தேடுங்க !

Friday, September 01, 2006

தமிழ்மணத்தை படித்து விமானத்தை தவறவிட்டவர்

யாருடா அது என்று ஒரு கேள்வி நீங்க கேட்பதற்க்குள் நானே சொல்லிவிடுகிறேன்..

ஏற்க்கனவே தொலைபேசியில் பேசிய ஒரு சிலருக்கு சொல்லிவிட்டேன்...

இருந்தாலும் ஒரு பதிவாக போட்டு வைத்தால் பின்னால் மீள் பதிவு, மீன் பதிவு என்று ஜல்லியடிக்கலாமே...( "சமீபத்தில்" 1870 - வீர பாண்டிய கட்டபொம்மு காலையில் வாக்கிங் போகையில் என்று எல்லாம்) - சரி விடுங்க மேட்டருக்கு வந்திடுறேன்..

எட்டுமணிக்கு மும்பை விமானம்..கையில் டிக்கெட் ஆறு மணிக்கெல்லாம் கொடுக்கப்பட்டது..சரி அப்படியே லக்கி லூக் பதிவு, முத்து தமிழினி பதிவு, கோவி.கண்ணன் காலங்கள், கிழுமத்தூரில் இருந்து கிளம்பிய புகை வண்டி ஏன் நடுவழியில் நிக்கிது, வடுவூர் குமார் எப்படி வூடு கட்டினார், சங்கம் கவிதைப்போட்டி, பார்ப்பணீய முற்போக்குவாத பின் நவீனத்துவ பெண்னிய பதிவுகளை படிச்சிக்கிட்டே, அங்கே அங்கே பின்னூட்டங்களை வாரி தெளிச்சிக்கிட்டே...

மணி பார்த்தா - எட்டு...

கணினியை தூக்கிக்கிட்டு கிளம்பி ஓடினா, கிங் பிசர் வண்டி கிளம்பிருச்சிய்யா, கிளம்பிருச்சிய்யா...

பொறவு வேற வண்டி இருக்கான்னு விசாரிச்சா, ராவைக்கு எதுவும் வேற வண்டி இருக்கான்னு பார்த்தா, ஆத்தீ...அது தான் கடைசி வண்டியாம்...

அப்புறமென்ன, பிரண்டு வீட்டுல போய் படுத்து ஏந்திரிச்சி, காலைக்கு மொத வண்டியை புடிச்சி மும்பைக்கு ஓடினேன்...

44 comments:

Anonymous said...

:)

லக்கிலுக் said...

பார்த்து வாத்தியாரே.... உங்க கல்யாண நாளன்னிக்கும் தமிழ்மணத்துலே உட்கார்ந்துடப் போறிங்க.... :-)

செந்தழல் ரவி said...

////பார்த்து வாத்தியாரே.... உங்க கல்யாண நாளன்னிக்கும் தமிழ்மணத்துலே உட்கார்ந்துடப் போறிங்க.... :-)///

அதுக்கெல்லாம் கரெக்ட்டா போயிடுவேன்.

அனானி முன்னேற்றக் கழகம் said...

இன்று மாலை சென்னையில் நடைபெறும் வலைப்பதிவாளர் மாநாட்டுக்கு எங்கள் அனானி முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மயிலை வட்டச் செயலாளர் அனானி அன்வர் பெருந்திரளான தொண்டர்களுடன் கலந்து கொண்டு சிறப்பிப்பார்.

மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள்

ஆவேச அனானி அண்ணன் அண்ணாமலை
அமைந்தகரை
அமைப்பாளர்
அனானி முன்னேற்றக் கழகம்

கார்த்திக் பிரபு said...

vimangradhu ungalukku bus mari poyitulla?

கோவி.கண்ணன் [GK] said...

//கணினியை தூக்கிக்கிட்டு கிளம்பி ஓடினா, கிங் பிசர் வண்டி கிளம்பிருச்சிய்யா, கிளம்பிருச்சிய்யா...//

ரவி...!

திரும்பவம் தமிழ்மணத்துக் குள்ள தானே போனிக...அத் தை சொல்லலையே !

:))

இருந்தாலும் இது டூஊஊஊஉமச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச் !
:)))))))))))

Anonymous said...

//
இன்று மாலை சென்னையில் நடைபெறும் வலைப்பதிவாளர் மாநாட்டுக்கு எங்கள் அனானி முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மயிலை வட்டச் செயலாளர் அனானி அன்வர் பெருந்திரளான தொண்டர்களுடன் கலந்து கொண்டு சிறப்பிப்பார்.
//

அங்கன வந்தா போண்டா குடுப்பிங்களா...
அப்பிடினா நிச்சியமா டோண்டு மாமாவையும் கூப்பிடனும்...

செந்தழல் ரவி said...

அன்வர் என்று சொன்னபிறகு அவர் எப்படி அனானியாவார் ?

Anonymous said...

அனானியாக இருந்து அன்வராக மதம் மாறியவர்.

கடன்பட்டார் said...

கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்..

செந்தழல் ரவி said...

///அனானியாக இருந்து அன்வராக மதம் மாறியவர்.//

அடப்பாவி !!

அ.மு.க said...

///அனானியாக இருந்து அன்வராக மதம் மாறியவர்.//

பிறகு ஆல்பர்ட் ஆனார்.

அனானி முன்னேற்றக் கழகம் said...

எம்மதமும் சம்மதம் என்பது அனானி முன்னேற்றக் கழகத்தின் கோட்பாடு

Anonymous said...

//பிறகு ஆல்பர்ட் ஆனார்.//

சிம்ரன் ஆப்ப கடையில் ஆப்பம் ஓசியில் வாங்கி தின்று அதன் சுவையில் மயங்கிய பின்னர்தான் ஆல்பர்ட் ஆனார்

Anonymous said...

கடன்பட்டார் நெஞ்சம் போல போண்டா கிடைகாமல் கலங்கினார் டோண்டு......

வடுவூர் குமார் said...

செந்தழல் ரவி
இதுக்கு நானும் காரனமா??
போச்சுடா!!
நன்றி

Anonymous said...

ஏன் தல துரத்திபோயி புட்போர்டு அடிச்சிருக்ககூடாது.....

செந்தழல் ரவி said...

///ெந்தழல் ரவி
இதுக்கு நானும் காரனமா??
போச்சுடா!!
நன்றி////

ஆமாம் - குமார் எஞ்சினீயர் பதிவுகளை தொடர்ந்து படிக்கும் வாசகனாக்கும்.

Anonymous said...

திருந்தவே மாட்டீங்களா ?

Anonymous said...

நாங்க எதுக்கு திருந்தனும், முதலில் அவனை திருந்த சொல்,

Anonymous said...

அவன் எப்படி திருந்துவான், நீ திருந்தினால் தான் திருந்துவான்.

செந்தழல் ரவி said...

அய்யா, யாராவது திருந்துங்கப்பா...என்ன விளையாட்டு இது...

செந்தழல் ரவி said...

அனானிங்களா....

தமிழ்மணம் நட்சத்திரம் நட்சத்திரம் என்று ஒருத்தர் இருக்கார். அவருக்கு கொஞ்சம் பின்னூட்டம் போடுங்கப்பா..நான் ஒரு டீ சாப்புட்டு வர்ரேன்..

செந்தழல் ரவி said...

அனானிங்களா....

தமிழ்மணம் நட்சத்திரம் நட்சத்திரம் என்று ஒருத்தர் இருக்கார். அவருக்கு கொஞ்சம் பின்னூட்டம் போடுங்கப்பா..நான் ஒரு டீ சாப்புட்டு வர்ரேன்..

சத்தியா said...

அடப் பாவிங்களா!... இப்படிக் கூட மனிதர்கள் நாட்டில நடமாடுறாங்களா என்ன? ம்... பார்த்து... பார்த்து... இந்த முறை விமானத்தைத் தானே தவற விட்டீங்கள்? நல்ல வேளை.

Chandravathanaa said...

என்ன சொல்ல...?

Anonymous said...

Enna thala!!

Oru vaarthai munnavae sollirunthaa aarppattam panni anuppi vachu irupomla...

செந்தழல் ரவி முன்னேற்றக் கழகம்
Jeddah Branch
Saudi Arabia

மகேந்திரன்.பெ said...

//கிழுமத்தூரில் இருந்து கிளம்பிய புகை வண்டி ஏன் நடுவழியில் நிக்கிது, வடுவூர் குமார் எப்படி வூடு கட்டினார், சங்கம் கவிதைப்போட்டி, பார்ப்பணீய முற்போக்குவாத பின் நவீனத்துவ பெண்னிய பதிவுகளை படிச்சிக்கிட்டே, அங்கே அங்கே பின்னூட்டங்களை வாரி தெளிச்சிக்கிட்டே//

யோய் ரவி இந்த மாதிரி என்னால தான் லேட்டுன்னு ஏன் பொய்சொல்றே அன்னிக்கு எந்த பின்னூட்டமும் எனக்கு வரவே இல்லையே .... அட அப்படியே பிளைட்ட விட்டா நம்ம எக்ஸ்பிரஸ்ல ஏறிப் ஓட வேண்டியது தானே ..?

பின்னூட்ட முதலாளி said...

ரவி நீ திருந்தவே மாட்டே... உனக்கு இந்த மாசத்துக்கு பின்னூட்டம் கட்டு

விஜய் மல்லையா said...

அந்த டிக்கட்டை ஏர்போர்டில் கொடுத்து மீதி காசுக்கு எங்கள் கம்பெனி பீரைக் குடித்தால் அடுத்த ப்ளைட்டையும் தவறவிடலாமே?

ஜெட் ஏர்வேஸ் said...

இப்படி ஆள் வருவதே தெரியாமல் வண்டியை எடுப்பது கிங்பிஷரின் அடாவடித் தனம்

ஏர் இந்தியா said...

இதுவரை எங்கள் விமானத்தை தான் யாரும் இப்படி தவற விட்டதில்லை ஏனென்றால் நாங்க எப்போதும் தாமதமாகவே வண்டியை கிளப்புகிறோம்

பிரிட்டிஷ் ஏர்வேஸ் said...

ரவி அன்று வந்திருந்தாலும் அவர் பெயரில் செந்தழல் இருப்பதால் அனுமதி மறுத்திருப்போம்

பான் அமெரிக்கா said...

இப்படி விமானத்தை தவர விட்டது சதிச்செயலா இல்லை தற்காலிக தவறா என சி எஸ் ஏ விசாரிக்கும்

வெற்றி said...

செந்தழல்,
நண்பர் லக்கி சொன்னது போல கலியாண முகூர்த்தத்தை தவறவிடாமல் இருந்தால் சரி...

சந்தோஷ் aka Santhosh said...

// விஜய் மல்லையா said...

அந்த டிக்கட்டை ஏர்போர்டில் கொடுத்து மீதி காசுக்கு எங்கள் கம்பெனி பீரைக் குடித்தால் அடுத்த ப்ளைட்டையும் தவறவிடலாமே?

Saturday, September 02, 2006
ஜெட் ஏர்வேஸ் said...

இப்படி ஆள் வருவதே தெரியாமல் வண்டியை எடுப்பது கிங்பிஷரின் அடாவடித் தனம்

Saturday, September 02, 2006
ஏர் இந்தியா said...

இதுவரை எங்கள் விமானத்தை தான் யாரும் இப்படி தவற விட்டதில்லை ஏனென்றால் நாங்க எப்போதும் தாமதமாகவே வண்டியை கிளப்புகிறோம்

Saturday, September 02, 2006
பிரிட்டிஷ் ஏர்வேஸ் said...

ரவி அன்று வந்திருந்தாலும் அவர் பெயரில் செந்தழல் இருப்பதால் அனுமதி மறுத்திருப்போம்

Saturday, September 02, 2006
பான் அமெரிக்கா said...

இப்படி விமானத்தை தவர விட்டது சதிச்செயலா இல்லை தற்காலிக தவறா என சி எஸ் ஏ விசாரிக்கும் //
hehehehehe..

சந்தோஷ் aka Santhosh said...

//பார்த்து வாத்தியாரே.... உங்க கல்யாண நாளன்னிக்கும் தமிழ்மணத்துலே உட்கார்ந்துடப் போறிங்க.... :-)//
lucky look appadiyavathu ponnu polachi pogatum vidunga..

Mayooresan said...

இப்படியும் ஒரு ஆர்வமா!
ஹி... ஹி....

அனானி முன்னேற்றக் கழகம் said...

அதர் ஆப்ஷன் - அனானி என்றாலே உச்சா போகும் கிழட்டுப் பதிவாளர்களை எதிர்க்கும் செந்தழலாருக்கு ஒரு ஓ!

கிழங்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த பழைய டரியல் சரக்குகளை திருப்பி பார்க்கிறேன், சைடுல எட்டிப் பார்க்கிறேன், முட்டி மோதிப் பார்க்குறேன் என்றெல்லாம் எழுதி தமிழ்மணத்தை பாழடிப்பதை உடனே நிறுத்தித் தொலைக்க வேண்டும். இல்லா விட்டால் நிறுத்தப் படுவார்கள்.

வாழ்க செந்தழல், வாழ்க நற்றமிழர், வாழிய தமிழ்மணம்.

பி.ஆர்.மகாலிங்கம் - வங்கி பியூன் said...

திரும்பி பார்க்கும்போது - முன்னால எவனாவது இடிச்சா என்ன செய்வது ?

ஸ்பைஸ் ஏர்வேஸ் ஓனர் said...

எக்ஸ்சூஸ் மீ..கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா ?

விஜய் மல்லய்யா said...

////ஸ்பைஸ் ஏர்வேஸ் ஓனர் said...

எக்ஸ்சூஸ் மீ..கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா ?/////

சரிடா, வந்து ஏறிக்கோ.

ஏன் உன் விமானத்துல ஒரே அட்டு பிகரா இருக்கு ? அதுவும் இல்லாம உன் விமானத்துல சாப்பாடு பழங்கஞ்சியாமே ?

வி.பி.ஆர். காஸிப் said...

என்னெ வெச்சி காமெடி கீமெடி எதுவும் பண்ணலையே?

இந்தியன் ஏர்லைன்ஸ் said...

எங்க விமானத்தில் கேப்டனே தாமதமா தான் வருவார். இதுக்கு போய் அலுத்துக்கிறீங்களே