Tuesday, July 11, 2006

மரணம் - சிறுகதை

மரணம்......

எல்லோருக்கும் ஒரு நாள் வருவதுதான்...எல்லாரும் வாழ்க்கையில் சந்திப்பது தான்...மறதி என்ற ஒன்று இல்லை என்றால் மரணம் எப்போதும் முள்ளாக உறுத்திக்கொண்டிருக்குமன்றோ...நானும் சந்தித்தேன்...அப்பாவின் ஒன்றுவிட்ட சித்தப்பாவின் மரணம் இதயத்தை மாபெரும் துயரில் வீழ்த்தி
யது..

கல்லூரியில் படித்த காலத்தில் விடுமுறைக்கு வரும்போது - காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றிய சித்தப்பாவுடன் - அவரது அலுவலக
த்துக்கு செல்வது வழக்கம்..கேஸ் கட்டு எழுதும் பணியில் என்னையும் ஈடுபடுத்துவார்...

அடிக்கடி கேஸ் கட்டு எழுதி எழுதி எனக்கே சட்டத்தில் உள்ள செக்ஷன்கள் எல்லாம் அத்துபடியானது...அடிக்கடி பாக்கெட் மணி வேறு கொடுப்பார்..

அப்பாவிடம் வாங்கிய பாக்கெட் மணியை விட அவரிடம் வாங்கியது அதிகம்...

அவரிடம் பொது இடங்களுக்கு போகும்போது அங்கு உள்ள பிகர்களை சின்ன பைய்யன் மாதிரி என்னோட சேந்துக்கிட்டு கலாய்ச்சது எல்லாம் இன்றும் மனதில் நிற்க்கிறது...

சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும்போது - தொலைபேசியில் அழைப்பு...காவல் நிலையத்தில் இரவு பாணியில் இருந்தபோது மாரடைப்பால் அகால மரணம் அடைந்தார் என்றது செய்தி...

அலறி அடித்து ஓடிவந்தேன் சொந்த ஊருக்கு....நடுவீட்டில் கிடத்தி இருந்தார்கள்...சற்று நேரம் அமைதியாக இருந்தது மனம்..எந்த சிந்தனையும் இல்லை..

அவர் முகத்தை ஏறிட்டு பார்த்தேன்...அவ்வளவுதான்...உடைந்து அழத்தொடங்கினேன்...என் கதறல் அழுது அழுது ஓய்ந்திருந்த அனைவரையும் மீண்டும் அழவைத்தது....

காலில் விழுந்து பிரண்டேன்...சித்தப்பா - எழுந்திருங்க - எழுந்திருங்க - என்று அவர் மேல் இருந்த மாலையை எல்லாம் எடுத்து எறியத்தொடங்கினேன்..

பைத்தியம் மாதிரி...

ஒருவழியாக அங்கிருந்து அடுத்த வீட்டுக்கு அழைத்து சென்றார்கள்...

என் அப்பாவின் தம்பி - இவரும் சித்தப்பாதான் - 40 வயதுக்காரர்...பல
விஷயங்களில் எனக்கும் இந்த சித்தப்பாவுக்கும் கூட மிக நெருக்கம்...எனக்கு நீச்சல் பழக்கியது இவர்தான்...

சைக்கிள் பழக்கிவிட்டதும் இவர்தான்..
இவரும் காவல்துறையில் தான் இருப்பவர்..என்னை தேற்ற முயற்ச்சி செய்கிறார்...

ஆனால் என் கண்ணில் ஆறாக பெருகும் கண்ணீரை யாராலும் கட்
டுப்படுத்த முடியவில்லை....

அத்தை மகனை கூப்பிடுகிறார்...டேய் இவனை கூப்பிட்டுகிட்டு போய் பியர் வாங்கி குடிக்க வைடா...என்கிறார்...

வேண்டாம் என்று குப்புற படுக்கிறேன்...

டேய் எத்தனை வேளை சாப்பிடாமல் இருப்பே...உடம்பு என்னத்துக்கு ஆகும்...

நானும் எங்க சித்தப்பாவோடே போறேன்...இது நான்...

ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை எடுக்கிறார்...அதன் வெள்ளை பகுதியில், சட்டை பையில் இருந்து பேனா எடுத்து எழுதுகிறார் ஏதோ....

பிரபா...இவனை சாப்பிட வெளிய கூட்டிக்கிட்டு போ...அப்போ இந்த நோட்டை அவன்கிட்ட காட்டு.....வலுக்கட்டாயமாக வண்டியில் உட்காரவைத்து
அனுப்புகிறார்...

பிரபா...எனக்கு சாப்பாடு வேண்டாம்...ஒரு சிகரெட் மட்டும் வாங்கு..பாறை முருகன் கோயிலுக்கு போலாம்...என்றேன்...

சித்தப்பா கொடுத்த ரூபாய் நோட்டை எடுத்தான் பிரபா...

காட்டு அதில் என்ன எழுதினார் என்று பார்க்கலாம்...என்றேன்...

கொடுத்தான்...

"அழுதாலும் புரண்டாலும் மாண்டார் மீள்வதுண்டோ" என்று எழுதி இருந்தார்...

மீளாத்துயிலில் ஆழ்ந்த சித்தப்பாவை நினைத்து மீண்டும் கண்ணீர் வந்தது....இதை செலவு பண்ண வேண்டாம் என்று பர்ஸில் பத்திரப்படுத்தினேன்...

மூன்று ஆண்டுகள் கழிந்தது...சென்ற வாரம் அதிகாலை மூன்று மணிக்கு வீட்டு தொலைபேசி ஒலித்தது......பிரபாதான் பேசினான்...

மீண்டும் துக்க செய்தியா வரவேண்டும்...சின்ன சித்தப்பா...அப்பாவின் தம்பி...சித்தப்பா என்று அழைக்கக்கூடிய கடைசி மனிதர்...உளுந்தூர்பேட்டையில் சாலை ஒழுங்குபடுத்தும் பணியில் இருந்தபோது வேகமாக வந்த பர்வீண் டிராவல்ஸ் மோதி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் என்ற செய்திதான் அது...

கார் வைத்துக்கொண்டு ஓடினோம்....

வழியெங்கும் அம்மா அவ்வப்போது அழுதுகொண்டே வந்தாள்...எனக்கு என்னமோ கண்ணீர் வரவில்லை...ஏ.டி.எம்.சென்று பணம் எடுத்தபோதும் எந்த உணர்ச்சியும் இல்லை...கார் ஏற்ப்பாடு செய்ய போனபோதும் எந்த சிந்தனையும் மனதில் எழவில்லை...

மீண்டும் அதே காட்சி...நடுவீட்டில் இந்த சித்தப்பாவும்....சித்தி தலைவிரி கோலமாக...கதறுகிறார்...சித்தப்பாவின் மூன்று பெண் பிள்ளைகள் கையை பிடித்துக்கொண்டு அழும் காட்சி கல்லையும் கரைய வைத்துவிடும் போல இருக்கிறது...

தேடுனாலும் கிடைக்கமாட்டாரேடா....என்று சித்தி அழும் காட்சியை காண சகியாமல் வெளியே வருகிறேன்...

மெல்ல ஒரு சிகரெட் பற்றவைத்து இழுக்கிறேன்...

என்னமோ அழுகை வரவில்லை...

படபடவென ஷாமியானா, சேர் ஏற்ப்பாடு செய்ய ஆள் அனுப்பு
கிறேன்...மேளக்காரர் வந்துவிட்டனர்...கல்லறை தோட்டத்தில் குழி தோண்ட ஆள் அனுப்புகிறேன்...சர்ச்சில் பிராத்தனைக்கு ஏற்ப்பாடு செய்யவும்,
குருவுக்கு சொல்லிவிடவும் ஆள் அனுப்பு வைக்கிறேன்...பெட்டி செய்ய அட்வான்ஸ் கொடுத்துவிட்டு - மாலை - ஊதுபத்தி - வாங்கி வருகிறேன்...

கிராமத்திலிருந்து வந்து சும்மா கட்டி அழுபவர்களின் குறிப்பறிந்து நுறு ரூபாய்களை கொடுக்கிறேன்...இது சாராயக்கணக்கு...

பாடியை எடுத்துப்போக கார் சொல்லிவிடுகிறேன்...மினி பஸ் ஒன்றை ஏற்ப்பாடு செய்து - வீட்டிலிருந்து கல்லறைக்கு போகிறவர்களின் பயணத்துக்கு வழி செய்கிறேன்...

ஆக்சிடென்ட் - பாடி - சீக்கிறம் எடுத்திடனும் - இல்லைன்னா வீச்சம் வந்திடும் என்று நான் பேசுவதை அதிர்ச்சியோடு கலங்கிய கண்களோடு பார்
த்துக்கொண்டிருக்கிறான் பிரபா...

ஆயிற்று...

சர்ச்சில் கொண்டுபோய் சிறிது நேரம் வைத்திருந்து - பிறகு மீண்டும் பெட்டியில் வைத்து - குழியில் இறக்கும் வரை எந்த சிந்தனையும் எழவில்லை...மீண்டும் அனைவரைடும் வீடு சேர்க்க வண்டிகளை ஏற்ப்பாடு செய்கிறேன்...

சர்ச் உதவியாளர் - மேளகாரர் - பஸ் - சாரயம் கேட்பவர்கள் - என ஒவ்வொருவராக செட்டில் செய்கிறேன்...

எல்லாரும் கிளம்பிப்போய்விட்டனர்...

நானும் பிரபா - கல்லறை வெட்டியான் மட்டும்...மம்பட்டி வைத்து அழுத்தம் கொடுக்கிறான்...

நல்லா அழுத்துங்க - கொஞ்சம் பார் மண் இருந்தா கொண்டுவந்து போடுங்க என்று சொல்லிக்கொண்டு இருக்கிறேன்...

பிரபா எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க்கிறான்...

தலைமாட்டில் இருக்க - அந்த சிலுவையை கொஞ்சம் அழுத்திவிடுங்க...என்றேன்...

வாடா பிரபா - ஒரு தம் போடலாம்...ரோட்டில் ஏறி - மங்கலான தெருவிளக்கு வெளிச்சத்தில் சிகரெட் எடுத்து பற்றவைக்கிறேன்...

வெட்டியான் ஓடி வருகிறார்...தம்பி என்னை ஏதாவது கவனிச்சிட்டு போங்க....
பர்சை நோண்டுகிறேன்....

சில்லறை எல்லாம் கொடுத்திட்டேன் பெருசு...ஐனூறா இருக்கு......

இருங்க இருங்க...ஓரத்தில் போட்டோ வைக்கும் இடத்தில் ஒரு ஐம்பது ரூபாய் இருந்ததா நியாபகம்..பாக்குறேன்...

கசங்கிய ஐம்பது ரூபாய் விரல்களில் தட்டுப்படுகிறது...

இரண்டு விரல்களால் எடுத்தேன்..

வெள்ளைப்பகுதியில் ஏதோ எழுதி இருக்குது - ஆங்...இதை சித்தப்பா தானே கொடுத்தார்...

குறைந்த வெளிச்சத்தில் - கண்களை சுருக்கி - வாய்விட்டு படிக்கிறேன்...

"அழுதாலும் புரண்டாலும் மாண்டார் மீள்வதுண்டோ" ................................

ஒரு நிமிடம் மவுனம்...

அப்படியே மண்டியிட்டு உடைந்து அழத்தொடங்குகிறேன்....மீளாத்துயில் கொண்ட என் சித்தப்பா முகம் கண்களில் தோன்றுகிறது...

31 comments:

Anonymous said...

ரவி, உன் பாரத்தை இறக்கி வைத்துவிட்டமாதிரி தெரியுது

ரவி said...

ஆமாம் டா..

கோவி.கண்ணன் said...

ரவி டச்சிங்கா கதை எழுதியிருக்கிறீர்கள். உண்மை சம்பவம் போல் இருக்கிறது

கோவி.கண்ணன் said...

உண்மை சம்பவமா ... சாரி ரவி
ரொம்ப வருத்தமா இருக்கு

ரவி said...

சூட்டோடு சூடாக படிக்கலாம் என்று உள் நுழைந்தேன்.உங்கள் மன சோகத்தை எழுதியது போல் உள்ளது.சிறுகதை என்று நம்ப முடியவில்லை.(தேன்கூடு போட்டி)

அழுத்தமாக பதிந்துள்ளீர்கல். எழுத்தின் வீச்சு அதிகமாக உள்ளது.

ரவி said...

அட மின்னல் வேகத்தில் பின்னூட்டம் கிளம்புது...பின்னூட்ட நாயகர் சொல்வதுபோல் கொஞ்சம் உண்மை + கொஞ்சம் கற்பனையும் உள்ளது

ரவி said...

என்ன சுமா - வீச்சு அது இது என்று சொல்லிக்கிட்டு...நீங்கள் உள்ளா ஏரியாவில் பொங்கல் ஹோட்டல் (பேரே பொங்கல் தானுங்க) உள்ளது...அங்கு சென்று வீச்சு புரோட்டா சாப்பிடுங்க...சூப்பரா இருக்கும்..

ஓ எழுத்தில வீச்சு ? நன்றிங்க..

வெற்றி said...

ரவி,
வணக்கம்.
உங்களின் மறுமொழி திரட்டி மீண்டும் இயங்குவது கண்டு மிக்க மகிழ்ச்சி.

தங்களின் கதையை இன்னும் வாசிக்கவில்லை. பின்னர் வாசித்துவிட்டு கருத்துச் சொல்கிறேன்.

கதிர் said...

ரவி

ரொம்ப உருக்கிட்டிங்க கடைசில. இருந்தாலும் உங்கள் உணர்வை பகிர்ந்து கொண்டது போலதான் தெரிகிறது.

அன்புடன்
கதிர்

ரவி said...

ரவி - பின்னூட்ட நாயகரே உண்மை என்று நினைக்கும் அளவு உங்க கதை நல்லா இருக்கு போல இருக்கு.பரிசு வாங்க வாழ்த்து.

ரவி said...

என்னமோ போங்க...கலக்குறீங்க...நிறைய பேர் எழுதி இருக்காங்க...நான் இன்னும் எல்.கே.ஜி லெவல்ல தான் இருக்கேன்..

கோவி.கண்ணன் said...

//பின்னூட்ட நாயகர் சொல்வதுபோல் கொஞ்சம் உண்மை//
ரவி
கவுண்டமனி சொல்லும் 'நெஞ்ச நக்கிட்ட' வசனம் ஞாபகம் வருகிறது :)

ரவி said...

உங்க கவுண்டமணி,செந்தில் பதிவை படித்தேன்.சூப்பர்.அந்த தாக்கத்தில் கவுண்டமனியை இழுத்துவந்திட்டீங்க போலிருக்கே.

ரவி said...

அந்த பதிவிலேயே ஒரு பின்னூட்ட கணக்கை கூட்டி இருக்கலாமே சுமா..

கோவி.கண்ணன் said...

//சூப்பர்.அந்த தாக்கத்தில் கவுண்டமனியை இழுத்துவந்திட்டீங்க போலிருக்கே.
//
ஆமாங்க சுமா... ரவி திடீர் திடீர்னு காணமல் போய்விடுகிறார்... இல்லையென்றால் காணாமல் செய்துவிடுகிறார்கள்.... அந்த மாதிரி தருணங்களில் கவுண்டரையும் செந்திலையும் வம்புக்கு இழுப்பதைத் தவிர வேறு எப்படி பொழப்பை ஓடுவது ( எழுத்துப் பிழை அவர்களுக்கு பயந்து கவனத்துடன் தட்டச்சு செய்துள்ளேன் ... போட்டுக் கொடுத்துவிடாதீர்கள்)
:))))

ரவி said...

அந்த பதிவு பின்னூட்ட பெட்டி திறந்தா வெள்ளை Screen தான் தெரிகிறது.

ரவி said...

////எழுத்துப் பிழை அவர்களுக்கு பயந்து கவனத்துடன் தட்டச்சு செய்துள்ளேன் ... போட்டுக் கொடுத்துவிடாதீர்கள்////

Sari நான் சொல்லவில்லை. பல BLOG என் office ல் ஓப்பன் செய்ய முடியாது. இந்த இ-கலப்யை போடுவதுக்குள் பெரிய வாரே நடத்தினேன். பிறகு சிஸ்டம் அட்மின் கிட்ட கொஞ்சம் வழிஞ்சு தான் போட்டு கொடுத்தாங்க..யாழிசைச்செல்வன் மெயில் ஐடி கேட்டு ரவிக்கு மெயில் செய்தேன் பதில் இல்லை..

உங்க BLOG தெரிந்து கொண்டு இருந்தது.இப்போ தெரியவில்லை..எப்படியோ ரவியிடம் கெஞ்சி - உங்க கவுண்டமணி செந்தில் போஸ்டிங் மெயில் செய்தார்.

:) :)

ரவி said...

உங்க பதிவு தெரியவில்லை என்று சொன்னீங்களே...

இப்போது தெரிகிறதா ?

அலுவலக ரகசியம் எல்லாம் வெளிய சொல்லக்கூடாது தெரியாதா ?

வருது.வருது. உங்க ஆஸ்டல் உள்ள பி.டி.எம். லே அவுட்டுக்கு ஆட்டோ வருது...

கோவி.கண்ணன் said...

//Sari நான் சொல்லவில்லை. //
சுமா ... நீங்கள் சொன்னீர்கள் என்று நான் சொல்லவில்லை.. 'எழுத்துப் பிழை' என்று ஒருவர் வந்து என்னுடைய பதிவில் பிழைகளை சுட்டித் திருத்தினார்.. அவரே அனானி பெயரிலும் ரவியின் பதிவிலும் சில சொற்களைத் திருத்தினார் (திருத்துதல் - று - வா, ரு - வா பயமாக இருக்கு) அதைத்தன் சுட்டிக்காட்டினேன்

கோவி.கண்ணன் said...

//உங்க BLOG தெரிந்து கொண்டு இருந்தது.இப்போ தெரியவில்லை..எப்படியோ ரவியிடம் கெஞ்சி - உங்க கவுண்டமணி செந்தில் போஸ்டிங் மெயில் செய்தார்.//
சுமா ரொம்ப முயற்சி எடுத்திருக்கிறீர்கள் பாராட்டுக்கள்

லக்கிலுக் said...

ரவி ரொம்பவும் உருக்கமாக இருக்கிறது... ஒவ்வொருவர் வாழ்விலும் இதுபோல ஏதாவது பிளாஷ்பேக் கண்டிப்பாக இருக்கும்...

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நல்ல எழுதியிருக்கிறீங்க ரவி போட்டிக்கு வாழ்த்துக்கள்...

கருப்பு said...

மனதைத்தொடும் அருமையான கதை. எனது வாழ்த்துகள் ரவி.

Anonymous said...

Hi ravi
what happened to your short story in NILA MUTRAM???
please continue...
thank you

மா.கலை அரசன் said...

நல்ல தெளிவான கதையோட்டம். கடைசி பத்தியை வாசிக்கும் போது துக்கம் வாசிப்பவரையும் தொற்றிக்கொள்ளும். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Anonymous said...

This story is very nice. i really thankful 2 you for given me a good story.this makes me to remember my chittapa death.

அனுசுயா said...

அருமையா அழுதியிருக்கீங்க ரவி. தேன்கூடு போட்டில பரிசு நிச்சயம். வாழ்த்துக்கள்.

ரவி said...

///அருமையா அழுதியிருக்கீங்க ரவி..///

அனு...வேனுமுன்னேதான இந்த எழுத்துப்பிழை ??

அனுசுயா said...

நிஜமா தெரியாம ஏற்பட்ட எழுத்து பிழைதான்க அது.

கோவி.கண்ணன் said...

செந்தழல் ரவியின் பார்வைக்கு என்று ஒரு பதிவு வந்திருக்கிறது. போய் ரட்சித்து வாரும்! :)))

Tamilselvan Subramanian said...

ரவி , சிறுகதை அருமை. ஐநூறு ரூபாயில் சித்தப்பா எழுதிய அந்த வார்த்தைகளை கடைசியில் மட்டும் தெரிவித்திருந்தால்.. இன்னும் விருவிருப்பாய் இருந்திருக்கும். உங்கள்
எழுத்து நடை அருமை. வாழ்த்துக்கள்.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....