Friday, June 30, 2006

கைப்புள்ளை காலிங் பெப்சி உமா

சங்கத்து ஆட்கள் எல்லாம் கோவிச்சுக்காதீங்க...இன்னைக்கு கைப்பு என்கிட்ட வசமா மாட்டிக்கிட்டார்....

ஓசியில் டீயும் சிகரெட்டும் கிடைக்குமான்னு பார்க்க டீக்கடைப்பக்கம் ஒதுங்குனாரு நம்ம கைப்பு....கடையில இருக்க கடனுக்கு ஒரு பொறை கூட சும்மா தரமாட்டான்னு தெரியும்...ஆனா சும்மா ஒரு லந்துக்காக நாலு அரை டவுசர் பசங்களோட - பக்கத்தூரு திருவிழாவுல் சுட்ட கட்டைசெருப்பு தரையில் தேஞ்சு தீப்பொறி கிளம்ப வந்துட்டாரு...

அங்க நம்ம தலை கைப்பு டென்சன் ஆகுறமாதிரி ஒரு சம்பவம் நடந்த்து...இந்த சம்பவம் கைப்பு மனதுல ஒரு வெறியை ஏற்ப்படுத்திருச்சி...சங்கத்து பயலுக எல்லாம் அவமான பார்வை பாக்குறானுங்க தலையைப்பார்த்து...இந்த சம்பவத்தால தலை கைப்புவை யாரும் மதிக்காத நிலை உருவாகுற சூழ்நிலை...

சம்பவம் - சம்பவம் அப்படீங்கறேனே - அது என்ன சம்பவம் அப்படீங்கு கேக்குறீங்களா...அதாவது என்னன்னா, கட்டதுரையோட ஒரு ஆளு டீ கடையில இப்படி பீத்திக்கிட்டான்...எப்படின்னு கேக்குறீங்களா...அட சொல்லுறேங்க...அவன் பெப்சி உமாவோட போனுல பேசி அது டிவீயிலயும் வந்திடுத்து....

இதுல பிரச்சினை என்னான்னா தலை கைப்பு பலநாளா பெப்சி உமாவோட போனுல பேச டிரை பன்னிக்கிட்டுதான் இருக்காரு...ஆனா லைன் கிடைக்கல...அவனுக்கு லைன் கிடைச்சது - அதுவும் அவன் டிவீயில பாட்டு கேட்டு - அதை ஒலிபரப்புனது எல்லாம் சேந்து சங்கத்து சிங்கங்களை உசுப்பிருச்சி....

தலையை அப்ப அப்ப செத்து செத்து விளையாட கூப்பிடும் சின்ன சிங்கம், ஒரு ஐடியாவை சொல்லுச்சி...அது என்னன்னா யோக்கியனுக்கு இருட்டுல என்ன வேலை அப்படீங்குற தத்துவத்தை மொழிந்த ஆளு அதே ஊர்ல தான் இருக்கான்..அவனை சங்கத்துல சேத்துட்டா - அவன் புத்திசாலித்தனத்தால எப்படியாவது பெப்சி உமாகூட பேசிடுறது அப்படின்னுதான்...

சின்ன சிங்கம் - பேசி கரெக்ட் பன்னி கூட்டாந்து கைப்புவோட ஒரு மீட்டிங் ஏற்ப்பாடு பன்னபிறகுதான் தெரியுது...தலை கைப்பு இவ்வளவு நாள் நம்பருக்கு முன்னால எக்ஸ்ட்ரா நம்பர் போடாம் டிரை பன்னிக்கிட்டு இருக்கறது...

அட இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே அப்படின்னு நொந்துபோயி, தலை முதல் முறையா எஸ்.டி.டி போட்டு பெப்பிசி உம்மாவுக்கு போன் போடுது....

ஹல்லோ....ஹல்லோ...ஹல்ல்ல்லோ....

யோவ் யாருய்யா அது லோ லோ னு கத்துறது....

ஆகா...லைன் கிடைச்சிடுச்சிய்யா...கிடைச்சிடுச்சிய்யா...

(சங்கத்து சிங்கங்கள் உற்சாக துள்ளல் போடுறாங்க)

அலோ...உங்க வாய்ஸ் ரொம்ப ஸ்வீட்ட இருக்குங்க...

மறுமுனையில் - உமா

அப்படியா ரொம்ப தேங்ஸ்..இன்னும் நான் பேசவே ஆரம்பிக்கல..அதுக்குள்ள வாய்ஸ் சுவீட்டா இருக்குன்னு சொல்றீங்க...

கைப்பு : அப்படி ஆரம்பிச்சாத்தான் பேசுவீங்கன்னு சங்கத்து சிங்கம் சொல்லுச்சி மேடம்..ஹி ஹி

உமா : உங்க டி.வி. வால்யூம் கம்மிபன்னிக்கோங்க..

கைப்பு : நான் பேசுறது எஸ்.டி.டி பூத்துல இருந்து - எக்ஸ்ட்ரா நம்பர் போட்டு மேடம்..

உமா : ஓ அப்படியா எனக்கு சொல்லி சொல்லி பழக்கமாயிடுச்சி...இனிமே நான் பெப்சி உமா இல்லை..ஆச்சி உமா...சரி சொல்லுங்க....உங்க பேர் என்ன - எந்த ஊர் என்ன வேலை பாக்குறீங்க...

கைப்பு : ஓ..நீங்க பாட்டியாயிட்டீங்கன்னு சொல்லவேயில்லையே..நான் ஆட்டையாம்பட்டியில இருந்து கைப்புள்ள பேசுறேன் மேடம்..உங்களுக்கு 12 வருஷமா டிரை பன்னுறேன்...எக்ஸ்ட்ரா நம்பர் போடாத்தால பேசமுடியாம போச்சு...நான் சங்கத்தலைவரா இருக்கேன் மேடம்..

உமா: நக்கலா...(வைக்கிறேன் ஆப்பு) சங்கம் எல்லாம் வச்சிருக்கீங்களா...சரி இன்னைக்கு சிறப்பு விருந்தினரா ஒரு நடிகர் வந்திருக்கார்...

அவர்தான் நடிகர் பார்த்தீபன்...அவர்கிட்ட பேசுங்க....

டீவிக்குள்ளகூடியும் வர ஆரம்பிச்சுட்டானா...கைப்பு பட்டென போனை துண்டித்து அப்பீட் ஆகிறார்...

8 comments:

Anonymous said...

:)

கோவி.கண்ணன் said...

//அவர்தான் நடிகர் பார்த்தீபன்...அவர்கிட்ட பேசுங்க....//
எங்கிட்டு போனாலும் ஆத்தி... இந்த எளவெடுத்த பையன் உடமாட்டான் போல .....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

:-))))

மனதின் ஓசை said...

அவர்தான் நடிகர் பார்த்தீபன்...அவர்கிட்ட பேசுங்க....

:-)

கைப்புள்ள said...

சிறப்பு விருந்தினர் யாருன்னு கேக்கலாம்னு நெனக்கும் போது இது வருது...
//அவர்தான் நடிகர் பார்த்தீபன்...அவர்கிட்ட பேசுங்க....//
எல்லாம் ஒரு குரூப்பாத் தான்யா கெளம்பிருக்காய்ங்க

ரவி said...

கைப்பு டெல்லிங் : உக்காந்து யோசிப்பாங்களோ ???

Unknown said...

இப்போத் தெரியுது அந்தக் குச்சி மிட்டாய் வாங்கிக் கொடுத்து சிஷ்யன் ஆன புண்ணியவான் யார்ன்னு? ம்ம் கலக்குங்க ரவி...

ரவி said...

கலக்குறியே அப்பு

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....