பதிவில் படத்தை இணைக்க அதிரடி வழி

நான் வலைபதிவில் அடிக்கடி காணும் வசனம், படங்களை வலையேற்ற முடியவில்லை என்பதுதான்....

பிலாகரிலேயே படத்தை வலையேற்றும் "ADD Image" என்ற பொத்தான் ஏதோ பெயருக்குத்தான் இருக்கிறது என்றும், படத்தை வலையேற்ற உதவுவதில்லை என்றும் ஒரு நன்பர் குறைப்பட்டுக்கொண்டார்..

பிக்காசாவுடன் கூட்டணி சேர்ந்து பிலாகர் படத்தை ஏற்றும் ஒரு மென்பொருளை வழங்குகிறது, ஆனால் அது பயன்படுத்த எளிமையாக இல்லை..

படங்களை வலையேற்ற முயற்ச்சி செய்துகொண்டிருந்த போது ஒரு சிறிய யோசனை, நமது குறுக்கு புத்தி வேலை செய்தது..

அட...சூப்பர்...பிரச்சினை செய்யும் பிலாகரை இப்படி கூட ஏமாற்றலாமா என்று தோன்றியது..

அந்த வழிமுறையை படங்களோடு (!?) சொல்லிக்கொடுக்கிறேன்..

முதலில் உங்கள் வலையேற்றவேண்டிய படத்தை டெஸ்க்டாப்பில் வைத்துக்கொள்ளுங்கள்...கீழே பாருங்கள், எனது விக்கிபீடியா பற்றிய பதிவில் இடம் பெற்ற விக்கி என்ற படம் உள்ளது..
இப்போது உங்கள் பதிவில் உள்ள உருவாக்கு (Create) என்ற பொத்தானை அழுத்தி, புதிய பதிவிற்க்கான சன்னல் வந்தவுடன் அதில் உங்கள் பதிவை உள்ளீடு செய்யுங்கள் ( டைப்படிங்கப்பா)..

பிறகு எங்கே உங்களுக்கு படம் வரவேண்டுமோ அங்கே கர்சர் பூனைக்குட்டியை வைத்து (Mouse Pointer) "Add Image" என்ற பட்டனை கிளிக் செய்யுங்க..

பிறகு இமேஜை இணைக்கும் சன்னல் வரும். அதில் உங்களுக்கு தேவையான லேயவுட், படம் இடமா வலமா, பெரியதா சிறியதா என்று தேர்வு செய்து, இமேஜை செலக்ட் செய்து அப்லோட் இமேஜ் என்ற பொத்தானை அழுத்தவும்.

அவ்வளவுதான்.

இது முடிந்தபின், "Your Image has been Added" என்ற சன்னல் வரும்.."

"Close" என்றால் மூடிக்கொள்ளும் இந்த சன்னல்...

பலருக்கும் பிரச்சினை என்ன என்றால், இதன் பிறகு நமது "Compose Window" வில் பார்த்தால் ஒரு மண்ணும் இருக்காது...

வேறென்ன செய்ய, படங்களை வலையேற்றுவதில் பிரச்சினை என்று ஒரு வரியை பதிவில் சேர்த்துவிட்டு அப்பீட் ஆகிவிடுவீர்...

அப்படியே நில்லுங்க...நீங்க உங்க படங்களை வலையேற்றலாம்....அட ஏற்க்கனவே ஏற்றிவிட்டீர்கள்...எப்படி என்று கேட்கிறீர்களா ?

நீங்கள் "Upload Image" என்ற பொத்தானை அழுத்தியதும் உங்கள் படம் சர்வருக்கு சென்றுவிடுகிறது...

பிறகு "Close Window" என்ற பொத்தானை அழுத்தியதும் ஒரு HTML லிங்க் ( வலையேற்றப்பட்ட உங்கள் படத்தின் லிங்க்) உங்கள் கம்போஸ் விண்டோவில் வந்து விழ வேண்டும்..

ஆனால் இந்த கடைசி ஸ்டெப் மட்டுமே பலருக்கும் பிரச்சினை ஆகிறது.

உங்கள் படம் ஏற்க்கனவே சர்வருக்கு சென்று விட்டதால் நீங்களே இந்த கடைசி ஸ்டெப்பை செய்தால் தீர்ந்தது பிரச்சினை...

<ஏ ஹச் ரெப்="http://photos1.blogger.com/blogger/3075/2751/1600/உங்கள் படம் பெயர்.jpg">

எ ஹச் ரெப் = இதற்க்கு பதில் a href. முதல்வரியில்
எ = இதற்க்கு பதில் a

இதை உங்கள் பதிவில் இப்போது போடுங்கள்..பிறகு உங்கள் படத்தின் பெயரை சரியாக அந்த மூன்று வரிகளில் ( மொத்தம் இரண்டு இடங்களில் வருகிறது) கொடுத்து, பதிவை பிரிவியூ பாருங்கள்..

பப்ளிஷ் செய்யுங்கள்...

இதே முறையில் எல்லா படங்களையும் ஏற்றுங்கள்...

அம்புட்டுதேன் மக்களே....

Comments

Anonymous said…
படம் வந்துடுச்சு தல, அந்த வரி தான் வரலை.. சரியாப் போடு தல

செந்தழலார் பேரவை
லால் பாக்
பெங்களூர் - 4
Anonymous said…
இதை கூட தெரியாமலா இத்தனை நாள் நிறையா பேர் பதிவு எழுதிக்கொண்டிருந்தார்கள்?..
எல்லா நேரமும் இதே (http://photos1.blogger.com/blogger/3075/2751/1600/) URL தான் பயன்படுத்தப் படுகிறதா?

தகவலுக்கு நன்றி.

இன்னும் சில HTML TAG உபயோகங்களை யாராவது தந்தால் நல்லது.

டேபிள் (கட்டம் போடுறது) எப்டீன்னு சொல்லலாம்.
நல்ல பயனுள்ள தகவல் ரவி. அடுத்த தடவை இது போல பிரச்சனை ஏற்படும் போது முயற்சி செய்து பார்க்கிறேன். உங்க விளக்கம் மிகத் தெளிவா இருந்தது. நன்றி.
இது மாதிரி வலைப்பதிவு டிரிக்குகளை எல்லாம் சேர்த்துத் தொகுக்க வேண்டும். பொன்ஸ் சில பதிவுகள் போட்டிருக்கிறார். தேவைப்படும் போது அங்கு போய்ப் பார்த்துக் கொள்கிறேன். இனிமேல் உங்கள் வலைப்பூவையும் நாடலாம். நன்றி.

அன்புடன்,

மா சிவகுமார்
வைசா said…
செந்தழல் ரவி,

மிகப் பயனுள்ள பதிவு. நன்றி.

அந்த படம் போய்ச் சேர்ந்த address எப்படி கண்டுபிடிப்பது? உதாரணமாக,

//
"http://photos1.blogger.com/blogger/3075/2751/1600/உங்கள் படம் பெயர்.jpg"
//

இதில் 3075/2751/1600 என்றெல்லாம் எப்படி கண்டு பிடித்தீர்கள்?

வைசா
உபயோகமான தகவல், ரவி. நன்றி. நீங்கள் சொன்ன அதே folder ல்தான் சேமிக்குமா. அதென்ன வேறு நம்பர் உள்ள folderகள். எனக்கென்னவோ இது மாறிக்கொண்டே இருக்கும் என்று தோன்றுகிறது. ஒரே நாளில், இரண்டு பதிவுகளில் ஒரே பெயருள்ள படம் பதிந்தால், அதன் ref address ஒரே மாதிரி இருக்குமா? கொஞ்சம் குழம்பியிருக்கிறது எனக்கு!!!

நன்றி
theevu said…
//3075/2751/1600
//
எப்போதும் இது ஒரேமாதிரி இருக்குமா?

எனக்கும் இதே பிரச்சனை இருந்து அதன் பின் பேசாமல் இணையத்திலிருந்தே போடுவது வழக்கமாகிவிட்டது.இது நல்ல உபாயமாக இருக்கிறது.முயற்சித்துவிட்டு சொல்கிறேன்.
ரவி,

இந்த 'க.கை.நா.'வுக்கு ஒண்ணும் புரியலை. ஆனாலும் இன்னும் நாலுதடவை இதைப் படிச்சுட்டு ஒரு முயற்சி செஞ்சு பார்க்கறேன்.

ரொம்ப நன்றிப்பா, தகவலுக்கு.
செந்தழல் ரவி
நன்றி.முயற்சித்துவிட்டு சொல்கிறேன்.
இப்போதைக்கு போட்டோ பக்கெட் தான் கொஞ்சம் சுலபமாக இருக்கு.
எங்க கொஞ்ச நாட்களாக காணவில்லை?பயணமா?
Anonymous said…
http://photos1.blogger.com/blogger/3075/2751/1600

இதில் உள்ள எண்களுக்கு எங்கே போவது?
நானும் அப்படித்தான் நினைத்தேன்..ஆனால் எந்த எண்ணை போட்டாலும் வருதுங்க..
///இன்னும் சில HTML TAG உபயோகங்களை யாராவது தந்தால் நல்லது.///

ஹச்டிஎமெல் பார் டம்மிஸ் / மம்மீஸ் அப்படீன்னு ஒரு பதிவு போட்டா போகுது..
வருகைக்கு நன்றி கைப்பு...
////உபயோகமான தகவல், ரவி. நன்றி. நீங்கள் சொன்ன அதே folder ல்தான் சேமிக்குமா. அதென்ன வேறு நம்பர் உள்ள folderகள். எனக்கென்னவோ இது மாறிக்கொண்டே இருக்கும் என்று தோன்றுகிறது. ஒரே நாளில், இரண்டு பதிவுகளில் ஒரே பெயருள்ள படம் பதிந்தால், அதன் ref address ஒரே மாதிரி இருக்குமா? கொஞ்சம் குழம்பியிருக்கிறது எனக்கு!!!//////

அப்லோட் செய்தபிறகு, பிலாகர் இமேஜ் சர்வர், பைல் நேம் உதவியுடனும் தேடுகிறது. அதனால் போல்டர் மாறி இருந்தாலும் பைல் இண்டக்ஸ் மூலம் உங்கள் இமேஜை எடுத்துக்கொள்ளும்..

( கூகுள் நிறுவண - பிலாக் புராஜக்ட்டில் பணிபுரியும் தோழியின் விளக்கம்)
////அதனால் போல்டர் மாறி இருந்தாலும் பைல் இண்டக்ஸ் மூலம் உங்கள் இமேஜை எடுத்துக்கொள்ளும்..////

ரவி. விளக்கத்துக்கு மிக்க நன்றி. எங்கு கேட்டாலும் ஆட்களும், கான்டாக்டும் வைத்திருக்கிறீர்கள் போல!!!

இந்த image upload பிராப்ளம், firefox அல்லது netscape உபயோகித்தால் இல்லை. அதனால் இது ஏதோ IE specific issue மாதிரி தான் தெரிகிறது. ஒரே பெயரில் ஒரே நாளில் இரண்டு வெவ்வேறு படங்களை இரண்டு வெவ்வேறு பதிவுகளில் போட்டால் என்ன ஆகும்? எந்த போல்டரில் இருந்தாலும், பேர் இருந்தால் சர்வர் கொடுத்துவிடும் என்றால், ஒரே பேரில் இரண்டு படங்கள் இருந்தால் குழம்பாதா? ஒரே பேரில் வெவ்வெறு படங்களை உலகத்தின் இரண்டு மூலைகளில் இருப்பவர்கள் அப்லோட் பண்ணினாள் சர்வர் குழம்பிப்போகாது. ஒவ்வொரு image க்கும் ஒரு unique ID நிச்சயமாக இருக்கும் என்றுதான் தோன்றுகிறது.

உங்கள் tips க்கு நன்றி

மேலும் இத மாதிரி உருப்படியாக எழுதுங்கள்.

கோழி பிடிப்பது எப்படி என்ற உபயோகமான தகவலுக்கு அப்பறம் இப்பதான் ஒரு useful post. :)


thanks
வைசா said…
நனறி செந்தழல் ரவி.

வைசா
நல்ல பதிவு ரவி, சிவகுமார் சொன்ன பதிவில் இந்தப் பதிவுக்கான சுட்டியையும் சேர்த்துவிட்டேன். இந்தப் பதிவுகளை எல்லாம் யாரேனும் ஒன்றாகத் திரட்டினால், விட்டுப் போகாமல் இருக்க உதவும்.
வாங்க ஜே. அல்காட்டெல்லிலும் ஆள் இருக்கு :)))

நீங்களும் கோழித்திருடன் பதிவு ரசிகரா ?

டெல்லிக்கு சென்றபோது மங்கையை சந்தித்தேன், அவங்களும் அவங்க கணவரிடம் அறிமுகம் செய்தபோது, இவர் நல்லா கோழி பிடிப்பார் என்றே அறிமுகம் செய்தாங்க...

:)))
சீனு said…
எனக்கும் இந்த பிரச்சினை இருந்தது.

அதற்கு ஒரு குறுக்கு வழி, Upload முடிந்ததும் 'Done' என்று வருகிறது அல்லவா, அந்த பக்கத்தை மூடாமல், ரைட் கிளிக் செய்து "View Source" எடுங்கள். Notepad-ல் அதன் சோர்ஸ் வரும். அந்த Notepad-ல் கடைசி 4-5 வரிகளில் புகைப்படம் வலையேற்றப்பட்ட முழு URL-ம் கிடைத்துவிடுகிறது. அதனை காஃபி செய்து <A HREF="படம் URL">. அவ்வளவு தான்.
SK said…
//இது மாதிரி வலைப்பதிவு டிரிக்குகளை எல்லாம் சேர்த்துத் தொகுக்க வேண்டும்//

இதே கருத்தை சென்னை பதிவர் கூட்டத்தில் பொன்ஸிடம் சொல்லி வந்தேன்.

இவை அனைத்தும் திரட்டப் பட்டு, தமிழ்மணத்திலோ அல்லது யாராவது ஒரு பதிவர் பதிவிலோ தனியாக இடம் பெறச் செய்ய வேண்டும்.
Anonymous said…
அண்ணா தகவலுக்கு நன்றி. அப்படியே "Video Clips"-ம் எப்படி வலையேற்றுவது என்று சொல்ல முடியுமா?.

Babu.
Rupan com said…
வணக்கம்
அனைத்து தகவலும் அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Popular Posts