Thursday, November 23, 2006

எங்கே ? யார் ? கண்டுபிடித்தால் ஆயிரம் பொற்காசு



படத்தை நன்றாக உற்றுப்பாருங்கள்...கவனம்..உங்களை ஏமாற்றும் தவறான வழிகாட்டுதல் இருக்கலாம்...இது என்னோட ஒன்னாப்பு போட்டோ...இதுல நான் எங்கே இருக்கேன் என்று கண்டுபிடித்தால் அவங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் இருக்கு....

இது தடாலடியாருக்கு போட்டி இல்லை....விளம்பர உத்தியும் இல்லை....சூடாகிக்கிட்டிருக்கும் தமிழ்மணத்தை கொஞ்சம் கூலாக்கலாமேன்னு தான்...அப்படியே அவங்க அவங்க ஸ்கேன் செய்து வைத்திருக்கும் போட்டோக்களை போட்டீங்கன்னா கொஞ்சம் குன்ஸாவா பொழுது ஓடும்..

போட்டோவை ஸ்கேன் செய்யாமல் வைத்திருக்கும் பதிவர்கள் உடனே ஸ்கேனிங் செண்டருக்கு விரையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்....

54 comments:

லக்கிலுக் said...

ரவி மேல்வரிசையில் வலதுபுறமிருந்து இடமாக 4வதாக இருப்பவர் தானே நீங்கள்?

Anonymous said...

வாதியார் பின்னாடி?

நாடோடி said...

வாத்தியாருக்கு இடக்கையை தொட்டுகிட்டு நிக்கிறகொழந்தை.

:)

ரவி said...

வருகைக்கு நன்றி லக்கி, விடை இப்போ சொல்றதுக்கில்லை

ரவி said...

வருகைக்கு நன்றி அனானி

ரவி said...

வருகைக்கு நன்றி நாடோடி...ஆனா நீங்க சரின்னு நான் சொல்லமாட்டேன்.

பூங்குழலி said...

தவறான வழிகாட்டுதல் கொடுக்க, மீசை வைத்திருக்கும், நடுவில் உட்கார்ந்திருப்பவர்.

செந்தழல் 1 வது தேர்வடைந்தீர்களா? இன்னும் இல்லையா...
:))

Anonymous said...

தலை, உங்க வாத்யாரு கருப்பா பயங்கரமா இருக்காரு.

ரவி said...

ஓ...பாஸாயிட்டனே !!!

Anonymous said...

இதில் உங்க கேள்பிரண்டு நிக்குதா ?

லக்கிலுக் said...

தலை,

நீயும் நம்பளை மாதிரி பஞ்சாயத்து ஸ்கூலு தானா?

Anonymous said...

Girl Friend utkarnthu irruku ....last row second from right :-)

கோவி.கண்ணன் [GK] said...

top left position 2 √

:)

Anonymous said...

ஐயம் குண்டலகேசி,பர்ஸ்ட் ஸ்டேண்டர்டு, அவ்வையார் ஆரம்ப பாடசாலை..

ரவி said...

///நீயும் நம்பளை மாதிரி பஞ்சாயத்து ஸ்கூலு தானா? ///

அட ஆமப்பா...

ரவி said...

வாங்க கோவியாரே...விடைகள் விரைவில்...

ரவி said...

யோவ், அனானியா பின்னூட்டம் போட்டா நான் யாருக்குன்னு பரிசு குடுக்கறது ?

நாமக்கல் சிபி said...

2வது வரிசையில் மூணாவதாக அமர்ந்திருப்பது













கோமதிதானே?

பூனைக்குட்டி said...

வாத்தியாருக்கு பக்கத்தில் முட்டி போட்டிருக்குற முதல் பையன், அதாவது ஆசிரியருக்கு அடுத்து இருப்பது.

Virhush said...

தொலைந்து போனவர்கள் னு அந்த காலத்தில் ஒரு சீரியல் டிடி ல வரும் அது ஞாபகம் வருது.

சரி ரவி இப்பவாவது சொல்லுங்க. மறுமொழி மட்டுறுத்தல் என்றால் என்ன எப்படி பண்னுவது. ப்ளீஸ்

கப்பி | Kappi said...

கீழ் வரிசையில் வாத்தியாருக்கு வலப்பக்கம் நின்று கொண்டிருப்பவர் தானே??

கதிர் said...

தெரியல!

ரவி said...

நாமக்கலாரே, அது குஷ்பு...மும்பைல நடிக்க போறதுக்கு முன்னால அவ்வையார் ஆரம்ப பாடசாலையில் ஒரு வருஷம் படிச்சுது..அவங்கப்பா சேட்டுக்கடை (வட்டிக்கடை) வச்சிருந்தாரு...

பொறவு கைப்புள்ள மாதிரியோ (சங்கம்) - பாலபாரதி (பா.க.ச) மாதிரியோ ஒரு ஆளு கவரிங் நகையை ஏமாத்தி கொடுத்து போண்டியாக்கிட்டதால பம்பாய்க்கு திருட்டு ரயில் ஏறிட்டாரு குஷ்பு அப்பா...

அவர் பான்பராக் போட்டு நச்சுன்னு பொண்ணுக்கு குடுத்த இச்சு அவர் பொண்ணை செவப்பாக்கிருச்சு..

அதனால பெரியார் படத்துல நடிக்க அந்தம்மாவுக்கு தகுதி இருக்குதுன்றேன்...(அரசியல்)

ரவி said...

இருந்தாலும் உமக்கு ஓவர் நக்கல்தான் ஓய்

ரவி said...

கப்பி பய...

தப்பு பய..

ரவி said...

மோகன் தாஸ் அவர்களே...தப்பு.

ரவி said...

தண்டர் நம்பி, Comment Moderation - அதைத்தான் அப்படி சொல்லிக்கிட்டிருக்கோம்...உங்க போன் நெம்பர் தாங்க...எப்படி செய்யுறதுன்னு சொல்றேன்.

ரவி said...

அதிரடியா ஒன்னு செய்யுங்க...மறுமொழி மட்டுறுத்தல் அப்படீன்னு கூகுளாண்டவரிடம் வேண்டிப்பாருங்க....

ஆவி அண்ணாச்சி said...

//மறுமொழி மட்டுறுத்தல் என்றால் என்ன எப்படி பண்னுவது//

யாராவது சொல்லிக் கொடுங்களேன் பிளீஸ்!

1.உங்களோட பிளாக்கர் அக்கவுண்ட்ல லாகின் பாண்ணுங்க!

2.நீங்கள் வைத்திருக்கும் பிளாக்குகளின் பட்டியல் டேஷ் போர்டில் வரிசையாக இருக்கும்.

3.அந்த பட்டியலில் பிளாக் பெயர், நியூ போஸ்ட், சேஞ்ச் செட்டிங்க்ஸ்னு மூணு பகுதி இருக்கும். பல் சக்கரம் மாதிரி இருக்கும் படமான சேஞ்ச் செட்டிங்க்ஸை கிளிக் பண்ணுங்க!

4.அதுல பேசிக்,பப்ளிஷிங்க்,ஃபார்மேட்டிங்க், கமெண்ட்ஸ்,ஆர்ச்சிவிங்க், சைட் ஃபீட், இமெயில், மெம்பர்ஸ்னு தலைப்புகள் இருக்கும். நீங்க கிளிக்க வேண்டியது "கமெண்ட்ஸ்" என்னும் தலைப்பை.

5.அதுல 9வது ஆப்ஷனா "எனேபிள் கமெண்ட் மாடரேஷன்?" என்ற கேள்வியோட "யெஸ்", "நோ" ன்னு ரெண்டு ஆப்ஷன் இருக்கும். "யெஸ்" என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுங்க. அதாவது அந்த வட்டத்துக்குள்ள புள்ளி வைக்கற மாதிரி மவுஸைக் கொண்டு போயி கிளிக் பண்ணுங்க.

6.அதுக்கு கீழே இமெயில் அட்ரஸை எழுத ஒரு டப்பா இருக்கும். நீங்க வருகிற கமெண்ட்ஸெல்லாம் உங்களுக்கு இமையில் மூலமும் தெரிஞ்சிக்கணும்னு விருப்பம் இருந்தா உங்க இமெயில் அட்ரஸை அதுல எழுதுங்க. இல்லாங்காட்டி சும்மா விடுங்க.

7.அப்புறம் கடைசியா இருக்குற "சேவ் செட்டிங்" என்ற பொத்தானை தட்டி விடுங்க. "செட்டிங்க்ஸ் வேர் சேவ்டு சக்ஸஸ்ஃபுல்லி" ன்னு ஒரு மெஸேஜ் வரும். அப்புறம் "ரீபப்ளிஷ்" எண்டைர் பிளாக்" என்ற பொத்தானை ஒரு முறை தட்டி விடுங்க. அவ்வளவுதான்.

ரவி said...

ஆவி அண்ணாச்சி அவர்களே...பொறுமையாக தமிழில் எழுதி தந்தமைக்கு நன்றி....

சூப்பர்....

நாடோடி said...

சற்று டொங்கு போல இருக்குதே அந்த குழந்தைதான்..

ரவி said...

டெங்கு, சிக்கன் குன்யாவெல்லாம் சேர்த்திருவீங்க போலிருக்கு...

பொன்ஸ்~~Poorna said...

வாத்தியாருக்கு இடப்பக்கம் உட்கார்ந்து வாத்தியார் சேரிலேயே கைவைத்துக் கொண்டிருக்கும் பையன் தானே?

ரவி said...

பொன்ஸ்...தவறு...!!!! :(((

Anonymous said...

இது எந்த ஊரில் எடுத்தது ?

ரவி said...

விழுப்புரம் மாவட்டம், வளவனூர்...

நாடோடி said...

//டெங்கு, சிக்கன் குன்யாவெல்லாம் சேர்த்திருவீங்க போலிருக்கு...//

டொங்கு என்றால் "கேனத்தனமாக" என்று மற்றொறு பொருள் உண்டு.

நீர் அடிக்கடி மங்குனி ரவி என்பதி நிறுபித்துக்கொண்டிருக்கீறீர்.

ரவி said...

மன்னா, அதை போங்கு என்று கூறலாமா ?

நாடோடி said...

போங்கு - என்றால் ஏமாற்றுவது என்று அர்த்தம்.

நீர் திரும்பவும் மங்குனி என்று நிறுபிக்கீறீர்.

ரவி said...

டொங்கு = மக்கு ???

நாடோடி said...

இப்படியே மங்குனியாக இருந்தால் என்று என் சினத் திற்கு சிக்கி எல்லோரும் சின்னாபின்னாமாகப் போகிறீர்கள் என்று தெரியவில்லை.

:)

ரவி said...

இது மணியனை பதிவு ஒன்று ஆரம்பிக்கறதுல தான் கொண்டுபோய் முடிக்கும் போலிருக்கே !!!

:))))))))))))

வேறென்ன வார்தைகள் தாம் இருக்கின்றன சொல்லும்...

சொல்லித்தொலையும்...:)))))

ரவி said...

முடிவுகளை அறிவிக்கும் நேரம் வந்தாச்சு...முதல் பின்னூட்டமே விடை...லக்கியாருக்கு வாழ்த்துக்கள்...600 ரூபாய் மதிப்புள்ள காந்தி கடிகாரத்தை கெலிச்சுட்டாரு...சென்னை வரும்போது ஹேண்ட் ஓவர் செய்யப்படும்..(நாளன்னைக்குப்பா)...

படத்தை க்ளிக் பண்ணி பார்த்தால் அதில் ஒரு சின்ன டிக் வேறு இருக்கு பாருங்க..

நாடோடி said...

அதுக்குதான் ஒரு siteயே இருக்கே.

madars tamil Dictonary.(விக்கிபீடியா சைட்).

அங்கே தேடிப்பார்த்துக்கொள்ளவும்.

:))))))))))))))))))))

பொன்ஸ்~~Poorna said...

இதெல்லாம் ஏமாத்து வேலை..

'லக்கி'ன்னு பேர் வச்சால் இப்படி எல்லாப் போட்டியிலுமா வின் பண்ணுவாங்க!!

பேசாம என்பெயரை மாத்திவச்சிக்கப் போறேன் இனிமேல்..

ரவி said...

//இதெல்லாம் ஏமாத்து வேலை..

'லக்கி'ன்னு பேர் வச்சால் இப்படி எல்லாப் போட்டியிலுமா வின் பண்ணுவாங்க!!

பேசாம என்பெயரை மாத்திவச்சிக்கப் போறேன் இனிமேல்.. ///

பொன்ஸ்...இதில் எந்த மேட்ச் பிக்ஸிங்கும் இல்லை...ஆனா நச்சுன்னு கண்டுபிடிச்சிட்டார் பாருங்க..:)))

அடுத்த போட்டியில் நீங்க கெலிக்கனும்னா நல்லா உத்து உத்து பாத்து சீரியஸா பதில் சொல்லனும்..சரியா..!!!

ஆவி அண்ணாச்சி said...

மறுமொழி மட்டுறுத்தல் ஏற்பாடு செய்வது எப்படி? என்று இங்கே பார்க்கவும்.

மயிலிறகு said...

போட்டிக்கு சிறிது தாமதமாக வந்துள்ளோம் போல!

லக்கி , வாழ்த்துக்கள் :)

ரவி said...

அருமையாக எழுதி இருக்கீங்க ஆவி அண்ணாச்சி...

ரவி said...

வாங்க மயில் இறகு. அடுத்த போட்டியில் கலந்துகொள்ளுங்க...

லக்கிலுக் said...

தடாலடிப் போட்டியில் தான் நமக்கு எப்பவும் ஜெயம் என்றால் இங்கே கூடவா?

நன்றி! நன்றி! நன்றி!

பொன்ஸ் உங்க பேரை லக்கிபொன்ஸ்-னு மாத்திப் பாருங்க. லக்கு அடிக்குதான்னு பாக்கலாம்.

Anonymous said...

suuper aattam.

G.Ragavan said...

போட்டி முடிஞ்சு போச்சா! ஒருத்தன் வேலக்கழுதையா இருக்குறப்போ போட்டி வெக்குறது. வந்து பாக்குறதுக்குள்ள போட்டிய முடிக்கிறது. நல்லா இருங்கடே! நல்லா இருங்க!

வெங்கட்ராமன் said...

லக்கி லுக்காரை ஏமாற்றுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

"எங்கே ? யார் ? கண்டுபிடித்தால் ஆயிரம் பொற்காசு" - என்று தல தலைப்ப வச்சிட்டு

600 ரூபாய் மதிப்புள்ள காந்தி கடிகாரத்தை கெலிச்சுட்டாரு...

அப்படின்னு சொல்றது நியாம் இல்ல. என்ன லக்கி நான் சொல்றது கரெக்டு தானுங்களே.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....