உங்கள் வாக்கையும் பதிவு செய்து விடுங்களேன்...விக்கிபீடியா பற்றி அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்..
இது ஒரு திறந்த மூலம் உடைய தகவல் களஞ்சியம். நீங்களே வரலாறை பதிவு செய்யலாம். நீங்களே திருத்தலாம். ஏற்க்கனவே பதியப்பட்டவைகளில் எழுத்துப்பிழை கண்டால் அதை கூட திருத்தலாம். இதனால் தான், இது உலகின் மிகப்பெரிய கலைக்களஞ்ச்சியமாக ( அட என்சைக்ளோபீடியாங்க) உருவாகி இருக்கிறது...மொத்தம் 137 மொழிகளில் ஆலமரம் போல் கிளைவிரித்து இணையத்தில் இதுபோல் ஒரு சேவையை யாரும் தரமுடியாது என்று சொல்வது போல பரந்துபட்ட தகவல் களஞ்சியமாக விளங்கிவருகிறது....
விக்கிபீடியா இப்போது தமிழ் செய்தித்தளம் (தமிழ் நியூஸ்) மற்றும் தமிழ் மூலம் (சோர்ஸ்), ஆகிய இணை சிறு தளங்களை தொடங்க வாக்கெடுப்பை நடத்துகிறது.
அவர்கள் தளத்தில் கீழ்க்கண்டவாறு கண்டுள்ளது...
விக்கிமீடியா திட்டங்களான wikisource மற்றும் wikinews ஆகியவற்றை தமிழில் தொடங்குவதற்கான வாக்கெடுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆர்வமுடைய பயனர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகள் வழியாக சென்று வாக்களிப்பது, இப்பணிகளை விரைந்து செயல்படுத்துவதற்கு மிகவும் அவசியமாகும். கணிசமான பயனர்களின் வாக்குகள் கிட்டும் வரை இத்தமிழ்ப் பதிப்புகளைத் தொடங்க இயலாது என்பதால், ஒவ்வொரு வாக்கும் பொன்னானதாகும் !
தமிழ் விக்கி மூலம் தளத்தை தொடங்குவதற்கான வாக்கெடுப்பு இங்கு நடக்கிறது.
தமிழ் விக்கி செய்திகள் தளத்தை தொடங்குவதற்கான வாக்கெடுப்பு இங்கு நடைபெறுகிறது.
மேற்கண்ட தளங்களில் பயனர் கணக்குகள் உருவாக்கும் போது, உங்கள் தமிழ் விக்கிபீடியா பயனர் பக்கங்களுக்கான இணைப்புகளைத் தாருங்கள்.
உங்கள் வாக்கை பதிவு செய்ய நீங்கள் செய்யவேண்டியது மிக எளிது..

இங்கே சென்று நீங்கள் பக்க மூலத்தை திறந்து, உங்கள் பெயரையும் இணைத்துவிடுதல் மட்டுமே நீங்கள் செய்யவேண்டியது...
தமிழுக்கு தோள்கொடுங்கள்....இந்த பதிவு உங்கள் கண்ணில் பட்டால் ஒரு வாக்களியுங்கள்..
10 comments:
வாக்கெடுப்பை வலைப்பதிவுமூலம் பரந்த தளத்துக்கு அறிவித்தமைக்கு நன்றி.
நான் வாக்களித்துவிட்டேன்.
done
அவசியமான பதிவு. உங்கள் பரந்துபட்ட சேவைக்கு வாழ்த்துக்கள்
நானும் எனது வாக்கைச் செலுத்தி விட்டேன். எடுத்துச் சொன்னமைக்கு நன்றி.
நன்றி ஜீயார்..
அன்பு இரவி,
என்னால் வாக்களிக்க இயலவில்லை. இந்த மரமண்டையில் ஏறவில்லை. கொஞ்சம் தெளிவாக எனக்குத் தனி மின்னஞ்சல் அனுப்ப இயலுமா?
நற்கீரன் எங்கே சென்றுவிட்டார்? உதவி!!
நான் பல மாதங்களிற்கு முன்பே வாக்களித்து விட்டேன்.
தகவலைப் பரப்பியமைக்கு நன்றி ரவி அண்ணா!
அன்பு இரவி,
உதவி!உதவி!!
உதவி!உதவி!!
ரவி, இன்று தான் இந்த இடுகையை பழைய பூங்கா இதழ்களை கிண்டிக் கொண்டிருக்கும்போது கண்டேன். மிகவும் மகிழ்ச்சி. நேரடியாக விக்கிபீடியாவில் பங்களிப்பது தவிர இது போன்ற பரப்புரைகளும் எங்களுக்கு மிகவும் உதவும். தமிழ் விக்கி செய்திகள் தொடங்கப்பட்டு விட்டது. விக்கி மூலத்துக்கான பணி நடந்து வருகிறது. ஆனால், வாக்கெடுப்பு எல்லாம் முடிந்து அனுமதியும் பெற்றாகிவிட்டது. எனக்கு எங்க இருந்துடா மக்கள் எல்லாம் வந்து ஓட்டை போட்டுத் தள்ளுகிறார்கள் என்று குழப்பமாக இருந்த்து. மற்ற மொழிகளை காட்டிலும் தமிழுக்கு தான் அதிக ஓட்டுக்கள் விழுந்தன.நன்றி.
உங்களின் இந்தப் பதிவை நிறுத்தப் போவதாக நீங்கள் எழுதி இருந்ததை பார்த்தேனு. இப்படி நல்ல பதிவுகள் வரும் தளத்தை ஏன் மூட வேண்டும். கொஞ்சம் மனசு வையுங்கள். நேரம் கிடைக்கும்போது எழுதினாலும் கூட போதும்.
மிகவும் நன்றி ரவிசங்கர் அவர்களே !!
Post a Comment