தேடுங்க !

Wednesday, September 20, 2006

மராத்தான் புகைப்படங்கள்....

மராத்தான் போட்டியில் தோழி சுட்ட படங்களில் நம்மை கவர்ந்தது இவை...ஒரு குட்டி ரன்னர்..ஓடுவதற்க்கு கால் தேவையா என்று கேட்பதுபோல, தன்னம்பிக்கையோடு வந்த இவர், வெற்றிக்கு ஊனம் ஒரு தடையில்லை என்று நிரூபித்தார்...நெஞ்சை தொட்டது..இவரையும் பாருங்கள்...இவரது கையை குலுக்க சென்றேன்...அந்த கையில் தான் எத்தனை உறுதி...கையில் மட்டுமா ? மனதில் கூடத்தான்..நாங்களும் ஓடி நிறைவு செய்தோம் என்பதை நிரூபிக்க இதைவிட்டா வேறு வழி ?நமது நன்பர் குருஸ் என்கிற ராமநாதன் ஓடிக்கடக்கும் காட்சி...இந்த படம் எடுக்கும் நேரம் பார்த்தா கேமரா நம் கையில் வரவேண்டும்...ஒரே வயித்தெரிச்சல் போங்க..
இந்த படங்களை எடுத்த தோழி இவர்தான்..

இந்த படங்களை வலையேற்றும்போது, படங்களை வலையேற்ற முடியாமல் தவிப்பவர்களுக்கு ஒரு தீர்வு கிடைத்துவிட்டது...

விரைவில் தனிப்பதிவாக இடுகிறேன்..

12 comments:

கீர்த்திபிரியன் said...

தல,

ப்ளோஅப்-ல எல்லா எடத்துலயும் உங்க படந்தான் வருது.

கீர்த்தியக்காவ நாங்க பாக்க வாணாமா?

கீர்த்திரெட்டி தற்கொலைப்படை,
கோரமங்களா கிளை ,
பெங்களூர்.

செந்தில் குமரன் said...

உடல் ஊனம் குறையே இல்லை மனதில் உறுதி இருந்தால் என்பதை நிரூபிக்கும் வகையில் இருந்தது படங்கள் நன்றி பகிர்ந்தமைக்கு.

வடுவூர் குமார் said...

ரவி
படத்தை மேலேற்றுவது இன்னும் பிரச்சனையாகவே இருக்கிறது.
போடுங்க ஈசியான வழியாக.
பிலிக் ஆர் அல்லது போட்டோ பக்கெட் மூலியமாகத்தான் வரமுடிகிறது அதுவும் அது இஷ்டத்துக்கு சின்னது பெரிசாக மாறிக்கொள்கிறது.

Anonymous said...

ஊனமுற்றவர்கள் மராத்தான் ஒடியது அருமையான உதாரணம். இவர்கள் வெறும் உடலால்தான்..மற்றவர் ?

செந்தழல் ரவி said...

///ஊனமுற்றவர்கள் மராத்தான் ஒடியது அருமையான உதாரணம். இவர்கள் வெறும் உடலால்தான்..மற்றவர் ?///

ஆமாம், ஊனம் என்பது மனதில் தான் உள்ளது என்பதை அருமையாக காட்டியது உமது இரண்டுவரி பின்னூட்டம்.

இளமாறன் said...

படங்கள் அருமை நன்பரே..

செந்தழல் ரவி said...

நன்றி இளமை..

செந்தழல் ரவி said...

//கீர்த்தியக்காவ நாங்க பாக்க வாணாமா?///

பார்த்தாச்சா..

சுமா said...

எனக்கு வேலை கொடுத்துவிட்டு, நீங்கள் மட்டும் பதிவு போட்டுக்கொண்டிருப்பது.

கேட்டால் லீடர் என்று சொல்லிக்கொண்டு திரிவது ?

கீர்த்தி ஹேக்க‌ர் said...

கீர்த்தியக்காவ பார்க்க

கீர்த்திய‌க்கா வெறியர் பாச‌றை
ஹேக்கர் பிரிவு
பெங்க‌ளூரு‌

செந்தழல் ரவி said...

ஹேக்கர் பிரிவு நம்மளுதாச்சே...நீர் ஏன் உபயோகப்படுத்தினீர் ?

செந்தழல் ரவி said...

ஹேக்கர் பிரிவு வேறயா ?