தனிமடல் அனுப்புகிறேன்..

Anonymous said...

////அனானியாக பின்னோட்டமிடுவது ஒரு கோழைத்தனமான செயல் என்பது என் தனிமையான தீர்வு.////

அதை அனானியாக வந்து பிராமண ஆதரவு பின்னோட்டம் போடுகிறான்களே அந்தக் கழிசடைகளுக்கு முதல்ல சொல்லு. நீ எத்தனை பதிவுகள்ளே கோழை மாதிரி அனானியா வந்து பின்னூட்டம் போடுறேன்னு எங்களுக்கு தெரியும் ஜெயராமன்.

இப்படிக்கு
வீர அனானி
மாண்புமிகு போலி ரசிகர் மன்றம்,
ஷரோன் ஸ்டான் பீட்ஸா கார்னர்,
பெர்லின், ஜெர்மனி.

Anonymous said...

திராவிடர் யாராவது பார்ப்பனரைப் பற்றி எழுதினால் ஜல்லியடிப்பு, மட்டையடிப்பு, பின்நவீனத்துவம் என்றெல்லாம் புலம்புவார்கள்.

ஆனால் ம்யூஸ்,ஜயராமன், டோண்டு, நேசகுமார், முகமூடி, மாயவரத்தான், பிகேஎஸ், ச.திருமலை, வஜ்ரா சங்கர், கால்கரி சிவா, நாட்டாமை போன்ற பார்ப்பன வெறியர்கள் மட்டும் இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற மற்ற மதங்களைக் கேலி செய்யலாமா? என்னயா கூத்து இது? உனக்கு ஒரு நீதி ஊருக்கு ஒன்றா? உன்னைபோல வெத்து வேட்டு ஆசாமிகளுக்கு எதிராக முளைத்து இன்று ஆல்போல் வளர்ந்து நிற்கும் எங்கள் இயக்கத்தைக் கண்டுமா இன்னும் நீங்கள் எழுதுகிறீர்கள்?

உங்களுக்கு ரவி போல் பதில் சொன்னால் புத்தி வராது. எம் பாணியில் உரக்கச் சொன்னால்தான் புத்தி வரும்.

தெரசா கிறிஸ்துவர்களுக்கு மட்டுமா உதவி செய்தார்? ஜாதி மதம் இனம் பார்க்காமல் அல்லும் பகலும் அயராது பாடுபட்ட மனித தெய்வம் எவர். எங்கோ பிறந்து இந்தியாவில் தன் சேவைகளைச் செய்த மனித தெய்வம் அவர். உங்கள் சங்கராச்சாரி போல ஒரு குறிப்பிட்ட சாதிச் சங்கத்துக்கா தலைவராக இருந்தார்???

குமரன் எண்ணம், மனதின் ஓசை, வெற்றி போன்றவர்கள் அந்த பார்ப்பன தீவிரவாதிகளுக்கு ஆதரவாகப் பேசுவது கண்டிக்கத் தகுந்தது.

இவண்,
ஜி.ரமேஷ்குமார் எம்சிஏ,
மென்பொருள் பிரிவு
போலியார் தலைமைக் கழகம்,
23ஏ,சிம்ரன் ஆப்பக்கடை மேல்மாடி,
துபாய்.

அருள் குமார் said...

**//நான் படித்த புனித வளனார் (கடலூர்) பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை பத்தாயிரம்...//
ரவி நானும் அதே அதே பள்ளிதான் (மஞ்சக்குப்பம் பள்ளியா?)**


ரவி நானும் அதே அதே பள்ளிதான் :))

மதமாற்றம் என்ற ஒன்றை அங்கு உணர்ந்ததுகூட இல்லை.

ரவி said...

மியூஸ்....எங்கேப்பா போனீங்க நீங்க....உன்னை கானவில்லை அப்படீன்னு பதிவு போட்டாத்தான் வருவீங்களா...அன்பர் ஜெயராமன் காத்திருக்கார்..செந்தழல் ரவி காத்திருக்கேன்...குமரன் காத்திருக்கேன்...வெற்றி காத்திருக்கார்...எங்கப்பா நீ மியூசு...(வாப்பா மின்னானாலு....)

வந்து உன்மையை உரைப்பா...

Muse (# 01429798200730556938) said...

செந்தழல் ரவி,

தங்களின் யூகம் சரியே.

நான் கூறியது ஸ்ரீமதி தெரஸா பற்றியதே.

உடனடியாக பதிலளிக்கமுடியாததற்கு வேலைப்பளுவே காரணம்.

வேலைகளுக்கு இடையே கிடைக்கும் நேரத்தில் வலைப்பதிந்து வருகிறேன். என்னதான் வேலை செய்யுமிடத்தில் பெஸ்ட் பெர்ஃபார்மர் விருது கிடைத்துவந்தாலும், அலுவலகக் கணிணியில் வேலைகள் முடிந்த பின்னால் பதிவு செய்வது லேசான உறுத்தலாகவே இருக்கிறது. இதனால் வீட்டிற்கு இன்டெர்னெட் கனெக்ஷனுக்கு விண்ணப்பித்துள்ளேன். அது கிடைக்கும்வரை பதிவுலகத்தின்பக்கம் விலகியிருந்தேன். வேலைப் பளு வேறு.

இங்கே என்னைக் காணாமல் திரு. செந்தழல் ரவி வருந்திக்கொண்டிருக்கிறார் என்பதே எனக்கு மதிப்பிற்குரிய டோண்டு அவர்கள் தொலைபேசித்தான் தெரிய வந்தது. அவரின் மேலுமுள்ள மரியாதையின் காரணமாக உடனடியாகப் பதிலளிக்கிறேன்.

இதைப் பற்றி பேசுவதற்கு முன்னால், என்னையும் தங்களைப் போலவே அதிர்ச்சியடையச் செய்த விஷயங்கள் என்ன என்பதையும், அது பற்றிய ஆதரவான, எதிர்ப்பான, மற்றும் நடுநிலமையான விஷயங்கள் பற்றியும் தெரிந்துகொள்வது ஒரு சரியான ஆரம்பமாகவிருக்கும் என்று தோன்றுகிறது. கீழே மூன்று விதமான விஷயங்களும் உள்ளன:



1. http://bliss192.blogspot.com/2005/08/osho-jokes-on-mother-teresa.html

2. http://bliss192.blogspot.com/2005/08/osho-on-mother-teresa.html

3. http://bliss192.blogspot.com/2005/08/christopher-hitchens-on-mother.html

4. http://www.slate.com/id/2090083/

5. http://www.amazon.com/gp/product/185984054X/104-6065537-5723135?v=glance&n=283155

6. http://www.lipmagazine.org/articles/featpostel_56.htm

7. http://www.secularhumanism.org/index.php?section=library&page=hitchens_24_2

8. http://en.wikipedia.org/wiki/Mother_Teresa

9. http://www.saintmychal.com/hitchens.htm

9. http://www.h-net.org/~women/threads/rev-hitchens.html

10. http://www.population-security.org/swom-96-09.htm


11. http://www.intellectualconservative.com/article3484.html

12. http://www.catholicleague.org/research/hating_mother_teresa.htm

வெற்றி,

தங்களின் மெச்சூர்டான பதிவுகளுக்கு நன்றிகள்.

ஜயராமன் ஸார்,

தங்களின் மனத்தையும், செந்தழல் ரவியின் மனத்தையும் பாதிதுவிட்டது எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது. மன்னியுங்கள்.

Anonymous said...

There have been critiques about 'Mother' Therasa and her work.She never condemned dictators and was admired by them.She never criticised the multinationals like Hindustan Level and received huge amounts from them.She was more than happy in the company of dictators and powerful people.
Google and you will find more.
So even if Muse has written
with her in mind it is his
view.Let him defend it or
explain it.Why the hell you
make an issue out of a non-issue.
This luckylook will use his
experience and project all
brahmins as evils.If that is
OK with you , you have no business
to complain about Muse.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

ம்யூஸ் அவர்களே conspiracy theory என்று ஒன்று உண்டு அதன் படி நாம் எந்த விசயத்தையும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். அப்படி பேசி விடுவதால் யாருக்கு என்ன பயன்? நீங்கள் அன்னை தெரசா அவர்களைப் பற்றி சொல்லியதும் அது போல ஒரு conspiracy theory தான். என்ன சொல்வது? நீங்கள் கடவுளாக கும்பிடும் ராமர் கூட தன் மனைவி சீதையின் மேல் சந்தேகம் கொண்டவர்தானே ஆக ராமரை நாம் கேவலமாக பேசினால் அது சரியா இருக்குமா? நீங்கள் அன்னை தெரசாவைப் பற்றி சொன்னது மிகவும் தவறு என்பது என் கருத்து.

வஜ்ரா said...

குமரன் (எண்ணம்),

mother teresa is not holier than thou!! She had a personal agenda and not even the vatican would deny it.

சும்மா, கான்ஸ்பிரசி தியரி என்றெல்லாம் இதை ஒதுக்காமல், சிந்திக்கவேண்டும்.

மே. வ கம்யூனிஸ்ட் அரசு ராமகிருஷ்ணா மிஷண் செய்யும் சேவையை ஏக கட்டுபாடு போட்டு துளைத்து எடுத்ததில் அவர்கள் உயர் நீதிமன்றம் சென்று தனியாக minority அந்தஸ்து பெறவேண்டிய கட்டாயத்தில் ஆழ்த்தப்பட்டது தெரியுமா?

அது எப்படி உங்களால், ராமகிருஷ்ணா மிஷன்/சங்கராச்சார்யார் என்றால் தப்பு செய்யலாம் ஆனால் தெரசா தப்பு செய்திருக்கக்கூடாது என்ற எண்ணத்தோன்றுகிறது.?

(ஒரு உதாரணத்திற்காகத்தான் இங்கே சங்கராச்சார்யார் பற்றி விவாதிக்கிறேன்...)

The "conspiracy theory" may be,

"if it is a hindu, then he or she is guilty unless proven innocent. If it is a christian or mulsim, then he or she is innocent unless proven guilty."

Double standards or என் கண்ணோட்டத்தில் திம்மித்துவம் at its best.

ரவி said...

வஜ்ரா...கொஞ்சம் ஆன்லைனில் அந்த அம்மா போட்டோவை வரவைத்து பாருமைய்யா...

சப்போர்ட் செய்யலாம்..நல்ல தரமான கருத்தாக இருந்தால்..

சங்கராச்சாரியார் வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது...அதனால் அது பற்றி என்னால் சொல்லமுடியாது..நீதி மன்றம் சொல்லட்டும்...

அப்படி என்ன தப்பு கண்டுபிடித்துவிட்டீர் அன்னை தெரசாவிடம்..? ஷங்கர்...கொஞ்சம் உங்க கருத்தை சொன்னால் ( ஆன்லைன் லிங்க் எதுவுக் கொடுக்காமல்)
நன்றாக இருக்கும்...

Anonymous said...

நீங்கள் கடவுளாக கும்பிடும் ராமர் கூட தன் மனைவி சீதையின் மேல் சந்தேகம் கொண்டவர்தானே ஆக ராமரை நாம் கேவலமாக பேசினால் அது சரியா இருக்குமா? நீங்கள் அன்னை தெரசாவைப் பற்றி சொன்னது மிகவும் தவறு என்பது என் கருத்து.

Rama is an avatar.He is also subject to criticism.If Rama
can be criticised why not
that woman.Is she beyond
all criticisms.

ரவி said...

அனானி...

அவர் கூறும் கிரிட்டிஸிசத்தின் அளவு தெரியாமல் கூறுகிறீர்...அவர் செய்தது அவதூறு பிரச்சாரம்..

தொழுநோயாளிகளுக்கு சேவை செய்வதற்க்காக அவர் கேமரா முன்னால் நின்று போஸ் கொடுத்ததை மியூஸ் கிளம்பி போய் பார்த்தாரா ???

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

வஜ்ரா ஷங்கர் அவர்களே காஞ்சி காமகோடி பீடாதிபதியை குற்றம் செய்ததற்காக போலீஸ் கைது செய்துள்ளது. ஆகவே நீங்கள் எப்படி காஞ்சியையும் அன்னை தெரசா அவர்களையும் ஒன்றாக இணைத்துப் பேசலாம்.

ஆர் எஸ் எஸ் காந்தி அவர்களைக் கூடத்தான் கொடியவர் என்று பிரச்சாரம் செய்கிறது நீங்களும் அதனை நம்புவீர்கள் என்று எனக்கு தெரியும். ஆனால் இந்த பிரச்சாரங்களின் அடிப்படை அவர்களுடைய அஜந்தா ஹிந்து மதத்திற்கு ஆதரவாக இல்லாதவர்கள் அனைவரையும் நாங்கள் எதிர்ப்போம் என்பது தான். ஆக அவர்கள் பிரச்சாரம் செய்வதில் 10 சதவீதம் உண்மை என்றால் 90 சதவீதம் அவர்கள் அதில் இருந்து அவர்களுடைய அஜந்தாவுக்கேற்ப புரிந்து கொண்ட விசயமாக இருக்கும்.

உதாரணத்திற்கு காந்தி முஸ்லீம்களுக்கு எதிரான கொடுமைகளை நிறுத்துங்கள் என்று சொன்னதை, ஆர் எஸ் எஸ் எப்படி பிரச்சாரம் செய்யலாம்? காந்தி சொல்லிதான் முஸ்லீம்கள் ஹிந்துக்களை கொல்கிறார்கள் என்று கூட பிரச்சாரம் செய்யும். அது போலத்தான் இதுவும் எதாவது ஒரு சொல்லையோ செயலையோ அவரவர் அஜந்தாவிற்கு ஏற்ப பிரச்சாரம் செய்வதை எல்லாம் உண்மை எனக் கொள்ள முடியாது.

இது போன்ற சந்தர்பத்தில் நாம் ஒரு broader pictureதான் பார்க்க வேண்டும். மற்றவை எல்லாம் conspiracy theory தான். அதனை வைத்துக் கொண்டு நான் சேற்றை வாரி வீசுவேன் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?

ராம கிருஷ்ணா மிசனை தவறில்லை என்று எழுதுங்கள் அங்கு யாராவது அது தவறு என்று கூறினால் அதனையும் நான் எதிர்ப்பேன் அது ஒரு conspiracy theory என்று.

நான் அது போல எதனையும் எதிர்க்காமல் இல்லையே. இங்கு கூட ஜயராமனின் கருத்துக்களை நாம் கேட்க வேண்டும் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்ல முயன்றது நான்தான்.

ஆனால் உங்களைப் பொறுத்த வரை அனைவரும் ஹிந்து மதத்தை தவிற வேறு யார் எதனை எதிர்த்து எழுதினாலும் நாங்கள் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள்.

உடனே நீ ஏன் அந்த சமயத்தில் அதனை எதிர்க்கவில்லை இதனை ஏன் எதிர்க்கவில்லை என்று கேட்காதீர்கள் நான் படிக்கும் அனைத்தையுமே எனக்கு சரியில்லை என்று பட்டால் நான் எதிர்த்தோ ஆதரித்தோதான் வருகிறேன். சமீபத்தில் சந்தோஷ் அவர்களின் பதிவில் டோண்டுவை எதிர்ப்பது சரியல்ல என்றும் கூறியிருக்கிறேன்.

திம்மின்னு சொல்றீங்க. well what i say is i dont care a dime about what you say.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...
This comment has been removed by a blog administrator.
senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...
This comment has been removed by a blog administrator.
ரவி said...

வஜ்ரா..இதைவிட கொடுமையா அசிங்கப்படுத்த முடியுமா ? உங்கள் மேல் மரியாதை வைத்திருக்கும் செந்தழல் ரவியின் மனதை குத்தீட்டி கொண்டு கிழித்துவிட்டீரே...

மற்றவர்கள் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்க்காக தான் பிரசுரம் செய்துள்ளேன்..

மியூஸ் இதை ஆமோதிப்பார்..சில ஆன்லைன் லிங்குகளை கொடுப்பார்..என்ன அழுக்கு சிந்தனை..

ரவி said...

இனிமேல் இந்த பதிவில் நான் பின்னூட்டம் இடுவதாக இல்லை..ஆனால் பதிவும் பின்னூட்டங்களும் அப்படியே இருக்கும்...

ஜயராமன் said...

ரவி,

பின்னூட்டங்களுக்கு பதிவரே பொறுப்பு என்று சொல்லும் தாங்கள், இம்மாதிரி அருவருப்பான தரங்கெட்ட போலிரசிகர்மன்றம் என்ற ஒரு பெயரிலியின் பின்னூட்டத்தை அனுமதிக்கலாமா? அதை எடுத்து தங்கள் கொள்கைபிடிப்பை நிரூபியுங்கள்

நன்றி

ரவி said...

ஜெயராமன் அவர்களே...

அவனை நிறுத்தச்சொல்லு...நான் நிறுத்தரேன் என்கிறமாதிரி...

தாங்கள் இன்னும் மியூஸ் பின்னூட்டத்தை வைத்திருக்கிறீர்தானே...

( அது எங்கள் மனதை புன்படுத்தும் என்று தெரிந்தும்)

ஆகவே நீங்கள் நீக்கிவிட்டு வாருங்கள்...அப்போது நானும் பரிசீலனை செய்கிறேன்...

மேலும் இப்போதெல்லாம் நான் என் பழைய கொள்கைகளை தாங்கிக்கொண்டு இருக்கவில்லை...

ஜயராமன் said...

ரவி சார்,

தங்கள் விளக்கங்கள் தங்களின் குணத்தை புரிந்துகொள்ள மேன்மேலும் உதவுகின்றன. நன்றி.

என் பதிவில் பின்னூட்டம் வழங்கும் கருத்துக்களில் ஆபாசம் இருக்ககூடாது, தனிமனித காழ்ப்பு இருக்ககூடாது, சாதி, சமுதாய தரங்கெட்ட வசைகள் இருக்ககூடாது.

அவை உடனே நீக்கப்படும். அல்லது அனுமதிக்கப்படாது.

ஆனால், கருத்து சுதந்திரம் வேறு. ஒரு மனிதன் தன்னை யார் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு அவர் கருத்தை சொல்லும்போது அது எப்படிப்பட்ட கருத்தாய் இருந்தாலும் அதற்கு இடம் உண்டு.

என் பதிவுகளில் என் நம்பிக்கைக்கும், கருத்துக்கும் எதிர்மறை கருத்துக்களே பின்னூட்டம் இடும்போது அனுமதி நடந்திருக்கிறது. நடக்கும்.

ஆனால், நான் சொல்வது நான் குறிப்பிட்ட முதல் வகை. ஒரு IT சிஸ்டம் ஆளாக இருக்கும் உங்களுக்கு இது புரிந்திருக்கும்.

ஆனால், அதற்கு எதிர்வாதம் புரிகிறீர்கள்.

இதை தங்கள் குணம் என்றே எடுத்துக்கொள்கிறேன்.


///ஒரு பதிவில் இருக்கும் பின்னூட்டங்களுக்கும் பதிவெரே பொறுபுங்க...///

இதை நீங்கள் சொன்னது நேற்றுதான்.

இப்போது அது பழைய கொள்கையாகிப்போனது. இன்று தாங்கள் இவ்வாறு சொல்கிறீர்கள்.

///மேலும் இப்போதெல்லாம் நான் என் பழைய கொள்கைகளை தாங்கிக்கொண்டு இருக்கவில்லை... ///

தங்களிடம் நான் மேலும் சொல்வதற்கு வேறு ஒன்றும் இல்லை.

நன்றி

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

வஜ்ரா ஷங்கர் நீங்கள் அதை நான் வெளியிடவில்லை என்று சொன்னதை உண்மை என்று எடுத்துக் கொண்டு என்னுடைய பின்னூட்டங்களை அழித்து விட்டேன்.

ரவி said...

ஷ்ங்கரின் பின்னூட்டத்திற்க்கு பிறது வந்த / கிட்டத்தட்ட 10 பின்னூட்டங்களை அனுமதிக்கவில்லை ஜெயராமன்..

லக்கிலுக் said...
This comment has been removed by a blog administrator.
dondu(#11168674346665545885) said...

ரவி அவர்களே,

நீங்கள் வஜ்ரா ஷங்கர் அவர்களுக்கு அநீதி இழைத்து விட்டீர்கள். அதர் ஆப்ஷன் உபயோகித்து போலி டோண்டு என்ற இழிபிறவி அன்னை தெரசா கல்கத்தாவில் விபசார விடுதி நடத்துவதாகப் போட்டுள்ளது. அதை அப்படியே போட்டு ஷங்கருக்கு பதில் சொல்வதாகக் கூறி அசிங்கப் படுத்தியுள்ளீர்கள். போலிப் பதிவில் போட்டோ இல்லை. அதை கூட யோசிக்காமல் என்ன காரியம் செய்கிறீர்கள் நீங்கள்? வஜ்ரா அவ்கள் சொல்லியும் இன்னும் அப்பின்னூட்டத்தை எடுக்காமல் இருப்பது அக்கிரமம்.

இப்போது புரிகிறதா, அதர் ஆப்ஷனின் விபரீத உபயோகம்? சாதாரணமாக உபயோகிக்க வேண்டிய பாதுகாப்புகளை கூட உபயோகிக்காது நீங்கள் என்ன செய்கிறீர்கள்.

ஒன்று அதர் ஆப்ஷனை எடுத்து விடுங்கள், இல்லையேல் அவ்வாறு வரும் பின்னூட்டங்களை மட்டுறுத்தும் சமயம் ஜாக்கிரதையாக இருங்கள்.

இவ்வாறு தவறாக உபயோகம் ஆகக் கூடிய (இந்தப் பதிவிலும் ஆன) அதர் ஆப்ஷனை இந்த வலைப்பூ வைத்திருப்பதால், இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்டும் வகையில் அதன் நகல் என்னுடைய "முரட்டு வைத்தியம்-4" என்னும் பதிவிலும் பின்னூட்டமாக இடப்படுகிறது. பார்க்க: http://dondu.blogspot.com/2006/05/4.html

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் குறிப்பு: நேரம் கிடைத்தால் நான் சுட்டிய என் பதிவிற்கு போய் படிக்கவும்.

Anonymous said...

I am not luckylook

Anonymous said...

nallaa comedy panreengappaa. thaanga mudiyalai unga thondaravu.

Muse (# 01429798200730556938) said...

குமரன் எண்ணம்,

>>>ம்யூஸ் அவர்களே conspiracy theory என்று ஒன்று உண்டு <<<

ஒரு விஷயத்தை உண்மை என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ள விரும்பாவிட்டால் இது போன்ற மட்டை அடிகளைப் பயன்படுத்தலாம். சில விஷயங்களில் உண்மையை நம்மால் அறியவே முடியாது. அதனால் அது பொய்யாகிவிடுவதில்லை. உண்மையுமாகிவிடுவதில்லை. ஆனால் குற்றச்சாட்டு மட்டுமே இருக்கும். இங்கே நாம் பேசுகின்ற விஷயம் இந்த வகையைச் சார்ந்ததில்லை.

>>>> நீங்கள் கடவுளாக கும்பிடும் ராமர் கூட தன் மனைவி சீதையின் மேல் சந்தேகம் கொண்டவர்தானே <<<<

அந்த அக்னிப் பரீக்ஷையிலிருந்து அவள் தன்னை, தன் பரிசுத்தத்தை நிறுவியது அவளுக்குப் பெருமையையே அளித்தது. அவளின் பரிசுத்தத்தை உலகிற்கு நிறுவ ராமர் எடுத்த நடவடிக்கை அவளின் பரிசுத்தம் மேல் அவருக்கிருந்த நம்பிக்கையையும் காட்டுகிறது.

>>>> ஆக ராமரை நாம் கேவலமாக பேசினால் அது சரியா இருக்குமா? <<<<

உண்மையில் ஹிந்து மதங்களில் ராமருக்கு சீதையளவு மரியாதையில்லை என்பதுதான் என் கருத்து. ராமருக்கு மரியாதையே அவரை ஸீதை காதலிப்பதால்தான். ஹிந்து மதங்களில் ராமர் பூரண அவதாரமில்லை.

ஆயிரக்கணக்காண மனைவியரோடு வாழ்ந்தும் ஒரு மனைவியையும் அக்னிப் பரீக்ஷை செய்யச் சொல்லாத க்ருஷ்ணரே பூரண அவதாரம்.

>>> மியூஸ் இதை ஆமோதிப்பார்..சில ஆன்லைன் லிங்குகளை கொடுப்பார்..என்ன அழுக்கு சிந்தனை<<<

முதலில் புரியவில்லை. வஜ்ராவின் பதிவைப் படித்து விளங்கினேன்.

கறுப்பு வெள்ளை என்கிற எதிரெதிர் கருத்துக்களைத்தாண்டி ஆபிரகாமிய மதங்கள் சிந்திப்பதில்லை. "என்னைச் சாராதவர்களெல்லாம் என் எதிரியைச் சேர்ந்தவர்கள்" என்கிற சிந்தனை.

குமாரி தெரஸா அவர்கள் செய்த காரியங்கள் புனிதர் பட்டத்திற்காகச் செய்யப்பட்டது, புகழுக்காகச் செய்ப்பட்டது (இவையெல்லாம் மதத்தைப் பரப்புவதற்காகச் செய்யப்பட்டது) என்றால் உடனேயே அவரையும், அவரோடு சேர்ந்தவர்களையும் இந்த அளவு கீழ்த்தரமாக யோஸித்துவிடவேண்டுமா? அவஸ்யமில்லை. ஒருவரிடமிருக்கும் பலகுணங்களையும் ஆராய்வது அவரைப் பற்றியும், நாம் வாழும் சமுதாயம் பற்றியும், நம்மைப் பற்றியும் நாமே புரிந்து கொள்ள உதவும்.

அதே சமயத்தில் அவர் செய்துவந்த நல்ல காரியங்களால் ஈர்க்கப்பட்டு அவருடைய இயக்கத்திலேயே சேர்ந்து இறைவனின் பெயரால் தொண்டு செய்பவர்களும் ஏராளம் பேர் உள்ளனர். மனிதர்களின் அங்கீகாரம் இவர்களுக்கு இல்லாவிட்டாலும், தேவனின் அங்கீகாரம் இவர்களுக்கு உண்டு. அதுவுமன்றி, காரணம் எதுவாகவேண்டுமானாலும் இருக்கட்டும் என்று பார்த்தால், குமாரி தெரேஸா முன் வராவிட்டால் அந்தத் தொழு நோயாளிகளின் கதி என்ன? பிச்சைக்காரர்களாக அழுகி சாக வேண்டியதுதான். கிருத்துவர்களாக மாறுவதன் மூலம் ஒருவனுக்கு ஒரு வேளை சோறு கிடைக்குமானால், அவன் ஹிந்து மதங்களில் இருக்க வேண்டிய அவஸ்யமில்லை.

அதே சமயத்தில் கிருத்துவ மதம் பரவ ஹிந்துக்கள் பிச்சைக்காரர்களாகவிருக்க வேண்டும் என்று மதம் மாற்றிகள் நினைத்தால், இன்ஷாஹ் அல்லாஹ், மதம் மாற்றிகளின் மதங்களும் வேண்டாம்.

உண்மையில் சாப்பாட்டிற்காகவும், பணத்திற்காகவும் மதம் மாறுபவர்களுக்கான மரியாதை மதம் மாற்றிகளிடமிருந்து மதம் மாறும்வரைதான் கிடைக்கிறது. அதன் பின்னால் மீண்டும் ததிங்கணத்தோம்தான். மதம் சோறு போடாது. ஆன்மீகம் மட்டுமே இக, மேலுலகங்களில் மரியாதை தரும். ஆனால் அது வேறு பிரச்சினை.

வருத்தம் தருவது என்னவென்றால், நம்முடைய மத வெறி, நம்மை விமர்ஸிப்பவர்கள் கெட்டவர்கள் என்று நிறுவ நம்முடைய பெண்களை இழிவு செய்ய தயங்காமலிருக்கும் போக்குத்தான். உதாரணமாக, ஒரிஸ்ஸாவில் கிருத்துவ கன்யாஸ்த்ரீயை மானபங்கம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டபோது மனம் பதைத்தது. மீடியாவும், அவர்களுக்கு சோறு போடும் மதமாற்றி, திம்மித்துவ அமைப்புகளும் ஹிந்து மத வெறியர்களைக் கண்டித்தன. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெரும்பான்மையோர் கிருத்துவர்கள் என்பது தெரியவந்தபோது அப்படியே வேறு ப்ரச்சினையைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இவர்களின் மத வெறுப்பிற்கு ஒரு அப்பாவிப் பெண், ஒரு நல்ல கன்யாஸ்த்ரீ அவமானப்பட்டதுதான் மிச்சம். அந்தப் பெண்மனிக்கு இருக்கும் உணர்வுகளின் மதிப்பென்ன? உபயோகப்படுத்தியபின் தூக்கி எறியப்பட்ட கரும்புச் சக்கையின் மதிப்புத்தான்.

எல்லோரிடமும் பல விஷயங்கள், பல பழக்கங்கள் உண்டு. அது நம்முடைய கருத்தியல்களினால் நன்மையாகவோ, தீமையாகவோ தெரியலாம். அவற்றையும், நமது கருத்தியல்களையும் ஆராய்வதுதான் உண்மையை விளங்கவைக்கும்.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....