Tuesday, July 04, 2006

இது எப்பிடி இருக்கு....

தமிழ்மண தளத்தில் வெற்றி ஆள்மாறாட்ட பின்னூட்டம் குறித்து எழுதினார்..அதற்க்கு என் பின்னூட்டம் இது...வெற்றி புரிந்துணர்வோடு ஒரு பின்னூட்டம் கூட வைத்து இருக்கிறார்..

ஆள்மாறாட்டப்பின்னூட்டம் சரி தலைவரே...சிலர் சொந்த பெயரிலேயே ரொம்ம்ப கேவலமாக பின்னூட்டமிடுகிறார்களே என்ன செய்யப்போறீங்க அதற்க்கு...

http://vaithikasri.blogspot.com/2006/06/blog-post.html

இதில் அன்பர் மியூஸ் அன்னை தெரசாவின் மீது தான் சேற்றை வாரி இறைக்கிறார் என்று பச்சை குழந்தைக்கு கூட தெரியும்...அதை நீக்கும்படி கேட்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்...

மேலும் சில கேள்விகள்..

நீங்கள் இந்த முடிவு எடுக்கும்முன் என்னை ஏன் கலந்து ஆலோசிக்கவில்லை...ஒரு மடல் அனுப்பி இருக்கலாமே...

அந்த போலி பின்னூட்டத்தை வஜ்ரா போடவில்லை என்று நீங்கள் நம்புவதற்க்கு அழுத்தமான காரணம் உள்ளதா ? தயவுசெய்து தெரியப்படுத்தவும்..

அதேபோல் அதை அவர்தான் போட்டார் என்று நான் ஏன் நம்பக்கூடாது...
நீதிபதி என்பவர் இரு தரப்பு வாதங்களையும் கேட்கவேண்டும்..அப்போதுதான் உண்மை விளங்கும்...

******************************************************************************
அலுவலகத்துக்கு வந்திட்டபின் தமிழ்மணத்தை ஓப்பன் செய்யவில்லை என்றால் கை-எல்லாம் நடுங்குது...உடம்பு உதறுது...அடிக்கடி ரெப்ரஷ் செய்து பார்க்கவில்லை என்றால் கனகனன்னு கொதிக்குது...தலை சுத்துது.....முட்டிக்கு முட்டி வலிக்குது..அதோட முதுகும் வலிக்குது...இந்தமாதிரி எபெக்ட் ஆன பிறகு நம்மை தூக்கினா எப்படி..அதான்...ஒரு பதிவு போட்டு அது வருதான்னு பார்க்க ஒரு மொக்கை..
*******************************************************************************

18 comments:

ரவி said...

சோதனைமேல் சோதனை..போதுமடா சாமி..

துளசி கோபால் said...

ரவி,

இப்ப மனசும் உடம்பும் சமாதானமாச்சா? :-)

ரவி said...

என் டெம்ப்பிளேட் கொன்சம் கேவலமாக தெரிகிறதே...

நான் எதையும் சீரியசாக எடுத்துக்கொள்வது கிடையாதுங்க...

அது நிறைய பேருக்கு தெரியும்...இப்போ நீங்களும் தெரிஞ்சுக்கிட்டீங்களா :)

:) :)

வெற்றி said...

செந்தழல் ரவி,
உங்களின் மறுமொழி நிலவரச் சேவை மீண்டும் இயங்குவது கண்டு மிக்க மகிழ்ச்சி. நான் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் காசி அண்ணர் மற்றும் செல்வராஜ் அண்ணர் போன்றோர் அவசரப்பட்டு உங்களின் மறுமொழி நிலவரச் சேவையை நீக்கியது என் நெஞ்சில் ஈட்டி பாய்ச்சியது போலிருந்தது. எதிர் காலத்தில் அவர்கள் இப்படி நடந்து கொள்ள மாட்டர்கள் என நினைக்கிறேன்.

உங்களின் பதிவுகளைப் படிக்க ஆவலாக உள்ளேன். தொடருங்கள் உங்களின் எழுத்துப்பணியை.

கோவி.கண்ணன் said...

//நீதிபதி என்பவர் இரு தரப்பு வாதங்களையும் கேட்கவேண்டும்..அப்போதுதான் உண்மை விளங்கும்...
//
போற போக்கப் பார்த்த கேஸ் சுப்ரீம் கோர்ட்வரைக்கும் போகும்னு நான் நெனச்சது சரிதான் போலிருக்கு :)

அதற்குள் எத்தனை வாய்தா (பின்னூட்டம்) போட்டு மாத்தி மாத்தி தாக்கிக்க போறிங்களோ. நெனச்சாலே பக் பக்குன்னு இருக்கு :)

லக்கிலுக் said...

ரவி உண்மையிலேயே தமிழ் மணத்தில் இருந்து உங்கள் மறுமொழி நிலவரச் சேவையைத் தூக்கி விட்டார்களா?

ஏன்? எதற்காக என்று ஒரு பதிவு போடுங்கள்.... தவறு யார் பக்கம் என்று தெரிந்து கொள்ளலாம்....

எனக்குத் தெரிந்து உங்கள் பக்கம் தவறு இருக்க வாய்ப்பில்லை.... அன்னை தெரசா பற்றி வஜ்ரா சங்கர் பெயரில் யாரோ இட்ட பின்னூட்டத்தை வெளியிட்டதற்காக உங்களைத் தூக்கினார்கள் என்றால் தமிழ் மணத்துக்கு என் கண்டனங்கள்!!!!

பின்னூட்டங்களுக்கும் வலைப்பதிவாளரே பொறுப்பு என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை....

VSK said...

முன்னொரு முறை வஜ்ராஷங்கர் விஷயத்தில் அவசரப்பட்டதைப் போலவே மீண்டும் அவசரப் படுகிறீர்கள், லக்கி லுக் அவர்களே!

முடிந்தால் இருவரும் என் நிகழ் பதிவைப் படிக்கவும்!
வேண்டுகோள்!

நன்றி!

Anonymous said...

Remedy is so simple. Disable the other and the anonymous options. All comments will come carrying blogger numbers only. What Dondu Raghavan says is quite right.

Regards,
Friend

ஜயராமன் said...

ரவி அவர்களே,

தங்கள் தனி மடல் கிடைத்தது.

ம்யூஸ் அவர்களின் தெரீசா மீதான அபிப்ராயத்தில் எனக்கு கொஞ்சமும் ஒப்புதல் இல்லை என்று ஏற்கனவே தங்களிடம் சொன்னேன்.

அந்த கருத்து எனக்கு ஆட்சேபகரமானது. அதை நான் நீக்குவதால் என் கருத்துக்கு எதிர்கருத்தை நான் அனுமதிக்காதவனாகி விடுவேன். அது இருந்துவிட்டு போகட்டுமே! அந்த கருத்தால்தான் நான் பலரின் தெரீசா மீதான கருத்துக்களை அறிந்துகொள்ள முடிந்தது. என் கருத்துக்கு புறம்பான பல கருத்துக்கள் என் எல்லா பதிவுக்கும் உண்டு. அவற்றை நான் தவறாமல் பிரசுரித்தேன். தாங்கள் குறிப்பிட்ட என் பதிவிலும், நான் மதிக்கும் என் இந்து மதத்தை கேலி செய்து பின்னூட்டங்கள் இருப்பதை தாங்கள் கவனித்து இருப்பீர்கள். ம்யூஸின் பின்னூட்டம் ஒரு தனிமனிதரை விமர்சிப்பதுதான். அவ்வாறு விமர்சிப்பது வேறு, தனிமனித தாக்குதல் வேறு என்பது என் தாழ்மையான எண்ணம். தாங்கள் சொல்லவில்லையா நான் விழம் க்க்குகிறேன் என்று. ம்யூஸின் பின்னோட்டத்தை தாங்கள் என் என்டார்ஸ்மெண்டாக தயை செய்து எடுத்துக்கொள்ளக்கூடாது என்று முன்னமே கேட்டிருந்தேன். மீண்டும் வலியுறுத்துகிறேன்.

அவ்வளவே!

நன்றி

ரவி said...

//ரவி உண்மையிலேயே தமிழ் மணத்தில் இருந்து உங்கள் மறுமொழி நிலவரச் சேவையைத் தூக்கி விட்டார்களா?///

ஆம்.

///ஏன்? எதற்காக என்று ஒரு பதிவு போடுங்கள்.... தவறு யார் பக்கம் என்று தெரிந்து கொள்ளலாம்....///

லூஸ்ல விடுங்க...பின்னூட்டத்தை அனுமதித்தது தவறு என்று கூறுகிறார்கள்...ஆனால் சில - மிக கேவலமான பின்னூட்டங்களும் வந்தன..எனக்கு மனசாட்சியிருப்பதால் அவற்றை அனுமதிக்கவில்லை...

///எனக்குத் தெரிந்து உங்கள் பக்கம் தவறு இருக்க வாய்ப்பில்லை.... அன்னை தெரசா பற்றி வஜ்ரா சங்கர் பெயரில் யாரோ இட்ட பின்னூட்டத்தை வெளியிட்டதற்காக உங்களைத் தூக்கினார்கள் என்றால் தமிழ் மணத்துக்கு என் கண்டனங்கள்!!!!////

என்னிடம் ஒரு மடல் அனுப்பி விளக்கம் கேட்டிருக்கலாம்..அதுதான் என் பாயின்ட்...

////பின்னூட்டங்களுக்கும் வலைப்பதிவாளரே பொறுப்பு என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை....///

ஆனால் நான் அதை ஏற்றுக்கொள்கிறேன்....ஆபாசம் இல்லாத பின்னூட்டம் அனுமதிக்கலாம்..ஆனால் வக்கிர எண்ணம் உடைய - கசடை மனதில் வைத்து போட்ட பின்னூட்டத்தினை - அந்த கசடை தானும் கொண்டு - எனக்கு ஒன்னும் தெரியாதுப்பா... - எவனோ எழுதியது என்று அனுமதித்து இருக்கும் ஜெயராமன் போன்றவர்களின் செயலை - சாட்டை கொண்டு அடிக்கத்தான் அந்த பின்னூட்டம் வெளியிட்டேன்.

கோவி.கண்ணன் said...

ரவி... எனக்கு விசயமே தெரியாது ... நீங்கள் விடுப்பில் இருக்கிறீர்கள் என்று நினைத்துதான் இருந்தேன். எது எப்படியோ திரும்ப வந்ததற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது

ரவி said...

///அந்த கருத்து எனக்கு ஆட்சேபகரமானது. அதை நான் நீக்குவதால் என் கருத்துக்கு எதிர்கருத்தை நான் அனுமதிக்காதவனாகி விடுவேன்.///

ஜே. நீங்கள் கூறும் எதிர்கருத்து என்பது வேறு...இது எதிரியின் கருத்து(எனக்கு மட்டும் இல்லைங்க-2.7 கோடி பேருக்கு) ...இரண்டுக்கும் நூலிழை வித்தியாசம் அவ்வளவே...

எதிர்கருத்தை கண்டிப்பாக அனுமதிக்கலாம்..அது உங்கள் மனதையோ ( ரூல் 1) - அல்லது அடுத்தவர் மனதையோ (ரூல் 2) புண்படுத்தாதவரை...

(இங்கு போலி விஷ்யம் வேறு - அது போலியுடைய கருத்தாகவே இருந்தாலும் மேற்ச்சொன்ன இரு விதிகளையும் பாஸ் ஆகி இருந்தால் அனுமதிக்கலாம்)

அதர் - அனானி ஆப்ஷன் பற்றி - பிலாக் கணக்கு இல்லாத என் நன்பர்கள் எப்படி தன் கருத்துக்களை எழுதுவார்கள் பிறகு...

வெற்றி said...

செந்தழல் ரவி,
உங்களின் மறுமொழி நிலவரச் சேவை வேலை செய்யவில்லை. செல்வராஜ் அண்ணர் மற்றும் காசி அண்ணர் ஆகியோருக்கு நாளை தனிமடல் அனுப்புகிறேன். விரைவில் உங்களின் மறுமொழி நிலவரச் சேவையை மீண்டும் இயங்க வைக்க தமிழ்மண நிர்வாகிகள் தகுந்த நடவடிக்கைகளை எடுப்பார்கள் என எதிர்பார்க்கிறேன்.

பாலசந்தர் கணேசன். said...

பிரச்சினை சுமுகமாக முடிந்தால் சரி. வலைபதிவுகள், பின்னூட்டங்கள் ஆக்க பூர்வமாகவே அமைய வேண்டும். முட்டுவதும், மோதுவதும், தாக்குவதும்,வாரி விடுவதுமே எழுத்துக்களின் பரிமாணமாகி விடாது. அன்பும், கனிவும் கொஞ்சம் பதிவர்களிடம் பரவ வேண்டும்

லக்கிலுக் said...

பேசாமல் தமிழ்மண நிர்வாகி அதர்-அனானி ஆப்ஷன் வைத்துள்ளவர்களுக்கு மறுமொழிச் சேவை இல்லை என்று அறிவித்து விடலாம்.....

Anonymous said...

luckylook,சூப்பரா அடிச்சீங்க.

Anonymous said...

தமிழ்மண நிர்வாகிகல் ஒருதலைப்பட்சமாக முடிவு எடுத்துள்ளதாகவே எனக்கு படுகிறது.ஆனால் வழக்கம்போல இதையும் காமெடியாக பதிவுசெய்துள்ளீரே செந்தழல் ரவி !!

லக்கிலுக் said...

தமிழ்மண நிர்வாகிகள் ஏன் இந்த ஒருதலைபட்சமான முடிவை எடுத்தார்கள் தெரியவில்லை...

ரவி தமிழ்மணம் ஆதரவில்லாமலேயே உங்களுக்கு இவ்வளவு பின்னூட்டம் வந்திருப்பது பெரிய சாதனை!!!

உங்களுக்கு ஆதரவு பெருகிக்கொண்டே போகிறது.... கட்சி ஆரம்பிச்சுடலாமே? எனக்கு கொ.ப.செ. பதவி மட்டும் கொடுங்க.... அதை வெச்சே முதல்வர் ஆயிடுவேன்....

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....